டிசம்பர் 24 - தந்தை பெரியாரின் 38ஆவது நினைவுநாள்

தந்தை பெரியார் நம்மை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. இறப்பதற்கு 5 நாள்களுக்கு முன்புகூடத் தன் 95ஆம் அகவையில், தாளமுடியாத வயிற்றுவலியையும் பொறுத்துக் கொண்டு, மக்களிடம் பேசியவர், மக்களுக்காகப் பேசியவர் பெரியார்.

அதனால்தான், அவரைப் பின்பற்றுகின்றவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் ஆகிய இரு அணியினராலும் அவரை மறக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய எதிர்க் கருத்துகளைச் சொன்னாலும், அவர்களை எதிர் நின்று அழிப்பது அல்லது உள்வாங்கிச் செரிப்பது, பார்ப்பனியத்தின் குணம். இரண்டு வகைகளிலும் இன்று வரை பெரியாரை அவர்களால் வெல்ல முடியவில்லை. இருப்பினும் தங்கள் முயற்சிகளை அவர்கள் சிறிதும் கைவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் ஐயப்ப பக்தியும் தற்செயல் நிகழ்வுகளல்ல. எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்குச் சென்றால், ஒரு துளி ஒலியும் இல்லாமல் அமர்ந்து தியான வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லும் அதே இந்து மதம்தான், சாமியே சரணம் ஐயப்பா என்று காதுகிழியக் கத்தவும் சொல்கிறது. சத்தம் விவேகானந்தருக்குப் பிடிக்காது, அமைதி ஐயப்பனுக்குப் பிடிக்காது போலிருக்கிறது.

வேறொன்றுமில்லை, தங்களைப் பெரிய அறிவாளிகள், அமைதியானவர்கள் என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்குத் தியான மார்க்கம். கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் வெகுமக்களைக் கட்டிப் போட பக்தி மார்க்கம்.

சமற்கிருதமே தேவ பாஷை என்பதை நிலைநிறுத்துவதற்கு வேத, உபநிடதங்கள். தமிழ் பற்றாளர்கள் வேறு மதங்களுக்கு ஓடிவிடாமல் தடுப்பதற்குத் திருமுறைகளும், பாசுரங்களும்.

நாம் எந்தத் திசையில், எந்தக் கதவைத் திறந்து கொண்டு ஓடினாலும், அங்கே நம்மை வரவேற்று, மறுபடியும் அதே வைதீகக் கட்டிடத்தில் வைத்துப் பூட்டக் காத்திருக்கிறது இந்து மதம்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன், இந்து மதத்தைவிட்டு விலகினார் பசவண்ணர். அவர் தொடங்கிய வீர சைவமும், அவ்வழியைப் பின்பற்றிய லிங்காயத்துகளும், இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே அறியப்படுகின்றனர். சமயங்களை எதிர்த்து நின்றார் கபீர். இன்று கபீர் பாந்தி என்னும் பெயரில், அவரைப் பின்பற்றிய அணி, இந்துமதப் பிரிவுகளில் ஒன்றாய் மாற்றப்பட்டுள்ளது.

உருவ வழிபாடுகளையும், மூட நம்பிக்கைகள் பலவற்றையும் விலக்கி உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தையும், இந்து மதம் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வேத வைதீகக் கோட்பாடுகளை, வேள்விகளை எதிர்த்த சமண, பெளத்த இயக்கங்களும் கூட, சட்டப்புத்தகத்தில் இந்து மதப் பிரிவுகளாகத்தான் அடையாளப்பட்டு நிற்கின்றன. இந்தியாவல் தோன்றிய மதங்கள் எல்லாம் இந்து மதங்கள்தானாம். வெளிநாடுகளில் தோன்றிய கிறித்துவ, இசுலாமிய, பார்சி மதங்களை மட்டும்தான் புறச்சமயங்கள் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்.

இந்து மத வேள்விகளை, மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்த புத்தரையே, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் என்று கூறும் கள்ளத்தனமும், கபட நாடகமும் இன்னும் நடந்து கொண்டுதானே உள்ளன.

பார்ப்பனியத்தைச் சிறு கத்தி கொண்டு சிதைக்க முடியாது. அந்த நச்சு மரத்தைக் கோடரி கொண்டு பிளக்க வேண்டும் என்று அறை கூவியவர் அண்ணல் அம்பேத்கர். அவருடைய நினைவுநாளில், அவர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை சூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.

இவ்வாண்டு காரைக்குடியில் பெரிய பெரிய அறிவிப்புப் பலகைகளைக் காண முடிந்தது. அம்பேத்கரைப் பாரதிய ஜனதா கட்சி நினைவு கூர்கிறதாம். எச்.ராஜா தலைமையில், பா.ஜ.க.வினர் பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். என்ன கூத்து இது !

பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும், பா.ஜ.க.விற்கும் என்ன தொடர்பு? இவர்கள் மாலை அணிவிக்கவில்லை என்று எந்தச் சிலை அழுதது? மனப்பூர்வமாக எதிர்க்கும் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவிக்க எப்படி மனம் வரும்? கோல்வால்கர் சிலைக்கும், கோட்சே சிலைக்கும் நம்மால் மாலை அணிவிக்க முடியுமா?

இத்தனை வினாக்களுக்குமான விடை ஒன்றுதான். அவர்களால் எல்லாம் முடியும். அவர்கள் மான்களோடு சேர்ந்தும் ஓடுவார்கள். புலிகளோடு சேர்ந்தும் துரத்துவார்கள். 'பலித்த வரை என்பதுதான் பார்ப்பனீயம்' என்பார் பெரியார்.

அம்பேத்கர் நினைவுநாள், நமக்குத் துக்கநாள். துக்கத்தின் வெளிப்பாடாய் நாம் மாலையிடுகிறோம். அந்த நாள் அவர்களுக்குக் கொண்டாட்டமான நாள். மகிழ்ச்சியின் அடையாளமாய் அவர்கள் மாலை அணிவிக்கின்றனர். டிசம்பர் 6 - அவர்களுக்கு இரண்டு வகைகளில் இன்பமான நாள். அம்பேத்கர் மறைந்ததும் அன்றுதான், பாபர் மசூதியை அவர்கள் இடித்ததும் அன்றுதான்.

ஆனால் நமக்கோ, நெஞ்சில் அனல் அள்ளிப் போட்ட நிகழ்வுகள் அவை !

அம்பேத்கருக்கு மட்டுமில்லை, தேர்தல் நெருங்க நெருங்க அவர்கள் பெரியார் சிலைக்கும் மாலை அணிவிப்பார்கள். திட்டமிட்டு ஏமாற்றுவதற்கு அவர்களும், எந்தத் திட்டமும் இல்லாமல் ஏமாறுவதற்கு நாமும் தயாராக இருக்கும்வரை இந்த மோசடிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

தி.மு.கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் பலர் (பொறுப்பாளர்கள் சிலரே கூட), கறுப்பு வேட்டியோடும், கழுத்தில் அய்யப்ப மாலையோடும் நின்றிருந்த கோலத்தைப் பல ஊர்களில் பார்க்க நேர்ந்தது. அவர்கள் தி.மு.கழகத்தின் மீதும், தலைவர் கலைஞரின் மீதும் மாறாத அன்போடுதான் உள்ளனர். அதில் என்னால் எந்தக் குறையையும் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு விதமான இந்துத்துவ உளவியல் அவர்களை ஆட்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தி.மு.க.வில் கிறித்துவர்களும், இசுலாமியர்களும் இல்லையா, அவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளின் வழி, வழிபாடுகள் செய்யவில்லையா என்ற எண்ணம் வரலாம். கடவுள் நம்பிக்கை மட்டுமில்லாமல், மூடநம்பிக்கைகளும் கூட, எல்லா மதங்களிலும் உள்ளன, எல்லா நாடுகளிலும் உள்ளன என்பதை நாம் எப்போதும் மறுப்பதில்லை.

எனினும் பிற மதங்களிலிருந்து இந்து மதம் வேறுபடுகிற ஓர் இடம் குறித்தே நாம் அடிக்கடி பேசிவருகின்றோம். எல்லா மதங்களிலும் பிரிவுகள் உண்டு. கத்தோலிக், பிராட்டஸ்ட்டண்ட் முதலான பிரிவுகள் கிறித்துவத்திலும், சன்னி, ஷியா முதலான பிரிவுகள் இசுலாத்திலும் இருக்கின்றன. சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் இந்து மதத்தில் இருப்பது போல. ஆனால் சாதியம் என்ற ஒன்று இந்து மதத்திற்கே உரியது. பிற மதங்களுக்கு மாறிய பிறகும் கூட, விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய நஞ்சு அது. இந்துமதத்தையும், சாதியையும் ஒரு நாளும் பிரிக்கவே இயலாது, எனவேதான் இந்துத்துவ உளவியல் பரவி விடக் கூடாது என்பதில் நாம் கூடுதல் கவனமும், கவலையும் உள்ளவர்களாக இருக்கிறோம்.

எவ்வளவோ அறிவியல் வளர்ச்சி வந்தபின்னும், இந்த இந்துத்துவ உளவியல் நம்மை விட்டு நீங்கவில்லை. உண்ணும் உணவில் கூட சாதியின் அடையாளத்தை இந்து மதம் பதிவு செய்து வைத்துள்ளது. புலால் உண்போர், புலால் உண்ணாதோர் என்று இரண்டு வகை மட்டுமே நம்மிடம் உள்ளதாக நினைப்பது தவறானது. புலால் உண்போரில் ஆடும், கோழியும், மீனும் உண்பவர்கள் மேல் தட்டினராகக் கருதிக்கொள்பவர்கள். மாட்டுக் கறி உண்ணுதல் அதற்கு அடுத்த இடத்திலும், பன்றிக் கறி, நரிக் கறி உண்போர் அதற்கும் கீழான தட்டுகளிலும் நிறுத்தப்படுகின்றனர். இப்படி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் சாதியை நிலைநிறுத்தியதே இந்துத்துவாவின் சாரம்.

மூட நம்பிக்கைகளையும் முடிந்த அளவு உயர்த்திப் பிடிக்கும் குணம் இந்துத்துவாவிற்கு உண்டு. அதனால்தான் மின் மயானத்திற்குப் போகும்போதுகூட, கொள்ளிச் சட்டியை எடுத்துப் போகும் நம் மக்களை இப்போதும் பார்க்க முடிகிறது. இது போன்ற இந்துத்துவ உளவியலை முறியடிக்காத வரையில், சமூகத் தளத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் நமக்குத் துன்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இனி ஒரு விதி செய்வோம். தந்தை பெரியாரின் நினைவு நாளில் இந்துத்துவ உளவியலை வேரோடு வெட்டி எறிய அனைவரும் உறுதி ஏற்போம்.

Comments

37 comments

37
perfect
it's very gud article. tru reflection of our problems. authors view much appreciated.
பேனாமனோகரன்
சுப.வீ.அவர்களை தொலைகாட்சி வாயிலாகவும்,எழுத்துக்கள் முலமாவுமே அறிவேன்.இன்று மாலை மதுரை கல இலக்கியப்பெருமன்றத்தின் கூட்டம் இருக்கிறது.இந்த் வாசிப்பு அனுபவத்தை அதில் பகிர்ந்து கொள்வேன்.
re ka balamurugan
அருமையான கட்டுரை. எல்லாத் தடுக்குகளிலும் புகுந்து வரும் பார்ப்பனீயத்தினை நாம் எதிர்க்க சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவரிடையே நம் கொள்கைகளை கொண்டு செல்ல நாம் முயற்சி எடுக்க வேண்டிய நேரம். அதனைச் செயல்படுத்த மறுப்பதால்தான் திராவிட முன்னேற்றக் கழக முண்ணனித் தோழர்கள் கூட ஆன்மீகவாதிகளாகத் திகழும் அவலத்தினை நாம் காண நேர்கிறது.
Vee.Na.Somasundaram.
Thought provoking article.Vaazhththukkal, Suba.Vee.
naga
திராவிட இயக்கத்தின் தொண்டர்களை பற்றி சொலும் சுப.வீ ஏன் இயக்கத்தின் பல தலைவர்கள் கோவிலுக்கு போவதைச் சொல்லவில்லை....தெரியாதா இல்லை பயமா?...இயக்கத்தின் தலைவரின் குடும்பத்தினரே தேர்தலின் போது கோவில் கோவிலாக சென்று கும்பிட்டதை ஏன் குறிப்பிடவில்லை...இன்றும் பல திராவிட இயக்கத் தலைவர்கள் குடும்பங்கள் கோவிலுக்கு போகிறார்கள், இப்படி தன் குடும்பதையே மாற்ற முடியாதவர்கள், எப்படி சமுதாயத்தை மாற்ற முடியும்...?
ssK
அற்புதமான கட்டுரை. ஆழ்ந்த அலசல்.
ஆறுமுகம்
பெரியரின் பெயரில் உரு வாகி பெரியார் பிறந்தநாளை விட தள பதியின் பிறந்த நாளே தமிழர் நாள் கலைஞரின் பிறந்தநாள் வசூல் திருநா ள் என் று ஆட்சிக்கு முன்னர் இருந்தது பின் அபரிமிதமாக கொ‌ ‌ள்ளை காரணமாக பிறந்த நாளையும் தாண்டிய வசூல் சாதனை உலக மகா ஊழல் என்று ம் கின்னஸ் சாதனையாக மலர்ந்தது. விநாயர் சதுர்த்தியும் ஐயப்பன் விர தமும் பெரியார் பிறந்தநா ள் நினைவு நாள் கொண்டாடப்படுவதறக்கு முன்னேறே உள்ளது. பிறந்த நாளும் நினைவு நாளும் பாண்டியனுக்கு வேண்டுமானால் திசைதிருப்ப பயன்படும். விவேகாந்தர் மார்க்கமும் ஐயப்ப விர தமும் ஒரே அமைப்பின் செயல்பாடுகள் அல்ல அப்படி நிறுபிக்க முற்படுவதை அணைவரையும் ஏமாளிகளாக எண்ணும் செயல். கடவுளை எந்த மொழியல் வழிபட்டால் என்ன வந்தது கடவுள் நம்பிக்கை இல்‌ லாத பாண்டியன் அதில் தமிழை பயன்படுத்த வில்லை என்று வருந்துகிறார். கடவு ள் நம்பிக்கையே மூடநம்பிக்கையாயின் அதை தமிழை பயன்படுத்தினால் அது சரியான நம்பிக்கையாகிவிடுமா? தாய்லாந்தில் தேவரமும் திரவாசமும் கோவில் களில் ஒதப்படுவது தெரியுமா? பள்ளிவாசல்களில் அர பி மொழியில் ஒதுவதும் காற்றுத்தருவதையும் ஏன் கேள்வி கேட் கவில்லை? இந்தியா வில் தான் புத்தமதம் தோன்றியது. இன்னொரு மத்தை எதிர்த்தே சீக்கிய மதம் தோன்றியது பாண்டியன் மறந்து போனது ஏனோ? பார்ப்பனியத்தை அம்பேத் கார் எதிரக்க வேண்டும் என்று சொன்னதற்காக அவரை ஆர்.எஸ்.எஸ் கொண்டா கூடாது என்று கூறி அம்பேத்காரை குறிப்பிட்ட சாதி அடையாளத்திய்குள் ஏன்பாண்டியன் அடைக்க விரும்புகிறார்? பகுத்தறிவுக்கே ஒவ்வாத சிலைகளை வைக்க கோரியது யார்? பெரியார் சிலையும், அம்பேத்கர் சிலையும் மாலை அணிவிக்கவில்லை என்று எ ந்று சிலை அழுதது? அப்படியானல் சிலைகளுக்கு ஏன் மாலை? பாபர் மசூதியை ஏன் கேவிலை இடித்து அல்லது கோவிலை மசூதியாக்க வேண்டும். அவ்வளவு கொடியவனா பாபர்?
திமுக தலைவர் ஏன் மஞ்சல் துண்டோடு அலைகிறார் கரு ப்பு ஆடை கண்களுக்கு தெரிந்த பாண்டியன் தலைவர் அணைந்திருக்கும் ஆடைநிறத்தை காணாமல் போனது ஏன் ? அல்லது அதை கண்டிக்காது போனது ஏன்? இனி ஒரு விதி செய்வோம். தந்தை பெரியாரின் நினைவு நாளில் ‌தமிழனின் உளவியலை பயன்படுத்தி தமிழை காட்டி அ‌டிமை படுத்தி தமிழின படுகொலை க்கு துணை நிற்றவர்களை அடையாளம் காண்போம். நமக்கு அடிமைத்தலைவன் வேண் டாம். ஊழல் பணத்திற்கு துணைபோகும் கொள்ளைக் கும்பல் வேண்டாம். தமிழன் சாகும் நிலையி ல கூக்கு ரலை மறைத்து தமிழுக்கு மாநாடு நடத்தி கொண்டாடும் நீரோக்கள் வேண்டாம். தன் தலைவன் போரில் வீழந்தாபின்னரும் தன் குழந்தைக்கு போராடை அணிவித்து மண்ணை காக்க போர்க்களம் அணுப்பிய வள் தமிழ்தாய். ஆனால் சுதந்திர காற்றை சுவா சிக்க விடாமல் ஆயும் கொண்டு நெரித்து விட்ட தன் குடும்பத்தினருக்கு பதிவிக்கு பேரம் பேசும் துரோகிகளை அடையாளம் காண வேண்டிய நாள் என்று உண ர்வோம். அடிமை‌ தழையை அறுத்தெரியவே பெரியார் பேராடினார் அவர் வழித் தோன்றல் என்றபெயரில் நம்மை அடிமையர்கியதோடு வெளிநாட்டினரு க்கும் அடிமை யாக்கும் அடிமை தனத்தை வேரறுப்போம். எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ஏனெற்றால் அவன் தான் கூடவே உள்ளான்.
Sukdev
பேராசிரியர் சுபவீ இந்துவத்திற்கு எதிரான தெளிவான பார்வை உள்ளவர் என்பதை நிரூபீககிறது இந்த கட்டுரை.
தமிழ்
கட்டுரையின் அர்த்தங்களோடு.... நண்பர் ஆறுமுகத்தின் பதில்கள் சிந்திக்ககூடிய விஷயமே... நண்பர் ஆறுமுகத்தின் பதில்கள் அருமை.
Yesa
agree ur point.Great
AZHAHUMATHI.
We whole heartedly accept the main theame of the article.At the same time we cannot ignore the comments made by Thiru.Arumugam.He speaks TRUTH. Corrupted, Money hungry Leaders cleverly used Periyaar name and spoiled the life of Thamizh peaple.
periyaariyan
இனி ஒரு விதி செய்வோம். தந்தை பெரியாரின் நினைவு நாளில் இந்துத்துவ உளவியலை வேரோடு வெட்டி எறிய அனைவரும் உறுதி ஏற்போம்.??

எதிரிகல மட்டும் பேசனா போராது.
துரொகிகளையும் பற்றி பேசனும்.
பெரியார் ஒருபோதும் துரோகிகலையும் ஏர்ப்பது இல்லை.!!!!!!!!
Nagarajan
இந்து மதத்தில் உள்ள மூட பழக்கங்களும் , சாதி பிரிவினைகளும் வேரோடு களையப்பட வேண்டியவை. அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பிற மதங்களை தாக்கி பேச அருகதை அற்ற கோழைகள் அதற்காக சப்பை கட்டு கட்டுவது தான் ஏற்று கொள்ள முடியாத ஒன்று. அதை தான் இவரும் செய்கிறார். மதங்களே தேவை இல்லை என்று இவரால் அனைவரிடமும் சொல்ல முடியாது , ஆனால் இவர்கள் தான் நம்மை முற்போக்கு சிந்தனை பாதையில் நடத்தி செல்ல முயல்பவர்களாம்... என்ன கொடுமை சார் இது?
seyed muhammed
நன்றி சு.பவீ. நல்ல கருத்துக்களை ஏற்க மனம் விசாலப்பட வேண்டும்.ஆறு முகத்திடம் உண்மை முகம் ஒன்று கூட இல்லாததால் கோபப்பட்டிருக்கிறார்.பாபர் இடித்தார் ராமன் பிறந்த இட கோயிலை என்பதற்கான எவ்வித அறிவு நாணயத்துடன் கூடிய ஒரு ஆதாரமும் இல்லை.ஆதலால் தான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் தீர்ப்பிற்கு அடிப்படையாக நம்பிக்கையை முன் நிறுத்துகிறார்கள்.....ஆதாரத்தை அல்ல.இந்த உண்மை கூட அறியாமல் இந்துத்துவ பல்லவி பாடுகிறார் ஆறு முகம்.ஊழல் பற்றி பேசுவது கடந்த சில மாதங்களாக பேஷனாகிவிட்டது. நேரு கால முந்த்ரா ஜீப் ஊழல் தொடங்கி சிதம்பர கோயில் தீட்சிதர்களின் உண்டியல் ஊழல் ஜெயேந்திரரின் அதிகார துஷ்பிரயோகம் சாய்பாபவின் மர்ம அறை என் அனுமன் கற்பனை வால் போல் நீளும் அயோக்கியத்தனங்கள் அடக்கி வாசிப்பதற்கும் கருணாநிதியின் குடும்ப ஊழல் அம்பலமாகியதற்கும் பின்னனியில் பார்ப்பனியம் உள்ளது என்பதை ஆறுமுகம் அறிவாரா?அய்யப்ப பக்தியானாலும் எந்த சிலை வணக்க சிதைவானாலும் அதன் தோற்றம் காலங்களுக்கு அப்பாற்பட்டது என்பது பொய்.பார்ப்பனியத்தின் வியாபார தந்திரம்.12 ஆம் நூற்றாண்டிற்கு முன் ராம வழிபாடு இந்தியா வில் கிடையாது.முஹம்மது அல் கஜ்னவி அவர்களின் படையெடுப்பினால் சிதறிய பார்ப்பனர்கள் மக்களை தங்களின் கைப்பிள்ளைகளாக தாசர்களாக்க கண்டுபிடிக்க பட்ட புதிய வடிவம் தான் ராமன் சிலை ராமன் வழிபாடு.புத்தரை அவதாரமாக்கியதும் இதன் தொடர்ச்சிதான்.கற்பனையை முதலீடாக கொண்டு மக்களை மயக்கும் தந்திரம் பார்ப்பனியத்திடம் நிறைய உண்டு.அய்யப்ப விரதம் அய்யா பெரியாரின் நினைவு நாட்களின் போது நடப்பது சாதரண செயல் அல்ல. நம்பியார் என்ற நடிகரை கொண்டு திராவிடத்தை வேரறுக்க செய்யப்பட்ட பச்சை பார்ப்பனியம்.ஆட்சிக்கு வர திரவிட இயக்கத்தவர்களால் சினிமா பயன் படுத்த பட்டது.அதே சினிமா மூலம் அய்யப்பனின் மூலம் தமிழகத்தில் ஊன்றபட்டது.சுபவீயின் எழுத்தில் குறையில்லை ஆழமிருக்கிறது.ஆம் கழக தலைவர்களின் வீட்டு பெண்களின் நெற்றி பொட்டும் பகட்டும் அய்யா பெரியாரின் எண்ணத்தை பிரதிபலிப்பவை அல்ல.அய்யாவின் கொள்கையை பிரதிபலிப்பவையும் அல்ல.கழக தலைவர்கள் யோசிக்க வேண்டும்.பள்ளிவாசல்களில் கற்பிக்க படும் அரபி ஜாதிய திமிர் அல்ல.குர் ஆனை தானும் கற்று பிறரையும் கற்க செய்யும் கலாச்சாலை கலாச்சாரம்.தமிழை மறுத்து சமஸ்கிருதத்தை உயர்த்தி பிடிக்கும் கோயில் கொக்கரிப்புகள் ஜாதிய வெறியின் உச்சம்.பார்ப்பனிய பாதுகாப்பு.தோழர் சுபவீயின் கருத்திலுள்ள ஆழம் சுபவீ தேடும் தீர்வில் இல்லை.
bharathy kannan
Gud one.
I am not the right person to comment your article ,I feel that personally.
But one point is contradictory to my view, I like DMK , I like Karunanidhi. I like him in various aspects. It doesnt mean that I have to follow him in all aspects, especially "not going to temple". I believe in god but not the customs.

Sorry for not writing in Tamil
ஆறுமுகம்
seyed muhammed: பாபர் இடித்தார் ராமன் பிறந்த இட கோயிலை என்பதற்கான எவ்வித அறிவு நாணயத்துடன் கூடிய ஒரு ஆதாரமும் இல்லை யா? .....ஆதாரம் கிடையாதா? யார் சொன்னது? தொல்லியல் துறை ஆய்வில் மசூதி இருந்த இடத்தில் ஆலயம் இருந்ததற்க்கான அடையாளம் உள்ளது என்பது அகழ்ந்து கொண்டு வந்த உண்மை. நீங்கள் பொய்யை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் உண்மையாகிவிடாது. ”ராமர் பிறந்த இடம் அப்பகுதி ” என்பது மட்டுமே நம்பிக்கை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மாறாக அப்பகுதி கோவிலை இடித்து தான் கட்டப்பட்டது என்பது உறுதிபடுத்திய பின்னரே மூன்றில் இரண்டு பங்கை வழங்கியது. ஊழல் பற்றி அப்படியானால் யார் தான் பேச வேண்டும். ஊழல் புரிந்த கருணாநிதியா? இலலை காங்கிரஸா? ”கருணாநிதியின் குடும்ப ஊழல் அம்பலமாகியதற்கும் பின்னனியில் பார்ப்பனியம் உள்ளது என்பதை ஆறுமுகம் அறிவாரா?” என்று கேட்கும் வாசகர் அதற்காக பார்பனர்களை பாராட்ட அல்லவா செய்ய வேண்டும் மாறாக இவர் ஊழலை காப்பாற்ற வக்காலத்து வாங்குகிறாறே? குரானை தமிழில் கற்றால் குறைந்தா போய்விடுவீர்கள் இலலை குரானுக்கு தீட்டு தான் வந்துவிடுமா? அதை எல்லோரும் கற்க கற்பவர் மொழியில் அல்லவா இருக்க வேண்டும் எதற்க்கு அரபி? ஏன் பஹாய் மதமும் சீக்கிய மதமும் தோன்றியது என்று இமாம்களை கேட்டுப்பார். உலகில் எந்த இறை துதரும் மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்க விலலை நபியை தவிர? இஸ்லாமில் உள்ள பிரிவுகளை காண : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15887&Itemid=139 , http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17502 , http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17800 கட்டுரையும் முந்ததைய கட்டுரைகளில் வாசகர்கள் உங்களுக்கு உரைத்துகள் பதில்களையும் வாசிக்கவும். தயவுசெய்து வாசகர்கள் அணைவரையும் ஏமாளிகளாக எண்ண வேண்டாம்.
Keetru Nandhan
திரு சையது முகம்மது... கீற்று சர்வர் பிரச்சினையில் இருந்தபோது இடப்பட்ட பின்னூட்டங்கள் அழிந்துபோய்விட்டன. அதனை மீட்டெடுக்க முடியவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
seyed muhammed
ஆறுமுகம்....!உண்மையை தெரிந்து கொள்ள நல்ல முகம் வேண்டும்.கற்பனையான பல முகம் உதவாது.தொல்லியலில் ராமன் பிறந்த இடம் பற்றியோ பிரமாண்ட கோயில் பற்றியோ எந்த குறிப்பும் கிடைக்காத நிலையில் பாஜக வின் ஆட்சியில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் புதிதாக ஒரு கற்பனை தி.நகர் திடீர் பிள்ளையார் போல் முளைத்தது.அதில் தான் கற்பனை கோயில் இருந்ததாக "தொல்லியல் கூறியது"........!முரளி மனோகர் அத்வானி போன்ற கிரிமினல் குற்றவாளிகள் அதும் பாபரி ம்ஸ்ஜிதை உடைத்த வழக்கு சம்பந்தம் உடைய கிரிமினல்கள் நிரம்பிய பாஜக ஆட்சியில் இது போன்ற தொல்லியல்.....அறிக்கை வெளி வரவில்லை என்றால் தான் ஆச்சரியம் அதிசயம்! ஊழலை ஒழிப்பது என்றால் யார் செய்தாலும் ஒழிக்க பட வேண்டும்.அதில் இன குல ஜாதிய கண்ணோட்டம் கூடாது.அது நீதியும் ஆகாது.அப்படி தண்டிப்பது மனித நலனிற்கு இயற்கைக்கு முரணானது.மனு எழுதிய மனுசாஸ்திரம் பிராமன் கொலை செய்தால் பிரமணின் தலை முடியை சிரைத்தால் போதும் என்கிறது.பிற ஜாதியினர் செய்தால் அது சூத்திரர் "பிரம்மாவின்"உடலில் இடமில்லாமல் தானாக தோன்றிய பஞ்சமர்கள் கொலை செய்தால் சித்திரவதை செய்து கொல்ல சொல்கிறது.இந்தியா ம்தசார்பற்ற நாடு என்றால் மனுசாஸ்திர வழியை ஏன் பின்பற்ற வேண்டும்?இல்லை இந்தியாவை மனுவை பின்பற்றும் "ஹிந்து" நாடாக அறிவித்து விட்டால் கருணாநிதியின் குடும்பம் மட்டும் அம்பலப்படுத்தப்படுவதை தண்டிக்கப்படுவதை "நியாயமாக நீதியாக"ஏற்லாம்.ஏற்க மறுப்போர் தங்களின் உண்மை நிலையை உணர்ந்து போரடலாம்.போராட்ட வியூகங்களை அமைக்கலாம் எதிர்க்கலாம்.நீதியை நிலை நிறுத்த அநீதியை அழிக்க வழி காணலாம்.அதாவது மனுவை அழிக்கலாம்.
seyed muhammed
சமஸ்கிருதம் தேவ பாஷை தமிழ் நீஷ பாஷை எனும் ஜாதிய திமிர் அல்ல அரபி கற்பதும் கற்பிப்பதும்.இஸ்லாமில் மொழிகள் இறைவனின் அத்தாட்சி ஆதாரம். வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது உங்களுக்கிடையே மொழிகளும் நிறங்களும் பல வகைகளாய் இருப்பதும் இறைவனின் அத்தாட்சியே!(அல் குர் ஆன்30:22) முஸ்லிம்கள் அரபி கற்பதற்கு மொழியியல் ரீதியாகவும் சமுகவியல் ரீதியாகவும் சில பல காரணங்கள் உண்டு.1)இறைவனின் இறுதி தூதுத்துவம் அரபி மொழியை மூலமாக கொண்டது.உலகை படைத்த இறைவனை மட்டும் வணங்கும் இஸ்லாமை புரிந்து கொள்ள அல் குர் ஆனை அண்ணல் நபி முஹம்மது(அல்லாஹி அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!)வாழ்வும் வாக்கும் கற்க வேண்டியது மிக மிக அவசியம்.ஆதலால் அரபி கற்கிறார்கள். 2)மொழி பெயர்ப்பு மொழியாக்கம் என்பன எல்லாம் மூலத்திற்கு செய்யும் அநீதம் என்பது மொழியிலாளர்களின் கருத்து.அதன் அடிப்படையில் அரபி கற்கிறார்கள். 3)அரபி ஒரு மொழி. தமிழை போன்று பேச்சு வழக்கிலுள்ள மிக பழமையான மொழி.அதிலுள்ள குர் ஆனும் நபியின் வாழ்வும் வாக்கும் மனித வாழ்விற்குரிய சட்ட வியலையும் சமுகவியலையும் கற்பிப்பவை.ஆதலால் அரபி மொழி கற்கிறார்கள். 4)தொழுகையின் அழைப்பின் போதும் தொழும் போதும் உலகம் முவதும் உள்ள முஸ்லிம்களுக்கிடையே எந்த பாகு பாடும் தோன்றி விடாதிருப்பதற்காக அரபியின் மூலம் அப்படியே பயன் படுத்த படுகிறது.அதற்காக அரபி கற்பிக்க படுகிறது. 5)அரபி மொழியிலுள்ள குர் ஆனை நபியின் வாழ்வை வாக்கை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு தடையோ முடையோ இல்லை.இஸ்லாத்தை பரப்புவதற்காக புரிவதற்காக அரபி மொழியை கற்கிறார்கள்.அரபி மொழி கற்க பல காரண காரணிகள் இருந்தாலும் அரபி மொழிக்கோ அரபியர்க்கோ எவ்வித உயர்வும் தனித்துவமும் இல்லை.ஆக அரபி கற்பிப்பது ஜாதிய தீட்டு வகை சமாச்சாரம் அல்ல.பார்ப்பனர்களின் தேவ நீஷ பாஷை வகையினதும் இல்லை. ஆறுமுகம் எனக்கு பதிலளித்தவர்களின் பதிலும் என் கருத்தும் கீற்று தளத்தில் தற்போதில்லை.அது வளை தளத்தின் நிர்வாக ஏற்ப்பாடாக இருக்கலாம்.ஆனால் வாசகர்கள் என்றும் படிப்பதற்காக என் கருத்தும் பிறரின் எழுத்தும் எனது பேஸ்புக்கில் இன்றும் உள்ளது.இன்றும் போய் படிக்கலாம்.யார் வாசகர்களை ஏமாற்றுகிறார்கள் ஏமாளிகளாய் எண்ணுகிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.குறைந்த பட்சம் கீற்று தள நிர்வாகிகளிடம் மீண்டும் வெளியிட சொல்லி உண்மையை அறியலாம்.நான் அடையாள்ங்களை மறைத்து கொள்ளும் அற்பனோ எதை பற்றிய முறையான அறிவோ தகவலோ இல்லாமல் உளறும் கிறுக்கனோ அல்ல.அனைவரும் அர்ச்சகராகும் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றுள்ள பார்ப்பனர்களிடம் கேட்கவும்.ஏன் சம்ஸ்கிருதம் கற்ற சூத்திரர்களை பஞ்சமர்களை அர்ச்சகர்களாக விடாமல் தடுக்கிறீர்கள்?எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தவர்கள் போல் காட்டி கொள்வது பார்ப்பனத்தின் பச்சை தனம்.ஹிந்துத்துவாவின் அற்பத்தனம்.
V VIJAY
sorry for not writing in tamil , since i didnot have this facility presently

to clarify Mr. Arumugam.

Trying to paint karuna as adimai thalaivan is fine but who in your context is the purathchi thalaivan..?

in your language those supporting srilankan cause are only the tamils in this world ...it is not correct

karuna is not responsible for whatever happened in srilanks , even if others would be there as CM or PM nothing could be done.
at the maximum everyone wanted him to resign from the post

pls understand DMK is the only party which lost its rule after 13yrs of struggle for supporting LTTE.

DMK chief resigned his post as MLA once for srilankan cause but nothing happened.

understand LTTE was fighting a conventional army and if saving tamils was his aim he should have surrendered.

trying to show only karuna as corrupt is follish and ill informed, can anyone in india dare to bring the rule of "all caste people getting equal rights to become priest in hindu temples"

seeman and nedumaran suported JJ but has JJ ever spoke about them ....shame .

semmozhi manadu is not a nero's act..in your context what ever karuna does you will not accept.
ஆறுமுகம்
”உண்மையை தெரிந்து கொள்ள நல்ல முகம் வேண்டுமா? ” எனக்கு தெரிந்தவரை அறிவ வேண்டும் அதற்க்கு முளை வேண்டும். நல்ல முகம் வேண்டும் என்று கண்டுபிடித்து சொன்ன அறிவாளி நீங்கள் தான். அதுவே உங்கள் நிலையை தெளிவு படுத்துகிறது. கோயிலை இடித்து அல்லது கோவி‌லையே மசூதியாக ஆக்கியுள்ளனர் என்பது அங்கு கட்டிடங்களின் உள்ள பொருட்களில் இருந்து (இஸ்லாமி பிரதிநிதிகள் அடங்கிய குழு) அகழ்வு சொன்ன உண்மை. மனுசொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஏற்றுக் கொள்ளாத வற்றை புறந்தள்ளி செல்வதே சரி. அது ஏன் மனுவுக்கு மாற்றாக அதை தலை கீழாக காட்ட ஒருவரும் முற்படாமல் மனுவை மட்டும் தொடர்ந்து எதிர்த்து அதற்க்கு வலு சேர்ப்பதேன்? சமஸ்கிருதம் தேவ பாஷை தமிழ் நீஷ பாஷை எனும் ஜாதிய திமிர் அல்ல என்று கூறிவிட்டு முரணாக அரபிக்கு வக்காலத்து அதே பாணியல் தானே கொடுத்துள்ளீரு்கள். நீங்கள் ஒரு அந்திய மொழியை பயன்படுத்தினால் பாகுபாடை தவிர்க்க அதை மற்றவர்கள் செய்தால் ஜாதிய திமிரா? அடுத்தவர் சொன்னால் சாதிய திமிர் அதை நீங்கள சொன்னால் ”இறைவனின் அத்தாட்சியா?” அதற்க்கு கேட்பர்கள் அணைவரும் கேனையன்காளாத்தான் இருக்க வேண்டும். அதை விடு பெரியாரே தமிழை காட்டுமிராண்டி மொழி என்று தான் அழைத்தார். வாழ்வும் வாக்கும் கற்க வேண்டியது மிக மிக அவசியம்.ஆதலால் அரபி கற்கிறார்கள் என்றால் அரபி தெியாதவர்கள் எல்லாம் வாழ்வும் வாக்கும் அற்வர்களா? உங்கள் குப்பபை கருத்தை கட்வெட்டில பொறித்தாலும் அது குப்பையே. ஒரளவாவது தமிழில் தவறானதாகவும் இருந்தாலும் எனது பின்னுாட்டங்களுக்கு பதில் இருந்ததால் இந்த மறுமொழி நான் மீண்டும் உளரல்களுக்கு பதில் தருவேன் என்று என்ன வேண்டாம். கருத்துகள் ஆதரபூர்வமாக இருந்தால் நிச்சயம் பதில் எதிர்பார்த்ால் கிடைக்கவே செய்யும்.
seyed muhammed
கட்டுரையாளரின் தலைப்புக்குரியது அல்ல என் விமர்சனம்.ஆதலால் கட்டுரையாளரிடமும் தளத்தினரிடமும் மன்னிப்பு கேட்டு கொண்டு இக்கருத்தை பதிக்கிறேன். ஆறுமுகம்!அண்மை காலமாக "முஸ்லிம்"களில் சிலர் பார்ப்பனர்களை மகிழ்வூட்டும் வகையில் இஸ்லாமிலும் ஜாதி உண்டு என எழுதுகிறார்கள்.எழுதும் இந்த பெயர் தாங்கிகள் மிக இலகுவாக ஒன்றை மறைத்து விடுகிறார்கள்.அது இஸ்லாம் என்பது கொள்கை முஸ்லிம் என்பவர்கள் அதை பின்பற்றுபவர்கள்.முஸ்லிம்கள் செய்யும் தவறு பிழை குற்றம் குறை ஆகியவற்றை இஸ்லாத்துடன் இனைத்து விடுகிறார்கள்.
சன்னி ஷியா ஷாஃபி ஹனஃபி மாலிக்கி ஹம்பலி ஜாஃபரி போன்றவைகள் ஜாதியமோ ஜாதியத்தின் அடையாளமோ அல்ல.இப்படி எழுதுபவர்களுக்கு ஜாதியம் பற்றிய அறிவில்லை அல்லது தெரிந்தும் மறைக்கும் அடிமைகள் பிறர்க்கு ஊழியம் செய்யும் தூக்கு தூக்கிகள்.
தமிழன் மலையாளி இந்தியன் பிரித்தானியன் அமெரிக்கன் கரீபியன் என்பது அடையாளம்.
வெள்ளையன் கருப்பன் பார்ப்பனன் சூத்திரன் பஞ்சமன் என்பது ஜாதியம்.தமிழன் எனும் அடையாளத்திற்குள் ஈழ தமிழன் மலேயா தமிழன் நெல்லை தமிழன் கொங்கு தமிழன் ம்துரை தமிழன் போன்ற கணக்கற்ற உட் பிரிவுகள் உண்டு.இதை யாரும் ஜாதியாக ஜாதியின் அடையாளமாக காண்பதில்லை.
தேவர் பள்ளர் முதலியார் கவுண்டர் அய்யர் என்பது அடையாளம் அல்ல.இதை தங்களின் அடையாளமாக காண்பது திமிர் அகம்பாவம்.அதன் வெளிப்பாடுதான் கீதையிலுள்ள வர்ணத்தை நாமே உண்டாக்கினோம்.சங்கராச்சாரியார்களின் தெய்வத்தின் குரல்களிலுள்ள ஜாதி ஷேமகரமானது.இது தன்னை இறைவனாக உருவக படுத்தி கொள்ளும் பெரும் பாவம் அயோக்கியத்தனம்.இதை எதிர்த்து போரடத்தான் இறைத்தூதர்கள் காலமெல்லாம் வந்துள்ளார்கள்.அவர்களில் இறுதியானவர்கள் தான் முஹம்மது நபி(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!).
முஹம்மது நபியின் வாழ்வில் ஒரு சம்பவம்.ஜாதியத்தின் பிறிதொரு வடிவாமான அடிமைத்தனம்.மக்காவின் மேட்டு குடியினர் தங்களின் அடிமைகளுக்கு கடவுளின் அருளோ கடாட்சமோ கிடைக்காது.கடவுளோடு ஐக்கியமாக முக்தி அடைய தங்களுக்கே எல்லா தகுதிகளும் உண்டு என நம்மூர் பிராமனர்கள் கூறுவது போல் கூறிக்கொண்டிருந்தனர்.அவர்களின் பொய்யான கற்பனையை உடைக்கும் வகையில் பெரும் போராட்டத்தை இறவனின் வழிகாட்டுதல் படி செய்த முஹம்மது நபி மிஃராஜ் எனும் வானுலக பயணம் சென்று வந்து பிலால்(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!)யிடம் மக்காவின் மேட்டு குடியினர் புடை சூழ்ந்த நிலையில் கூறினார்கள் பிலாலே!நான் சொர்க்கத்தை காண அழைத்து செல்ல பட்ட போது அதனுள்ளே ஒரு காலடி சத்தத்தை கேட்டேன்.யாருடையது என்ற என் கேள்விக்கு அது பிலாலின் காலடி சத்தம் என்றார்கள்.கேட்டு கொண்டிருந்த மேட்டு குடியினர் கொதித்தனர்.அமைதியாக நபியுல்லாஹ் கூறினார்கள்:ஆம்!உங்களின் கற்பனைக்குரியது அல்ல இறைவனும் இறைத்துவ கோட்ப்பாடும்.சிலை வணங்கும் மடைமை அடிமைத்துவ கொடுமை சமூக வன் கொடுமை என நீங்கள் கடைபிடிக்கும் வழி உங்களுக்கு நரகத்தையும் அழிவையும் தான் பரிசாய் தரும்.இது மேட்டு குடியினரின் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது.ஆயினும் உண்மை அண்ணல் நபியுல்லாஹ் சொல்லியது போன்றே நடந்தது.இஸ்லாத்தில் ஜாதியம் என்பது பெரும் பாவம்.மன்னிப்பற்ற அவதார இணைவைப்பு வகையை சார்ந்தது.
seyed muhammed
ஆறுமுகம்......முகம் அறிவின் அங்கம் கேள்விபட்டதில்லையா?அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.இவன் முகத்தை பார்த்தவுடனே சொன்னேன் இவன் ஒரு கேனயன் முட்டாள் அல்லது அறிவாளி அப்பாவி என சொல்ல கேட்டதில்லையா?சொன்னதில்லையா? நேர்முக காணல்க்கு செல்பவர்கள் தங்களின் முக ஒப்பனைக்கு அதிக முக்கியம் தருவது அழகிற்காக அல்ல,அறிவிற்க்காக.முகத்தில் எந்த பயம் படபடப்பு அவசரம் போன்றவைகள் தெரிய கூடாது என்பதற்காக.மனித வள மேம்பாட்டில் முகத்திற்கு அறிவு சார் பங்கு அதிகம் உண்டு.பாவம் அவசர குடுக்கை......புத்தி மட்டு.
எனது முந்தைய பின்னூட்டங்களை அமைதியாக படித்திருந்தால் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஆறுமுகத்திற்கு ஏற்ப்பட்டிருக்காது.
பிறரை ஒர்மையில் விளிக்கும் அற்ப புத்தி ஆறுமுகத்தை தாரு பூசிய முகமாக்கி விட்டது.
உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் ஒற்றுமை குறைவும் ஏற்ப்பட்டு விடக்கூடாது என்பதற்கான ஓர் அவசியம் அரபி கற்பிக்கபடுகிறது என்ற என் எழுத்துக்கு பதிலாக மற்றவர்கள் செய்தால் ஜாதிய திமிரா?என கேட்டுள்ளீர்.சரி ஆ....று...மு..க..ம் யார் அப்படி செய்கிறார்கள்?அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக சமஸ்கிருத மொழியை கற்று கொடுத்தால் அது ஆகமப்படி சாஸ்திரப்படி உப்ன்யாஷப்படி கூடாது என்று உச்ச நீதிமன்ற படி ஏறி வழக்கு தொடுதுள்ளார்களே பார்ப்பனர்கள் இது தான் பாகுபாடை கலைந்து ஒற்றுமையை வளர்க்கும் உன்னதமோ!ஆறுமுகம்,நீர் இஸ்லாத்தை ஏற்று கொண்டீர் என வைத்துக் கொள்ளும் தொழுகைக்கான பயிற்ச்சியையும் பெற்று விடுகிறீர் அரபி வாசிக்க தெரிந்ததால் குர் ஆனின் வசனங்களை மனனம் செய்துள்ளீர் என்றால் உலகின் எந்த பள்ளிவாசலிலும் உம்மால் தொழ வைக்க முடியும் உம்து பின்னால் முஸ்லிம்கள் அணிவகுத்து உம்மை பின்பற்றி தொழுவார்கள்.இது சமத்துவத்தை உருவாக்குமா? பார்ப்பன பண்டாரங்களை தவிர வேறு யாரும் கருவறைக்குள் போக கூடாது பூஜை செய்ய கூடாது செய்வது ஆகம சாஸ்த்திரப்படி கூடாது என்பது ஜாதிய திமிரா?இல்லையா?
வெள்ளிக்கிழமையில் சொற்பொழிவோடு கூடிய தொழுகை உண்டு.தொழுகைக்கு முந்தைய சொர்பொழிவும் வழிபாடு.அந்த சொற்பொழிவு நிகழ்த்த படுவது அவரவர் மொழியில் தான் நிகழும்.
ஆனால் சிதம்பரத்தில் ஆறுமுக ஒதுவார் என்பவர் 70 வயது கொண்ட முதியவர் தேவாரம் ஒதினார்.தீட்சித பார்ப்பனர் என்ன செய்தார்கள்.ஒதுவாரை அடித்து உதைத்தார்கள்.தீட்டுப்பட்டதாக ஜாதி கொழுப்பெடுத்து பேசினார்கள்.இதுதான் பாகுபாடை கலையும் மார்க்கமா?
அரபி தெரியாதவர்கள் வாழ வக்கற்றவர்கள் அல்ல.வாழும் முழு தகுதி கொண்டோர். அவர்கள் பற்றி எழுதுகிறேன்.ஏன்? எழுதும் நானே அரபி இலக்கணம் இலக்கியம் அறியாதவன்.தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவன் தான்.
seyed muhammed
அரபியை கற்பிக்கிறார்களே!என்பது தான் ஆறுமுகத்தின் ஆரமப புலம்பல்.அதற்கான பதிலில் ஒன்றுதான் இஸ்லாமிய வாழ்விற்குரிய சட்டவியலையும் சமுகவியலையும் கற்பிப்பது குர் ஆன் நபிமொழி வழி அதன் மூலம் அரபியிலுள்ளதால் அரபி கற்கிறார்கள்.இந்த வாசகம்- சூசமாக அல்ல -வெளிப்படையாக உள்ளது.அறிஞர்கள் ஆர்வலர்கள் சிந்தனையாளர்கள் அரபி கற்கிறார்கள் என புரிவதற்கு தடை இருப்பதாக தெரியவில்லை.அது போல் அரபி கற்காதவர்கள் வாழ வ்க்கற்றவர்கள் என குறிப்பிடுவதாகவும் தெரியவில்லை.ஒருக்கால் அப்படி விளங்கினாலும் எனது அடுத்த வரியில் இஸ்லாத்தை புரிவதற்கு பரப்புவதற்கு மூலத்தை மொழி பெயர்க்க அரபி கற்கிறார்கள் என எழுதியிருந்தேன்.இந்த வரி முந்திய வரிக்கு விளக்கமாகவும் விரிவாகவும் உள்ளது.பின் ஏன் தேவையில்லாமல் வானத்தை பார்த்து குரைக்க.......வேண்டும்.ஆத்திரம் அறிவுக்கு பகை.
யார் மனுவை தூக்கி கொண்டு அலைகிறார்கள்.தீட்சிதர்கள் ஆச்சாரியர்கள் ஜீயர்கள் அய்யர்கள் ஐய்யங்கார்கள் சர்மாக்கள் சித்பவன்கள் ராவ்கள் என நீளும் ஆயிரக்கணக்கான சிறு சிறு ஜாதிய உட்பிரிவுகளை கொண்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பாதம் தாங்கிகள் மனுவை தூக்கி கொண்டு அலைகிறார்கள்.
இவர்கள் தூக்கி கொண்டு அலையும் மனு ஜாதியத்தின் மூலம் ஊற்று.
ஜாதியம் சிலை வணக்கத்தின் அடையாளாம்
ஜாதியம் அவதார பொய் புரட்டுகளுக்கு அஸ்திவாரம்
ஜாதியம் அயோக்கியர்களின் கடைசி புகலிடம்.
இந்த ஜாதிய வெறியர்கள் வோரோடும் வேரடி மண்ணோடும் ப்டுங்க பட்டு அழிக்கப்படும் வரை முஸ்லிம்களுக்கு ஓய்வில்லை.
ரபியா பின் ஆமிர்(அல்லாஹ் அவர்கள் மீது அருள் பாலிப்பானாக!) என்ற நபி தோழர் பாரசீக தளபதி குஸ்ருவின் முன் கூறினார்கள்:மனிதனை மனிதன் வணங்கும் மடைமையை முற்றிலும் ஒழித்து மனிதர்களை படைத்த இறைவனை வணங்கும் உயர்ந்த வழியை நோக்கி அழைக்க வே வந்துள்ளேன்.ஆம்!ராபியா பின் ஆமிர் அவர்களின் இன்னும் முற்று பெறவில்லை.
புரட்சிகவிஞன் பாரதி தாசன் சொல்லுவார்:இருட்டறையிலுள்ளதடா உலகம்
ஜாதி இருக்கின்றதென்று சொல்வோனும் இருக்கின்றானே!...............கொடுவாளை எடுடா கொடியோர் செயல் அறவே!இந்த பணியில் திராவிட இயக்கங்கள் சோர்ந்து போயுள்ளன என்ற சுபவீ அவர்களின் கருத்து பரத்த பட வேண்டும்.மீண்டும் ஜாதிய திமிர்க்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற வேண்டும்.
அய்யா பெரியார் தமிழை சாடினார்.இல்லை என்று சொல்லவில்லை.ஏன் சாடினார்?சிந்திக்க வேண்டாமா!ஓ!..... நீங்கள் சிந்திப்பதை கழற்றி வைத்த புண்ணிய ஆத்மாக்களா! அதனல் தானே மலத்தை விட கேவலமான மனுவில் நன்மையை தேடுகிறீர்.
தமிழிலுள்ள மக்களை மயக்கும் மூடத்தனங்களை அழிக்க சொன்னார். அதை தங்களின் ஆதரமாய் கொண்டவர்கள் தமிழை அழிப்பதா என்றார்கள்.அப்படி என்றால் தமிழ் காட்டுமிராண்டிகளின் பாஷை என்றார்.
ஆறுமுகம் திருந்து!
sharavanan.k
இந்த விவாதங்கள் எதுவும் தேவை இல்லை.

இந்து கடவுள்களை வணங்குபவர் அனைவரும் இந்துக்களே.

இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இல்லை.

கோவில் கருவறை வரை யார் வேண்டுமானாலும் செல்லலாம் பூசை செய்யலாம் என்று அந்தணர்கள் அறிவிக்கட்டும்.

தயாரா?
R Nagaraj
///ஒரு துளி ஒலியும் இல்லாமல் அமர்ந்து தியான வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லும் அதே இந்து மதம்தான், சாமியே சரணம் ஐயப்பா என்று காதுகிழியக் கத்தவும் சொல்கிறது.///
அப்படியே மேலும் விடுபட்ட விசயங்களையும் சேர்க்கவும்
1) அனைவரையும் நெறிப் படுத்தும் இசுலாத்திலும் ஜிகாத் என்று தீவிரவாதத்தனம் செய்யகிறார்கள்
2) அன்பை போதித்த புத்தம்தம் ஆட்சியாளர்கள் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொல்லச் சொல்கிறது
3)பேச நா இரண்டு என்று திராவிடம் பேசியவர் வயதான தாயை சிகிச்சை எடுக்கத் தடை என்றும் பாரின் பெண்ணை தியாகத் திருவிளக்கு என்றும் சொல்லச் சொல்கிறது
4)பார்ப்பனர் பார்ப்பனர் என்றவர்தான் சமூக நீதி காத்த வீராங்கனை
என்று சொல்லச் சொல்கிறது
seyed muhammed
ஆறுமுகம் போய் ஆர்.நாகராஜ் வந்திருக்கிறார்.சேர்க்க எவ்வளவோ உள்ளது.1)செத்த மாட்டிற்க்காக மனிதர்களை கொல்லும் புண்ணியம்.2)தலித் இளைஞனை காதலித்து கை பிடித்ததால் இளைஞனின் தாயை நிர்வாணமாய் ஊர்வலம் வர செய்த ஜாதிய உன்னதம்.3)கிறித்தவ கன்னியாஸ்த்திரிகளை கற்பழித்து விட்டு தேச பக்தி என உரக்க கூறு கொள்கை முழக்கம்.4)குஜராத்தில் 2000 ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று விட்டு இந்து எழுச்சி என கூறும் உத்தமம்.5)கொலை குற்றவாளியான பிறகும் லோக குருவாய் கிரீடம் தரித்திருக்கும் அதிசயம்.இப்படி சேர்க்க எத்தனையோ உண்டு.அது ஏன் நமக்கு? நாகராஜ்...... ஒரு விஷயம் நோக்கு தெரியுமோன்னோ நம்ம பத்திரிக்கையாளர்களின் புண்ணியத்தால் ஜிஹாது தீவிரவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளுதுன்னு!இதை நான் சொல்லை முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதி மான்புமிகு.மார்கண்டே கட்ஜீ அவர்கள் கூறியுள்ளார்.இந்தியாவில் பிராமனர்கள் செய்யும் புண்ணிய செயலை உலக அளவில் யூதர்கள் செய்கிறார்கள்.
ஆறுமுகம்
seyed muhammed யாரும் எங்கேயும் போவதில்லை. பதில்கள் கீற்று நந்தன் அவர்களே வெளியிடுவதில்லை என்று எண்ணுகிறேன். பதில்கள் இஸ்லாமிலுள்ள குறைகளையும் அதை உருவாக்கியவரின் விமர்சித்து இருந்தது. ஒரு மதத்தை அதை நம்பி பின்பற்றும் மக்களின் நம்பிக்கையை மதிப்பதற்க்காக நாகரீகம் கருதி அளவுடன் நிறுத்தி விடுவதுண்டு. அதறக்காக இந்து மதம் தாழ்ந்தது இஸ்லாமே உயர்ந்தது என்று இங்கு மதப்பிரச்சாரம் நடத்த துணிந்து விட்டீர்கள். இந்து மதத்தில் சாதிகளை எதிர்க்க காரணம் அதன் வழியே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துவதாலேயே. உங்கள் கருத்து படி இஸ்லாமை பின்பற்றுபவர்களை தவிர ஏனையோரை இஸ்லாம் மனிதர்களாகவே ஏற்றுக் கொள்வதில்லை என்று தெரிகிறது. (1) செத்த மாட்டிற்க்காக யாரும் மனிதர்களை கொல்லவில்லை. (2) பாகிஸ்தானில் கிருஸ்தவர்கள் தேவலயத்தில் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு கொன்றது மனிதாபிமானத்திலா? (3) குஜராத்தில் 700 பேர் இறந்ததை (இந்துகள் உட்பட) தெரிந்துள் வர் கோவையில் தீவிரவாதிகளையா குண்டுவைத்து கொன்றனர். (4) ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபடாத பெண்னை இஸ்லாம் என்ன செய்தது என்பதை யாகூவில் பார்க்கவும் (5) ஒரின சேர்க்கையில் உதவியாளரையே கொன்ற இஸ்லாமி இளவரசரை எந்த வகையில் சேர்பது. பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அங்கும் சாதி உள்ளது என்பதை நடைமுறை அறிந்து ஏற்றுக் கொள்ளும் போது நடைமுறையில் இல்லாத ஒன்றை இஸ்லாமில் இருப்பதாக நிலைநிறுத்த முற்படுவது ஏன்? மதங்களே பகுத்தறிவுக்கு ஒவ்வாதாயின் இஸ்லாமும் ஒழிக்கப்படவேண்டடிய மதமே. அது ஒரு போதும் கடவுள் மறுப்புக் கொள்கையோடு சேர்ந்து போக முடியாது. இஸ்லாத்தின் நிறைகளையும் இந்து மதத்தில் உள்ள குறைகளையும் மட்டுமே தெரிந்து கொண்டுள்ளதால் நீங்கள் சார்ந்த மத்ம் உயர்வானதாகவும் மற்றது தாழ்வானதாகவும் ஆகிவிடாது.
R Nagaraj
//ஜிஹாது தீவிரவாதமாக சித்தரிக்கப்பட்டுள்ளுதுன்னு!///
எப்படி எப்படி.... பம்பாயில சாதாரண கூலித் தொழிலாளிகளையெல்லாம் துப்பாக்கியால் கசாப்புகடை ஆக்கினானே அது மாதிரியா... முகமதை தப்பா வரைஞ்சுட்டான்னு அவன உண்டு இல்லைன்னு பண்ண மாதிரியா... சல்மான் ருஸ்டி ஏதோ எழுதினானன்னு மரணதண்டனை பகிரங்கமா ஒரு நாடே அறிவிச்சுதே அது மாதிரியா... இந்துக் கடவுள அம்மணமா வரைஞ்சாலும் கேக்க முடியாது அப்படி கேட்டால் ”அய்யோ கொல்றாங்களே’’ ந்னு பின்னணி குரல் ரீமிக்ஸ் கொடுப்பாங்க....அது மாதிரிங்களா... இன்னமும் இது மாதிரி எவ்வளவோ இருக்கண்ணா
ஆறுமுகம்
செயெட் முஹம்மெட் இந்த செய்திகளை வாசிக்கவும்: (1) ஹ்ட்ட்ப்://டமில்.நெப்டுனிஅ.சொம்/னெந்ச்நொர்ல்ட்/னெந்ச்/இன்டெர்னடிஒனல்/1201/18/1120118025_1.ஹ்ட்ம் (2) ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ப்ப்ச்.சொ.உக்/னெந்ச்/நொர்ல்ட்-அசிஅ௧6599534 (3) பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது சிறுபான்மையினர் இந்துகள் எத்தனை சதவீதம் பேர் என்று எத்தனை சதவீதம் பேர் என்பதையும் அதை இந்தியாவில் உள்ள நிலையோடு ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்க. (இது ஒரு மாதரிமட்டுமே ஒட்டுமொத்தமும் அல்ல.)
ஆறுமுகம்
இஸ்லாமை தவிர அணைத்து மதங்களும் தாழ்ந்தவை என்றும் அதை பின்பற்றுவபர்களை சகட்டு மேனிக்கு கொலைசெய்வதும் துன்புறு்த்துவதும் மற்றும் பாரபட்சம் காட்டும் இஸ்லாம் மதம் சாதியை விட கொடியதே. seyed muhammed, பின்னூட்டங்களில் பிடிக்காத இந்திய அரசியல் தவைர்களை அணைவரையும் ஏகவசனத்தில் seyed muhammed திட்டினால் அது நாகரீம் அவர்களை கிரிமினல்கள் குற்றவாளிகள் என்று seyed muhammed அறிவித்தால் அது அறிவாளிதனம். ஆறுமுகம் ஒருமையில் கூறினால் என்ன தவறு. seyed muhammed என்பது ஒருமைதானே ஒருமையில் விழிப்பதில் என்ன தவறு. பன்மையில் விழிப்பது மரபுவழி பழக்கம் மட்டுமே இலக்கண வழியில் ஒருமை சரியே. கடந்த பல செய்திகளில் பின்னூட்டங்களில் அடுத்தவர்கள் மீது seyed muhammed வாரிஇறைத்த சேறு அப்படியே உள்ளது படித்து பார்க்க உணர்வுகள் அணைவருக்கும் பொதுவே. அணைவருக்கும் மரியாதை தரவேண்டுமென்பதை உணர்ந்திருப்பீர்கள்.
ஆறுமுகம்
இந்து மத்தில் உள்ள தீமைகள் இந்தியாவில் மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது உங்கள் கருத்துப்படி அதிலும் குஜராத்தில் தான். அங்கு தான் இஸ்லாமிய தீவிரவாதிகள் கோவிலில் தாக்குதல் நடத்தினாரக்கள் என்பதை நிணைவில் உள்ளதா? அதை வசதியாக மறந்திருப்பீர்கள். போகட்டும். குஜராத்த கலவரத்திற்க்கு காரணமாக சாமியார்களை உயிருடன் ரயிலில் வைத்து எரித்து கொன்றார்களே முஸ்லீம் கள் அதன் பின்னர் தானே கலவரம் பரவியது அப்படியானால் அதறக்கு காரணம் இஸ்லாம் தானே. கலவரத்தில் இந்துக்களும் தானே கொல்லப்பட்டனர். கொலை செய்வது முஸ்லீம் களின் பிறப்புரிமையா? மதவுரிமையா? இந்த செய்திகள் வுரு மாறியுள்ளதால் மீண்டும் தரப்பட்டுள்ளது. உலகஅளவில் பயங்கரவாத செயல்களை யார் செய்கிறார்கள் அவர்கள் அடிப்படை என்ன எனப்தை தெரிந்து கொள்க. (1) http://news.bbc.co.uk/2/hi/south_asia/3260637.stm
(2) http://www.bbc.co.uk/news/world-asia-16599534
(3) http://tamil.webdunia.com/newsworld/news/international/1201/18/1120118025_1.htm
seyed muhammed
ஆக...ஆறுமுகமும்.... நாகராஜீம் இரு உடல் இரு உயிருக்கு சொந்தக்காரர்கள் ஓகே!
பின்னூட்டங்கள் எழுதும் அன்பர்கள் தங்களின் பின்னூட்டங்களையும் பிறரின் பின்னூட்டங்களையும் படிக்கவும் பிறகு எழுதவும்.
1)ஹரியானா மாநிலத்தில் கோசாலையில் ஏலம் விடப்பட்ட செத்த மாட்டை தோலிற்காகவும் இறைச்சிக்காகவும் எடுத்து சென்ற தலித் சமுகத்தை சேர்ந்த 5 பேர் கோமாதாவை உண்ண எடுத்து செல்லுகிறார்கள் என கூறி கொல்லப்பட்டார்கள்.இது நடந்தது திரு.வாஜ்பேய் ஆட்சியில்...பாராளுமன்றத்திலெல்லாம் கேட்க பட்டது.என்றாலும் கேள்வி கேள்வியாய் இன்றுவரை உள்ளது.
2)கோத்ரா ரயில் எரிப்பிற்காக நியமிக்க பட்ட பானர்ஜி கமிஷன் பல வகையான ஆய்வுகளுக்கு பிறகு தாக்கல் செய்த அறிக்கையில் ரயில் பெட்டிகள் பெட்ரோல் போன்ற எந்த எரி பொருள் வெளியிலிருந்து ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை.பெட்டி எண் 6ல் கழிவறைக்கு அருகில் ஏற்ப்பட்ட மின்கசிவு அல்லது அது போன்ற பெட்டிக்குள் ஏற்ப்பட்ட நெருப்பினால் தான் பெட்டி எரிந்துள்ளது.இந்த அறிக்கை நானவதி கமிஷனை எல்லாம் கேள்விக்குட் படுத்தியது.அத்துடன் பல அவிழ்க்கப்படாதா முடிச்சுகளை பற்றி கேள்வி கேட்டது.அ)அரை கி.மி.தொலைவிலுள்ள தீ அணைப்பு நிலையத்திலிருந்து தீ அணைப்பு வண்டிகள் தாமதமாக வந்தது ஏன்?ஆ)பெட்ரோல் போன்ற எரிபொருள் நூற்று கணக்கான லிட்ட்ரில் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது அதை கொண்டு வரும் போது ரயில்வே போலிஸ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததா?இ)ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் அவசியப்படும் எரிந்த பெட்டிகள் அவசர அவசரமாய் அஹமதாபாத் கொண்டு செல்லப்பட்டது ஏன்?பழைய இரும்பாக்கப்பட்டது ஏன்?இப்படி பல முடிச்சுகள்.இதற்கு எல்லாம் மகுடம் வைத்தது போன்ற வேடிக்கை யார் கோத்ரா ரயில் எரிப்பிற்கு மூளையாக செயல் பட்டார் என எப் ஐ ஆரிலுள்ளதோ அவரை விரைவு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இது கோத்ர வழக்கிற்கு மாத்திரம் உள்ள பிரச்சனை அல்ல.பாரளுமன்றம் தாக்க பட்ட வழக்கில் திருமதி:அருந்ததி ராய் அவர்கள் பல கேள்விகளை இது போல் எழுப்பியுள்ளார்.1)பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நடந்தது.அமெச்சூர் கேமராக்களில் பதிவுமாகியிருந்தது.ஏன் அந்த பதிவுகள் பாராளுமனறத்தில் வைக்க படவில்லை?2)வெள்ளை காரில் வந்த 6 பேரில் 5வர் கொல்லப்பட்டனர் மீதமுள்ள ஒருவர் எங்கே?கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட சிம் கார்டுகளின் நம்பக தன்மை இன்று வரை கேள்விக்குறியே!இதன் முத்தாய்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பு.சட்டப்படி தண்டிக்க போதுமான ஆதாரமில்லை என்றாலும் இந்தியாவின் மனசாட்சி தூக்கு தண்டனை வழங்க வகை செய்கிறது.அது என்ன இந்தியாவின் மனசாட்சி?சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான மனசாட்சி!
இப்படி தீவிரவாதத்தை முஸ்லிம்களோடு இணைத்து விட்ட பத்திரிக்கை உலகம் பார்ப்பன அதிகார வளையம் இன்று மான்புமிகு:மார்கண்டே கட்ஜீ போன்றவர்களால் விமர்சிக்க படுகிறது.திரு:கார்கரே போன்றவர்களால் மீள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் ஹிந்துத்துவவாதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.முஸ்லிம்கள் விடுதலை அடைந்துள்ளனர்.
பம்பாய் தாக்குதலில் அவிழ்க்க படாத பல முடிச்சுகள்.1)கடலை கடந்து தீவிரவாதிகள் ஆயுதஙகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி?2)கடலோர கண்கானிப்பு படைகள் காவல்கள் எங்கு போயின?3)திரு:கார்கரே ஏன் கொல்லப்பட்டார்?அவருக்கு வழங்கப்பட்டிருந்த லைப் ஜாக்கட் தரமற்றிருந்தது ஏன்?
இஷ்ரத ஜஹான் சொராபுதீன் என்கவுண்டரின் போலி நாடகங்கள் ஹிந்துத்துவ அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை உலக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இன்றும் சிறையில் தண்டனை அனுபவிக்கிறார்கள்.ஆனால் ஸிரி கிருஷ்ணா கமிஷனால் குற்ற சாட்டப்பட்ட பால் தாக்கரே வெளியில்! பாபரி இடிப்பு குற்றவாளிகள் அத்வானி முரளி மனோகர் ஜோஸி வெளியே!ராஜீவ் கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய சுப்பிரமணிய சுவாமி வெளியே!இது தான் நீதியா?
சவுதி இளவரசரின் குற்ற சாட்டை சவுதி அரசு மூடி மறைத்ததா?வக்காலத்து வாங்கியதா?இல்லையே!தண்டனையை ஏற்று கொண்டது.தனி மனிதன் யாராயினும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உறுதியாயிருந்தது.ஆனால் நம் நாட்டில் லோக குருவின் வழ்க்கை விசாரிக்க கூட உச்ச நீதி மன்ற நீதிபதி தயாரில்லை.அவர் என கடவுள்.ஆதலால் நான் விசாரிக்க மாட்டேன் என்றார்.
seyed muhammed
கோயில்களில் குகைகளில் நிவாணவானமாக லட்சுமி சரஸ்வதி சிலைகளும் சிற்ப்பங்களும் உள்ளன.அதை வரைந்த எம்.எப்.ஹீஸைனின் காட்சியகங்கள் தாக்க பட்டன.ஹீஸைன் நாடு கடத்தப்பட்டார்.ஹிந்துயிஸம் நிர்வாணத்தை முக்தியின் அடையாளமாக கருதுகிறது என்கிறார் சோ.அலகாபாத் கும்பமேளாவில் உடம்பில் ஒட்டு துணியில்லாமல் நடந்து வந்த சாமியார்கள் சோவின் கூற்றுக்கு சாட்சி கூறினார்கள்.நாடு கடத்தப்பட்ட ஹீஸைன் கத்தரில் செத்தும் போனார்.
ஆனால் இஸ்லாத்தில் உருவமில்லை.உருவம் வரைவது கூடாது என தெரிந்திருந்தும் முஹம்மது நபி(அல்லாஹி அவர்கள் மீது அருள் பாலிப்பானாக்!)யின் உருவத்தை வரைந்த யாரும் நாடுகடத்தப்படவில்லை. வரைந்தவர்களின் உடமைகள் அழிக்கப்படவில்லை. ஏன்?குறைந்தபட்சம் வரைந்தவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது நடவடிக்கை கூட இல்லை.
அதற்கு மாறாக முஹம்மது நபி(ஸல்)யை இழிவாய் கொச்சைப்படுத்தி எழுதிய தஸ்லிமாவிற்கு இந்தியாவில் அடைக்கலம்.ஷல்மான் ருஷ்திக்கு பட்டு கம்பலம். கேட்டால் கருத்து சுதந்திரம்.இந்தியாவில் பிறந்த ஹீஸைனை நாடு கடத்தும் போது தோன்றாத சுதந்திர வேட்கைகள் இஸ்லாத்திற்கு எதிராக என்றால் பொங்கி வழிகிறது.
ஒரு சமுகத்தில் நடக்கும் குற்றங்களை அச் சமுகம் எப்படி பார்க்கிறது?அதில் என்ன பாகுபாடு செய்கிறது?என்ன அநீதம் செய்கிறது?என்பதை அடிப்படையாக கொண்டுதான் விமர்சனம் செய்ய வேண்டும்.
அதை விட்டு விட்டு பாகிஸ்தானில் தேவாலயத்தில் புகுந்து சுடுகிறார்கள் என எழுதுவது அறிவை புறந்தள்ளி உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். ஆப்கானிஸ்தானின் ஒரு உதாரணம் இந்தியாவில் அன்றாட நிகழ்வல்லவா!
இஸ்லாத்தை பிறரின் தளத்தின் மூலம் பரப்பும் கள்ளத்தனம் எனக்கு தெரியாது.இஸ்லாத்தை பற்றி எழுத தூண்டியதே ஆறுமுகத்தின் இஸ்லாம் பற்றிய பாபரி மஸ்ஜித் பற்றிய விமர்சனமே!
இறுதியாக இறைவன மட்டும் வணங்க வழிகாட்டும் இஸ்லாம் உயர்ந்ததே!
கல்லை மரத்தை சிலையை மிருகத்தை மனிதனை பிற படைப்பினங்களை வணங்கும் வழிபடும் எல்லா வழியும் மனிதனுக்கு மனித படைப்புக்கு படைப்பின் நோக்கத்திற்கு எதிரானது தறானது பிழையானது பாவமானது.
ஆறுமுகம்
குஜராத்தை நினைவில் வைத்துள்ள வருக்கு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு ஏன் வரவே இல்லை. சிகிச்சைக்காக மருததுவமனைக்கு தான் வருவார்கள் என்று திட்டமிட்டு அங்கேயும் குண்டு வைத்து முஸலீம்கள் பயங்கரவாதிகள் கொன்றது யாரை ? பயங்கரவாதிகளையா? குஜராத் கலவரத்தில் தொடர்புடையவர்களுக்க தண்டனை அளிக்ப்பட்டுள்ளது என்பதும் ரயில் எரிக்கப்பட்டது திட்டமிட்ட சதி என்று கூறப்பட்டுள்ளது தெரியாமல் இருந்திருக்காது காரணம் திட்டமிட்டு திசைதிருப்ப லாலு வால் ஏற்படுத்த பட்ட கமிஷன் அது என்பது தெரிந்தது தான். எத்தனை யோ முறை ரயில் பெட்டிகள் எரிந்துள்ளது அது ஏன் ஈரோட்டில் இருந்து கோவை செ ந்ற ரயி லின் பெட்டிகளும் எரிந்துள்ளது அதில் ஒருவரை தவிர யாரும் இறக்கவில்லை திட்டமிட்ட செயல் களால் தான் கோத்ரா ரயில் எரிப்பில் குறிப்பிட்ட பெட்டியில் இ ருந்த அணைவரும் கொல்லப்பட்டனர். கர்கரே ஒரு பிராடு என்பது ம் காங்கிரஸின் கை கூலி என்பதும் ஊரறிந்த உண்மை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பது யார் யாரை வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் அணைவரும் குற்றவாளிகள் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அணைவரும் முஸ்லீம்கள் பார்வையில் குற்றவாளிகள் தான். சவுதியில் எத்தனை இந்திய ர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சவுதி இளவரசர் கொல்லப்பட்டாரா? முஸ்லீம் சட்டப்படி? அப்சல் குரு ஏன் தூக்கில் இன்னும போடவில்லை? தடுத்தது இந்துத்துவ சக்கதிகளா?
seyed muhammed
கோவையை மறந்து விட்டு குஜராத்தை எழுதவில்லை. கோவையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை கண்டித்தோம். இன்றும் கண்டிக்கிறோம்.இது போன்ற அநீதங்கள் எங்கு நடந்தாலும் யாரால் நடத்தப்பட்டாலும் அது இரும்பு கரம் கொண்டு ஒடுக்க பட வேண்டும்.அதில் இரண்டு கருத்து இல்லை.ஆனால் குண்டு வெடிப்பை பேசும் ஆறுமுகம் செலக்டிவ் அமினீஷியா நேயால் பாதிக்கபட்டவர் போல் குண்டு வெடிப்பிற்கு முந்தைய கோவை கலவரத்தை மறந்து விட்டு எழுதுவது,பானர்ஜீ கமிஷனை லல்லுவின் தில்லு முல்லு என்பது,கார்கரேயை கைக்கூலி என்பது நல்ல விமர்சகனுக்கு மனிதனுக்கு அழகல்ல.சவுதி இளவரசர் தண்டிக்கப்பட்டாரா?இல்லையா?என்ற தகவல் படிப்பறிவு இல்லாமல் விமர்சனம் எழுதுவது.......ஆறுமுகம் உங்களின் எழுத்துக்களை பிறர் படிப்பதற்கு முன் நீங்கள் பல முறை படியுங்கள்.உங்களுக்கு உங்களின் தவறு புரியும்.உங்களை உங்களின் தவறான அடையாளத்தை மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதும் புரியும்.
R Nagaraj
தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்க... சையத் பாய் அது சரியான்னு கேக்க... ஆறுமுகம் அண்ணன் இது சரியான்னு கேப்பாரு... நடுவுல நா வேற... ஒரேஒரு விசயம் மட்டும் நாம எல்லாரும் புரிஞ்சுக்கணும்... குஜராத்தில நடந்தது மனிதாபிமானம் உள்ள எவனும் ஏத்துக்க முடியாது...(அதே போல கசாப்புக் கடைக்காரன் மும்பையில பண்ணதும்) ஆனா இந்தியா என்பது குஜராத் மட்டும் இல்லையே...ஒவ்வொரு எடத்தில ஒருத்தன் இருந்து கொண்டு அடாவடி பண்றான்... கேட்டா அங்க பாரு இங்க பாருங்கறான்... நாகரீக சமூகம் வாழ அனுமதிக்கறதுல ரெண்டு மதவாதிகளும் தடையாகத்தான் இருக்கறாங்க.... நம்மஊர்ல சுபவீ, திமுகவுக்கு ஓட்டு வாங்கித்தற இந்து மதத்த திட்டுவாரு... நாளைக்கே பல்வேறு அரசியல் காய் நகர்த்துதல் காரணமா கலைஞர் ஐமூகூன்னு பார்ட் டூ ஒன்ணு ஆரம்பிச்சா.. சுபவீ ”லாங் லீவ்”ல போய்டுவாரு... பாக்கத்தான போறம்.... ஆக அரசியல் சந்த்ர்ப்பவாதம்தான் எல்லாத்துக்கும் காரணம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.