இந்திய அரசு புதிய உருவாய்க் குறியீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதிலும் இந்திய அரசின் மொழிக்கொள்கை அம்மணமாக வெளிப்பட்டுள்ளது. இது தேவநாகரி ‘ர’வையும் ஆங்கில ‘R’ ஐயும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு நடத்திய போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற்றுள்ளவர் இரிசிவந்தியம் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் மகன் உதயக்குமார். தி.மு.க. பிறங்கடை இந்தி படித்ததனால் தான் இந்தக் குறியீட்டை உருவாக்க முடிந்ததென்று செவ்வியளித்துள்ளது. இதற்குரிய பரிசோடு கான்பூர் இந்தியத் ‘தொழில்நுட்பக் கழகத்தில் விரிவுரையாளர் பணியும் கிடைத்திருக்கிறது.

இந்தியாவின் இருமொழிக் கொள்கையும் திமுகவின் இருமொழிக் கொள்கையும் கைகோர்த்துச் செல்வதைப் பாருங்கள். பேராயமும் திமுகவும் நாணயத்தின் இருபக்கங்களாகிவிட்டன. திமுகதான் பேராயம். பேராயம்தான் திமுக. இந்து நாளிதழ் இன்னும் இக்குறியீட்டைப் பயன்படுத்தவில்லை. தினகரன், தினமணி, தினத்தந்தி போன்ற தமிழ் நாளிதழ்கள் ஆணை வெளிவருவதற்கு முன்பே அடிமைத் தனத்தை வெளிப்படுத்தியுள்ளன.

உருவாய் என்று பணத்திற்கு உருவம் கொடுத்த தமிழன் ஆங்கில இந்தி மொழிகளுக்கு அடிமையாகியுள்ள அவலம் மீண்டும் ஒருமுறை அரங்கேறி யுள்ளது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.