வாழ்க்கையின் தேர்வின்படி வாழ்ந்துவிட

மக்கள் துணிந்துவிடுவார்களானால் விதியால்

என்ன  செய்ய முடியும்  வழிவிட்டு நிற்பதைத் தவிர!

இரவு தனது முகத்திரையைத் துறந்து  விடுகிறது.

சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன.

அப்அல் காசிம்  அல்ஷாபி (துனிசியாவின் இருபதாம் நூற்றாண்டுக் கவி)

மத்திய கிழக்கு  நாடுகளில்  என்ன நடந்து கொண்டிருக்கிறது?

"எந்த நோக்கமற்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் ஏதாவது  உயரிய நோக்கத்திற்காக  உயிரை விடுவது மேல்''  என்று எழுதியிருந்த மிகப் பெரிய பதாகைகளோடு ஆண்களும் பெண்களுமாக எகிப்து மக்கள் திரண்ட கெய்ரோ மாநகரின் அந்தச் சதுக்கத்தின் பெயரான தஹிரிர் என்பதற்குப் பொருளே விடுதலை என்பதுதான்.

உலகின் தொன்மை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்று எகிப்து, நைல் நதி இன்னும் ஒரு வரலாற்றுச் சிறப்பும், பிரமிக்க வைக்கும் பிரமிடுகளும்,      அதன் உருவங்களும், இன்ன பிறவும் அலங்கரிக்கும் இந்தத் தேசம்.

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். கெய்ரோ இதன் தலை நகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும்,  கிழக்கே   காசாக் கரை மற்றும் இஸ்ரேலையும் எல்லையாகக் கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர  கி.மீ. மத்தியத் தரைக் கடலை வடக்குக் கரையிலும், செங்கடலை கிழக்குக் கரையிலும் கொண்டிருந்தாலும், சினாய் தீபகற்பத்தின் மூலம் ஆசியாவுடனும் (இஸ்ரேல்)  எல்லை கொண்டிருக்கிறது. 

எகிப்தின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் சகாரா பாலைவனமாகவே திகழ்கிறது. நாட்டின்பெரும்பாலான மக்கள் நைல்அமெரிக்காவின் காலடியில் எகிப்து தேசத்தை வைத்தகோசனி முபாரக் நதிக்கரையைச் சார்ந்து வாழ்கிறார்கள். இரண்டாம உலகப் போருக்குப் பின்  ஏற்பட்ட   மாற்றங்கள் எகிப்திலும்  ஏற்பட்டன.   இங்கிலாந்து பேரரசின் கைக்கூலி அரசான  மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டது.

மன்னர் ஃபாரூக் என்பவரை, ராணுவம் தூக்கியடித்தது. 1953ல் எகிப்து குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. புரட்சி  போது ராணுவத்தின்   மூத்த   தளபதியாக இருந்தவர் முகம்மது நாஜிப். எகிப்தின் குடியரசின் முதல் தலைவர். 1954ம் ஆண்டு பிப்ரவரி 25 ம் தேதி நஜிப் தூக்கியடிக்கப்பட்டார். கமால் அப்துல் நாசர், எகிப்தின் தலைவராக தன்னை அறிவித்துக்கொண்டு பதவியில் அமர்ந்தார். உடனே  கொஞ்சம்  கலவரம், அடிதடி, தீ வைத்தல், கைகலப்பு, மோதல் எல்லாம் இருந்தது. ஆனாலும் நாசர் வெற்றியடைவதில் பெரிய பிரச்சனை இருக்கவில்லை. 

நஜிப்பைப் பதவியிலிருந்து தூக்கி  எறிய  நாசர் சொன்ன காரணம், ""அவர் எகிப்தின் நலனுக்காகச் சிந்திப்பதை விடுத்து முஸ்லிம் சகோதரத்துவத்தைத் தூக்கிப் பிடித்து ஆதரித்துபொழுதை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான்''.அமெரிக்காவின் எதிரியாக அறிவித்துக் கொண்ட லிபியாவின் கடாபி காமல் அப்துல் நாசர், அரசியல் நிறையப் படித்தவர். அரசியலில் பெரிய ஞானி. சுய சிந்தனையாளரும் கூட. 

பதவி ஏற்ற உடனே எகிப்தின் நலனுக்கு என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்தால் யார் யார் அதனால் பாதிக்கப்படக் கூடும். யார்  சண்டைக்கு வரக் கூடும் என்னசெய்து சமாளிக்கலாம் என்று ஒருபட்டியல் தயார் செய்தார்  நாசர். தொன்மையும் பழமையும் அடிப்படைவாதமும்  எகிப்தை மாற்ற  முடியாது, என்பதை உணர்ந்த  புரட்சியாளர் கமால்  அப்துல் நாசர். 

இதனுடன் ஒட்டுமொத்த  மத்தியக் கிழக்குப் பிரச்சினைகளையும்  சேர்த்து வைத்து ஆராய்ந்து, அவற்றில்  எகிப்தின் பங்களிப்பு மற்றும் ஈடுபாடு என்னவாக இருக்கலாம் என்றும் யோசித்தவர் ஒரு சக்திமிக்க தலைவனாக, தான் மக்களால் அங்கீகரிக்கப் பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால், எகிப்தை ஒரு சர்வ வல்லமை பொருந்திய தேசமாக மாற்றுவதோடு,  மத்தியக்  கிழக்கின்  ஒரு தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக நிறுவி விட முடியும் என எண்ணிச் செயல்பட்டார் நாசர்.

அவர் முதலாவது, தொழில் துறையைத் தேசியமய மாக்குவது,     இரண்டாவது நிலச் சீர்திருத்தம், மூன்றாவது, நீர்த்  தேக்கங்கள் கட்டி விவசாயத்தைப் பெருக்குவது மற்றும் கடல் வர்த்தகத்தில் தீவிர கவனம் செலுத்துவது. இதன் அடிப்படையில்தான் அவர் தமது தேசத்தின் எல்லைக்குட்பட்ட அகபா வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய்ப் பகுதிகளை இழுத்துமூடினார்.

பிற நாட்டுக் கப்பல்கள் அந்த வழியே போவதைத் தடை செய்தார். நாசர் சூயஸ் கால்வாய்க்கு சீல் வைத்த சம்பவம் உலக சரித்திரத்தில் இடம் பெற்ற மிகப் பரபரப்பானதொரு சம்பவம்.இத்தனை  தைரியம், இத்தனை நெஞ்சுரம், இத்தனை துணிச்சல் கொண்ட எந்த ஒரு அரபுத் தலைவரையும் அதற்கு  முன் உலகம் சந்தித்ததில்லை. அமெரிக்கா அரண்டு போனது. பிரிட்டன் பதறிக்  கொண்டு எழுந்தது. பிரான்ஸ் மூக்குமேல் விரல் வைத்தது. உலகமே நாசரை வியந்து பார்த்தது.

ஆனால், இதனால் உடனடிப் பாதிப்பு யாருக் கென்றால் இஸ்ரேலுக்குத்தான். இஸ்ரேலின் கப்பல்கள்தான் சூயஸ் கால்வாயை அதிகம் பயன்படுத்திக்  கொண்டிருந்தன. வர்த்தகக்  கப்பல்கள், எண் ணெய்க் கப்பல்கள், அவ்வப்போது போர்க்கப்பல்கள். அதனால் அமெரிக்க அரசு நாசரை தன் எதிரியாகப் பார்த்தது.

நாசர் என்ன சொன்னார்?

""சூயஸ் கால்வாய்  எமது தேசிய சொத்து. இதை நான் நாட்டுடைமை   ஆக்குகிறேன். இதனைப் பயன்படுத்தி வேறு பல நாடுகள் கடல் வர்த்தகத்தில் கொழித்துக் கொண்டிருக்கின்றன. அதை அனுமதிக்க முடியாது.   இதை நாட்டுடைமை ஆக்கி   நமது வர்த்தகத்தைப் பெருக்குவதன் மூலம்  கிடைக்கும் வருவாயில், "நைல் நதியின் குறுக்கே  அஸ்வான் அணை கட்டினார்.

அடுத்து தன் பகை நாடுகளாக முதலாளித்துவ தேசங்களான,பிரிட்டன், பிரான்ஸ், இப்பட்டியலில் இஸ்ரேலையும்   சேர்த்தார். அந்த   தேசங்களுக்கு எதெல்லாம் பிடிக்காது என்று பார்த்துப் பார்த்து அதை மட்டும்  செய்ய ஆரம்பித்தார். உதாரணமாக கம்யூனிஸ்ட் தேசமான சீனாவுடன்  நல்லுறவுக்கு முயற்சி செய்தார். சோவியத் யூனியனை நட்பாக்கிக் கொண்டார். இதுதான் மேலை நாடுகளுக்கு மேலும் எரிச்சலூட்டின.

"ஒரு யுத்தம் நெருங்கிக் கொண்டிருக்கிறது'' என்று பகிரங்கமாகவே அவர் தம் நாட்டு மக்களுக்கு  விடுத்த செய்தியொன்றில் குறிப்பிட்டார். "நாசரின் தேசியவாதம் நல்லதுக்கே  இல்லை. இதுஇத்தாலியில் முசோலினியும்,  ஜெர்மனியில் ஹிட்லரும் பேசிய தேசியவாதம் போன்றதுதான். அவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாசருக்கும் நேரும்' என்றே  மேற்கு உலக நாடுகள் மிரட்டின  அவரை. ஆனால் அவர் எந்த முதலாளித்துவ சக்திகளுக்கும் அஞ்சவில்லை.

எல்லாவற்றுக்கும் மூல காரணம் சூயஸ்! இவற்றுக்கு மட்டுமல்ல, இதற்கெல்லாம் பின்னால் சில வருடங்கள்  கழித்து, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நடைபெற உள்ள ஆறு நாள் யுத்தம் என்று அழைக்கப்பட்ட பெரிய போருக்குமே கூட அந்தக் கால்வாய்தான் மூல  காரணம் என்பதால் மிகவும்  கொஞ்சமாகவாவது சூயஸ் கால்வாய் பிரச்சனையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே இன்றியமையாததாகிறது.

இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சினையின் இரண்டாம் பாகமும் இந்தசூயஸ் கால்வாயில்தான் பிறக்கிறது. மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் பிரிக்கும் எகிப்தின் வடக்குப்பகுதியில் இந்தக் கால்வாயை வெட்டியதால்  தான் ஐரோப்பாவும் ஆசியாவும் கடல் வழியே மிக நெருக்கமாக இணைய முடிந்தது. விமானப் போக்குவரத்து, தரை வழிப் போக்குவரத்தெல்லாம்  கொடுமைகளுக்கு எதிராகப்  பல்லாண்டுகள் கனன்று கொண்டிருந்த நெருப்பு இந்த ஆண்டு சனவரி 25 அன்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய போது, உலகின் மொத்த   கவனமும்   வரலாற்றுப் புகழ்மிக்க இந்த நாட்டின் பக்கம் திரும்பியது.

பிப்ரவரி 11 புனித வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் ஓர் இறுதி நாள் போர்க்கோலம் பூண்டு திரண்ட போது, கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி  விலகுவதாக  துணை அதிபரை அறிவிக்கச் சொல்லிவிட்டுக் குடும்பத்தோடு செங்கடல்   பகுதியின்    உல்லாச  விடுமுறை இல்லத்திற்கு ஓடி சரிப்படாத காரியங்களுக்கு முன்பெல்லாம் ஐரோப்பாவிலிருந்து  ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டுதான் கடல் மார்க்கமாக ஆசியாவை அடைய முடியும். சூயசு கால்வாய்  மூடியதால் கடல் வணிகம் தடைப்பட்டது. அதனால் மேற்கு நாடுகள்   விழி பிதுங்கி நின்றன.

அதன்பின் எகிப்து பொருளாதாரம் ஓங்கி வளர்ந்தன.இதன் பின்னணியோடு நாசரை விடுதலைச் சதுக்கத்தில்.... விட்டிருந்தான். உற்சாக வெடிகள்       தலைநகர் கெய்ரோவின் உச்சியில் கலக்கிக் கொண்டிருந்தன. (தஹிரிர்)    விடுதலைச் சதுக்கத்தில் லட்சோப லட்சம் மக்கள் ஒருவரை ஒருவர்  ஆரத் தழுவி உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பிக் கொண்டிருந்தனர். 

அதற்குச் சில நாட்கள் முன்னதாகத் தான் மற்றுமொரு அரபு நாடான துனிசியாவில் பொதுவுடைமைக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும். எகிப்தின் வரலாற்று நாயகனாக காமல் அப்துல் நாசர் வாழ்ந்து மறைந்தார். அவர் மறைந்த  பின் அதன் பின் வந்த  எகிப்தின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் கைக்  கூலியாக, "எகிப்து தேசத்தை அடமானம் வைத்தார்கள். அரபு நாடுகளில் முதன் முதலில் இசுரேல் தேசத்தை அங்கீகரித்த தேசமாய் எகிப்து மாறிப் போனது.'' அந்த வரலாற்று  பிழையின்  நாயகன் தான் இப்போது துரத்தியடிக்கப்பட்டுள்ள கோஸ்னி முபாரக். எகிப்து தேசத்தை அமெரிக்காவிற்கும் இசுரேல்  நாட்டிற்கும் காலனியாக மாற்றினார்.

உலகைக் குலுக்கி  இருக்கும் எகிப்துநாட்டின் 18 நாள் மக்கள் பேரெழுச்சியின் வெற்றிக் களிப்பில் இருக்கும் சுமார் எட்டு  கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்கு இளைஞர்களா யிருக்கக் கூடும். அதிபர் ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியிலிருந்து வீழ்த்த வேண்டும் என்பது பல்லா யிரக்கணக்கான மக்களின்  நீண்டகால  விடுதலை தாகம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும். 

முபாரக் ஆட்சியில்  லஞ்சம், ஊழல், வேலையின்மை,  உணவுப்  பொருள் தட்டுப்பாடு, காட்டாட்சி... என பெருகி வந்து கொண்டிருந்த மற்றும்            சனநாயக ஆற்றல்கள் ஒன்று சேர்ந்து இதே மாதிரி இன்னொரு போக்கிரி   சர்வாதிகாரியான பென் அலி, வாரக் கணக்கில் தொடர்ந்து நடந்த மக்கள் எழுச்சிக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் நாட்டை விட்டு ஓடினான்.

நாம்  இங்கே தைப்  பொங்கல் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த ஜனவரி 15  அன்று துனிசியா மக்கள் மேற்படியான அவர்களது பேரானந்தப் பொங்கலைக் கொண்டாடியது  அருகில் இருந்த எகிப்து மக்களை  அடுத்த   பத்து நாளுக்குள் மேற்காசியாவின் அந்தப் பகுதியின் அரசியல் கூர் முனைக்குக் கொண்டு  நிறுத்த மிகப்பெரும் உத்வேகத்தைத் தந்துவிட்டது. 

சுதந்திரம், ஜனநாயகம், விடுதலை... புரட்சி முற்றுப் பெற்றுவிடவில்லை என்கிறார்  ஹமாலிவி என்ற   இளைஞர். இன்னும் தொடர வேண்டியிருக் கிறது... கிளர்ச்சிக்கு வந்த மத்திய தர அறிவு  ஜீவிகள் இந்தக் கூட்டத்தோடு எல்லாவற்றிற்கும் ஆறு மாதம் ஓய்வு கொடுத்து  விட்டுத் தங்களது  உயர் ஊதிய வேலையை நோக்கிச் சென்று விடலாம். ஆனால் குறைந்த ஊதியத்தில்  தவித்துக் கொண்டிருக்கும் ஆலைத் தொழிலாளி போராட்ட ஆயுதத்தைக் கீழே போட முடியாது என்கிறார்  அவர். 

தொடரும் வங்கி வேலை நிறுத்தங்கள், தொழிலாளர் போராட்டங்கள் அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. எகிப்திய தொழிலாளரின் போராட்டம் புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களையும்  பிளவுபடுத்தி யுள்ளது. மார்க்சிய அல்லது பிற இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட இளைஞர்கள் தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். அதேநேரம்,  மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், புதிய அரசுக்கு  சந்தர்ப்பம் வழங்க வேண்டும்' என்று கூறி வருகின்றனர்.

நிச்சயமாக, புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இத்தகைய போராட்டங்கள் உவப்பானதாக இருக்க வில்லை. "தொழிலாளரின் போராட்டம், புரட்சியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்றது.'' என்று பழைய பல்லவி பாடுகிறார்கள் முபாரக் ஆதரவாளர்கள்.

எகிப்தை தொடர்ந்து லிபியாவில் முகம்மது கடாபி எதிர்த்துப்   போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முகம்மது   கடாபி   அவர்கள்  அரபு   நாடுகளில் "புரட்சியின்பால்  நம்பிக்கை கொண்டவர்களுக்கு விடுதலை நாயகன்' அவரின் கொள்கை, இலக்கு அமெரிக்க எதிர்ப்பும் இசுரேல் எதிர்ப்புமாய் அமைந்து அவரின் வாழ்வு, 40 ஆண்டு கால ஆட்சியும் அவரின் குடும்ப அரசியலும் அவர் ஆட்சியை தூக்கி எறிவதற்கு இதுவே கூட காரணியாக இருக்கலாம்.

"இதை  நீண்ட நாள்  எதிரி  அமெரிக்காவும், இசுரேலும் ஏன்  பயன்படுத்திக் கொள்ளக் கூடாது'' என்ற  கேள்வியும் எழத்தான் செய்கிறது.  இந்தப் போராட்டம்  உள்நாட்டுப் போராக மாறக்  கூடிய அபாயம்  இருப்பதாக கடாபியும், கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி எச்சரித்துள்ளார். நாட்டில் ரத்த ஆறு ஓடும் வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளின் சதியே இந்தப் போராட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் சீரமைப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும்  என்றும்  மேற்கத்திய நாடுகளின் சதி வலையில் மக்கள் விழுந்து விடக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார். லிபியா இன்று பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறிய அவர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. சபையும் அமெரிக்காவும் லிபியா அரசு அங்கு வாழும் சொந்த மக்கள் மீதே போர் நடத்துவதாகவும், மனித படுகொலை  திட்டமிட்டு  நடப்பதாகவும் உடனே உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றும் அறிக்கை விடுகிறார்கள். 

இந்த மனித நேய மிக்க நயவஞ்சகர்கள் 2009 இல் இலங்கையில் சிங்கள  இனவெறி  அரசு   இனப் படுகொலையைக்    கண்டிக்காத    இவர்களுக்கு நேர்மையும்    நீதியும்   மனசாட்சியும்  உண்டா? இவர்களைத்   தட்டி கேட்பதற்கு   உலகில்  நாதி உண்டா?     தமிழீழ    மக்களுக்கு இழைத்த கொடுமைகளை என்ன என்பது?

இப்போது ஏன் தொடர்ந்து  இஸ்லாமிய நாடுகளிலேயே மக்கள் எழுச்சி நடக்க வேண்டும்? இங்குதான் முதலாளித்துவத்தின்  ஜனநாயகம் எனும்  திரைச் சீலையின் பணி அதன் முழுமையான பொருளில்  நாம்    புரிந்து   கொள்ள வேண்டும். இஸ்லாமிய  நாடுகளில்   மதத்தின்  பெயரிலோ, மன்னராட்சியின் பெயரிலோ தொடர்ந்து ஒருவரே ஆட்சியில் நீடிக்கும் போக்கு இருக்கிறது.

இது அரசு கொள்கைகளின்  மக்களைச் சுரண்டும் தன்மையினை    ஆள்பவர்களுக்கு எதிரானதாக விளக்கப்படுத்தி விடுகிறது. இரண்டுமே மக்களைச் சுரண்டுவதைத்தான்  நோக்கமாகக்  கொண்டிருக் கின்றன. ஆனால் மக்களை அரசுக்கு எதிரான தார்மீக கோபத்தை தடுத்து  அவர்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது   போன்றதொரு  முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நடைமுறை அங்கு இல்லாததும் ஒரு காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

துனிசியா தொடங்கி எகிப்து, லிபியா உள்ளிட்டு கிழக்குப் பகுதியெங்கும்   கிளர்ந்து  பொங்கிக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சி, உலகெங்கும் சுதந்திரவேட்கை கொண்டிருப்போரை வசீகரித்து ஈர்க்கிறது. புதிய தாராளமயக்  கொள்கைகளின் அமலாக்கத்தின் விளைவால் பாதிப்புறும் நாடுகளிலுள்ள மக்களை மாற்றுக் கொள்கைகளின் சாத்தியங்களை நோக்கிச் சிந்திக்க உசுப்புகிறது.

அடக்கு முறைக்கும், ஒடுக்கு முறைக்கும் ஆயுதபலமிக்க இராணுவத்திற்கும் எதிராக மிகச் சாதாரண மக்கள்  ஒன்றுபட்டு   உறுதியாக அணி திரண்டு நிற்கும்போது  ஆட்சியாளர்களின் நாற்காலிகளை உடைத்தெறிய முடியும் என்பதை மீண்டும் மீண்டும் சாத்தியப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். 

தொடர்ந்து 40, 50 ஆண்டுகள் ஆட்சி செய்பவர்களை தூக்கி  எறிய தானே செய்வார்கள். அதுதானே இன்று துனிசியா, எகிப்து லிபியா இதன் தொடர்ச்சி ஏன்? இந்தியாவை  பற்றக் கூடாது?  இந்தியாவை  50 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் ஆட்சி செய்பவர்களை ஏன் தூக்கி         எறியக் கூடாது என்ற கேள்வி அனைவருக்கும் எழத்தானே செய்யும்.

60ஆண்டு காலம் பல்வேறு தேசிய இன மக்களை ஒடுக்கியும்  அடிமைப்படுத்தியும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்,   உலகமயம்,  தனியார்மயம், தாராளமயக்  கொள்கைகள் அனுமதித்து மீண்டும் இந்தியா காலனி நாடாக மாறியுள்ளன. அதனால் இங்கு நடந்துவரும்    வாரிசு  அரசியலையும்,  எங்கும் நிறைந்துள்ள ஊழல் ஆட்சியையும், எதிர்த்து மக்கள் எழுந்து போராடுவார்கள். அப்போது இந்த மக்கள் விரோத  இந்தியப் பேரரசு வீழும். வீழ்த்தப்பட்ட இந்தியத்தின் கீழ் புதிய  தேசங்கள் விடுதலைப் பெறும்.

Pin It