amit shah 326சில கடைகளில் 'இங்கு வேலை காலியில்லை' என்று எழுதி வாயிலில் தொங்கவிட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

பீகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது இதேபோல அமித்ஷாவும் பேசியிருக்கிறார். பீகாரில் முதலமைச்சர் பதவி காலியில்லை நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவியும் காலியில்லை என்று தேஜஸ்வியையும், ராகுல்காந்தியையும் நையாண்டி செய்து பேசியிருக்கிறார்.

தொகுதிப் பங்கீடு, முதலமைச்சர் வேட்பாளர் யார்? போன்றவைகளில் கருத்தொற்றுமை இல்லாமல் குழப்பத்தில் இருக்கும் பாஜகவின் அமித்ஷா, பிரதமர் மற்றும் முதல்மைச்சர் பதவிகளை ஏலம் போடுவதுபோல பேசியிருக்கிறார்.

பீகாரில் தேர்தலில் வாக்காளர் திருத்தம் செய்கிறோம் என்று சொல்லி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை காலி செய்துள்ளது தேர்தல் ஆணையம். இதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பீகார் இன்னமும் பின்தங்கிய மாநிலமாக, கல்வி - மருத்துவத்தில் பின்தங்கிய நிலையில், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கிறது.

பீகாரின் வளர்ச்சியில் கருத்து செலுத்த வேண்டியதை விட்டுவிட்டு சீதைக்குக் கோயில் கட்டுவோம் என்று சொல்லத் தொடங்குவதாக செய்திகள் வருகின்றன.

 அறிவார்ந்த கல்வி, கேள்விகளின் மூலம் மக்களை வளர்த்தெடுப்பதை விட்டுவிட்டு, மதத்தை மட்டுமே அரசியல் மூலதனமாகப் பார்க்குப் பார்வை, நீண்டகாலம் தாக்குபிடிக்காது.

தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி வெல்லும், ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.

பீகார் முதலமைச்சர் பதவி காலியில்லை என்று சொன்ன அமித்ஷாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் பதவி பாஜகவுக்கு காலியாக என்றும் இல்லை என்று தமிழ்நாடு முடிவு செய்து விட்டது.

உதயசூரியன் உலகை வாழ்விக்கும். தாமரையால் என்ன பயன்? காலையில் மலரும், மாலையில் அடங்கிவிடும்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.