ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் விமரிசையாக ஒரு குறிப்பிட்ட மதத்தவரால் கொண்டாடப்ப டுகிறது. நாளடைவில் சென்னையில் வட இந்தியர்களின் குடியேற்றம் ஏற்பட்டவுடன் சென்னையையும் சேர்த்துக் கொண்டது ஹோலி.

ஹோலி பண்டிகை அன்று வண்ணப் பொடிகளை ஒருவ ரின் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்வர்.

இந்த நாளில் இளைஞர்கள், இளம் பெண்கள் மீது வண்ணப் பொடிகளை தடவும் சாக்கில் லேசாக வரம்பு மீறினாலும் அது பண்டிகை என்று பாராமுகமாக விடப்படுவதையும் நாம் சில இடங்களில் காண முடிகிறது.

மேலும், இந்த வண்ணப் பொடிகளில் கலக்கப்பட்டுள்ள ரசாயனம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தன்மையுடையது என்று மருத்து வத்துறை சார்ந்த வல்லுனர்கள் சொன்னாலும் அவை கண்டு கொள்ளப்ப டவில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு மும்பை தாராவி பகுதியில் நடந்த இக்கொண்டாட்டத்தில் விஷத் தன்மை உள்ள ரசாயனப் பொடிகளைத் தூவி விளையாடியதில் 144 பேருக்கு அரிப்பு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலா னோர் 9-10 வயதுடைய சிறுவர் கள் என்றும் செய்திகள் கூறு கின்றன.

அதோடு, இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் வழக்கத் திற்கு மாற்றமாக தக்காளிகளை குவித்து அதில், இளைஞர்கள் - இளம்பெண்கள் உருண்டு விளையாடிய சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.

பண்டிகை என்ற பெயரில் உணவுப் பொருளை வீணாக்கு வது எந்த வகையில் அறிவுக்குப் பொருத்தமானது என்று தெரிய வில்லை.

பண்டிகை என்பது வெறுமனே மகிழ்ச்சி சம்மந்தப்பட்ட தாக இருந்தால் மட்டும் போதாது; அந்த பண்டிகை அறிவுக்கு பொருந்துவதோடு அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதை கொண்டாடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கமும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.