ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?
ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?