மாறி வரும் அறிவியலில் நாம் பல பண்டைய தமிழ் அறிவியல் மிகுந்த பயனுள்ள பொருட்களை மறந்தும் (அ) பயன்பாட்டிலிருந்து விடுத்து நவீன அறிவியல் தரும் பொருட்களையும், பல வியாதிகளையும், உள்வாங்கிக் கொண்டு மருத்துவமனைப் படிக்கட்டு களை ஏறி இறங்கி வருகிறோம்.

அதற்காக அறிவியலைக் குறை கூறுவதோ (அ) நவீன அறிவியலைப் பயன்படுத்துவோ கூடாது என்பது நம் நோக்கமல்ல. மாறாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை விட மேலான அறிவியல் தன்மை களோடு தமிழன் பல பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியுள்ளான் என்பதை நினைவூட்டவும், அதனால் அழிந்து வரும் பொருட்களை மீண்டும் பயன்படுத்தவோ (அ) பொருள்களின் பயன்பாட்டையோ, பெயரையோ மறந்துவிட்டோமெனில், நம் மரபுக்கு அதன் வலிமையும்பெயரும் தெரியாமல் போய்விடும்.

அவ்வாறு போகும் பட்சத்தில், உலக உருண்டை சுற்றுவதைப் போன்று நவீனமும் மாறி மாறி வரும் வடிவங்களும் பெயர்களும் அப்போது மாறி நம் தமிழின் பெருமை அழிக்கப்பட்டு அதற்கு வேறொரு மொழிப் பெயர் சூட்டப்பட்டு அதுப் பயன்பாட்டிற்கு வரும். அதன் மூலம் நம் முன்னோர் அறிவும் நம் மொழி வரலாறும் அழியும். ஆகவே மாதம் ஒரு 10 பொருட்களையும், அதன் பயன்பாட்டையும், அதன் பெயர்களையும் தெரிந்து கொண்டு நம் வரலாறை இரவாமல் நம் சந்ததிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

எழுதத் துவங்கும் போது என் நினைவுக்கு வந்தது உணவு தயாரிப்புப் பொருட்களும் அவற்றை பரிமாறும் பொருட்களுமாகும். ஏனெனில் வரலாறை மீட்டெடுக்க உயிரும் உடலும் அவசியம். அவ் உயிரும் உடலும் வாழ உணவு அவசியம்.

மேலும் என்ன பொருள் அவ்வாறு மாறி விட்டது எனக் கேட்கலாம். அதற்கு ஓர் சின்ன உதாரணம்: நாம் சிறுவர்களாக இருந்த போது முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும் இருக்கமாக இருந்ததைக் கண்டிருப்போம். 10 ஆண்டுகளுக்கு முன் தொள தொள முழுக்கால சட்டையும், மேல் சட்டையும் போட்டு நாகரீகம் என ரசித்தோம்.

மீண்டும் தற்போது இறுக்கமான முழுக்கால் சட்டையும், மேல் சட்டையும் போட்டு ரசிக்கிறோம். ஆனால் பெயர் முன்னதற்கு பேக்கி, பேரல் பேக்கி என்றும், பின்னதுகு டைட்ஸ் கட் சர்ட் என்றுபெயரிட்டு மகிழ்கிறோம். இது தமிழர் உடையா என்று கேட்டால் உடை என்பது அறிவியல் அனால் சுழற்சி விதிப்படி பழையது புதியதாகவும், புதியது பழையதாகவும் மாறி விட்டது என்பதுதான்.

சரி, இனி தமிழர் அறிவியல் சார்ந்த பொருட் களையும் பெயர்களையும், காண்போம். மேலும் இதில் வரும் பொருட்களின் பெயர்கள் யாவும் வழக்குச் சொற்களே. ஆகவே அது பகுதிக்கு பகுதி மாறுபடலாம். ஆகவே அவற்றைத் திருத்தி வாசிக்க லாம் (அ) இதழுக்குத் தெரியப்படுத்தலாம்.

1. சோற்றுப் பானை மண் பானை

2. கறிச் சட்டி காய்கறிக்கு குசினி, மீன், மாமிசத்திற்குத் தனி மண்பானை

3. ஒலமூடி, கறிச்சட்டி மூடி மண் மூடிகள்

4. இதுபோன்ற மண்பாண்டங்களில் சமைக்கப் படும் உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும். காரணம்: மண் பாண்டங்களில் உள்ள சிறு துளைகள் நீரால் நிரப்பப்படும். இதனால் இது தற்போதைய குளுமி போன்று செயல்படும்.

4. பந்தாடை பனை நாரால் வைக்கோலால் ஆனது.

பயன்பாட: இது சோற்றுப் பானை, கறிச் சட்டி போன்றவற்றின் அடுப்புக் கறி தரையில் ஒட்டாம லிருக்கவும், அதன் அடிப் பகுதி உருண்டையாக இருப்பதால் கீழே சாய்ந்து விடாமலிருக்கவும் இவைத் தவிர பல்வேறு பொருட்களை வைக்கவும் பயன் படுத்தப்பட்டது.

5. உரி வீட்டின் ஓட்டு வலை அல்லது கூரைக் கம்பியில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இது ஒருபந்தாடையில் முக்கோண அளவில் பின்னப்பட்ட பனை நார் (அ) திரிக்கப்பட்ட வைக்கோல் பிரியால் இணைக்கப்பட்டிருக்கும்.

பயன்பாடு: இதில் பால், மோர், தயிர், மீன், மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள் பூனை, எலி போன்றவை உண்ணாமலிருக்க அந்தரத்தில் கட்டி அதில் சட்டியை வைத்து விடுவர். இதனால் உண்ணு வது தடுக்கப்படும் ஏனெனில் மிருகங்களால் அந்தரத் தில் பிடிமாமனம் இல்லாமல் உணண முடியாது.

குறிப்பு: மேலும் இவையெல்லாம் சுற்றுச் சூழலை பாதுகாப்பவை ஏனெனில் இவைகள் அழியக் கடியவை.

6. குடம், 7. தவளை இவையிரண்டும் தண்ணீர் வைக்கப் பயன்படும் பொருள். இது நிலை வெள்ளியிலோ, நெகிழியாலோ ஆனது அல்ல மாறாகப் பித்தளையால் ஆனது.

பயன்பாடு: பித்தளைக்கு தண்ணீரிலுள்ள கிருமிகளை அழித்து தண்ணீர் அடியில் படியச் செய்யும் குணமுண்டு. மேலும், இதுவும் ஒரு குளுமி போன்றே இதில் வைக்கப்படும் தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

8.காப்பி போடும் சட்டி இது செம்பினால் ஆனது. ஏனெனில் இது சீக்கிரம் சூடேறும். ஏனெனில் அப்போது காப்பி என்பதே (கடுங் காப்பி (அ) கருப்பு தேநீர்) விருந்தினர்கள் வந்தால் மட்டுமே அவருக்கு உடனடியாக செய்துக் கொடுத்து உபசரிப்பு அடுத்து உணவு சமைப்பது வரை அவர் பசியாறக் கொடுக்கும் பண்டம் போன்றது.

எனவே காபி உடனே சூடேறுவதற்காக செம்மைப் பயன்படுத்தினர். அப்போ தமிழர்கள் காலையில் நீச்சத் தண்ணி குடிப்பது தான் வழக்கமாக கொண்டிருந்தனர். இது வயிற்றுப் புண் ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது.

9. இதைப் போன்றே பிற கிண்ணம், ரோட்டா (அ) குவளை செம்பு, கும்பா (அ) தட்டு போன்றவையும் பித்தளையிலே இருக்கும் இதில் சூடாக பொருளை இட்டு தூக்கும்போது கை சுடாது. ஆனால் பொருள்சூடாக இருக்கும்.

10. கும்பா என்பது சட்டிப் போன்றது. அதன் மேல் விட்டத்தை வகுத்து, அதைத் தாங்கும் அளவிற்கான ஒரு சிறு பகுதி விட்டத்தை உடைய கும்பா மேல் விரிந்திருப்பதைப் போன்று கீழ் நோக்கி விரிந்தப் பகுதியும்அதன் அடிப்பகுதி பெரியச் சட்டியில் அடிப்பகுதியில் ஒட்டியிருக்கும். கீழ் நோக்கி விரிந்த பகுதி தரையில் தாங்கும் இதனால் தரையிலுள்ள மண் தூசி கும்பாவில் ஒட்டாது.

மேலும் மேல் பகுதி கும்பாவிலுள்ள சோறோ, தண்ணிக் கஞ்சியோ, கூலோ, சிந்தாமல் உண்ணலாம். இன்னும் கிராமப்பகுதியில் ஒரு சிறுவன் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவதைப் பார்க்கும் பெரியவர்கள் அச்சிறுவன் கும்பாச் சோறு திங்கான் பார் என்பதைக் கேள்வியுற்றிருப்பீர்கள்.

ஏனெனில் ஒரு கும்பா சோறை இப்போது நம்மால் உண்ண முடியாது. ஏனெனில் அதற்கான உடல் உழைப்பு நம்மிடமில்லை.

நன்றியுடன்,

கோப்பெருஞ்சோழன்

Pin It