குரல் இழந்த குயில்கள்
பூக்க மறுத்த செடிகள்
சிறகு முறிந்த பறவைகள்
பற்றி எரிந்த வனங்கள்
நஞ்சு நீராகும் அருவிகள்
சுருங்கிப் போன இதயங்கள்
காணும் இடமெல்லாம்
கட்டடக் காடுகளே
காணப்படும் காலம்.
தென்றலைத் தேடிச் சென்றால்
புழுதிக் காற்றே
புறப்பட்டு வருகின்றது
கழிவுகள் கலந்த நதியில்
மீன்கள் காலமாகி
மிதக்கின்றன.
மூங்கில் காடுகள்
முறிக்கப்பட்டதால்
புல்லாங்குழல்கள் மௌனமாகின்றது
நல்ல நீரும் நல்ல காற்றும்
அருங்காட்சியக பொருளாகிவிடும்
அணி ஆயுத அழுக்கால்
அதிர்ந்து போன கடல்தாய்
காணாமல் போய்விடுவாள்
கடலை ஒட்டகத்தில்
கடக்க வேண்டிய காலம் வரும்

- க.இந்திரசித்து

Pin It