பேருந்துக் கட்டணம் - பேசும் புள்ளி விவரம் சென்னை மாநகரில் பேருந்துகளின் கட்டண விவரம் (ரூபாயில்)

bus rate chart 600மேலே உள்ள புள்ளிவிவரம் பேருந்துக் கட்டண உயர்வு எல்லா நிலைப் பேருந்துகளிலும் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந் திருப்பதைக் காட்டுகிறது. மேலும் கட்டணக் குறைப்பு எனும் அறிவிப்பு எந்த அளவுக்குப் பித்தலாட்டமானது என்பதையும் இப்புள்ளி விவரம் புலப்படுத்துகிறது.

மொத்த பேருந்துகளில் 40 விழுக்காடு மட்டுமே சாதாரணக் கட்டப் பேருந்துகள். நீண்ட தொலைவு வழித் தடங்களில் சாதாரண பேருந்துகளே இயக்கப்படுவதில்லை. அதனால் மக்கள் விரைவு அல்லது சொகுசுப் பேருந்துகளில் அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சென்னை மாநகருக்கு நூறு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நாள் தோறும் பலவகையான கூலி வேலை செய்வ தற்குப் பல இலட்சம் பேர் வருகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்கு ரூ.300 முதல் 500 வரைதான் கூலியாகவோ சம்பளமாகவோ பெறுகின்றனர். இவர்கள் ஒரு நாளைக்குப் போக்குவரத்துக்காகக் குறைந்தது ரூ.100 செலவிட வேண்டிய நிலைக்கு இக்கட்டண உயர்வால் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் இன்றியாமையா வாழ்க்கைத் தேவைகளுக்குச் செலவிடுவதைக் குறைக்க நேரிடும்.

bus strike vellore 600

30-1-2018 அன்று வேலூரில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தும் காவல்துறையினர்

தமிழ்நாடு முழுவதும் 22,000 அரசுப் பேருந்துகளில் ஒரு நாளைக்கு 2 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 55 விழுக்காடு மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். வேலை செய்யும் அகவையில் சிற்றூர்களில் இருப்பவர்களும் வேலைக்காக நாள்தோறும் நகரங்களுக்குச் செல்கின்றனர். வேளாண் விளைபொருள்களை-காய்கறி-பழங்களை நகரங்களில்தான் விற்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு பொருளாதாரச் செயல்பாடும் போக்குவரத்து வசதியைச் சார்ந்தே உள்ளது. குறைந்த கட்டணத்தில் பேருந்து போக்குவரத்தை வழங்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். இதில் லாபநட்டக் கணக்கைக் காட்டி தமிழக அரசு கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் பிழைப்பைச் சூறையாடுவது கொடும் கயமைத்தனம்.

எனவே, தமிழக அரசு பேருந்துக்கட்டண உயர்வைக் கட்டாயம் உடனே திரும்பப் பெறவேண்டும்.

Pin It