அய்யய்யோ அய்யய்யோ

       அடிவயிறு எரியுதே!

அன்றாடம் அன்றாடம்

       அடிஉதைகள் தொடருதே!

என்ன பா வஞ்செஞ்சோம்

       மீனவராப் பொறக்க?

இப்படியா எங்கசனம்

       கொத்துக்கொத்தா இறக்க?

காக்கா குருவிபோலக்

       கண்டபடி சுடறானே!

கேட்க நாதியில்லே

       வலையக் கிழிக்கிறானே!

உசிரோடு போறமக்க(ள்)

       பொணமாக் கரையொதுங்க

ஒவ்வொரு நாளுமே

       ஒப்பாரி விழிபிதுங்க

கொசுறுப் பய(ல்)தானே

       கொலைகாரச் சிங்களவன்

கோவணம் அவிழ்த்தவனின்

       கொழுப்படக்க ஆளிலையா?

தினம் ஒரு கடுதாசி

       முதல்வர் தீட்டலையா?

திருட்டுத் தில்லிநமை

       இந்தியரா ஏற்கலியா?

இன்னும்இன்னும் எத்தனைநாள்

       நம்மசனம் சாகணுமோ?

மன்மோகன் நார்கிழிஞ்ச

       மட்டையா ஆளணுமோ?

தமிழ்மக்கா... தமிழ்மக்கா...

       துணையா நில்லுங்க!

சாவுகளைத் தடுக்கஒரு

       வழியிருந்தா சொல்லுங்க!

Comments

1 comment

1
கி.பிரபா
தமிழேந்தியின் நெஞ்சக்குமுறல்களைக் கவிதையாகத் தந்திருப்பதைப் படித்தேன். கோவில்களில் சிலையாக மட்டுமே இறைவன் இருப்பதால் தான் அருமை நண்பரின் அவலக் குரல் கேட்கவில்லை. விரைவில் நமக்கு விடியல் வரும்.
காத்திருப்போம் நல்விடியலுக்காக.எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்; வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே - படப் பாடல் வழியே நம் நினைவினையும் சிந்தனையையும் இணைத்துக் காத்திருப்போம் நல்விடியலுக்காக!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.