கேரள முதல்வரின் அலுவலக செயல்பாடுகளை இன்டர்நெட் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்காக முதல்வர் அறையில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தால் முதல்வர் உம்மன்சாண்டி அறையில் இருக்கும்போது அவருடைய செயல்பாடுகளையும், அவர் இல்லாத போது அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது.

உதாரணமாக நாம் பார்க்கையில், முதல்வர் இப்போது அலுவலகத்தில் இல்லை; அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனை சென்றுள்ளார் என்ற செய்தியை பார்க்க முடிந்தது. மேலும் அலுவலகத்தின் செயல்பாடுகளையும் இந்த www.keralacm.gov.in என்ற இணைய தளத்தில் அறிவதோடு, புகார் அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை அனைத்து மாநில முதல்வர்கள்- எம்.பி.க்கள்- எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் செயல்படுத்தினால் மக்களுக்கு தங்களை ஆளும் வர்க்கத்தின் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்கும், அவர்களை தொடர்பு கொள்வதற்கும் எளிதாக இருப்பதோடு, முதல்வரையோ - மற்றவர்களையோ சந்திக்க வரும் மக்கள் தாமாகவே அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரத்தை அறிந்து கொண்டு அந்த நேரத்தில் வருவதன் மூலம் அவர்களின் நேரமும் மிச்சப்படும். மத்திய மாநில அரசுகள் இந்த திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முன் வரலாமே!

-முகவையார்

Pin It