சமூக விழிப்புணர்வு மார்ச்09

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய யன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

Houseஇந்தக் கவிதையை நாங்கள் அக்காவின் லண்டன் காசில்.. அல்லது லண்டன் கடனில் கட்டிய புதுவீட்டிற்கு குடிபோன அன்றைக்கு எழுதினேன். (இதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் முடிவுக்கு விடப்படுகிறது).. நாங்கள் முதலில் ஒரு சின்ன அறையும் ஒரு பெரியறையும் (சாமியறை)ஒரு விறாந்தையும் கொண்ட வீட்டில் குடியிருந்தோம்.. தனித்தனி அறைகள் கிடையாது.. அப்போதெல்லாம் தனித்தனி அறைகளும் தனிமையும் பெரும் வசதிகளைத் தரும் என்று நினைப்பிருந்து கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் அமைந்த போது.. எங்களுக்குள் கொஞ்சம் விலகல் நிகழ்ந்து விட்டிருப்பதை உணரமுடிந்தது.

தனிமை வேண்டித் தவமிருந்த நாட்கள் என் வாழ்க்கையில் உண்டு.. ஒரு பாட்டுக்கேக்கிற பொட்டியோடும்(வோக்மேனோடும்) கொஞ்சப் புத்தகங்களோடும் எங்காவது தொலைந்து போய்விட வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன்.. அப்போதெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கும்போது..(அநேகமாக அது கணிணியிலாக இருக்கும்..) தட்டச்சும் என் கைகளுக்கு குறுக்கால் புகுந்து என் கதிரைநுனியில் தனக்கு போதுமான இடம் கிடைத்துவிட.. பூனைக்கு குட்டி டான்ஸ் ஆடுகிற அனிமேசன் காட்சியை உடனடினாகப் போடவேண்டும் என்று அடம்பிடிக்கிற ஒரு குட்டிப்பையனுக்கு நான் சித்தப்பாவாயிருந்தேன்.

நான் போடமறுக்கையில்.. அய்லன் என்று என்பெயரை தனக்கேற்ற மாதிரி உச்சரித்துக் கொக்கரித்து விட்டு ஓடிப்போய்.. தன் அம்மாவின் சோட்டிக்குப் பின்னால் ஒழிந்து கொள்ளும்.. அவனை விரட்டிப்பிடித்து அவன்.. கத்தக் கத்த தலைக்கு மேலாய்த் தூக்கிவீசிப் பிடித்துக் கொஞ்சுகையில் அவன் எழுதுவதைக் குழப்புவதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. இதோ இன்றைக்கு எந்த நிழலும் ஆடாத என் அறையின் வாசற்கதவைப் பார்க்கிறேன். ஒரு குட்டிப்பையனும்.. வருவதற்கில்லை.. காகிதம் பறந்து வெளியேறிப் போகிறது.. வெளியே விரவிக்கிடக்கும் கோடையின் தகிப்பு மட்டும் எஞ்சிக்கிடக்கிறது அறையுள்.. போராடுகிறது மின்விசிறி எனக்கு கொஞ்சம் காற்றைக் காட்டி விட.

நான்கு பல்லிகளும் திக்கொன்றாய் இரைதேடும் சுவர்களில் பெரிய பல்லியைக் காணோம்.. அவை ஒளித்துப்பிடித்து விளையாடுகின்றனவோ என்னவோ.. சுவர்களை விடவும் தகிக்கிறது மனம்.. கனவும் நிஜமும் சேரும் பிரமையின் புள்ளிகளில்.. துள்ளி ஓடுகிறது அய்லன் என்றழைக்கும் ஒரு குட்டிப்பையனின் குரல். எனது சொற்களின் குதூகலம் அவனிடமிருந்திருக்கிறது என்பது புரிந்தபோது.. பாக்கு நீரிணையை நான் கடந்து விட்டிருந்தேன். வீடு என்பதன் வெறுமையான அர்த்தங்களைத் தாண்டி அது தரும் பாதுகாப்புணர்வை கடல் கடந்த பின்னர் நான் தீவிரமாக உணரத் தலைப்பட்டேன்.. வீடு என்பது கட்டிடம் அல்ல.. என்பதன் குரூரம்.. சென்னை மாநகரில் எனக்கு புரிந்தபோது காலம் கடந்துவிட்டிருக்கிறதோ என்னமோ.

எட்டாம் வகுப்புக் காலத்தில் சொந்த வீட்டை விட்டு இடம்பெயர்ந்து போகும் போது புரியாதது.. மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி உடைந்த வீட்டை திருத்திக் கட்டியபோது புரியாதது சிறிய வீட்டை பெரிய வீடாக்கி எல்லாருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபோது புரியாதது.. சென்னையில்.. தங்குவதற்கிடமில்லை என்றாகிய ஒரு இரவில் திடீரெனப் புரிந்தது.. வீட்டைக் காலி பண்ணச் சொல்லிக்கொண்டேயிருந்தார் வீட்டுக்காரர் காரணம் வாடகைப் பாக்கியில்லை.. கரண்ட்பில் கட்டாமல் இல்லை.. தண்ணி அடித்துவிட்டு நாங்கள் அவர் வீட்டு மொட்டைமாடியில் பண்ணிய அலப்பறையில்லை.. நான் சைற்றடிக்கக் கூடிய மாதிரி அவருக்கு பொம்பிளைப் பிள்ளைகள் இல்லை.. அவரிடம் இருந்த ஒரே காரணம் நான் சிலோன்காரன்.. அந்த ஒற்றைக்காரணம் போதுமானதாய் இருந்தது அவர் என்னை அவசரமாய் வெளியேறச் சொல்வதற்கு.

எங்காவது பேப்பரில் வருகிற இலங்கை வாலிபர் கைது என்று செய்தி வருகிறபோதெல்லாம் அவர் நான் இருக்கிறேனா என்று வீட்டிற்குள் வந்து பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வார்.. நான் வாடகைக் காசை நாள் பிந்தாமல் கொடுப்பதற்கு காரணம் நான் வெளிநாட்டில் இருக்கிற நண்பர்களின் உதவியோடு கிரடிட் காட் மோசடியில் ஈடுபடுவதுதான் என்று அவரது அறிவு அவருடைய கனவில் சொல்லிய நாளில் அவர் என்னை வெளியேறச் சொன்னார். நான் 7 நாள் தவணை கேட்டேன்.. தந்தார்.. ஆனால் என்ன நினைத்தாரோ 5ம் நாளே நான் வெளியே போயிருந்த நேரமாய் எனது பூட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு தனது பூட்டால் நான் வசித்த அறையைப் பூட்டிவிட்டு வெளியேறி விட்டார்.

நான் வந்து பார்த்தேன் வீட்டு ஓனரில் பூட்டு என்னை வேளியேறச் சொல்லி இளித்தது. அடுத்து எங்கே போவது அன்றைய இரவை எங்கே கழிப்பது என்பது போன் பல பிரச்சினைகள் எனக்குள் முளைத்தது. எனக்குத் தெரியாமல் எனது பொருட்கள் உள்ளே இருக்கும்போது.. பூட்டை உடைத்ததற்கு நியாயம் கேட்டு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.. பிறகு சிலநாட்களிற்கு முன்பு தான் அந்த வீட்டிற்கு அருகில் இருந்த கடை ஒன்றில்.. திருடு போய்விட்டிருந்தது.. அந்த திருடனை இன்னமும் போலீஸ் தேடிக்கொண்டுதான் இருக்கிறது.. இந்த நேரத்தில் நான் அங்கு போக ஆகா சிக்கிட்டான்யா மாப்ள என்று என்பெயரில்.. அந்தக் கேசுகள் எல்லாவற்றையும் போட்டுத்தாக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம் என்பதால்.. அந்த திட்டத்தைக் கைவிட்டேன்..

கேற்றை மெதுவாச் சாத்தப்பு பெரியம்மாவின் குரல் நினைவிலிருந்தும் மோட்டார் சைக்கிளால் உறுமியபடி கேற்றை இடித்துத் திறக்கிற நினைவெழுந்து படம் விரித்தாடியது..இரண்டாம் சாமங்களில்.. எனது மோட்டார் சைக்கிள் உறுமும் சத்தத்திற்கு தூக்கக் கலக்கத்திலும் எழுந்து வந்து சாப்பாடு போடட்டேப்பு என்று கேட்கும் அண்ணியின் குரல் நினைவுக்கு வந்த அடுத்த கணம் பீறிட்டுக் கிளம்பியது அழுகை.. நான் நின்று கொண்டிருப்பது நடுத்தெருவென சட்டை செய்யாத அழுகை.. சென்னை மாநகரத்தின் ஒரு தெருவில் நின்று நான் அழுகையை விழுங்கி விழுங்கி அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். அடுத்த நேரப்படுக்கைக்கு இடமில்லாமல் போகும் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்து கொண்டதில்லை.. அது எனக்கு நிகழ்ந்ததென்று என்னால் நம்பமுடியவில்லை..

இடப்பெயர்வில் எத்தனையோ இரவல் வீடுகள் மரநிழல்கள்.. சங்கடங்கள் இருந்தன.. கருணாகரனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..ஒரு இரவல் வீட்டில் வசிக்கிற அப்பா மகனுக்கு சொல்லுவது போன்றான ஒரு கவிதை.. பல ஆண்டுகளாயிற்று படித்து.. இந்தச் சுவற்றில் கீறாதே மகனே, கிணற்றடியில் தண்ணீரை ஊற்றவேண்டாம்.. என்பது போன்ற வரிகள் எல்லாம் வரும் (நான் முதல் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு அதுதான் ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்) இப்படியான அனுபவங்களின் போதெல்லாம் நான் அழுததில்லை.. ஏனெனில் எனக்கு என் வீட்டு மனிதர்கள் பக்கத்தில் இருந்தார்கள்.. அது எல்லாருக்கும் நிகழ்ந்தது.. இப்போது எனக்கு மட்டுமாய் நிகழ்ந்தது. அது தான் அழுகை..

நான் என்ன மாதிரித் தனித்து விட்டேன் என்கிற அச்சம் பிரமாண்டமாய் எழ நான் மட்டும் ஒரு தனித்தீவின் கரைகளைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தேன்.. அநேக நாட்களில் வீடு திரும்புவதேயில்லை.. பள்ளிக் கூடத்து மேசைகளிலோ.. நண்பர்கள் வீடுகளிலோ.. படுத்துவிட்டு காலையில் பல்லு விளக்காமல் வீட்டுக்குப் போகையில்.. முதல் கேள்வி இரவு சாப்பிட்டாயா என்பதாய்த் தான் இருக்கும் அப்போதெல்லாம் வீடு எனக்கு அளிக்கும் பாதுகாப்புணர்வை இன்னதென்று அறியாதிருந்தேன்.. வெட்கத்தை விட்டு விட்டால் ஏதாவது தெருவில் படுத்துவிடலாம்.. நான் விட்டாலும் அது நம்மை விடுவதாயில்லை.. இந்தப் பெருநகரில் ஒரு புழுப் பூச்சி கூட என்னைக் கவனிக்காது இருந்தும். கௌரவத்தின் கண்கள் என்னைக் கண்காணித்துக் கொண்டிருந்தன.. மன்மத மாசம் போட்டிருந்தார்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புக்காட்சி.(மேட்டர் படம் தான்) குமரன் தியட்டரில். தியட்டரை ஒரு அரை நாள் வீடாக்குவதெனத் தீர்மானித்தேன்..

வானம் பெருங்கூரை
நட்சத்திர அலங்கரிப்பு..
காலப்பெருவிளக்கு நிலா..
என் கனவுப் பாதையிலே..

ஏதேதோ தோன்றிற்று.. புலம்பலாய்.. குமரன் தியட்டர் வாசலில் ஒரு கழைக்கூத்தாடிக் கூட்டம் ஒன்று தங்கள் வண்டியை நிறுத்தி விட்டு தூங்க ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.. எனக்கு இன்றைக்கொரு நாளைக்குத்தான் இப்படி நாளைக்கு நான் வீடு தேடிவிடலாம்.. அல்லது இன்றைக்கே எதாவது லொட்ஜ்ஜில் அறையெடுத்து விடலாம்.. அவர்கள் பிறந்ததிலிருந்தே வானமே கூரையெனக் கொண்டவர்கள்.. அவர்களுடைய எந்தக் குழந்தையும் அடம்பிடித்து வீரிட்டு அழுததாய் நான் பார்த்ததேயில்லை.. நுளம்பு அவர்களைக் கடிக்காதா.. அந்தப் பெண்களிற்கு நாணம் இருக்காதா.. திரைப்படத்தின் முத்தக் காட்சிக்கே.. பரபரப்பாகிற கலாச்சாரம் பேசுகிற ஊரில் இருந்து கொண்டு தெருவில் புணர்ந்து தெருவில் பிறந்து தெருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களைப் பார்த்தேன்..அழுது கொண்டிருந்த மனம் தளர்ந்தது.

இந்த மனிதர்களிற்கு வீடு பற்றிய கனவுகள் ஏதேனும் இருக்குமா என்கிற நினைப்பெழுந்தது.. இருக்கும் நிச்சயமாய் இருக்கும் என்று தான் தோன்றிற்று.. அவனது கனவில் வருகிற வீடு.. சாருக்கான் தனது மனைவிக்கு பரிசளித்த வீட்டைப் போலவோ.. அம்பானி தனது மனைவிக்கு பரிசளிக்க கட்டிக் கொண்டிருக்கிற வீட்டைப் போலவோ நிச்சயம் இருக்காது.. அது நிச்சயமாய் நான்கு மறைப்புச் சுவர்களும்.. ஒரு கூரையும் கொண்ட எளிய குடிசையாகத்தான் இருக்கும்.. ஒரு வேளை அவர்கள் பூசலாரைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்னவோ..

வீடுகள் அவரவர் கனவுகளைப் போல.. சிலது அவரவர் வசதியைப்போல.. புல்லை எடுத்து வேய்ந்து களிமண்ணை உருட்டிச் சுவர்வைத்த வீடு கூட சிலருக்கு கனவு வீடாகத்தான் இருக்கிறது.. அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் வீட்டிற்குப் போனேன். தமிழகத்தை கொஞ்சமேனும் கலக்கிக் கொண்டிருக்கிற அரசியல்வாதி அவர். அரசியல் வாழ்விற்கு வந்து கால்நூற்றாண்டுகளாகிறதாம்.. அதனைக்குறித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பு பணிகளில் ஈடுபட அல்லது அங்கே சென்று வாய் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.. அங்கனூரில் இருக்கும் அவரது வீட்டைப் பார்க்கையில் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. அது வீடல்ல குடிசை தொட்டதெற்கெல்லாம் ஊழலும் கட்டைப்பஞ்சாயத்தும் தலைவிரித்தாடுகிற அரசியல் சூழலில் ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறவரின் வீடு ஒரு குடிசை என்பது.. ஆச்சரியங்கள் தராமல் வேறென்ன தரும். அவருடைய வீடு மட்டுமில்லை..

அவருக்கு ஓட்டுப்போடுகிறவர்களான தலித் மக்களின் வீடுகள் எல்லாமே குடிசைகள் தான்.. அவர்களிம் மிச்சமிருப்பது நூற்றாண்டுகளாய் சாதியின் வன்கொடு நிழலில் வசித்த வசித்துக் கொண்டிருக்கிற ஆயாசம் மட்டும்தான்.. திருமாவளவன் நிச்சயமாய் அவர்களிற்கு விடுதலை தருவார் என்று நம்புகிறார்கள்.. நம்புவோம்.. இலங்கையின் அகதி முகாம்களில் இருக்கிற சிறிய வீடுகளை விடவும் மோசமான குடிசைகள் அவை.. யாருடைய வீட்டைச் சற்றியும் வேலிகள் கிடையாது.. இந்தியாவில் நகரங்களில் தான் மதில் கலாச்சாரம் கிராமங்களில் அநேகம் வேலிகள் கிடையாது.. (ஒரு கிடுகு வேலிக்கலாச்சாரத்தின் தேசத்திலிருந்து வந்தவனின் மனோ நிலை எனக்கு)

இலங்கையின் அகதி முகாம்களைப் பற்றிய நினைவெழுகையில்.. இந்தியாவில் இருக்கிற இலங்கை அகதி முகாம்களில் இருக்கிற வீடுகள் (அப்படி அவற்றை நிச்சயமாகச் சொல்ல முடியாது..) பற்றிய நினைவும் கூடவே எழுகிறது.. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் நான் கழிக்கநேர்ந்த ஏறக்குறைய ஒரு மாத காலத்தில்.. அந்த வீடுகள் லயன்களை விடமோசமாயிருந்தன.. இலங்கையில் தோட்டத்தொழிலாளர்களிற்கு கட்டித்தரப்படுகிற வீடுகள்(லயன்) குறித்த விசனங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.. இந்தியாவில் அதேபோல வீடுகள்தான் ஈழத்தமிழ் அகதிகளிற்கு வழங்கப்படுகிறது. கக்கூஸ் முதல் சங்கக் கடை வரை எல்லாவற்றிற்கும் வரிசை வாழ்க்கையின் மிகக் கடினமான தருணங்கள் அவை.

நான் இதுவரை வசித்த வீட்டிற்கு கீழே சேட்டுக்காரர்கள் கடை வைத்திருந்தார்கள்.. அண்ணனும் தம்பியுமாக இரண்டு சேட்டுகள். அவர்களுடைய கடையின் கல்லாப்பொட்டி வரை போகும் அளவிற்கு நம்பிக்கையும் அன்பும் எங்களிடம் அவர்களிற்கு இருந்தன. நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தபோது எங்களை இந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட ஆட்டோக்காரர் சொன்னார்.. சேட்டுக்காரன் ரொம்பக் குப்பையா இருப்பான்யா ராஜஸ்தான்ல தண்ணி கிடையாதுல்ல.. அதால பாத்றும்ல டாய்லெட்ல எல்லாம் தண்ணியை சிக்கனப்படுத்துகிறேன் என்று அதன் மணத்தை அதிகப்படுத்தி விடுவான்கள் என்று.. அதையும் மீறி நாங்கள் அவர்களோடு பழகினோம்.. இராஜஸ்தானில் இருந்து தனது எடையைவிட அதிக எடையுள்ள உலோகங்களை தன் உடம்பிலே போட்டுக்கொண்டு வருகிற சேட்டுக்களின் அம்மா.. பேட்டா என்று எங்களை அணைக்கையில் பெரியம்மாவின் நினைவெழுவதைத் தவிர்க்க முடியவில்லை.. அதெல்லாவற்றையும் விட.. அவர்கள் செய்து தருகிற சப்பாத்தியும் கிழங்கையும் அவ்வப்போது ஒரு பிடி பிடிக்கவும் நாங்கள் தயக்கம் காட்டியதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக இராஜஸ்தானில் இருந்து கொண்டு வருகிற எள்ளுல செய்த ஒரு வகைப் பலகாரம் அதைச்சாப்பிடாதவனுக்கு இந்த ஜென்மம் சாபல்யம் அடையக் கூடாதெனச் சபிப்பேன் நான்.. ஆனால் என்ன அவர்கள் வீட்டில் எந்த ராஜஸ்தானி சின்னப்பொண்ணும் இல்லை என்பதுதான் என் ஒரே மனக்குறை.. அவர்களுடைய வீடாக தண்ணீர் அதிகம் பாவிக்காத ஒரு அசுத்தமான வீட்டைக் கற்பனை பண்ணி வைத்திருந்தேன். ஆனால் அவர்களுடைய வீட்டுக்குள் போனதும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.. துடைத்து வைத்தது மாதிரி அத்தனை சுத்தமாக இருந்தது சமையலையில் சமைக்கிறதற்காக சுவடுகளே தெரியாமல் அத்தனை சுத்தமாக இருந்தது.. நானே எனக்குள் அவர்களை அசுத்தமானவர்களாக கற்பனை பண்ணியதற்காக வெட்கப்பட்டுக் கொண்டேன்..

நான் குமரன் தியட்டரின் வாசலில் பீறிட்டுக் கிளம்புகிற அழுகையை வெட்கம் கருதி அடக்கிய படி படம் முடிவதற்காக தியட்டர் வாசலில் காத்திருந்தேன்.. யாரும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள் கிடையாது.. யார் வீட்டிற்காவது போய் இன்றைய இரவைக்கழிக்கலாம் என்றால் எல்லா கல்யாணமாகாத இளைஞர்களின் வாழ்க்கையும். இட்டுமுட்டு அறைக்குள். தட்டுமுட்டுச் சாமான்கள் காலில் முட்டுப்படத் தூங்கும் வாழ்க்கைதான் இதில் நான் வேறு போய் ஏன் சிரமத்தைக் கொடுப்பான் என்று நினைத்தேன்.

டேய் பாடு என்னடா மேட்டர் படம் பாக்கப்போறியா என்றபடி சேட்டு தன் பைக்கை என்னருகில் நிறுத்தினான் சேட்டு.. ஆதரவான மனிதர்களை காணோம்.. என்று தவித்துக் கொண்டிருந்த அழுகை விடுவிடென ஊதடுகளில் விம்மித் தழும்பியது.. என்னடா வாடா.. என்று அவனது பைக்கில் போனேன்.. அவனது வீட்டிற்குப் போனதும் அழுகை பீறிட்டுக் கிளம்பியது.. அடக்கமுடியாத அழுகை பாத்ரூமில் நின்று அழுது தீர்த்தேன்.. லால்(சேட்டுகளில் அண்ணன்)இன் மனைவி ஹிந்தியில் ஏதோ சொன்னார்.. அநேகமாக வீட்டு ஓனரைத் சபித்து திட்டுகிறாள் என்று புரிந்தது.. டேய்.. நாங்க இருக்குமட்டும் நீ எதுக்கு யோசிக்காத எப்ப வேணா இங்க வா உன் வீடு மாதிரி இது.. ஹரி(சேட்டுகளில் தம்பி) சொன்னான்.

அவனது அண்ணி இன்னமும் போலீசில் சொல்லலாம் என்பது மாதிரி ஏதோ சொன்னாள்.. ஹரி என்னிடம் சொன்னான் இது எங்க ஊரு இல்ல மாப்ள நாங்க இங்க பிழைக்க வந்திருக்கம்.. இது நம்ம ஊரு கிடையாதுல்ல.. நாம எதுசொன்னாலும் வேலைக்காகாது அவன் சொல்றதுதான் எடுபடும். அதால பேசாம இருந்திட்டு நம்ம ஜோலியைப் பார்க்கணும்டா.. விடு எல்லாம் நல்லதுக்குத்தான்.. அவனது அண்ணி தேத்தண்ணி கொண்டு வந்து தந்தாள்.. அவளது குழந்தை என்னை நெருங்கி எனது தலைமுடியைப் பற்றி இழுத்தது..

வீடென்பது அறைகள் கொண்ட கட்டிடடம் அல்ல.. அது மனிதர்கள்.. கவனிப்புகளும் கனிவுகளாலும் நம்மை ஆட்கொள்கின்ற மனிதர்கள் நிறைந்த சொர்க்கம். துயரங்கள் என்னை அண்டாமல் காத்துநிற்கிற வேலி.. நான் விட்டுவிட்டு வந்திருப்பது கட்டிடத்தை அல்ல அந்த மனிதர்களின் கனிவை.. இனி எப்போது மறுபடி திரும்பமுடியும் என உறுதியாகச் சொல்ல முடியாத தொலைவுக்கு வந்துவிட்டேன்.. உலகெங்கும் தன்மையின் கொடுநிழலில் வசிக்கநேர்கிற ஒவ்வோரு தனியன்களினதும் துயரம் இதுவாகத்தானே இருக்கும்.. ஹரி எனக்காக ஒரு நான்கு சுவர்கள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு மறுபடி.. எடுத்துக் கொடுத்தான். அந்தகட்டிடமும் வீடாக முடியாது என்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.. நான் இனி எப்போது ஒரு வீட்டில் வசிக்கத் தொடங்குவேன்.. என் தம்பின்னு சொல்லியிருக்கேன்.. நீ சிலோன் அது இதுன்னு.. சொல்லாத.. ஹரி என்னிடம் சொன்னான். வீட்டுக்காரர் என்னை ஒரு சேட்டாக எண்ணுகிறார்.. அவரது விழிகளில்..ஒரு சந்தேகம் முளைத்துக் கிடக்கிறது.. கறுப்பு நிறத்தில் ஒரு சேட்டா இருப்பார்களா? இந்தக் கட்டிடமும் என்னை வெளியே தள்ளலாம்.. அதுவரைக்கும் அதன் சுவர்களிற்குள்ளிருந்து கொண்டு...

Pin It

எப்போதும் சிரிப்பாயே
இன்று மட்டும் என்ன
நீ கேட்ட
வண்ணாத்திபூச்சியையும்
நாய்குட்டியையும்
அப்பா வாங்கித்தரவில்லையா
அதனால் என்ன
உனக்கு பிடித்த வண்ணங்களில்
உன்மொழியான விரலசைவில்
வண்ணாத்திபூச்சியையும்
நாய்குட்டியையும் வரைந்துகொடு
அப்பாவின் தலையணையடியில்
நாம் பத்திரப்படுத்தலாம்
வரக்கூடிய கனவில்
உன் ப்ரிய நாய்குட்டி
அப்பாவுடன் விளையாடத் தொடங்கலாம்
தொடர்ச்சியாய் பறந்துவரும்
வண்ணாத்திப்பூச்சியை எட்டிப் பிடிக்க முயற்சித்தபடி
இவையெல்லாம் உன்னாலானது என
அப்பாவிற்கு தெரியாது
பிறகொருநாள் நீ கதைகேட்கும்போது
நாய்குட்டி எட்டிப்பிடித்த பட்டாம்பூச்சியென
சொல்லக்கூடும்
ரசிப்பதாய் நினைத்த
உன் ரகசிய புன்னகையை கடந்தபடி

Pin It

1947-ல் இந்தியப் பிரிவினை நடந்து முடிந்த சில நாட்களில், இந்திய - பாகிஸ்தான் எல்லையோரங்களில் வரலாறு காணாத கலகம் பொங்கி வெடித்தது. பஞ்சாபிலும் லாகூரிலும் கழிவு நீர்க் கால்வாய்களில் ரத்தம் ஓடியது. படுகொலை செய்யப்பட்ட மக்கள் வீசியெறிந்த குப்பைகளாக தெருக்களில் சிதறிக் கிடந்தனர். கற்களாலும் தடிகளாலும் அடித்துக் கொல்லப்பட்ட உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிந்து கிடந்தன. கண்களும் கை கால்களும் இன்றி பெண்களும் குழந்தைகளும் இறந்து கிடந்தார்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் இரத்த வெறிபிடித்த வேட்டை நாய்களைப் போல இரவிலும் பகலிலும் கொலை ஆயுதங்களுடன் கூச்சலிட்டபடி சுற்றித் திரிந்தனர். இந்துக்களைக் கண்ட மூஸ்லீம்களும். முஸ்லீம்களைக் கண்ட சீக்கியர்களும் மரண ஓலமிட்டபடிச் சிதறி ஓடினர்.


துப்பாக்கிகளாலும் கூரிய ஆயுதங்களாலும் மக்களைக் கொலை செய்த கும்பல்களில் சீருடையணிந்த காவலர்களும் இருந்தனர். கராச்சியிலும், சிம்லாவிலும் பணியிலிருந்த அனைத்துக் காவலர்களும் பணிய¤லிருந்து திடீரென விடுப்பு எடுத்துக் கொண்டனர். மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படாத அந்த விடுப்பு, காலவரையின்றி நீடித்தது. விடுப்பு எடுத்த காவலர்களோ, சீருடைகளைக் கழற்றிவிட்டு, துப்பாக்கிகளுடன் கிராமங்களுக்குள் நுழைந்து வேட்டையாடினர். பஞ்சாபில் மட்டும் 25,000 சீக்கியக் காவலர்கள் ஒரே நாளில் தங்கள் பணியை விட்டு நின்றனர். பின்னர் ரத்த வெறிகொண்ட வேட்டை நாய்களாக மாறினர்.

ஆங்கில ஆட்சியதிகாரத்திலிருந்து மீண்ட இந்திய காவல்துறைக் காவலர்கள் நடத்திய மாபெரும் படுகொலை நிகழ்வு அதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆயினும் ரத்தம் ருசித்த வேட்டை நாய்களின் நாக்கு மடியுமோ! பைபிளில் கூப்பட்டிருந்தபடி கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் போன்ற கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த பயங்கர வன்முறை நடந்து அறுபத்தியிரண்டு ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஆனால், நாட்டின் காவல்துறைக் காவலர்களின் வெறியுணர்வு மட்டும் இன்றுவரை குறைந்தபாடில்லை. என்கவுண்டருக்குப்Õ பெயர்போன தமிழ் நாட்டு காவல்துறைக் காவலர்களோ வெறியுணர்வின் உச்சத்தில் நிற்கிறார்கள்.

1997-ல் கூலி உயர்வு கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்க, நெல்லை - தாமிரபரணியாற்றுப் படுகையில் ஊர்வலமாகச் சென்ற தோட்டத் தொழிலாளர்களை, குழந்தைகள், பெண்கள் என்று கூடப் பாராமல், பொங்கிப் பெருகி வந்த ஆற்றுக்குள் அடித்து விரட்டி பதினேழு பேரைப் படுகொலை செய்தது போல... தமிழ்நாட்டு காவல்துறை காவலர்கள் எதையும் இப்போது செய்யவில்லை. புறம் கை கட்டப்பட்டு, மண்டியிடச் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட அயோத்தியாநகர் வீரமணியிலிருந்து, மணல் மேடு சங்கர் வரை யாரேனும் உயிர் மீண்டு எழுந்து வந்து சாட்சி சொல்லவா போகிறார்கள். இருபத்தைந்து கொலைகள் உட்பட இரு நூற்றுக்கும் அதிகமான வழக்குகளைச் சுமந்து இருபத்தைந்து ஆண்டுகாலம் ராஜாவாக வாழ்ந்த வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும், திடுமெனவொரு நள்ளிரவில் கொன்றுவிட்டதாகச் சொல்லிக் கதையளந்த விஜயகுமாருக்குப் பாராட்டு விழா எடுத்தல்லவா Ôஅம்மாÕ பட்டை தீட்டினார். சுவர் தாண்டுவோரைக் குறிவைத்துப் பாயவேண்டுமல்லவா விசுவாசமான வெறிநாய்கள். வழக்கு, தீர்ப்பு, விசாரணை, என அலைச்சல் ஏதும் இல்லாதபடி, வன்மமும் வெறியுணர்வும் கொண்ட காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் புகுந்த உடல்களில் கொப்பளிக்கும் குருதி காலத்திற்காக காத்திருக்காதா என்ன?

ஆனாலும், மேசையின் மீதிருநது விழும் ரொட்டித் துண்டுகளுக்காகக் காத்திருக்கும் நாய்களுடன் எஜமானர்கள் கைகளாலும், வாய்களாலும் அறிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தோட்டத்தில் இன்னொருவர் மருத்துவமனையில். அப்படியெழுதப்பட்ட வாயறிக்கையன்றின் விளைவுதான், கடந்த பிப்ரவரி. 19. அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நடந்த காவலர்களின் கொலைவெறித் தாக்குதல். அந்தத் தாக்குதல் வழக்கறிஞர்களின் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல! நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த நீதித்துறையுமே காவலர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. வழக்கறிஞர்களை நசுக்குவதற்கு முயற்சிக்கும் காவல்துறை நடத்திக் காட்டிய வெள்ளோட்டம் அது. அல்லது சுதந்திர இந்தியாவில் நீதித்துறையை எதிர்த்து காவல்துறை நடத்திய முதல் கலகம் அது.

Police Attackசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த அந்தத் தாக்குதலுக்கான மூலகாரணமாக இருந்தவர், பார்ப்பன கொழுப்பு கொப்பளிக்கத் திரியும் சுப்ரமணிய சுவாமியும் அவரது நெருங்கிய சகாக்களான ஜெயலலிதா, இந்துராம், தினமலர், கிருஷ்ணமூர்த்தி, சோ ராமசாமி போன்றோர் எப்போதும் தமிழர் நலன்களுக்கு எதிராகவே பேசி வருபவர்கள். அண்மைக் காலமாக ஈழ மண்ணில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு வரும் சூழலில் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் சுப்ரமணியன் சுவாமியும் அவரது சகாக்களும் தமிழர்களின் தேசிய இன உரிமை உணர்வுகளை கொச்சைப்படுத்தி எழுதியும் பேசியும் வருகின்றனர். தமிழீழம் குறித்து கொதிப்பூட்டும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். நீண்ட காலமாக தமிழ் மக்களின் தேசிய இன உணர்வுகளை கொச்சைப்படுத்தும் தமிழ் விரோத சக்திகளை ஒடுக்க, தமிழினக் காவலர் என தன்னைச் சொல்லிக்கொள்ளும் கருணாநிதி, இன உணர்வுகளைக் கொச்சைப் படுத்த வேண்டாம் என ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

ஈழம் காக்க எதிரிகளின் உடம்பில் நெருப்பிட வேண்டிய வீரம் செறிந்த தமிழ் இளைஞர்கள் தம் உடலைப் பொசுக்கிக் கொள்ளும் கொடிய சோகத்தைச் சந்தித்து வரும் தமிழக மக்களின் இன உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் பேசியும் எழுதியும் வரும் பார்ப்பனக் கும்பலை ஒடுக்க இளைஞர்கள் நேரடி நடவடிக்கையில் இறங்குவது இயல்பானதுதான். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் தேசிய இன உரிமைகள் குறித்து கொச்சைபடுத்தும் நோக்கில் மனம் போனபடி பேசித் திரியும் அரசியல் போக்கிலிகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகிறார்கள். காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நடந்து கொண்டிருப்பது அதுதான். சிதம்பர நடராசர் கோவிலை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை ஏற்று, சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியத் தீர்பபை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் ஒரு வாதியாகச் சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த சுப்ரமணியன் சாமி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அத்தகையதே!

தமிழ் இனத்திற்கு எதிராக தமிழ் மொழிக்கு எதிராக, தமிழர் நலன்களுக்கு எதிராக நீண்ட காலமாக சதிச் செயல்களில் ஈடுப்ட்டு வந்த சுப்ரமணிய சாமி தாக்கப்பட்டதை அறிந்து பார்ப்பன ஜெயலலிதாவை விட முதுபெரும் தமிழினத் தலைவர், கருணாநிதிக்கு இரத்தம் கொதித்தது ஏன் என்று தெரியவில்லை. 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உயர்நீதி மன்ற நீதிபதிகள் முன்பு விரட்டி, விரட்டி செருப்பாலும், அழுகிய முட்டையாலும் அடிபட்ட சுப்ரமணிய சுவாமி, தன்னை அழுகிய முட்டையால்தான் அடித்தார்கள் என்று ஊடகங்களுக்கு வெளிப்படை யாகத் தெரிவித்த போதிலும் கொலை முயற்சி நடந்ததாக வழக்குப் பதிவு செய்தது காவல் துறை. அழுகிய முட்டையால் கொல்ல முடியுமா? அதுவும் சுப்ரமணிய சுவாமியைக் கொல்ல முடியுமா? தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதை சுப்ரமணிய சுவாமியிடம் கேட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்கள் என்று எண்ணுமளவிற்கு, தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. ஜனதா கட்சி என்ற பெயரில், உயர்நீதி மன்றத்தில் அவர் வாங்கிய அடி, மிதி, முட்டை வீச்சுக்களைவிட குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, தரகு அரசியல் செய்து பிழைத்துவரும் சுப்ரமணிய சாமியை இந்தியா அறிந்த தலைவர் என புகழ் பாடுகிறார் கருணாநிதி.

தாக்குதல் நடந்த மறுநாளே, வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை யிலடைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. உயர்நீதி மன்றத்தில் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களைத் தீவிரமாக முன்னின்று நடத்திவரும் வழக்கறிஞர் களை பிணையில் வெளிவர முடியாத குண்டர் சட்டத்தில் சிறை வைப்பதன் மூலம், உயர்நீதி மன்றத்திற்குள் நடை பெற்று வரும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே தமிழினத் தலைவரின் நோக்கம். அதற்காகவே விரிவான திட்டங்களைத் தீட்டி, செயலில் இறங்கியது தமிழக காவல்துறை.

திட்டமிட்டபடி, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணியாற்றும் காவல் உயர் அதிகாரிகள் அனைவரும் பிப்ரவரி 19-அன்று உயர் நீதிமன்ற பகுதிக்கு வந்து சேர்ந்தனர். தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகள், துப்பாக்கிகள், சிறைபிடித்து ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன் அதிரடிப் படை, கலவரத் தடுப்புப்படை உட்பட நெற்றிமட்டத் தடிகளுடன் அய்நூறுக் கும் மேற்பட்ட காவலர்கள் உயர்நீதி மனற் வளாகத்திற்குள் குவிக்கப்பட்ட னர். 20 வழக்கறிஞர்களைக் கைது செய்ய, 1000க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்தது ஏன் என்ற கேள்வியை நாம் நாட்டின் முதுபெரும் முதலமைச்சரிடம் எழுப்பலாம். ஆனால் காவல்துறைத் தலைவரிடமாவது, நகர ஆணை யரிடமாவது கேளுங்கள்; நான் மருத்துவ மனையில் இருக்கிறேன் என்பார் அவர்.

சுப்ரமணிய சுவாமி மீதான தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்ய, உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறை அதிகாரிகளும் திரளான காவலர்களும் சென்றனர். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறையை முற்றிலும் மீறி, வழக்கறிஞர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டினர் காவலர்கள். சுப்ரமணியன் சுவாமி மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்த பின்னரே தங்களைக் கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியதை அலட்சியம் செய்தனர் காவல் அதிகாரிகள். வழக்க றிஞர்களை அடித்து வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வெளியேறினர். அதில் வழக்குப் பதிவு செய்யப்பட்£த வழக்கறிஞர்களும் இருந்தனர். அதோடு காவல் அதிகாரிகளும் திரும்பி வந்திருந்தால் நிலைமை அடங்கியிருக்கக் கூடும். ஆனால் எஜமானர் இட்ட கட்டளையை நிறை வேற்றாமல் வரமுடியுமா? மேலும் நான்கு பெண் வழக்கறிஞர்களைக் கைது செய்வோம் என்று காவல்துறையினர் தெரிவித்த போதுதான் மோதலுக் கான சூழ்நிலை உருவாகியது.

சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநில காவல் துறைத் தலைவர் ஜெயின் ஆகியோ ரின் கட்டளைகளுக்காக, குவிக்கப் ட்டிருந்த காவலர்கள் துடிப்பாய் காத்திருந்தார்கள் கையில்தடிகளுடன். சட்ட விரோதமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்து, அதிரடியாக வழக்கறிஞர் ளைக் கைது செய்ய, காவலர்கள் காட்டிய தீவிரம், வழக்கறிஞர் களுக்குக் கொதிப்பை உருவாக்கியது. அமைதியான முறையில், வழக்கறிஞர் கள் உறுப்பினராக உள்ள சங்க நிர்வாகிகளிடமோ, அல்லது இந்திய வழக்கறிஞர் சம்மேளனத்திடமோ பேச்சு வார்த்தை நடத்தி வழக்கறிஞர் களை கைது செய்திருக்க முடியும். அப்படிப்பட்ட முயற்சிகள் எதையும் கருணாநிதியோ, ராதாகிருஷ்ணனோ, ஜெயினோ முன்னெடுக்காமல் விட்டதற்கு ஒரு ஆழமான காரணம் உண்டு. ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் வழக்கறிஞர்களை ஒடுக்க வேண்டும் என்பதே அது!

Police Attackகாவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ஏற்படுத்திய மோதல் சூழலை, ஊடகங்கள் ஒளிபரப்பிய நேரடிக் காட்சிகளைக் கண்டவர்களால் புரிந்து கௌள முடியும். 20 வழக்கறிஞர்களைக் கைது செய்து கொண்டு சென்ற பிறகும் ஏன் காவலர்கள் நீதி மன்ற வளாகத்திற்குள் குவிக்கப்பட்டார்கள்? தாக்குதல் நடத்த ஆணைகளை எதிர்பார்த்தபடி காத்திருந்த காவலர்களை வெளியேறும்படி வழக்கறிஞர்கள் கூச்சலிட்டனர். சிலர் கல்லெறிந்தார்கள். பதிலுக்கு காவலர்களும் கல்லெறிந்தனர். நீதி மன்ற வளாகத்திற்கள் இருபெரும் படையணிகள் மோதலுக்குத் தயாராவது போலிருந்தது அது. இளம் வழக்கறிஞர்கள் சிலர் காவலர்களை வெளியேறும்படி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். எதிரே திரளாக தடிகளுடன் நின்று கொண்டிருந்த காவலர்கள் அதிகாரிகளின் ஆணைக்காக காத்திருந்தனர். கிரா மங்களில் நடக்கும் சாதிச் சண்டை யையத்ததாக அது இருந்தது.

திடுமென அது நிகழ்ந்தது. பின்னாலிருந்த காவல் துறை உயரதிகாரிகளின் ஆணையைக் கேட்டவுடன், கையிலிருந்த தடிகளை உயரே தூக்கிக்கொண்டு ஓங்காரத்துடன் கூச்சலிட்டபடி வழக்கறிஞர்ளைத் தாக்க காவலர்கள் ஓடினார்கள். கொலைவெறியுடன் ஆயுதங்களுடன் ஒடிவந்த காவலர்களைக் கண்டு நீதிமன்றத்தின் நான்கு திசைகளிலும் சிதறி ஓடினார்கள் வழக்கறிஞர்கள். முயல்களை விரட்டிக் கொண்டு ஓடும் வெறிநாய்களைப் போல காவலர்கள் வழக்கறிஞர்களை விரட்டிக் கொண்டு ஓடினர். கையில் சிக்கியவர்களின் தலையை குறிவைத்துத் தாக்கினர். கண்ணில் சிக்கியவரையெல்லாம் கைத்தடியால் அடித்துச் சிதைத்தனர். வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதி மன்ற அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், வழக்குக் காரணமாக நீதி மன்றத்திற்கு வந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அலறித் துடிக்கத் துடிக்கத் தடிகளால் அடித்து நொறுக்கினர். இரக்கமற்ற ரவுடி களின் கொலைவெறித் தாக்குதல் போலிருந்தது அது. அடிக்குப் பயந்து சுவரின் மேல் ஏறிநின்ற வழக்கறிஞர் ஒருவரை, இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் கீழிருந்து கல்லால் எறிந்த கொடுமையை நாடே பார்த்தது.

காவலர்களின் கையில் சிக்கியவர்கள், தாக்க வேண்டாம் எனக் கெஞ்சியவர்கள், தப்பி ஓடுகையில் தடுக்கி விழுந்தவர்கள், ஓட இயலாதவர்கள், ஒளிந்தவர் கள் என அனைவர் தலைகளைக் குறிவைத்து தாக்கினார்கள் காவலர்கள். பெரும்பாலான வழக்கறிஞர்களின் மண்டை உடைந்து இரத்தம் ஒழுக அங்குமிங்கும் ஓடியதை விவரிக்க வார்த்தைகளால் இயலுமா? ஊழலும் ஒழுக்கக்கேடும் நிறைந்து பிதுங்கம் தமிழ்நாடு காவல்துறை காவலர்கள், காலம் காலமாக தமிழகக் கிராமங்களில், ஆதரவற்ற ஏழை எளிய சேரி மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்டதையெல்லாம் அடித்து நொறுக்கிக் காலித்தனம் செய்யும் போதெல்லாம் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்ததால்தான் என்னவோ, உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் வாகனங்களைத் தேடித் தேடி அடித்து நொறுக்கி னார்கள் காவலர்கள். இரண்டு சக்கர வாகனங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. வன்மம் நிறைந்த உடம்புகளோடு, தெறிக்கும் கண்களுடன் கையில் Ôலத்திÕ யுடன் வெறிபிடித்துத் திரிந்த காவலர்களைக் கண்ட உயர்நீதிமன்றமே நடுங்கியது.

தாக்குதலுக்குப் பயந்து உயிர் தப்பித்துக் கொள்ள தலைமை நீதிபதியின் அறைக்குள் ஓடி ஒளிந்தனர் வழக்கறிஞர்கள். நடந்து கொண்டிருக்கும் தாக்குதலைக் கேள்விப்பட்டு நேரில் கண்டறிய வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் கடுமையாகத் தாக்கப்பட்டார். தான் ஒரு நீதிபதி என்று கதறியபடி சொல்லிய போதும் காவலர்கள் அடியை நிறுத்தவில்லை. தலைமை நீதிபதி முகோபாத்யா உட்பட லத்தி அடிக்குப் பயந்து ஓடி ஒளிந்த கொடுமை நடந்தது. காவல்துறை எத்தகைய கொடிய ரவுடிகளைக் கொண்டிருக்கிறது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இப்போதாகிலும் உணர்ந்து கொண்டிருப்பார்கள். மாநிலத் தலைநகரில் அனைத்து ஊடகங்களும் நேரலை ஒளிபரப்புகிறார்கள் என்று நன்றாக அறிந்திருந்தும், அத்தகையத் தாக்குதலை நடத்துகிறார்கள் என்றால், கிராமங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத சேரிகளில் எப்படிப்பட்ட ஒடுக்குமுறையைக் காவலர்கள் நடத்தியிருப்பார்கள் என்று நீதிபதிகள் சிந்திக்க வேண்டும்.

மிகப்பெரும் கலவரச் சூழலை திட்டமிட்டே உருவாக்கி, பழிவாங்கியிருக்கிறார்கள், சென்னை மாநகர காவலர்கள். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய தடியடித் தாக்குதலை நிறுத்திவிட்டு, உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வாய்மொழி ஆணையிட்ட பின்னரும், காவல்துறையினர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறவில்லை. சேம்பர்களுக்குள்ளும், பாரிமுனைத் தெருக்களிலும் வழக்கறிஞர்களை ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட அவமானத்தை சென்னை வழக்கறிஞர்கள் ஒருபோதும மறக்க மாட்டார்கள்.

மாநில காவல்துறை தலைவருடனும், மாநகர காவல் ஆணையரிடம், மாநில தலைமைப் புலனாய்வு அதிகாரியிடமும் நேரடி ஆலோசனை செய்த பிறகே பெரும் திரளான காவல் படையை ஆயுதங்களுடன் அனுப்பிவைத்தார் கருணாநிதி. சுப்ரமணிய சாமியிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கட்டளையிட்டார். அவரது கட்டளையின்படியே அனைத்தும் நடந்தன. ஆனால் தாக்குதல் நடந்த அன்றே, வயது முதிர்ந்த அந்த பழம் பெரும் தலைவர் கபட நாடகம் ஆடத் துணிந்தார். ஆம்புலன்சிலாவது வந்து சந்திப்பதாக தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினார். அதையே அறிக்கையாகவும் தந்தார். ஆனால் காவல் அதிகாரிகளோடு கூட்டுச் சதி செய்த அவரது நாடகம், அவர் அளித்த இரண்டாம் நாள் அறிக்கையில் அம்பலமானது. காவல்துறை யினரும் வழக்கறிஞர்களும் சமாதானமாகப் போகவில்லை யெனில், மருத்துவ மனையிலேயே உண்ணாநிலை இருக்கப்போவதாக அறிவித்தார். வழக்கறிஞர்கள் தங்கள் வாழ்நாளிலேயே சந்தித்திராத அந்த கொடூரத் தாக்குதலை மறந்து, காவல்துறை யினரோடு சமாதானமாகப் போகவில்லை யெனில் நான் உண்ணாநிலை இருப்பேன் என்று மிரட்டுவதற்கு கருணாநிதியால் மட்டுமே முடியும்.

Police Attackஈழ இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து மாபெரும் மக்கள் போராட்டமாக மாறறி, மத்திய அரசைப் பணிய வைக்கத் துப்பில்லாத கருணாநிதி, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற் காக நடைபெற்றுவரும் கொஞ்ச நஞ்ச போராட்டங் களையும் நசுக்க இது போன்ற நான்காம் தர முயற்சி களைச் செய்கிறார். ஆனால் உறுதியாகச் சொல்வோம்! இம்முறை காவலர்கள் அடித்த ஒவ்வொரு அடிக்கும் கருணாநிதி பதில் சொல்லியாக வேண்டும். அடித்த காவலர்களும், ஆணையிட்ட அதிகாரிகளும் பதில் சொல்லியாக வேண்டும். வழக்கறிஞர்களின் தன்மானப் பிரச்சனையாக உருவெடுத்துள்ள அந்தத் தாக்குதல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலைக கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் வெடித்துள்ளது. இந்திய வழக்கறிஞர்கள் சம்மேளனம் (ஙிசிமி) தாக்குதல் நடத்திய காவல் துறையினரை வன்மையாகக் கண்டித்துள்ளது. சென்னையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள் வழக்கறிஞர்கள். அரசு வழக்கறிஞர்கள் தாக்குதலைக் கண்டித்து பதவியை துறக்க ஆரம்பித்துள்ளனர். நிலைமை இவ்வாறு தீவிரமாகும் நிலையில் ஒப்புக்குக் கூட தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி ஒருவரைக் கூட இடைநீக்கம் செய்ய கருணாநிதி முன்வரவில்லை.

வழக்கறிஞர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டிக்கத் துணிந்த ஜெயலலிதா வழக்கம் போல் கருணாநிதி ஆட்சியைக் கலைக்கக் கோரிக்கை வைத்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் களங்கமில்லாமல் இருந்த காவல்துறையை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் ரவுடிகள் துறையாக மாற்றி விட்டார் கருணாநிதி என்கிறார். நக்சுப் பாம்பொன்று கக்கும் விஷம் போல் உள்ளன அவர் வார்த்தைகள். தனது வார்த்தைக்குக் கட்டுப்படாத எவரையும், ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், அச¤ரியர்கள் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயகவாதி கள் என அனைவரையும் அடித்து நொறுக்கி, ஒடுக்கிய ஜெயலலிதா இதே காவலர்களைக் கொண்டுதானே அய்ந்தாண்டு கால எதேச்சதிகார ஆட்சி நடத்தினார்.

குடிநீருக்காக, கூலி உயர்வுக்காக, சாலைகளுக்காக, பேருந்திற்காக வேலை வாய்பிற்காக வீதிகளில் திரண்டு, ஜனநாயக வழியில் போராடும் மக்களை கண்மண் தெரியாமல் அடித்து நொறுக்கும் துணிச்சலை காவலர்களுக்கு உருவாக்கிவிட்டது. ஜெயலலிதாதானே! ஜனநாயக நாட்டில் போராடும் மக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று வெட்கமில்லாமல் பேசும் துணிச்சல் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கு வரும். இரும்புக் கரம் என்று அவர் சொன்னது உருண்டு திரண்ட அவரது கைகளையா! இல்லை ஏவல் நாய்களாக வேலை செய்யும் காவலர்களையா! தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கம் கிராமத்தில் சேரி மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து காவலர்கள் சூறையாடியபோது, இவர்தானே முதலமைச்சர். ஒன்றுமறியா மக்களை ஏய்த்துப் பிழைப்பது போல, வழக்கறிஞர்களையும் ஜெயலலிதா ஏமாற்ற முடியுமா? வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதலுக்காக அவர், கருணாநிதியை பதவி விலகச் சொல்லுவது, பிணம் தின்னும் கழுகை விரட்டும் ஓநாயின் உளறலுக்கு ஒப்பானது.

இந்திய நீதித்துறை வரலாற்றில் சீருடை அணிந்த ரவுடிகளால் சென்னை உயர்நீதிமனற் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதைப் போன்றதொரு நிகழ்வு நடைபெற்ற தில்லை. அத்தகைய தாக்குதலைக் கண்டித்து ஒரு வார்த்தை வட பேசாமல் இந்திய நாட்டின் தலைமை நீதிபதி கள்ள மவுனம் காட்டி வருகிறார். வழக்கறிஞர் களோடு, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தாக்கப் பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டித்திருக்க வேண்டிய தலைமை நீதிபதி அறிக்கைக்காக காத்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் நிலைமைகள் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்குச் சாதகமாக இல்லையென்றே தோன்றுகிறது. இரண்டு மாத காலமாக நீடித்து வந்த வழக்கறிஞர் களின் ஈழத் தமிழர் வேலை நிறுத்தத்தைச் சட்ட விரோதமானது என்று ஏன் அறிவிக்கவில்லை எனக் கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது. வழக்கறிஞர்களின் யூகங்களின் படியே கலவரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த முகோபாத்ய அளித்தி ருக்கும் அறிக்கை முக்கியப் பங்காற்றப் போகிறது.

தற்போது மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷனை நியமித்துள்ளது. முதற்கட்டமாக இரண்டு இணை கமிஷ்னர்கள், மூன்று துணை கமிஷ்னர்களை சென்னைக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய உத்தரவு இட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் காயத்திற்கு போதுமான நிவாரணம் கிடையாது. உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் முடிவுகளும் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை தடுக்கக்கூடும். ஆனாலும், நீதிமன்ற அலுவலர்கள், அவர்களின் வாகனங்கள் என அனைத்தும் அடித்து நொறுக்கிய காவர் துறையினரைக் கண்டிக்க இந்தியத் தலைமை நீதிபதி தயக்கம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசிற்கு அறிவிக்கப்படாத ஆயுத உதவி களையும் அளித்து தமிழ் மக்கள் விரோத ஒப்பந்தத் தையும் செய்து கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள் மீது நீதிமன்றங்களில் விசாரனை நடந்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் ஆராய்ந்து பார்க்க வழக்கறிஞர்கள் முன்வரவேண்டும்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தியதன் மூலம், காவலர்களுக்கு இணையான வன்முறையாளர்களாக வழக்கறிஞர்கள் சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சித்தரிப்புகள், காவல்துறையினரின் ரவுடி மன நிலையை ஒழித்துக் கட்டுவதற்கு ஒருபோதும் பயன்படாது. தங்களின் அனைத்து வன்முறைகளுக்கும் காவலர்கள் கூறும் ஒரே பதில் சட்டம் ஒழுங்கு. அந்த சட்டம் ஒழுங்கை காவலர்கள் எவ்வாறெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதை நீதிபதிகளுக்கு உணர வைக்கும் ஆற்றல் வழக்கறிஞர்களிடமே உண்டு. அத்தகைய முயற்சிகள்தான், ஆட்சியாளர்களும், காவல்துறையினரும் கூட்டுச் சேர்ந்து அப்பாவி மக்கள் மீது நடத்தும் தாக்குதல்களை முறிக்க முடியும்.

தீவிரவாதிகள் தாக்குதல் உலகளாவிய பயங்கர வாதம் என்று சொல்லிக் கொண்டு, காவல்துறையை அதிநவீன ஆயுதபாணியாக மாற்ற, பல்லாயிரம் கோடி திட்டத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்க்ளை ஒரே இணையத்தில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மூலம் இந்திய அளவில் காவல் துறையை ஒருங்கிணைக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நம்புகிறார். அவரது நம்பிக்கை அற்பத்தனமானது.

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பராமரித்துவரும் காவலர்கள், அடிப்படை மனிதத் தன்மையற்ற, மனித நாகரீகத்தை மதிக்காத கும்பலாக இருந்து வருகிறார்கள். கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியில், காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், அந்த உண்மை விளங்கும். ஊழலும் ஒழுக்கக் கேடும் திறமைக் குறைவும் உடல் பலவீனமும் கொண்ட காவலர்களை திருத்தும் வேலையை சிதம்பரம் முதலில் தொடங்க வேண்டும். சாதி,மத வெறியுணர்வு நிலையிலிருந்து காவலர்களை மீட்க வேண்டும். காவலர் களுக்கென்று தனிக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, காவலர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். சமூகத் தளத்தில் உள்ள பெரும் குறைபாடுகளைக் கண்டறியும் சமூக அரசியல் அறிவு காவலர்களுக்கு ஊட்ட வேண்டும். உலக நாடுகள் எல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிககும் அக உணர்வு காவலர்களுக்குள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பெண்களையும் குழநதைகளையும் நலிந்த மக்களையும் மதித்து பழகும் பண்பு காவலர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். உலகளாவிய மனித உரிமைகள், நவீன ஜனநாயக மரபுகள், சிந்தனைப் போக்குகள் அனைத்தையும் அறிந்தவர்களாக நாட்டின் காவலர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இல்லையேல், எத்தனை நவீன ஆயுதங்களை வழங்கினாலும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி, தனது கைத் துப்பாக்கியையும் கூடவே துருத்தித் தள்ளிய தனது தொந்தியையும் நீட்டிக்கொண்டு மிரட்டிய டி.ஜ.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்ற கோமாளிகளையே சிதம்பரத்தால் உருவாகக் முடியும்.

Pin It

 

Nan Kadavulஉளறலும், திமிரும் சரிவிகிதத்தில் கலந்து வந்தால் தமிழ்ச் சினிமாவில் அதற்குப் பெயர் ‘பஞ்ச் டயலாக்’. சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த இந்தக் கிறுக்குத்தனம் நம்ம இலக்கிய ‘மாமேதை’ ஜெய மோகன் வரைக்கும் வந்தே விட்டது.

வெண்டக்காயை வெளக்கெண்ணெயில் குழப்பி எடுத்த கதையா வளவளா எழுத்துக்களை வார்த்தைகளாக வடிக்கும் அண்ணன் ‘ஜெ.மோ’ சினிமா என்றதும் சொந்தச் சரக்கு வேலைக்காகாது என்று மணிரத்னம் ஸ்டைலில் வார்த்தைகளை இடம் வலமாக, வலம் இடமாக ஒடித்து, கடித்து, சப்பித் துப்பியிருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது. இடத்துக்கு ஏத்த வேஷம் கட்டுவதில் கில்லாடிதான் நம்மாளு. ஆனால் நான் கடவுளில் ‘ஜெ.மோ’வின் உரை வீச்சு இருக்கிறதே... ‘என்னமோ உளறிக்கிட்டுப் போறான்’ என்று சும்ம விட்டுவிட முடியாத விஷமத்தனம் தோய்ந்தவை.

சாம்பிளுக்கு ரெண்டு வரிகளைப் பார்ப்போம்:

‘வாழக் கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டனை மரணம்’.

‘வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்’.

வாழக் கூடாதவர்கள் என்றால் யாரு?

ராஜபக்சே, சோனியா, சுப்பிரமணியம் சாமி வகையறா என நினைத்தால், அது நினைத்தவர்களோட கேணத்தனம். கை, கால் முடமானவர்களை, குருடர்களை வைத்துப் பிச்சையெடுத்துத் தின்கிறானே... அவன்!

அஞ்சு பைசா திருடியவனை எண்ணெய்க் கொப்பறைக்குள் தூக்கிப் போட்ட ‘அந்நியன்’ உங்க ஞாபகத்திற்கு வருகிறானா? நிச்சயம் வருவான். அவனுடன் நாகர்கோவில் நகர தெரு வீதி ஒன்றில் தள்ளுவண்டியில் நவாப்பழம் விற்றவனை சர்வதேச அளவுக்குச் சுரண்டல்காரனாகச் சித்தரித்து எழுதிய ஜெயமோகனும் நினைவுக்கு வர வேண்டும்.

ஆக, சரக்கு நம்மாளோட சொந்தச் சரக்குதான். கண்டிப்பாக ஷங்கர் - சுஜாதா கூட்டணியிடமிருந்து சுட்டதில்லை. அந்நியனுக்கு கருட புராணம். கடவுளுக்கு ஏழாவது உலகம்.

முடவனை, குருடனை வைத்துப் பிச்சையெடுப்பவன் சந்தேகமின்றி சமூகக் குற்றமிழைப்பவன்தான். அவனுக்கே ‘இம்மாம் பெரிய...’ தண்டனை நியாயம்தான் என்றால் கை, காலை முடமாக்கி பிச்சையெடுக்கத் துரத்துபவனுக்கு? நல்லாயிருந்த உடம்பை சர்க்கசில் காட்டும் ஒரு வினோதப் பிராணி போலாக்கி இப்போது மட்டுமல்ல, இனி வரும் தலைமுறைக்கும் பிச்சையெடுக்க வைத்தவனுக்கு...?

1984 டிசம்பர் மூன்று இரவில் விஷ வாயுவை திறந்துவிட்டு பல்லாயிரம் பேரைக் கொன்றதோடு சில லட்சம் பேரை ஊனமாக்கி போபால் நகரத் தெருக்களில் பிச்சையெடுக்க வைத்தானே... யூனியன் கார்பைடு ஆன்டர்சன்! அவனைத்தான் சொல்கிறேன். அவனுக்கு என்ன தண்டனை?

போபால் காசிக்கு ரொம்பப் பக்கம்தான். தண்டனையை முடித்து விட்டு, பொழுது சாய்வதற்குள் சுடுகாட்டு ‘டூட்டி’க்குத் திரும்பி விடும் தூரம்தான். ‘ஆன்டர்சன் தப்பியோடிவிட்டான்... என்ன பண்ண முடியும்?’ என்று கையைப் பிசைய வேணாம். அவனிடம் பொறுக்கித் தின்ற கும்பல் இப்போதும் அங்குதான் இருக்கிறது! அகோரி ருத்ரனை அங்கே அனுப்பி வைக்கலாமே!

அவன் மட்டுமா... நூறு கோடி இந்தியர்களையும் காட்டி உலக வங்கியில் தொடர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாரே மன்மோகன்! டெல்லிக்குப் போய் ஒரு ‘ருத்ர தாண்டவம்’ ஆடிப் பார்த்திருக்கலாமே பாலா?

ஆடினால் டவுசர் கிழிஞ்சி தொங்கிடும்.

வாழக் கூடாதவர்களை வகைப்படுத்திய லெட்சணம்தான் இப்படி...! வாழ முடியாதவர்களையாவது சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்களா என்று பார்த்தால்... ரெண்டு கண்ணும் தெரியாத குருட்டு பிச்சைக்காரி - அல்லது அவளைப் போன்றவர்கள் வாழக் கூடாதவர்களாம்! அதாவது, உழைக்க வலுவற்றவர்களை, ஊனமுற்றவர்களை கருணைக் கொலை செய்துவிடப் பரிந்துரைக்கிறார்கள் இந்தக் காந்தி தேசத்துப் புத்திரர்கள்.

அதிர்ச்சியான செய்திகளை காட்சிப்படுத்துவதன் மூலமே தங்களை வித்தியாசமான படைப்பாளிகளாகக் காட்டிக்கொண்டு வரும் இலக்கியவாதி ஜெயமோகனையும், இயக்குனர் பாலாவையும் பார்த்து நெஞ்சில் ஈரமுள்ளவர் யாரும் ‘அடப் பாவிகளா’ என கத்தாமல் இருக்க முடியாது.

அறுபது லட்சம் யூதர்களைக் கொன்று குவித்த ஜெர்மன் நாஜிகள், அத்துடன் நிற்காமல் ஒரு லட்சம் உடல் ஊனமுற்றவர்களையும், மனநோயாளிகளையும் - அவர்கள் ஜெர்மானியராகவே இருந்த போதும் விஷ வாயுவைச் செலுத்திச் சாகடித்தார்கள் இரண்டாம் உலகப் போரில்! ‘இனத்தூய்மை’ இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வேண்டாத சுமை ஒன்று இறக்கி வைக்கப்பட்டது என்றே அவர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

‘வலுத்தவன் மட்டுமே வாழ வேண்டும்’ என்ற இந்த ஆரிய வக்கிரத்தைத்தான் ‘நான் கடவுள்’ வழியாக நம்மிடம் இப்போது சுற்றுக்கு விட்டிருக்கிறார்கள். அய்யா படைப்பாளிகளே, இந்த வலுத்தவன் தியரியை நடைமுறைப்படுத்தியிருந்தால் - ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்... நீங்க ரெண்டு பேரும் புதைக்கப்பட்ட இடத்தில் இந்நேரம் புல்லு முளைத்து, பெரிய விருட்சமே வளர்ந்திருக்குமய்யா!

“என்னடா படம் எடுத்திருக்கான்?” என காறித் துப்பியவர்களும் வியக்கும் விசயமொன்று படத்தில் இருக்கு.

- ‘இதுவரை நாம் பார்த்தறியாத, பார்க்க மறுத்த பிச்சைக்காரர்களின் இன்னொரு பக்கத்தை நம்ம செவுளில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார் பாலா’. உண்மைதானா இது?

ஏ.எஸ். பிரகாசத்தின் ‘எச்சில் இரவுகள்’, துரையின் ‘பசி’, இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ படங்களில் கவுண்டமணி - செந்தில் சித்தரித்த பிச்சைக்காரர்களிலிருந்து பாலாவின் உலகம் எப்படி, எங்கே வேறுபடுகின்றது?

வேறுபாடு கண்டறிய இந்தக் கருமத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துத் தொலைக்க வேண்டியதில்லை. இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை வழிமறித்து “ஐயா, சாமீ...’ என்று தட்டை நம் முகத்திற்கு நேராக நீட்டுகிறார்களே... நகரங்களின் முக்கியச் சாலை சந்திப்புகளில்... பாவத்தை தொலைத்து பரகதி சேர்ப்பதற்காகவே இருக்கும் நமது அத்தனை திவ்விய ஷேத்திரங்கள் ஒவ்வொன்றின் வழிநெடுகிலும் ஒரு ஓரமாக அமர்ந்து நமது கருணையின் அளவைப் பரிசோதிக்க அபயக் குரல் எழுப்புகிறார்களே... பிச்சைக்காரர்கள்!

‘வேண்டாம்பா இந்தப் பொழப்பு! என்னோட வந்தா நல்ல ஒரு வேலையில் சேர்த்து விடுறேன்’ என்று காசுக்குப் பதில் கனிவை நீட்டி அவர்களிடம் உரையாடிப் பாருங்கள்!

கையை நோக்கி நீண்ட பிச்சைப் பாத்திரம் அப்படியே ஓங்கி உங்கள் மண்டையில் ‘ணங்’ என்று அடிக்கும். ஆம், அவர்கள் பிச்சையெடுக்க மட்டுமல்ல, பொறுக்கித்தனத்திற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பேச்சில் வந்து விழும் வக்கிரமும், வசவும் பாலா காட்டிய உலகத்தைவிட பல மடங்கு அதிர்ச்சியை உங்களுக்கு அளிக்கும். உதிரித் தொழிலாளிகள், பண்ணை அடிமைகளிடமிருந்து பகடியாக வெளிப்படும் குமுறலை இவர்களிடம் கேட்க முடியாது. அது பாலா - ஜெ.மோ கற்பனையில் மட்டும்தான் சாத்தியம்.

சுருக்கமாகச் சொன்னால் செய்யும் ‘தொழிலில்’ இவர்கள் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகள்.

இந்த ‘அனுபவம்’ உங்களுக்குக் கிடைத்தால் பாலா-ஜெ.மோ கூட்டு சேர்ந்து உருவாக்கி உலவவிட்டிருக்கும் கடவுளை விட, ஏனையோரின் முந்தையப் படங்கள் எதார்த்தத்தை நோக்கி கொஞ்சம் நெருங்கிச் சென்றிருப்பது புரியும்.

பாலா - ஜெயமோகன் கும்பல் கட்டமைத்த பிச்சைக்கார உலகிற்குள் நுழைந்து மயிர் சிலிர்த்து, மேனி நடுங்கிய ரசிக சிகாமணிகளுக்கு மேலுமொரு கேள்வி.

பிச்சைக்காரர்களின் மறுபக்கம் ஒருபுறம் கிடக்கட்டும். கங்கை நதிக்கரை ஓரத்து காசி நகரின் ‘அகோரிகள்’ எனப்படும் சுடுகாட்டுச் சாமிகளின் பக்கத்தையாவது சரியாக காட்டியிருக்கிறார்களா?

கங்கை நதி நீரில் மிதந்து வரும் மனித உடலை இழுத்தெடுத்து அதை ‘சகல மரியாதைகளுடன்’ கிடத்தி, பிணத்தின் மேலேறி ஆசனம் போட்டு ‘ஓம் சிவாய நமஹ’ என்று தியானம் (அது என்ன எளவோ) செய்பவர்களாக... புஷ்டியான பிணமென்றால் கைகளை வெட்டி சிக்கன் லெக் பீசைக் கடிப்பதுபோல் நரமாமிசம் தின்பவர்களாக... பிணம் பெண்ணாக இருந்துவிட்டால் அதோடு புணர்ச்சி செய்யக்கூடியவர்களாக... அகோரிகளின் மறுபக்கம் அல்ல, மொத்தப் பக்கமும் இதுதான்.

இதில் எதை உங்களுக்குக் காட்டினார் பாலா?

நல்ல படைப்பாளி அவன் அளித்த படைப்புகளால் மட்டுமல்ல, எடுக்க மறுத்த, மறந்தவைகளாலும்தான் அறியப்பட வேண்டும். சமூக அக்கறை கொண்ட படைப்பாளிகளுள் பலரும் அகோரிகள் என்கிற இந்த மனநோயாளிகளின் காட்டுமிராண்டித்தனத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கும் குறும்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். ஆனால், பாலா என்ன செய்திருக்கிறார்?

திகார் சிறையின் செல்களுக்குள் தனித்தனியே கொண்டுபோய் அடைக்கப்பட வேண்டிய அகோரிகளை, கலியை வேரறுக்க வந்த கிருஷ்ண பரமாத்மாவாக தமிழகத்திற்கு கூட்டி வந்திருக்கிறார். “ஓடிப் போங்கடா காட்டுமிராண்டிப் பயலுவளா?” என கல்லெடுத்து வீசி விரட்டப்பட வேண்டியவர்களை கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.

சமூகம் குறித்து சரியான புரிதலுள்ளவர்கள் என நம்பப்படும் சில அறிவுஜீவிகள்கூட இந்த ரசனைக் கெட்ட கும்பலுக்குள் சிக்கியிருப்பது வேடிக்கையல்ல, வினோதமே.

தீபா மேத்தா என்று ஒரு சினிமா படைப்பாளி. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். அவரும் கேமராவோடு இதே காசிக்குதான் போனார். எடுத்ததும் இதே வணிக சினிமாதான். அவர் கண்ணில் மட்டும் கைவிடப்பட்டு, அபலைகளாக துரத்தப்பட்ட விதவைப் பெண்கள் பட்டது எப்படி?

வங்கத்திலிருந்தும் ஒருத்தர் காசிக்குப் போனார். படமெடுக்க அல்ல, பாவம் தொலைக்க! ‘புனித ஜலம்’ என்று வாய்க்குள் ஊற்றும் கங்கைத் தண்ணி எவ்வளவு அசுத்தமானது, கேடு கெட்டது என்பதை அங்கே கண்டவர், சென்ற வேலையை போட்டு விட்டு ஒரு குறும்படம் எடுத்து, புனிதத்தின் யோக்கியதையை ஊர் ஊராகக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள்... உண்மையான படைப்பாளி இவர்களில் யார்?

‘கடவுளை’ கேமராவுக்குள் அடக்க மூணு வருசம் ஆச்சுதாம்.

சிலை வடிக்க மூணு வருசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. வெறும் அம்மி கொத்த எதுக்கு மூணு வருசம்?

விடுபட்ட சில கேள்விகளும், பாலா & ஜெ.மோ. சொல்லாத பதில்களும்

‘அஹம் பிரம்மாஸ்மி’ என்றால் என்ன?

‘நான் கடவுள்’ அல்லது ‘நானே கடவுள்’ என்று அர்த்தமாம். சமஸ்கிருதத்தில் சப் - டைட்டில் போட்டு பார்ப்பனர்களை கொட்டகைக்கு இழுத்த புண்ணியவான்கள் ஏனைய இந்திய மொழிகளிலும் ரூபாய் நோட்டில் போட்டிருப்பது போல் தெலுங்கு, கன்னடம் என வரிசையாகப் போட்டு விளக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்த்து தயாரிப்பாளரின் தலையில் துண்டு விழுவதை தடுத்திருக்கலாம்.

‘தேவடியா மகன் புளுத்துவான்’ என வசனம் எழுதும் ஜெயமோகன் எப்படி ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ். காரனாக இருக்க முடியும்?

சம்சாரம் செத்துப் போனதால் அதிர்ச்சிக்குள்ளான பால் தாக்கரே வீட்டுக்குள்ளாற இருந்த அத்தனை சாமி படங்களையும் அடித்து உடைத்தாராம். அவர் இப்ப கறுப்பு சட்டை மாட்டிக்கிட்டு தெருத் தெருவா பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்னு நெனச்சா அது நம்ம அறியாமை.

‘மருதமலை முருகன் அருளால் எல்லாமே வெற்றி’ என படத்தைத் தொடங்கும் ஒரு சினிமா தயாரிப்பாளர், படம் டப்பாவுக்குள் சுருண்டு விட்டால், தான் கையெடுத்து கும்பிட்ட முருகனையே செருப்பாலடித்து, அவன் ஆத்தா பார்வதி தொடங்கி, சம்சாரம் வள்ளி வரைக்கும் வசவு விடுவாராம். அவரும் நாத்திகராகி விடவில்லை.

ஒருவரி வசனத்திலோ, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் போது மட்டுமோ வெளிப்படும் கடவுள் மறுப்பு அற்ப ஆயுள் கொண்டது. பகலில் அடித்து ராவில் கூடிக் கொள்ளும் வெட்கங்கெட்ட புருஷன் - பொஞ்சாதி உறவு போல பழைய கதைக்கே திரும்பி விடும் வாய்ப்புள்ளது. ஜெயமோகனின் கடவுள் எதிர்ப்பு லெட்சணமும் அதுதான்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளி மூளையோடத்தான் இருக்கிறான்’. இந்த வசனத்தில் ஜெயமோகன் மலையாளிகளை பாராட்டுகிறாரா - இழிவுபடுத்துகிறாரா?

சுய விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். தலித் மக்களும், பாய்களும் திங்குற ஒரு கறியை தன் இனத்தானாகிய மலையாளி சப்புக் கொட்டித் தின்பதை ஒரு சுயம் சேவக்கால் எப்படிச் சகிக்க முடியும்? அதனால்தான் மலையாளியின் மூளைக்குள் இருப்பதை பாராட்டும்போதே, இரைப்பைக்குள் போய் விழுவதையும் நோண்டி ஒரு பிடி பிடிக்கிறார்.

‘மாட்டுக்கறி தின்னாலும் மலையாளிகள் மேன்மக்களே!’ ஜெயமோகன் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதி அதுவே.

நான் கடவுளில் வரும் பிச்சைக்காரச் சிறுவன் அம்பானியைப் பற்றி எப்படி அறிவான்?

அறிய மாட்டான். மட்டுமல்ல, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்பாக மடை மாற்றி 1200 கோடி சுருட்டி, வெறும் 500 கோடிகளை மட்டுமே தண்டம் கட்டிய கதையையும் அவன் அறிய மாட்டான். ஆனால், கதை எழுதிய ஜெயமோகன் அனைத்தும் அறிவார். அனைத்தையும் அறிந்தும் ‘அவரு செல்லு விக்கிறவரு’ என சாதாரண ஒரு புதுப்பேட்டை காயலாங்கடை வியாபாரியைப் போல் அம்பானிக்கு முகம் கொடுப்பதில்தான் ஜெயமோகன் என்ற இலக்கியவாதியின் சாமர்த்தியம் விளங்குகிறது.

முதல் தேதி சம்பளம் வாங்குவது அரசிடம்; முப்பது நாளும் சேவகம் செய்வது அம்பானியிடம்! அரசு வேலையிலிருக்கும் இலக்கிய கர்த்தாக்கள் நல்லாதான் பொழைக்கிறாங்க.

Pin It

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தியோட நேரடி பேரன் ராஜீவ்காந்தியாகட்டும் நேரடிப் பேத்தி சோனியா காந்தியாகட்டும் இந்த யோக்கிய சிகாமணிகளை அசிங்கப்படுத்தி இந்த தமிழ்நாட்டு சனங்க பன்ற சேட்டை தாங்க முடியல. அதனாலதான் வெங்கலபாலு கொதிச்சப் போயி இனியும் நாங்க பொறுக்க மாட்டோம்ன்னு கையை நீட்டி பேட்டியும் கொடுத்திருக்காரு. அப்படி என்னதானே பண்ணிரு வாருன்னு தெரியலை. தமிழ்நாட்டு சனங்களே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. அவருடைய ஞானக்கண்ணால எரிச்சாலும் எரிச்சிடுவாரு.

இந்த அல்லக் கைகளை பத்திப் பேசி ஏன் பெரிசு பண்ணணும்னு பேசாம விட்டா இதுக பண்ணுற அலுச்சாட்டியம் தாங்க முடியலை. அதனாலதான் நாமெல்லாம் தொலைஞ்சி போயிட்டாருன்னு நெனச்சிருந்த அந்த பாலசுப்பிரமணியன் கூட நான் உசுரோடதான் இருக்கேன்னு நிரூபிக்க பிரபாகரன் சர்வாதிகாரின்னு உளறியிருக்கார். எனவே நாம இந்த உத்தம புத்திரன், பத்தினிகளையும் பத்தி கொஞ்சம் பேசியாகவேண்டியிருக்கு. முதல்ல காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஏன்னா, அடுத்தவன் டிரவுசரிலிருந்து அடுத்த வீட்டு விவகாரத்து வரை வாசன் கூட்டணி, ஜெயந்தியக்கா கூட்டணி, எழவு கூட்டணின்னு தனித்தனியா இருந்தவங்களை ஒன்னாக்குனது இந்த ஈழத் தமிழர்கள்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம். மாங்கொல்லையில நடந்த “இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் நிலை” என்ற பொதுக்கூட்டத்தில் நம்ம சுத்தத் தமிழன் முழங்குன முழக்கங்களுக்கு விளக்கம் கொடுத்தே ஆகணும். அதாங்க எந்த எடத்துக்கு போனாலும் வேட்டி, சட்டைன்னு பளிச்சுன்னு காட்சி தரும் நம்ம உள்துறை மந்திரி பழனியப்பன் சிதம்பரம் பத்தி கொஞ்சம் பேசியாகணும். இவரு நிதித்துறையில கிழிச்ச கிழி பத்தாதுன்னு உள்துறைக்கு மாத்தியிருக்காங்க. அவரு சொல்றாரு புலிகள் ஆயுதத்தை கீழே போட்டுட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்கிறார். ஒரு படி மேல போயி போராளிகளின் ஆதரவாளர்களைப் பார்த்து கேள்வியையும் கேட்டார். ஒரு தரப்பு காகிதத்துடன் பேச்சு வார்த்தைக்கு வரும்போது மறு தரப்பு ஆயுதத்துடன் வந்தால் எப்படி?ன்று கேள்வியும் கேட்டார். ஒன்னே ஒன்னு தெரியுது. இவரு ஒட்டு மொத்தமா செய்தித்தாளு படிக்கறதே இல்ல போல. தமிழ் நாடு சட்ட மன்றத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட மூன்றே மணி நேரத்தில் நாங்கள் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று விடுத்லைப் புலிகள் அறிவித்தனர்.

Rajiv attck in Srilankaஆனால் ராஜபக்சேவின் அரசாங்கமோ போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்றது. கிளஸ்டர் குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக தமிழர்களை கூண்டோடு அழித்துக் கொண்டு இருக்கிறது. இதுபற்றி இந்திய அரசு ஒரு வார்த்தை பேசவில்லை. ராஜபக்சே அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும், பண உதவிகளையும் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியே இலங்கை அரசாங்கம் போர்நிறுத்தம் செய்ய இந்தியாவால் வலியுறுத்த முடியாது என்று திட்டவட்டமாக பாராளுமன்றத்தில் அறிக்கையே சமர்ப்பித்துவிட்டார். இந்த விஷயம் இந்தியாவில் யாரைக் கேட்டாலும் தெரியும்; ஆனால் மெத்தப்படிச்ச மேதாவியும் சிவகங்கை சின்னப் பையனுமான (நன்றி. கலைஞர்) இந்த உள்துறை மந்திரி பழனியப்பன் சிதம்பரத்துக்கு மட்டும் தெரியலை.

சரி புது வரலாறுதான் இப்படியிருக்குன்னா, பழைய ஒப்பந்தங்களையெல்லாம் மீறுனது யாருன்னு கூட இந்த சிவகங்கை சின்னப்பையனுக்குத் தெரியலை. நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதலில் தாக்குதல் நடத்துனது யாருன்னு கொஞ்சம் விவரமா நம்ம சேட்டன் அந்தோணிகிட்ட கேளுங்க. ஏன்னா நீங்க நிதியமைச்சரா இருந்தப்ப அவர் கொடுத்த ஆயுதத் தாலதான் ராஜபக்சே அரசு முதல்ல அந்த அமைதி ஒப்பந் தத்தை மீறினார்கள் என்பது உலகம் அறிஞ்ச விஷயம்.

அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், பாலகுமாரன் இவர்களெல்லாம் இப்ப எங்கிருக்காங்க அப்படின்னு மரியதைக்குரிய உள்துறை அமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார். நீங்கள் 1987-ல் ஒப்பந்தம் போட்ட போது இவர்கள் உயிரோடு இல்லையா? அப்படி இருந்தார்கள் என்றால் நீங்கள் ஏன் பேச்சுவார்த்தைக்கு அவர்களைக் கூப்பிடவில்லை. அப்போது உங்கள் கண்ணுக்கு ஜனநாயகவாதியாகத் தெரிந்த பிரபாகரன் இப்போது மட்டும் ஏன் சர்வாதிகாரியாகத் தெரிகிறார். உங்ககிட்ட இருக்கிற ‘ஜனநாயகத்தை’ உங்க தொகுதியில இருக்கிற சுதர்சன் நாச்சியப்பனிடம் கேட்டாத்தான் தெரியும்.

ஒப்பத்தத்துல கையெழுத்துப் போடாம யாரோ போட்ட ஒப்பந்தத்திற்கு, பரவாயில்லை. இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தந்தானே, அது கண்டிப்பா நமக்கு உதவி செய்யும் நோக்கத்தில்தான் இருக்கும் என்று ஈழத் தமிழர்கள் பெருந்தன்மையா ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு பலிகடாவாக பல்லாயிரக் கணக்கான மக்களை அமைதிப்படையை அனுப்பிக் கொன்னீங்க. நீங்க ஜனநாயகத்தைப் பத்திப் பேசறதுக்கு கொஞ்சம்கூட அருகதையே இல்லை.

இறுதியா நம்ம உள்துறை அமைச்சர் முடிக்கும் போது நான் எப்போதும் தமிழர்களுக்காக தமிழனாகவே வாழுகிறேன் என்கிறார். இவர் லட்சணத்தை இவர் கட்டிக்கிட்டு வந்த திருவாளர் மனைவி காட்டுன தாய் மொழிப்பற்றைத்தான் பார்த்தோமே. தமிழக அரசு தாய்மொழி வழிக் கல்வி சட்டம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்து, தாய் மொழி வழிக் கல்விச் சட்டம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் வரை சென்று ஆணையை வாங்கியவர் அந்த சுத்தத் தமிழச்சி தாங்கிறத நம்ம உள்துறை மறந்திருப்பார் போல.

அடுத்து இன்னொரு தமிழன் அசன்அலி பண்ற அழிச்சாட்டியம் பற்றிப் பார்ப்போம். நம்ம அசன் அலி தொகுதி பக்கமே வரலைன்னு அந்த தொகுதி மக்கள் செருப்பையும், வெளக்க மாத்தையும் தூக்காத குறையா திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொகுதி வேலையை விட்டுட்டு நம்மாளு என்ன வேலைய பன்றார்னு பார்த்தா அவர் கூடப் பொறக்காத சகோதரன் ராஜபக்சேவுக்கும், அம்சாவுக்கும் தொடர்ந்து பாராட்டுக் கடிதம் எழுதிக்கிட்டிருக்காரு. இவர் சொல்றாரு, நான் ஏன் புலிகளை எதிர்க்கிறேன் என்றால் அவர்கள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் என்கிறார். இவர் இஸ்லாமிய மக்கள் மீது காட்டுற பாசத்தைப் பார்த்தால் நமக்கே புல்லரிக்குதுடா சாமி. தினமலர்ல புலிகள்தான் இஸ்லாமியர்களை கொல்லச் சொன்னாங்கன்னு கருணா பேட்டி கொடுத்த போது வரிஞ்சி கட்டிட்டு தினமலரின் இஸ்லாமிய சேவைக்கு வாழ்த்து சொன்னவருதான் நம்ம அண்ணன் அசன் அலி. ஒருபடி மேல போயி தினமலருடைய நடுநிலைமையை பாராட்டுனாரு. (ஆடு நனையுதுன்னு ஓநாய் கவலைப்பட்ட கதையா, தினமலரு இலங்கையில இஸ்லாமியருங்க சாகுறாங்கன்னு கொட்டை எழுத்துல தலைப்புச் செய்தி போட்டுச்சி. ஆனா பாலஸ்தீனத்துல இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது இசுரேல் தாக்குதல்னு சந்தோஷப்பட்டுச்சி.) இந்த தினமலத்தத்தான் நம்ம அண்ணாத்த பாராட்டுறாரு.

அண்ணனோட இஸ்ஸாமிய பாசத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொல்வதற்கு காரணமாயிருந்த கொலைகாரன் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தப்ப அவனோட விருந்து சாப்பிட்டுட்டு அவனை வாழ்த்திவிட்டு வந்திருக்கிறாரு. அதையும் வெக்கமில்லாம குமுதத்துல பேட்டி வேறே கொடுக்குறாரு. நம்ம ஊரு முஸ்லீம்கள் எல்லாம் குமுதம் மாதிரி கழிசடை பத்திரிக்கைகளை யெல்லாம் படிப்பதில்லை அதனால இதுல சொன்னா பிரச்சனை வராதுன்னு நெனைச்சாரோ என்னமோ தெரியலை. ஆனா உண்மையான முஸ்லீம் யாராவது கொலைகாரன் மோடியை இவரு சந்திச்சதை படிச்சிட்டு மோடிக்கு பதிலா இவருக்கு வேட்டு வெச்சாலும் வெச்சிரு வாங்க. எதுக்கும் பாய் ஜாக்கிரதையா இருக்கட்டும்.

நம்ம ஞான சூனியம் (ஞானசேகரன்) கேக்குது இங்கே இவ்வளவு பிரச்சனை இருக்கறப்ப எல்லாரும் ஏன் இலங்கை பிரச்சனை மட்டும் பேசறீங்க? நாம எப்படி அடுத்த நாட்டுக்குள்ள தலையிட முடியும்னு கேள்வி கேக்குது. அவரு ஜெயிச்ச வேலூர் தொகுதியை போய்ப் பார்த்தாத்தான் லட்சணம் தெரியுது. சும்மா சிங்கப்பூருக்கு நிகரா தொகுதியை மாத்திப்புட்டார் மாத்தி நம்ம ஞானம். அடிப்படை வசதியே இல்லாம அல்லல் படற மக்களைக் கவனிக்காம அவர் பாசையில கேள்வி கேட்டா இந்த ஞானத்துக்கு ஏன் இந்த இலங்கை பிரச்சனை? அது சரி அடுத்த நாட்டு பிரச்சனைக்குள்ள நாம தலையிட முடியாதுங்கறது உண்மைதான். அடுத்த நாட்டுக்கு ‘அமைதிப்படை’யை மட்டும் அனுப்பலாமா? தொகுதி மக்கள் பிரச்சனையை சொல்ல வந்தா, பிரச்சனையை தீர்க்கறதா சொல்லி தன்னோட கார்ல ஏத்திக்கிட்டு இவரு ஊர் சுத்தறதுக் கெல்லாம் சேத்து பல ஆயிரத்துக்குப் பெட்ரோல் போட்டுட்டு அதுக்கான பில்லை அப்பாவி ஏழை மக்கள் தலையில கட்டுற இந்த ஞான சூனியம் வழக்கம் போல கொஞ்சம் ஓவராத்தான் பேசறாரு.

அடுத்து, சொர்ணாக்கா (யசோதா) சட்ட மன்றத்துல குதிச்ச குதியப் பார்த்தப்ப உள்ள இருந்தவர்களுக் கெல்லாம் டங்குவார் அந்து போச்சி. பிரபாகரன் தீவிரவாதி, பிரபாகரன் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி, அவரப் புடிச்சா இந்தியாவுக்கு கொண்டு வரணும்னு நம்ம அக்காவும் அந்த அசட்டுப் பேர்வழி சுந்தரமும் பண்ணின அழிச்சாட்டியம் தாங்க முடியலை. நமக்கொரு சந்தேகம். ஏறிவந்த ஆட்டோவுக்கு கட்டணம் கேட்ட அப்பாவித் தமிழன சுட்டுக் கொன்னுட்டு இலங்கைக்கு ஓடிப்போன டக்ளஸ் தேவானந்தா கூட இவங்க தலைவி ‘அன்னை’ சோனியாவும், இவங்க பிரதமர் மன்மோகன் சிங்கும் எப்படி உக்காந்து போட்டோ எடுத்துக்கறாங்க? அதெல்லாம் இந்த அசடுகளுக்குத் தெரியலையா? குற்றம் நிரூபிக்கப்படாம குற்றவாளின்னு குற்றம் சாட்டப்பட்டிருக்கிற ஒரே காரணத்துக்காக தேடப்படும் குற்றவாளின்னு அறிவிச் சிருக்கிற அவரை கொண்டு வரணும்னு கேக்கறாங்க. நமக்கு ஒண்ணே ஒன்னு உறுத்துது. சொர்ணக்கா கொலைக் குற்றம், பாலியல் வழக்குகள்ல சிக்கி குற்றவாளியாக இருக்கிற அக்யூஸ்ட் நெம்பர் 1-னான சுப்பிரமணி என்கிற காஞ்சி சங்கராச்சாரி கிட்ட ‘ஆசி’ வாங்கினதெல்லாம் வெளியே சொன்னா கேவலமா தெரியலையா? அத வெக்கமில்லாம சொல்லிட்டுத் திரியுது

“வாத்தியார் மகன் மக்கு, டாக்டர் மகன் நோயாளி”ன்னு நம்ம சனங்க சொல்ற பழமொழி. இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ! ‘நான் பெரியாரின் பேரன்’னு பீத்திக்கிட்டுத் திரியற நம்ம ஈ.வி.கே.எஸ்.க்குப் பொருந்தும். நான் ஜெயந்தி நடராஜனை காலேஜ் படிக்கும் போது சைட் அடிச்சேன் அப்படின்னு முந்தி பேட்டிக் கொடுத்துக் கிட்டிருந்த மாலை நேரத்து இளங்கோவன், இப்ப எல்லை மீறி பேசறாரு. அவரு சொல்றாரு, விடுதலைப் புலிகள் அமைப்பில் ஜனநாயகம் இல்லைன்னு ஜனநாயகத்தின் பேரால் இந்த காங்கிரஸ் கொள்ளை கூட்டணி தமிழ்நாட்டுல கட்சி நடத்துற கூத்தத்தான் தினமும் பார்க்கிறோமே. கட்சிக்குள்ள இருக்கிற ஜனநாயகத்தைப் பார்த்தா ஊரே சிரிக்குது. இந்த அசடுக உலக சனநாயகத்தைப் பத்திப் பேசுது.

அடுத்து இன்னொரு தமிழன் குமரி அனந்தன் பத்திப் பேசியாகணும். இந்த குமரிஅனந்தன், இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் அப்படின்னு திருவாயை மலர்ந்திருக்காரு. தான் பெத்த மகளை பி.ஜே.பி.யில சேத்துட்டு இவரு இங்க பதவிய அனுபவிச்சிட்டு இருக்காரு. அந்தப் பதவிக்குக்கூட நேர்மையா இல்லை இவரு. பொதுவா தன்னோட கடையில இருக்கிற பொருளைப் பத்தி மிக உயர்வா பேசறதுதான் வியாபாரியோட வழக்கம். ஆனா இவரோ தான் தலைவர் பதவி வகிக்கிற பனை வாரியத் துறையோட வளர்ச்சிக்கு மாறா, கள் உடம்புக்குக் கெடுதி. கள்ளு இறக்குவதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தவர். இதப்பத்தி யாராவது கேட்டா, கள் இறக்குவது காந்தியோட கொள்கைக்கு விரோதமானதுன்னு தத்துவம் பேசறாரு. காந்தி, காமராஜர்னு கட்சி நடத்தி தொண்டர்கள்கிட்ட வசூல் பண்ணின காசில சொந்தப் பேர்ல கட்டடம் வாங்கி அனுபவிச்சிட்டு இருக்கிற இந்த ‘யோக்கியவான்’ செத்துப்போன காந்தியை ஏன் இப்படி இம்சிக்கிறார்னு தெரியலை. ஊர்ப்பக்கம் பாத்து போகச் சொல்லுங்க. இல்லைன்னா பனையேறும் தொழிலாளி இவர பொலி போட்டாலும் போட்டுருவாங்க, ஜாக்கிரதை.

நம்ம வெங்கல பாலுவப் பத்தி சொல்லாம விட்டா நான் வெங்கல பாலு கோஷ்டின்னு இளங்கோவன் கோஷ்டி உண்ணாவிரதம் நடத்திரும். அதனால அந்த கஷ்ட காலத்தை நாம ஏன் தேவையில்லாம இளங்கோவனுக்குக் கொடுக்கணும். நம்ம அண்ணன் சொல்றாரு, “ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்காங்கன்னா அதுக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்”னு சொல்றாரு. அதான் நம்ம அமைதிப்படைங்கற பேர்ல போயி பண்ணுன அழிச்சாட்டியங்கள இந்த ஒலகமே அறிஞ்சிச்சே. அத நான் வேற சொல்லணுமா?

இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் உள்ள 13-வது விதிய அமல் படுத்தணும்னு இந்த வெங்கலம் சொல்றாரு. இந்த ஒப்பந்தம் இலங்கையின் இறையாண்மைக்கும் மக்களுக்கும் எதிரானதுன்னு இலங்கையின் உச்ச நீதி மன்றமே இனவெறியோட சொல்லியிருக்கு. தங்கபாலண்ணே சத்தமா சொல்லிடாதிங்க ‘கண்டம்ட் ஆப் கோட்டு’ன்னு ராஜ பக்சே உள்ள புடிச்சுப் போட்டுருவான். அப்புறம் வாசன் கோஷ்டி, பாலு கோஷ்டி, ஜெயந்தியக்கா கோஷ்டி, சொர்ண (யசோதா)க்கா கோஷ்டின்னு உண்ணாவிரதமும் உண்ணும் விரதமும் மாத்தி மாத்தி நடத்தினாலும் ஒண்ணுத்துக்கும் உதவாது. கொஞ்சம் அடக்கி வாசியுங்க, எல்லாம் உங்க நன்மைக்குத்தான்.

இன்னும் நெறைய பேரு இதுல விடுபட்டுப் போச்சி. பலநூறு பேரு தமிழ்நாட்டுல சாகறதுக்குக் காரணமா இருந்த பக்தவச்சலம் பேத்தி ஜெயந்தி, அப்புறம் சுதர்சனம் நைனா, அப்புறம் தொடை நடுங்கி கராத்தே தியாகராஜன் இப்படின்னு நெறைய பேரு விடுபட்டுப் போயிட்டாங்க. எல்லா காங்கிரஸ் தியாகிகளுக்கும் சேத்து பதில் சொல்றோம். இந்திரா காந்தி இறந்ததற்கு பதிலடியா டெல்லியில மூவாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டாங்க. அப்ப பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, ராஜீவ் காந்தி சொன்னாரு, “ஒரு பெரிய ஆலமரம் விழுகறப்போ சின்னச் சின்ன அதிர்வுகள் இருக்கும்”ன்னு திமிரா பதில் சொன்னார். பல்லாயிரக் கணக்கான உயிர்களை ஈழத்துல அமைதிப்படை காவு வாங்கிச்சி. ராஜீவ் காந்தி சொன்ன வசனத்தை ஈழத் தமிழர்கள் பதிலுக்குச் சொல்றதுக்கு பதிலா நீங்க மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்ன்னு சொல்லிட்டுத் திரியறீங்க.

எது எப்படியோ பார்லிமெண்டுத் தேர்தல் வருது ஓட்டுக் கேட்க எங்க தெருவுக்கு நீங்க வந்துதான் ஆகணும். அப்ப எங்க வீடுகள்ல வெளக்கமாரும் பிஞ்ச செருப்பும் தயாரா இருக்கும். அன்னிக்கு நீங்க பேசுன எல்லாத்துக்கும் கணக்குத் தீர்ப்போம். டில்லிக்கும், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் இனி நீங்க போகவேண்டிய வேலையே வராது.

தூ... மானங்கெட்ட காங்கிரஸ்காரங்களே...

Pin It