அதிகாரத்தின் மையத்தில் அமர்ந்துவிட்ட நீ
மந்திரக்கோலினால்
உன் உலகினை
விதவிதமாய் அலங்கரித்துக்கொள்கிறாய்.

கிணற்றின்
அடியாழத்திற்குச்சென்றுவிட்டயென் கனவுகளை
ரகசியச்சொற்களென மாற்றி
நீர்க்குமிழிகளென மேலனுப்புகிறேன்
எட்டிப்பிடிப்பதற்கான நீளக்கைகளற்ற நீ
பிரம்புடன் தயாராய் மேலேயே நின்றுகொண்டிருக்கிறாய்.

பிரியங்களின் செய்யப்பட்ட சொற்கள்
ஒலிக்குமிழ்களென வெளிப்படும் மெல்லிசையை
உன் பிரம்பின் வீச்சு
நாரகாசச்சத்தமாய் மாற்றி
அனாதையாய்த்திரியும் உயிரில்
மேலும் கொஞ்சம் வலி கூட்டுகிறது.

என் தோட்டத்தின் மொட்டொன்றைக்கூட
மலர்த்தும் வல்லமையற்றது உன் பிரம்பென்பதை
பிறிதொரு தினத்தில் நீ உணர்ந்தபின்பும் கூட
உன் கையை
உறுதியாய் பற்றிக்கொண்டிருக்கிறது
அது.

விழித்திருக்கும்போது
தூங்கிவிடுகிறது
உறக்கம்

உறங்கும்போது
விழித்துவிடுகிறது
தூக்கம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.