பாட்டி வீட்டுக்கு

பயணிக்கும் போதெல்லாம்

ஜன்னலோர இருக்கைக்காக

சண்டையிட்ட இளம்பிராயம்

 கரை புரளும் காவிரி

கரையோரம் கரிநாள் கூட்டாஞ்சோறு

வழிநெடுக வாழைத்தோட்டம்

மண்தொடும் சின்னப்பண்ணை மாமரங்கள்

பித்தளை செம்புடன் பெரிசுகள் ஜமா

 இப்பொழுதும் பயணிப்பதுண்டு

நெருக்கமான கடைவீதி

புழுக்கத்துடன் ஜனத்திரள்

மனைகளான மரைக்காயர் நிலங்கள்

மன்றங்களான படிப்பகங்கள்

புகைக்காற்றுடன் முடை நாற்றம்

 தயவுசெய்து என்னை

ஜன்னலோரம் தள்ளிவிடாதீர்கள்

 -நெய்வேலி பாரதிக்குமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.