அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.

இன்னொரு சூரியன்

ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!

வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?

இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?

இணைய தளங்களில்...

கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம் பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.

நீர் சுள்ளான்

ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது.

உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்' என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.

நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும்.

இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.

சூப்பர் நோவா

ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும்.

அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.

திருவாதிரை நட்சத்திரம்

திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!

இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.

இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.

நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.

பூமி சாம்பலாகி விடும்

நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா; அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.

சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.

கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.

அழிவு நிச்சயம்

உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.

சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.

ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.

அறியாமை

உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.

2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.

இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை

ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.

உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது.

ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

- ஊடகன்

Comments

64 comments

64
ராஜகிரி கஸ்ஸாலி
கிழக்கே உதிக்கும் சூரியன் ஒருநாள் மேற்கே உதிக்கும்
safir
ulagam orunal aliyum enbathai kuran thelivaga solghirathu. kadal neer erikkapadum endrum kuran solghirathu,vaanam surutta padum enbathaium kuran solghirathu, athu eppothu nigalum enbatharku sila adaiyalangalaium solghirathu.sooriyan west larunthu uthikkum enbathaium yesu vaanilirunthu varuvaar enbathaium saandrudan kuraan solghirathu.kuraan muslimgalukkaga mattum vantha vetham alla.anaithu manitha,mattrum jinn vargathinarukkaga iraivanal arulapattathu.matham.inam mozhi,niram,jaathi,endru entha paagu paadum illamal anaithu manitha samuthayathirkaga avargalai padaitha iraivanidam irunthu vantha vetham kuraan.
Deena senthilnathan
Thanks for your information. well wrote. short and crisp.
joan
how mirackkle is the nature
santhosh
Dear Mr.OOdagan,your essay on the dooms day is good.As you said no one can exactly predict the dooms day.Kindly search the mentioned keywords in google and let me know your opinion.search for CROP CIRCLES,Area 51,Bob lazar's interview(he is no more)zecharia sitchin(no more),DUMBS,seed vault in norway,NIBIRU,SPT,Chemtrials,robert s.harrington(he is no more),jesse ventura about 2012(former minnesota governor,US),BINARY STAR SYSTEM, IRAS, WISE, bird deaths in 2012,KILL SHOT BY ED-DAMES,SOLAR STORM IN 2012.for your information our earth is going to bombarded by once in life time solar storm in the year 2012(as said in NASA's web site, if you believe in NASA).The magnetospher has gone weak like never before.poles are already started to shift at the rate of 40 miles per year towards siberia,Russia.for your information it's not just MAYAN CALENDAR that is going to end IN 2012 but every known ancient calendar(Aztec,hopi,I-ching,kaliyug and etc) on this planet earth is going to end in 2012.different civilization,different places,different belief systems and at different ages and no one knew other civilization existed,co-exists or will exist and everyone's calendar ending at the same year.is it a mere co-incidence...????? after studying all the above links carefully and if you feel that this world is not going to end then leave it and let's sit and watch.if you feel that you are not able to come to a conclusion then go to USGS web site and look in to the number of earthquakes that is striking the world now in 2011 and past three year's earthquake stats.No place is spared EARTHQUAKES ARE HAPPENING THROUGH OUT THE WORLD.now it has become a regular news.it's alaska,chile,haiti,italy spain,india,chennai,new delhi,andaman,afghanisthan,pakisthan,newzeland,thailand,indonesia,papua guinea,hawai,japan,china,kenya and a lot of other places.look at the number of volcano eruption happening through out the world.certain co-ordinates in google world and microsoft sky were blocked.check it out everything in you tube.Just science can't answer this question.look in to different civilization's history as well.Our earth is headed towards a dreadful solar storm and CME has already started to hit earth.As of now the matter should be looked with a precaution with the signs happening in this world.to my knowledge atleast we should wait till december 2011 if there emerges a solid eveidence from amature astronomers.IF you believe america and NASA then you may have to wait till mar-apr 2012 as the next batch of WISE photographs will be released.Given the kind and amount of EVIL in this world it is good that some one press refresh button of this planet.other animals will be better off without human beings.With this rate of population explosion we cannot co-exists with mother nature any more.Thanks for spending your valuable time in reading this comment.
hari
உலகம் அலிவது நிஜம் தான் ...ஒரு நாள் அலிய தான் பொகிரது .....வால்கின்ர வால்கை சன் தொசமாக வாலுவொம்.......
KANAGAVICKY
hanks for your information.i like this information.
Guest
மனிதன் மரன பயத்தை விட்டு விட்டால் எதர்க்கும் பயப்பபட அவசியம் இல்லை. மனித வாழ்வு ஆன்டுகல் பல வருடம் இல்லை. நன்ட்ரி
tarjan
உலகம் அழிந்துவிடும் அழிந்துவிடும் என்று நாம் பயப்படும் பயத்தினாலே நாம் தான் அழிந்து விடுவோம்
rocket raja
valkai valrathuku. irukara varai happy irunga , mathavangalaum happy panunga. enjoy every seconds in ur life
by
apac students 2011
rocket raja
AGM Priyan
இந்த நாட்ல்ல இருகுர கொடுமைகாரங்க குட இருகுரத விட சாவதெ மெல்
Guest
அழிவு என்பது நிஎச்யம் தான்.எருகும் வரை சந்தொஷ்மாக எருகலம் ........... "ALL IS WELL "
M.Vivek
மனிதன் தன் உடலை விட்டு ஆன்மாவை உணர்ந்து கொண்டால் மரணம் ஒரு பொருட்டல்ல
Che Guevara Magi
I am Ready 2 Face the Dead!!!

Come On Baby I m Ready
karthick
death is a unknown.that welcomes all the peoples we accept it
JAYASEELAN.V
MANITHAN VARUMAYAL SAVATHAI VIDA ULGAM AYVATHU MEL ELLORE ORU NAL MARANATHAI ETHIRKULLA VENDUM ATHU EPPA VENDUMANALUM IRUKKALAM PAYANTHAVANUKKU THAN PAYAM
kkkkk
how u can say world will not end in 2012?At time you are saying no body know when the world will become end? and one more don't compare past day.......
ram
பயம் தான் அழிவு
s.ranjan kunnathur
எது நடக்குமோ அது நன்ரகவெ நடக்கும் ஒம் நமசிவய
Mohankumar
EVERYONE LIKE HEAVEN
BUT
AFRAID TO DIE
ANTO.R
ALL IS WELL...............
manikandan.ar
உலைப்பவர்கலுக்கு உதியமில்லை மேடயில் குலைக்கின்ட்ர கொடுமைகரர்கலுக்கு மத்தியில்...
projectraja
pirakkinta naalum erakkinta naalum teriyaata potu enku nilaikkinta naalai kurippodu enku solvaarai yaaru...........................
BHARATHI ANAND
இது நடக்க பொவது உன்மை தான் அனால் அது எப்பொலுது என்ரு குரமுடியாது.
mohammed jiyath
உலகம் எப்போது அழியும் என்பது நமக்கோ அல்லது விஞ்ஜானிகலுக்கோ தெரியாது. அது கடவுலின் கய்யில் தன் இருக்கிறது. உலகம் 2012 ட்செம்பெர் 21 ல் தான் அழியும் என கூறிய விஞ்ஜானி எப்படி துல்லியமாக நாளை கனக்கிட முடியும் உலகம் அழியும் என்று. சிந்தித்து பாருங்கல்
Guest
எனக்கு இன்னும் அதிக தகவல் தெவை
santhosh suganya vellore uppup
கடவுல் = உலகம்

கடவுலை நம் நேரில் கானும் போது உலகம் அழியும்

உடல் உயிர் உனவு உனர்வு உரவு கல்வி ஆட்சி மிட்சி புகழ்
Henry Richard
இததான் நான் எதிர் பார்த்தேன் வா வா நான் ரெடியா தான் இருக்கென்.... HA HA HA GAME OVER
kalai
ஏங்க உலகம் எல்லாம் அழியாதுங்க..... சும்மா ஏங்க இப்டி பயபடுத்ரீங்க........
theepakan
பயப்படுத்தாதேங்க சார்...
puyal
உலகம் அழிந்தால் புது உலகம் வரும் எல்லா பிரப்பும் பிரந்து வாழ்வோம்
Sr.Amala
very good thought. thank u. but why the vert educated people are telling like that? can you explain please?
tamilarasan
இந்த உலகமானது அழிந்து போகும்..........அதுவும் பூமியனது தனது புவி ஈர்ப்பு விசையை இழ்க்கும் பின்பு அனைவரும் அழிவோம்...........................................
kannan
உலகம் கன்டிப்பாக அழிய ஆவலாக உள்ளது, என் விருப்பம் டிசம்பர் 21 ல் கன்டிப்பாக காலி
chakravarthy
விஜய்காந்த் உலகை kappathuvar yendra nambikai yenaku irukinradu
sackan Abugam
உலகம் அழிந்தலும் அழியாவிட்டாலும் ம்னிதனுக்கு மரனம் என்பது நிச்சியமெ ஒரு நாள் மரணம் நிகழும் எனவெ வாழபொகின்ற சிரிய அளவிலான காலத்தில் மனிதனுக்கும், இயற்கைகும் தீங்கு இல்லாமல் வாழ வழ்துகின்றென்.ஏனெனில் இவ் உலகம் அழிந்தலும்.நான் மட்டும் அழிய பொவதில்லை.

இப்படிக்கு
SACKAN
thinishraj
உலகம் 2012.12.21 ல் அழியுமா
Ulakanathan
அன்பு நண்பர்களே, தங்களின் கருத்துக்களில் தமிழ் அழிவடைய ஆரம்பித்து விட்டது. அதைக்கூட எம்மால் தடுக்க முடியவில்லை. இப்படியிருக்க உலக அழிவை எப்படி தடுப்பது?
kathiresan.n
உலகம் அழியாமல் இருக்க அனைவரும் என்னுடைய பெயரை

ஒரு நால் முலுவதும் உனவுயின்ரி உச்சரிக்க

வேன்டும்........அப்பதான் உலகத கபதுவென் ஒகெ.,.,.,.,.,.,...,
jessiegeethu
kandipa aliyathu ulagam . so don't feel for anything, enjoy your life;
A.N.M.HIFAS
உலகம் அலியமல் இருக்க ஒரு மந்திரம் சொல்லி தருகிரன்.(LAHILAHA ILLA ALLAH MOHAMMATHURASULILLAH)
Senthil Kumar.P
எல்லாம் இருகுரவஙக தான் கவலை படனும்.

எதுகும் இல்லாதவஙக எதுக்கும் கவலை பட மாடொம்!
Anwar khan
உலகம் அழிவது என்பதை அல் குர் ஆனை பார்த்தால் தெரியும்
vashekaran srilanka
நம்பிக்கை தான் வாள்க்கை உலகம் ஒரு போதும் அளியாது.மனிதன் தன் நம்பிக்கையை அளீக்கிறான்
shahul
பொருத்திருந்து பார்க்கலாம் யாரும் நம்ப வேன்டாம் by Shahul
Selvamani
எங்கள் இந்தியா வை காப்பாரற்ற Action King Arjun will Come

by

karthiga

Welsoft Technologies(Senior Programmer)
KARTHIKA DEVI PRABAKARAN
Evargal sonnamathiri DECEMBER 21 ULAGAM ALIYAMAL Irrukattum intha vathanthigalai parappivittavargalmidthu sariyana nadavadikai eduka seikiren. ETHANAAL ethanaiper manarithiyaga pathippu adainthu irrukiraga,munbu ithumathiriya seithigalai ketu irranthu irrukirargal.AMERICA NAGARIL IIRUKUM MAYAN CALANDER KURIPPU Avalavuthan kanakittuirrukiradhu endral avalavuthana ulagam .en naam ippadi edhukollakodathu mayan samugathar valgai mudiyalam illai avargal munnorgal atharkumel kuripidamal irruthirukalam.ENTHA ORU VISHAITHAIYUM NAMMAL MUNNATHAGA KURAMUDIYUDHU.scientist enbavargal verum scientist mattumey.not GOD.SCIENTIST oru kuripitta alavumattumey kankidamudiyum.PRABANCHA RAGASIYATHAI yaralum kanakidamudiyathu. APPURAM KADAVULUKUM MANITHARUKUM ENNA VITHIYASAM. APPADIYE Ethavadhu oru aliyvu erpattal atharku mukiyamanakaranam namakiya MANITHARGALthan.nantraga AVATRAI ARAINDHUpaar. athaivittu ulagam aliyapogiradhu endru ungalathu poivarthaigalai solli alaiyathey.VINVELLIYIL NADAKATHA ONDRAI KARPANNAI SEITHU ATHARKU URUVAM THITATHIRGAL. BOOMIYIL NADAKUM SUNNAMI, EARTH QUAKE ,NILA SARIVU,ANAITHIRKUM KARANAM MANITHAR GAL .... INTHa sitrangalai muthalil araichi pannungu nam ULAGA SCIENTIST -gala.BOOMIYIL IRRUKUM ANAITHU YUIRVALKUDIYA OOVONDRUM GODS GIFT .... ATHAI NAAM SARIYANA MURAIYIL PAYANpaduthukiroma ? SINTHIYUNGAL ? ULAGAM ALIYAPOKIRADHU, OR ULAGAM ALIYAPOGIRATHA? INTHA MATHIRIYANAVAIGALAI VITTU .KADAVUL Naamkku kuduthuirrukum intha alagana BOOMIYAI NALLA MURAIYIL payanppaduthi ,YAARUKUM NAAM IRRUKUMVARAI ENTHA THUNBAMUM SEIYAMALUM,IRRUKAVENDUKIROM ENDRU NAAL ONDRUKU KADAVULIDAM PRATHANI SEIVOM. NAAM ENNAVAGA NINAIKIROMO ATHU KANDIPAGA NADAKUM.NAAM NAM VEETKUL NADAKUM SAYALGAL ANAIDHUM NAM ENNA ALAIGAL.{WAVES}.SO PLS PRAY YOURSELF& SAVE OURS BROTHES& SISTER.
david
உலகம் அழியாது உருமாரும் ஆனால் அது எப்போது என்பது யாருக்கும் தெரியாது
bala
ulagam azhiuthu ,azhiyALA naama vazhginra vazhkai magizhchiyA irukka illaya ? first athai kandupidippom !!!!!!!!!!! intha ulagil naam pirappom , palavatrai kaanpom endru namakku theriuma?????????? illai @@@ piragu yeen naam payappada vendum !!!! aasai endra onrai athiga alavil valarthukolvathinaal than, naam palavatrai yeetrukolvathilla !!!!!!!

IRUKKUM VARAI SANTHOSHAMAI...... IRU mudinthal
PIRARAI SANTHOSHA PADUTHU!!!!!!!!!!!!!!!!

ENJOY UR LIFE IN EVERY MOMENT &
IT'S NOT COME AGAIN!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
RIZWAN
சாகப்போற நாள் தெறீஜ்சா வாழப்போற நாள் நரகம் ஆயிரும்..

SO DONT THINK ANYTHING... ENJOY YOUR LIFE..
aishwarya
bala supper coment pa...i like this...
geethasrinath
Epa pa ulagam alium im waiting 2 c
selvamdenial
கடவுள் இருக்க பயம் ஏன்? அன்பர்களே!
PRAKASH GIRI
THE WORLD CANNOT COMES TO AN END.
THIS IS ONLY AN IMAGINERY
DONY WORRY ABOUT THIS
DONT THINKING ABOUT THE NEGATIVE SIDE
THINKING ONLY ABOUT THE POSITIVE SIDE
GODS GIVING A BEAUTIFUL LIFES TO SEE
BE HAPPY AND ENJOY THE LIFE GUYZ
S-BALAJI
உலகம் அலியுமா ஆலியதா என்பது சந்தெகம்தன் உலாகதில் எதவது ஒருபககுதிகுட அலியலம் அலியாமலும்
போகலம்.
kannan
கவலை பட வேன்டாம் உலகம் அலியட்டும்
sasi
அலியாத உலகம் வரட்டும்
R.Divyarani
அழிந்தால் அழியட்டும் நடப்பது நன்மைக்கு தான் என நினைதுகொல்வொம்
shunmugasundari
ulagam alinthal mothamaga aliyatum illai entral aliyamal irukatum erukum varai santhosamaga irukalam irakum
SangeethaArvindh
Thanks for your information
Loganathan
Anbu irrukum varai indha agilam aliyadhu .......
ராமு
இந்த பூமியில் பிறந்த உயிரினங்கள் அனைத்திற்குத் கட்டாயம் அழிவு நிச்சயம் என்கையில் பூமிக்கு மட்டும் விதிவிலக்கா ....??? இருக்கிறவரை அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம்.
ariyamalar
thanks for the information....
K.MUTHU
உலகம் அழிந்தால் மனித உயிரினம் மட்ரொரு கிரகதில் தொன்ரும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.