இளைஞர்கள் குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை பெற்றோர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற குழந்தைகள் எப்படியாவது முன் னேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, தங்களை வருத்திக் கொண்டு வளர்க்கின்றனர்.

பெற்றோர்களைச் சார்ந்து வாழும் பிள்ளைப் பருவத்தில் தனக்கென்று ஒரு வழியை, தொழிலை, சேவையை மனதில் நினைத்துக் கொண்டுதான் படிக்கின்றனர். சில சந்தர்ப்பச் சூழ்நிலையில்தான் எண்ணியபடி வாய்ப்புக் கிடைக்காமல் போகும். அப்பொழுது வருத்தப்படக்கூடாது.

காலம் நமக்காகக் காத்திருக்காது. பெற்றோர்களும் கடைசி வரை உழைக்க முடியாது. தன்னுடைய அடுத்தகட்ட எண்ணத்தைப் பயன்படுத்தி கிடைக்கும் படிப்பை, தொழிலை ஏற்று அதில் வெற்றி காணும் எண்ணத்துடன் செயல்பட வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளிடம் கலந்து பேச வேண்டும். சூழ்நிலையை விளக்கமாகப் புரியும்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். விவரமான பிள்ளைகள் எப்பொழுதும் காலத்தை வீண் செய்யாமல் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்; வெற்றி காண்கின்றனர்.

நம்முடைய மூளை கணினியில் உள்ள பதிவு அளவை விடப் பல மடங்கு அதிகம் பதிவுத்திறன் பெற்றது. அதனால் தான் குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை தன்னுடைய பதிவை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை முதுமைக் காலத்தில் மூளையில் பதிவு ஏற்காது. ஆனால், இளைஞர்களின் மூளை விரைவாகப் பதிவு செய்து கொள்ளும். இதையும் மனதில் கொண்டு இளைஞர்களின் செயல்பாடுகளில் சிறந்தவைகளை ஏற்றுப் பெரியவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும். முதியவர்களின் ஊக்கம் மேலும் வெற்றிகாண உதவும்.

சிலரின் மூளை, பதிவுகளை ஏற்று, கிடைக்கும் வாய்ப்பைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் அறிஞர்களாகவும், நிபுணர்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். தான் ஏற்ற துறையில் வெற்றி காணவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உள்ளது. பொறியாளர் திறன், மருத்துவரின் திறன், சட்டநிபுணரின் திறன், தொழி லாளியின் திறன், எழுத்தாளரின் திறன், பேச்சாளரின் திறன், கவிஞரின் திறன் போன்ற பலரின் திறன் அவரவர்கள் ஏற்றுக் கொண்டதன் வழியில் சிறந்துள்ளது.

அனைத்துத் திறனாளிகளும் காலத்தைச் சரியாகப் பயன்படுத்தியே வெற்றி கண்டுள்ளனர். காலம் காத்திருக் காது. பொறுக்கிகள், அரசியலுக்கு வருவதைத் தடுப்போம். மக்கள் நலத்தை மட்டுமே மனதில் ஏற்றவரைத் தேர்ந்தெடுப் போம். விவசாயத் தொழிலுக்கு நீர் நிலைகளில் நீர் இருக்க வழி காண்போம். நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களை அகற்றும் அரசை அமைப்போம். செயல்படுங்கள்! செயல்படுங்கள்!!

- உழவர் மகன் ப.வ.

Pin It