2009 ஜனவரி தொடக்கத்தில் கிளிநொச்சி சிங்களவர் கையில் விழுந்ததற்குப் பிறகு, ஓரிரு மாதங்களில், ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா முன்வைத்தது என்றும், அதைப் புலிகள் ஏனோ ஏற்கவில்லை என்றும், அருட்தந்தை ஜகத் கஸ்பர் ஒரு வார ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இணையத் தளத்திலும் இச்செய்தி வெளிவந்துள்ளது.  

உடனே கஸ்பர் ஒரு துரோகி என்று சில இணைய தளங்களில் சிலர் எழுதியுள்ளனர். துரோகிப் பட்டம் வழங்குவது இப்போது எளிதாகிவிட்டது. இத்தருணத்தில், அச்செய்தியுடன் தொடர்புடையவன் என்ற முறையில், ஓர் உண்மையைக் கூற வேண்டிய நிலையில் நான் உள்ளேன். அத்திட்டம் குறித்து, ஏப்ரல் மாத வாக்கில், கஸ்பர் என்னிடமும் சொன்னார். நீங்களும் நடேசன் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள் என்றார். தீர்வு ஏற்படும்போது, ஆயுதங்களை ஒப்படைத்தால் போதுமானது என்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது என்றார்.

அந்தக் காலகட்டத்தில் நடேசனைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. ஏறத்தாழ ஒரு வாரம் ஆயிற்று. அரசியல் பொறுப்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டு, செய்தியைக் கூறினேன். தலைமையுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றார். ஆனால் எந்த விடையும் அங்கிருந்து வரவில்லை. என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. களத்தில் நின்றவர்கள் அவர்கள். நிலைமைக்கு ஏற்ப ஒரு முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் கஸ்பர் சொல்வது பொய்யில்லை என்பதை உலகிற்கு நான் உரைத்தாக வேண்டும்.

- சுப.வீரபாண்டியன்

Comments

6 comments

6
Dr. V. Pandian
சரி, ஐயா!

இப்போது புலிகளும் அழிந்து ஆறு மாதங்களாகின்றன. அந்த உங்களது தீர்வு எங்கே? புலிகளை விட்டு வௌயேறி மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு வரச்சொன்னது, பாதுகாப்பான முள்வேலிக்குள்ளா?

தீர்வு ஏற்படும்போது ஆயுதங்களை ஒப்படைப்பதா? ஆனால், அன்றய தேதியில், நார்வே உட்பட, உலக நாடுகள், புலிகள் சரணடையவேண்டும் என்றே கேட்டுக் கொண்டிருந்தன. இறுதியாக சரணடைந்த புலிகளையும் சிங்களன் என்ன செய்தான்?

உங்கள் வாக்குப் படியே கஸ்பர் சொல்வது உண்மையானாலும், அன்றே கஸ்பர் ஒரு எதிர்ப்பரட்சியாளராக உருவாக்கப்பட்டிருந்தார் என்பது உண்மையில்லாமல் போகுமா? தொலைநோக்கோடு செயல்படுபவர் கருணாநிதி என்பது நீங்கள் அறியாததா?

இப்படித் தொடர்ந்து அர்த்தமற்றுப் பேசுவதைவிட, பொது வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்வது, கற்றறிந்த உங்களைப் போன்றவர்கள் சமூகத்துக்கு செய்யும் பெரிய தொண்டு!

இனிமேல் நீங்கள் பொதுத் தொண்டு செய்யாமல் வாழ்வதே, மகத்தான தொண்டு!
Dr. V. Pandian
உங்களை சிறை மீட்டதால் அவர்மீது உங்களுக்கு பரிவு என்று நீங்கள் முன்பு பேசியதை அறிவேன். கருணாநிதி உங்களை சிறை மீட்டது, உங்களின் மீதோ, தமிழனின் மீதோ உள்ள பற்றால் அல்ல. அவர் ஒரு தொலை நோக்கு சிந்தனை உள்ளவர். உங்களை இப்படித் தனக்காகப் "பயன்படுத்த முடியும்" என்று அறிந்தவர் அவர்.

ஒரு தனி நபர் மீதோ, தத்துவத்தின் மீதோ உள்ள "விசுவாசம்" தன்னலத்தின் அடிப்படையில் இருக்காமல், தனது சமூகத்தின் நலவாழ்வின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.
E. Ramakrishnan
naarikku honan satchiya?
EBU/PARIS
INGU PARISIL MOONRU KULUKKALAAGA KADAITHERUVIL KAPPAM VASOOL SEIGIRAARGAL!!EeLA THAMILARGALIN PILAVAI PAYAN PADITHI SINGALA ARASAANGAM THANATHU NELAIYAI FRACELIL URITHIPADUTHUKIRATHU!!!
kanal
அய்யா, சு ப வீ போதுமய்யா உமது துரோகம்.
Chithra Cheran
வேலிக்கு ஓணான் சாட்சி! - அல்ல அல்ல ! நரி , சுத்தம் என்று ஓநாய் சொன்னதுபோலுள்ளது இது!
உங்கள் பொன்னான நேரத்தை இப்படியெல்லாம் வீணடிக்காமல், கொலைஞரின் அல்லது கனிமொழியின்............. ஐக் ****** செலவிட்டால் ஏதாவது தேறுமே

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.