உன் மகளிடம் நீ அனைத்தையும் தந்துவிட்டாயா?
அம்மா கேட்கிறாள் இருண்ட கண்களின் ஆழத்திற்குள்
விழுந்து கொண்டிருக்கிறது எங்கள் சமையலறை
பாய்ந்து பெருகும் நதிக்குள்
என் நைந்த தாலிச்சரடை கையிலேந்தி
என்னையும் இழுத்தவாறு நீந்த ஆரம்பிக்கிறாள் அவள்
குடிகூரா பவுடன் வாசனையுடன் நான் என்
மகளின் மகளுடைய கனவில் எழுகிறேன்
ஒற்றைப்படையில் அமைந்த எண்களுடன் நிரம்பி
இருக்கிறது இந்த ஆஸ்பத்தி
மேலும் சில பழங்கள், மீன்கள்
சாப்பிடச் சொல்லி செல்கிறது வெள்ளைநிறம்
நிறமற்று பெருகுகிறது பி-பாஸிடிவ் ரத்தம்
எந்த வாசனையும் நிறமுமற்ற ஒரு உலகில்
உறங்கிக் கொண்டிருக்கிறாள் மகளின் மகள்
வெள்ளை நிற இட்லிப் பூக்களை நள்ளிரவில்
பிரசவித்திருக்கிறது மெடர்னிடி வார்டு
பார்த்தே வளர்ந்த இந்த மரம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.