a_raja_25020 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தந்தை பெரியாரை தலைவராகஏற்றுக்கொண்டு தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுத்து அவர்களின் தன்மான உணர்வையும், மொழிப் பற்றையும் தட்டி எழுப்பி தமிழகத்தைப் புரட்டிப் போட்டு, காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் மீண்டும் தலைதூக்க முடியாத நிலையை உருவாக்கிய, அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட "திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பகுத்தறிவு இயக்கத்தின் இன்றைய கொள்கைப் பரப்புச் செயலாளர் தோழர் ஆ. ராசா ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை என்று அழைக்கப்படும் திகார் மத்திய சிறையில், சர்வதேச கிரிமினல்களோடும் இந்தியாவின் கொடூர "தாதா'க்களோடும் அடைக்கப்பட்டு கிடக்கின்றாரே, ஏன் இந்தக் கொடுமை? ஏன் இந்த வீழ்ச்சி?

தமிழர்களின் உரிமைகள், அவர்களுக்கான சமூக நீதி மற்றும் முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்போரை விடுவிக்க வேண்டிய தலையாய கடமை, இருந்தும் இவைகளிலிருந்து விலகி மத்திய ஆட்சியில் அங்கம் வகித்ததால் இன்றைய வீழ்ச்சியா?

அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்டு, தந்தை பெரியாரால் போற்றப்பட்ட தி.மு.க.விற்கே இந்த நிலை என்றால். எந்த திராவிடக் கட்சி தமிழர்களை முன்னிலைப்படுத்தப்போகிறது? காலம்தான் பதில் சொல்லும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.