உலகில் வாழும் மனித ரெல்லாம் ஒருப்பட வேண்டும்

                ஓர் குடையில் அனைவருமே ஆளுமை வேண்டும்.

சாதி, மதக் கொடுமையெலாம் நீங்கிட வேண்டும்

                சமத்துவமாய் அனைவருமே வாழ்ந்திட வேண்டும்

தீண்டாமை எனும் கொடுமை நீங்கிட வேண்டும்

                தீவிரவாதங்களோ ஒழிந்திட வேண்டும்

நம் நாடு என்ற நிலை நீங்கிட வேண்டும்

                நம் உலகம் என்ற நிலை எய்திட வேண்டும்

ஆன்மீகம் என்றநிலை அழிந்திட வேண்டும்

                அறிவினாலே நாம் உயர்ந்தோம் என்றிடல் வேண்டும்

இயற்கையினால் வாழ்கின்றோம் என்றிடல் வேண்டும்

                இதைஉணரஅனைவரிடமும்சிந்தனைவேண்டும்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.