முன்னெப்போதும் நிகழ்ந்திரா இக்கணத்தில்
என்னுள்ளுறைகிறது அவ்விருப்பம்.

தருணங்களனைத்திலும் கடிந்து கொண்டவாறே
நீண்டு நெடிந்தேயிருக்கிறது
எனதுள்ளத்தினுள் தாழிட்டுக் கொண்டும்
வெளிவர மறுத்தபடியும் அடைகாக்கும் அந்நேசம்

பேரோசை எழுப்பியபடி அனுமானிக்கிறது
நடுங்கிப் பிளவுற்றிருக்கும் எனதந்த
மனதிற்குள்ளுயரும் புன்னகை
நெருக்கடிக்குள்ளான பொழுதொன்றில்

பிறிதொருவரின் கரம் அரவணைக்க தயாராயிருப்பதாய்
அழுகிய நாற்றமெடுக்கும் பிணமொன்றை முன்னிறுத்தி
கசகசப்பும் அருவருப்புமாய் உருப்பெருகிறது
வெளிக்காட்டாமலிருந்த பிறர்மீதான எனதந்தநேசம்

- ச.கோபிநாத்

More articles by ச.கோபிநாத்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.