அறிந்தும் அறியாமல்
செய்யும் தவறுகள்
அய்யப்பசாமி மன்னிக்கலாம்.
அறிந்த தவறு செய்யும்
அண்டை மாநில
அக்கிரமக்காரர்களை
எப்படி மன்னிக்கமுடியும்?

உண்ணாவிரதத்தை
மாதக்கணக்கில்
உற்சாகத்துடன் நடத்த முடியுமா?
உண்மையைச் சொல்லாமல்
உற்சவ மூர்த்திகள்
ஊர்வலம் வருகிறார்கள்

திருடர்களே முந்திக்கொண்டு
திருட்டை ஒழிக்க
திருந்தி சட்டத்தை நாங்களே
அமைந்துவிட்டோம் என்று
தேசமறியச் சொல்லும்போது
திகைத்துப்போய் நிற்கிறோம்!

கோடிக் கணக்கில் பணத்தை
கொள்ளையடித்த கூட்டம்
கூண்டோடு பறந்துவிட்டது,
என்றாலும்
பழகிய மனிதர்களும்
பலனடைந்த ஜீவன்களும்
பாதையை மறந்திருப்பார்களா?

- கதைப்பித்தன்

Comments

1 comment

1
கி.பிரபா
பதவியில் இருக்கிறோம் என மிதப்பில் உள்ளவர்களுக்கு நாட்டு நடப்பு தெரியுமா? கைம்மாறு கருதா உதவிகளைச் செய்யவதற்கா மிதப்பு மன்னர்கள் உலாவருகிறார்கள்! மொத்தத்தையும் சுருட்டிச் சூறையாடத்தானே! எரியற வீட்டில் கடலை வறுத்துத் தின்ன வழி கேட்டானாம் ஒருவன். அவன் தான் நாட்டை ஆளுகின்றான். ஒரு பிடிச் சோற்றுக்கு உழைப்பவனிடம் ஓராயிரம் கணக்குக் கேட்கும் அரசின் பிடியில் நாட்டு நடப்பு உள்ளது.என்ன நாடோ! என்ன நடப்போ! எல்லோரும் துன்புற்றிருக்க இவன் மட்டும் இன்பத்தில் திளைப்பான் எப்போதும்! இதுவே நாட்டு நடப்பு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.