உங்களில் ஒருவனாக நானும் இருந்தேன்
எனக்குத் தோன்றியதைப் போலவே
அல்லது உங்களுக்குத் தோன்றியதைப் போலவே
எனக்குத் தோன்றி இருக்கலாம்

உங்களைப் போலவே விசாரிக்கவில்லை
ஆனால் என்னிடத்திலும் நீங்கள் விட்டுவைக்கவில்லை

எனக்குப் புரியாமலிருந்த ஏதோ ஒன்று
உங்களுக்கும் புரியாமல் இருந்திருக்கலாம்

ஏதோ ஒன்றை இதனோடு பொருத்திவிட்டு
மிக இயல்பாக போய்ப் கொண்டே இருந்தீர்கள்
உங்கள் நிமித்தமாக

நீங்கள் நினைக்கின்ற எதனோடும்
அது பொருந்தவில்லை

நீங்கள் பொருத்துவது எதுவும்
இதனுடையதும் இல்லை என்று

அங்கேயே நின்றிருந்தேன் வெகுநேரம்

More articles by செந்தில்பாலா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.