கட்டட வேலைகள் நடக்கையிலே
நல்ல குளுமையான நிழலென்று
நலமுடன் அமர்ந்து பேசுகின்றவர்கள்
கட்டட வேலைகள் முடிந்ததும்
கட்டின கட்டடத்தை மறைப்பதாய்
அடியோடு வெட்டி வீழ்த்துகின்றனர்.

"தரையோடு வெட்டி சாய்க்காமல்
கிளைகளை வெட்டி விட்டிருந்தால்
தளிர்களால் அழகுபடுத்தி இருப்பேனே"
மடிகின்ற மரங்களின் மரணக்குரலை
கேட்டிட இயலாத மனிதர்கள்
தம் இதயத்தில் கூர்ந்து கேட்கட்டும்
அங்கே அதன் குரலைக் கேட்கலாம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.