ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுவோரில் ஒருவரான பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஒரு விடுப்பு (பரோல்), ஒருமாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இளமையின் வசந்தங்கள் எல்லாம் சிறையில் எரிந்து போனதற்குப் பிறகு, இப்போதுதான் அவர் பரோலில் வெளிவருகின்றார்.

அவர்களின் வாக்குமூலம் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தன் மனசாட்சி உறுத்தலால், அதனைப் பதிவு செய்த காவல் உயர் அதிகாரியே சொன்னபிறகு, விடுதலையே அளித்திருக்க வேண்டும்.  ஆனால் இப்போதுதான் சிறு விடுப்பாவது கிடைத்துள்ளது.

அவரை நேரில் சென்று பார்க்க அனைவரையும் போல நம் உள்ளமும் அவாவுகின்றது. எனினும் பிரிந்த தன் குடும்பத்தினரோடு அவர் சில நாள்களாவது சேர்ந்து இருக்கட்டும். 10, 15 நாள்களுக்குப் பிறகு நாமெல்லாம் சென்று அவரைச் சந்திக்கலாம். அதுவரையில் காத்திருங்கள் தோழர்களே!

Comments

1 comment

1
Arinesaratnam Gowrikanthan
வெளிப்படையாகச் சொல்வதற்குகந்த காரணம் எதுவும் மில்லாமல்தான் பேரறிவாளன் அடைத்துவைக்கப்பட்டாரேதவிர, பலமிக்க ஒரு காரணி இருந்தது. இன்றும் உள்ளது. இந்திய மத்தியரசும், தமிழ் நாட்டு மாநில அரசும் பேரறிவாளனை ஒரு கொலைவளக்குக் குற்றவாளியாக மட்டும் பார்க்கவில்லை. அவ்விதம் பார்க்கமுடியாதென்பதுவும், பார்க்கக் கூடாதென்பதுவும் இவ்விருசாரருக்கும் தெரியும். ஆனால் இவ்விருசாராரும் பேரறிவாளனை தமிழீழத் தேசியத்தின் குறியீடாகப் பார்க்கிறார்கள். பேரறிவாளனூடாக தமிழீழத் தேசியவாதிகளை அச்சுறுத்துகிறார்கள். பேரறிவாளன்னூடாக ஸ்ரீ லங்கா அரசுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். எங்கள் சொந்தப் பிரஜைகளையே மன்னிக்காத நாம், தமிழீழ தமிழீழத்தேசியர்களை மன்னிப்போமா என்ன? அவர்கள் மீதான தடையை நீக்குவோமா என்ன? என ஆறுதல் கூறுகிறார்கள். ஸ்ரீ லங்கா அரசைத் திருப்திப்படுத்துவதற்காக இந்திய மத்திய, மாநில அரசுகள் தம் மக்களுக்கு என்ன துன்பமும் விளைவிக்கத் தயராய் உள்ளார்கள் என்பதற்கான பல நூறு எடுத்துக் காட்டுகளில் இதுவும் ஒன்று. தமிழீழத் தேசியர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறயவே கடமைப்பட்டவர்கள் என்பதை மறவாதிருக்கட்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.