பொதுவாக சிறுநீரகம் இரண்டு விதக் காரணங்களால் தன் செயல் திறனை நிரந்தரமாக இழக்கிறது. ஒன்று, உடலில் உள்ள இரத்தம், தசைகள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் செயல்பாட்டு மாற்றங்களாகும். இதை மெடபாலிக் டிஸார்டர் என்பார்கள். மற்றது வெளியில் இருந்து நுழையும் தொற்றுக் கிருமிகள் மூலமாக ஏற்படுவதாகும். இதை இன்பெக்ஷனல் டிஸார்டர் என்பார்கள்.

நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்புக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இவையே முக்கிய காரணங்களாக உள்ளன, நீரிழிவு நோய் வந்தவருக்கு இன்சுலின், தேவையை விடக் குறைவாகச் சுரக்கிறது. இதனால் இரத்தத்தில் குளூக்கோசின் அளவு கூடுதலாகிறது. இதை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளன.

இப்படி அளவுக்கு மேல் வேலை செய்வதால் சிறுநீரகங்கள் செயல் இழக்கின்றன. இதன் அறிகுறி சிறுநீரில் புரதச்சத்து அதிக அளவில் வெளியேறுவ தாகும். சிறுநீரில் அதிகப் புரதம் வெளியேறும் நிலையை புரோட்டினூரியா என்பார்கள். இது மெடபாலிக் டிஸார்டர் ஆகும். மற்றது இன்பெக்ஸனல் டிஸார்டர் ஆகும். இது சிறுநீரக காச நோய் மற்றும் சிறுநீரகங்கள், பிறப்புறுப்புகள் தொடர்பான யானைக்கால் நோய்க்கிருமிகள் போன்றவை தாக்கிய தால் ஏற்படும் சிறுநீரகச் செயல் இழப்பாகும்.

பசுவுக்கு காச நோய் இருந்தால் அதன் பாலைக் குடிக்கும் நமக்கும் காச நோய் ஏற்படும்.

சிறுநீரக காச நோயை கண்டறிய என்ன அறிகுறிகள் தென்படும்? பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங் கில்லாமல் இருக்கும். அடி வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும். அதிகமான வெள்ளைப்பாடு ஏற்படும். ஆண்களுக்கு விந்தணுக்களுடன் இரத்தம் கசியும். திடீரென்று காரணமே இல்லாமல் உடல் சோர்வு ஏற்படும். தாங்க முடியாத இடுப்பு வலி இருக்கும். காரணம் இல்லாமல் எடை குறையும். இது போன்ற அறிகுறிகள் தெரியாமலும் கூட காச நோய் ஏற்படும். ஏனெனில் காச நோயின் பாதிப்பு ஒரு சிறுநீரகத்தில் மட்டும் இருந்து மற்றொரு சிறுநீரகம் தொடர்ந்து தன் வேலையை செய்யும். அதுவும் பழுது பட்டால்தான் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு என்பது மெல்ல மெல்ல படிப்படியாகத் தான் ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக உடனே கண்டுபிடித்துவிட முடியாது.நோய் முற்றிப் போகும் நிலை ஏற்படும வரையிலும்கூட அதற்கான அறிகுறிகள் ஏதும் வெளிப்படாமல்இருப்பது தான் இந்நோயின் மோசமான தன்மையாகும். சிறுநீரகத்தில் உள்ள பல இலட்சக் கணக்கான சிறுநீர் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) ஒவ்வொன்றாக பழுது அடைந்து கொண்டே வரும். ஆயினும் இந்த இழப்புகள் குறித்து சிறுநீரகங்கள் கவலைப்படாமல் தொடர்ந்து தன் பணியை செய்து கொண்டே இருக்கின்றன. ஒரு சிறுநீரகம் முழுவதும் செயல் இழந்துவிட்டாலும் கூட மற்றது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் தான் நோயாளருக்கு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்பே சிறுநீர் வெளியேற்றத்தின் அளவு குறைந்து பிற அறிகுறிகளும் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன.

சிறுநீரகச் செயல் இழப்புக்கு என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளளும் முன்பு சிறுநீரகங்களின் செயல்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

உடலில் உள்ள கழிவுப் பொருட்களையும் அதிகப்படியான நீர்ச்சத்தையும் வெளியேற்றுவதே இதன் முக்கிய பணியாகும். ஆனால் அவற்றின் பணி இதோடு முடிந்து விடுவதில்லை. உடலின் கார-அமில சம நிலை பராமரிப்பு, இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவது, எலும்புகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது, உடலில் எந்த அளவுக்கு நீர்ச்சத்து இருக்கலாம் எனத் தீர்மானிப்பது போன்ற பல முக்கியமான செயல்களையும் சிறு நீரகங்கள் செய்கின்றன.

இதயம் தொடர்ந்து துடித்துக் கொண்டே இருப்பது போலவே சிறுநீரகங்களும் தொடர்ந்து தன் வடிகட்டும் பணியை இடைவிடாது செய்து கொண்டே இருக்கின்றன.

நோயின் அறிகுறிகள்:

எதிலும் கவனம் செலுத்த இயலாமை, எரிச்சல் அடைவது, காரணமே இல்லாமல் மற்றவர்களிடம் சண்டை பிடிப்பது, வேலை நேரத்தில் தூங்குவது,வித்தியாசமான முறையில் நடந்துக் கொள்ளுவது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, எப்போதும் கடு கடுவென்று இருப்பது போன்ற மனக் குறிகள் நோயாளரிடம் தென்படும்.

தலைசுற்றல், நெஞ்சு வலி, படபடப்பு, மூச்சுத் திணறல், கடுமையான தலைவலி, பசியின்மை, இதயம் மற்றும் நுரையீரலில் நீர்க் கோர்த்துக் கொள்ளுதல், குடல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தொடர் விக்கல், இருமும் போது இரத்தம் வெளியாதல், கை கால்களில் வீக்கம், நாக்கில் வறட்சி ஏற்பட்டு, மூச்சுக் காற்றில் துர்வாடை வீசுதல், வலிப்பு, ம ஞ்சள் காமாலை, வயிற்று வலி, வாந்தி. உயர் இரத்த அழுத்தம், மாத விலக்கில் ஒழுங்கின்மை, இரத்த சோகை, வாயுத் தொல்லை, செரிக்காமை, வயிற்றுப் போக்கு, கண் பார்வை மங்குதல், மலட்டுத் தன்மை, தோல் பாதிப்புகள், பக்க வாதம், எலும்புகளில் வலி, கை கால்களில் மத மதப்பு, இடுப்பு வலி, கடுமையான தசை வலி, நரம்பு தொடர்பான தொந்தரவுகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த அறிகுறிகள் தென்பட்ட பின்பு நோயாளரின் சிறுநீரகங்களை ஸ்கேன் செய்து பார்த்தால் மாங்காய் அளவு இருக்க வேண்டிய இடத்தில் சுருங்கிப் போன பீன்ஸ் விதைகள் அளவு மட்டுமே சிறுநீரங்கள் இருக்கும். நிரந்தர சிறுநீரகச் செயல் இழப்புக் கான வாய்ப்பு இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இரத்தத்தில் எவ்வளவு கிரியாட்டினைன் உள்ளது மற்றும் சிறுநீரில் எவ்வளவு புரதம் உள்ளது என்பதை பரிசோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

நோயாளரின் இரத்தத்தில் கிரியாட்டினைன் அதிகம் இருப்பது தெரிந்தாலோ அல்லது சிறுநீரில் புரதம் அதிகம் வெளியேறுவது தெரிந்தாலோ, உடனே இ-ஜி எப் ஆர் (எஸ்டிமேட்டட் க்ளோமரூலர் பில்டரேசன் ரேட்) பரிசோதனை செய்து பார்த்து சிறுநீர் வடிகட்டியின் செயல் திறனை அறிந்துப் பின் அதற்கேற்ற படி நிலைகளை வகுத்துக் கொண்டு, அவற்றிற்கேற்ப சிகிச்சை மேற் கொள்ள வேண்டும்.

உணவு முறை மாற்றம்:

நோயாளருக்கு உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியமாகும். பொட்டாசியமும், புரதமும் இவர்களுக்கு முக்கிய எதிரிகள். அதே சமயத்தில் புரதத்தை சேர்க்காமல் இருப்பதும் தவறாகும். எவ்வளவு புரதம் சிறுநீரில் வெளியேறுவது என்பதை பொறுத்து புரதத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் லிஎன்பதை நிரணயிக்க வேண்டும்.

சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, வாழை போன்ற பழங்கள், இளநீர், சத்து பானங்கள் இவற்றையெல்லாம் இவர்கள் சாப்பிடக் கூடாது. காய்கறிகள், கீரைகள் இவற்றை வேகவைத்து தண்ணீரை வடித்துப் பின் உபயோகிக்க வேண்டும்.

சிறுநீரகங்களுக்கு கொழுப்பும் எதிரியாகும். கொழுப்பு, சிறுநீர் வடிகட்டி களுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் அதன் செயல் பாதிக்கப்படும். எனவே உணவில் கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொட்டாசியம், புரதம், சோடியம், கொழுப்புக் கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, தண்ணீர் அதிகம் குடித்தால் பிரச்சனை அதிகம் என்பதால், தண்ணீர்க் கட்டுப்பாடும் மிக அவசியமாகும்.

நிரந்தர சிறுநீரக செயல் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க சில முக்கிய ஹோமியோ மருந்துகள்:

அமோனியம், கார்பானிகம், அபோசினம், ஆர்சனிகம், பெல்லடோனா, காந்தாரிஸ், கார்பாலிக் ஆசிட், சிகுடா, குப்ரம் ஆர்சனிகம், குளோனைன், ஹெல்லிபோரஸ், ஹைட்ரோசையனிக் ஆசிட், மார்பினம், ஒபியம், பிக்ரிக் ஆசிட், சாங்குனேரியா, டெரிபிந்தினா மற்றும் விராட்ரம் விரைடு.

Pin It