கல்வியாண்டில் ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் கல்வித்துறை தற்போது வேறொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. அதாவது இதற்குமேல் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட அகில இந்திய தொழில்நுட்ப கவின்சில் அனுமதி வழங்க கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றினை ஏ.ஐ.சி.டி.இ -க்கு அனுப்பியுள்ளது.

தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடமல் கிடந்த காலி இடங்களைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டது . அதனால் கூடுதல் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது; அதன் விளைவாக இந்த ஆண்டு கடந்த ஆண்டைப்போல் இல்லாது காலி இடங்கள் அனைத்தும் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடும் வாய்ப்பு கல்லூரிகளுக்கு ஏற்படும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட கூடாது என்று அரசு முடிவெடுக்கக் காரணம் கூடுதலாகக் கல்லூரிகளைத் தனியார் திறந்து கொண்டே போனால் அவற்றில் சேர்வதற்குப் போதுமான மாணவர்கள் இருக்க மாட்டார்கள்; அதனால் பல தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகள் நஷ்டமடைய நேரும்; அவ்வாறு நஷ்டமடைவதிலிருந்து அவர்களைக் காப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசைப் பொறுத்தவரையில் தற்போது சுயநிதி அடிப்படையில் தொடங்கப்படும் கல்லூரிகள் எவற்றிக்கும் ஆசிரியர் அல்லது அலுவலர் சம்பளம் வழங்கும் பொறுப்பு இல்லை . எனவே சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அரசிற்கு இதில் நஷ்டமேதுமில்லை. இந்த நிலையில் அரசின் இந்த முடிவு அதன் லாப நஷ்டத்தை மனதிற்கொண்டு எடுக்கப்படவில்லை. தனியார் பொறியியல் கல்லுரி நிர்வாகங்கள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசிற்கு இவிஷயத்தில் ஏன் இவ்வளவு அக்கறை ?

சந்தை விதி

வழக்கமாகச் சமூகத்தில் அனைத்துச் சரக்குகளின் விலையையும் தீர்மானிக்கும் சந்தை விதி கல்லூரிகள் திறக்கவும் நடத்தவும் உள்ள வாய்ப்பினையும் தீர்மானிக்கட்டும் என்று அரசு விட்டுவிட்டுப்போக வேண்டியதுதானே. அதாவது கூடுதல் கல்லூரிகள் திறந்தால் அதில பல இடங்கள் நிரப்பப்படாமல் போனால் தரமில்லாத பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும்; அதன் விளைவாக அக்கல்லூரிகளை நடத்த முடியாத நிலை கல்லூரி நிர்வாகங்களுக்கு ஏற்படும்; அந்நிலையில் அவை மூடப்படும் சூழ்நிலை உருவாகும்.

அவ்வாறு சந்தை விதியின் செயல்பாட்டினால் தரமில்லாத சில கல்லூரிகள தாமாகவே மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதுவும் மாணவர்களைப் பொறுத்தவரை நல்லது தானே. குப்பைக் கூலங்கள் இல்லாத தெருக்களைப்போல் கல்வித்துறை சுத்தமாகவாவது இருக்குமே. இன்னொரு வகையில் அரசு எங்கும் எதிலும் கடைப்பிடிக்க விரும்பும் தாராளவாதக் கொள்கையும் இடையூறின்றி அமுல்படுத்தப்படும் நிலையும் அதனால் பராமரிக்கப்படுமே. அப்படியிருந்தும் அரசு இவ்வாறு முடிவெடுப்பானேன்?

ஒருவேளை ஆட்சியாளர்கள் இவ்வாறும் கூட வாதிடலாம். அதாவது தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளும் சமூக மக்களில் ஒரு பகுதியினரே. பொதுவாக மக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொண்டு அனைவரின் நலன்களையும் பாதுகாக்க விரும்புவதே அரசாங்கம். அந்த அடிப்படையில் கல்வி முதலாளிகளின் நலன் கருதி அக்கறையுடன் செயல்பட்டால் அதில் என்ன தவறு என்று அவர்கள் வாதிடலாம்.

சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கங்கள் செயல்படுவதே சரியான ஜனநாயக நடைமுறை. நமது இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பொறியியல் கல்வி நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்கூடுதல் எண்ணிக்கையில் அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்களைக் காட்டிலும் மிகமிகக் கூடுதல் எண்ணிக்கையில் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர்.

பராமரிக்கப்படுவது பெரும்பான்மையினர் நலன் அல்ல

நமது நாட்டில் பொறியியல் கல்லூரி முதலாளிகள் மட்டுமல்ல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கூடப் பிரச்னைகளில் தான் உள்ளனர். மாணவர்களும் மிகக்கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டே உள்ளனர். புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கக் கூடாது; அதைப்போல் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து பொறியியல் கல்லூரிகளில் அதிகமானவர் சேர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகளில் சமூகத்தின் ஒரு பகுதியான தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கச் செயல்படும் தமிழக அரசு கட்டிடத் தொழிலில் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளரைக் காட்டிலும் குறைவான சம்பளத்திற்குப் பல கல்லூரிகளில் வேலை செய்யும் பொறியியல் முதுகலை கற்ற ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வரலாமல்லவா? அதாவது மத்திய அரசின் சம்பளக் கமிஷன் நிர்ணயித்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு வழங்காதிருக்கும் வகையில் தலையீடு செய்யலாமே; ஏ.ஐ.சி.டி.இ - யையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தலாமே.

அதைப்போல் கல்வித்துறையில் ஆசிரியராக நியமிக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்சத் தகுதி இல்லாத பல ஆசிரியர்களைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நியமித்துப் பாடம் கற்பிக்கச் செய்வது நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதனால் தரமான கல்வி கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் தொகைகளைக் கட்டணமாகச் செலுத்தியும் கூட படிப்பால் கிடைக்க வேண்டிய பலன் முழுமையாகக் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்க ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பிற்குக் கடுமையான பரிந்துரைகள் செய்யலாமே?.

அங்கெல்லாம் முதலாளித்துவச் சந்தை விதி முழுமையாக அமலாவதை அதாவது தேவைக்கு அதிகமாக கல்வி கற்பிக்கவல்ல ஆசிரியர்கள் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்ற சந்தை விதி முழுமையாக அமுலாக அனுமதிக்கும் அரசு புதிய பொறியியல் கல்லூரி திறப்பு விசயத்தில் மட்டும் இவ்வாறு தலையிடுவானேன்?.

இதற்கான விடை யாரும் புரிந்து கொள்ள முடியாத புதிரல்ல. இந்த அரசாங்கம் மட்டுமல்ல நமது நாட்டிலுள்ள எந்த அரசாங்கமும் அல்லது அது மத்திய அரசாங்கமாகவே இருந்தாலும் அவையனைத்தும் முதலாளிகளின் நலனைப் பராமரிக்கக் கூடிய முதலாளித்துவ அரசாங்கங்களே. அவை அனைத்தும் முதலாளிகளின் கண்ணில் வெண்ணெய்யையும் சாதாரண மக்களின் கண்ணில் சுண்ணாம்பையுமே வைக்கின்றன. அவை சுண்ணாம்பை வைக்காவிட்டாலும் முதலாளிகள் சாதாரண மக்கள் கண்ணில் சுண்ணாம்பை வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. எனவே இந்த அரசுகளை அனைத்து மக்களின் அரசாங்கங்கள் என நம்மை எண்ண வைப்பது மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். அதை நாம் நம்புவது அப்பட்டமான ஏமாளித்தனம்.

எதிர்கொண்டே உள்ளனர். புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கக் கூடாது; அதைப்போல் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து பொறியியல் கல்லூரிகளில் அதிகமானவர் சேர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகளில் சமூகத்தின் ஒரு பகுதியான தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கச் செயல்படும் தமிழக அரசு கட்டிடத் தொழிலில் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளரைக் காட்டிலும் குறைவான சம்பளத்திற்குப் பல கல்லூரிகளில் வேலை செய்யும் பொறியியல் முதுகலை கற்ற ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வரலாமல்லவா? அதாவது மத்திய அரசின் சம்பளக் கமின் நிர்ணயித்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு வழங்காதிருக்கும் வகையில் தலையீடு செய்யலாமே; ஏ.ஐ.சி.டி.இ‡யையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தலாமே. அதனால் தரமான கல்வி கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் தொகைகளைக் கட்டணமாகச் செலுத்தியும் கூட படிப்பால் கிடைக்க வேண்டிய பலன் முழுமையாகக் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்க ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பிற்குக் கடுமையான பரிந்துரைகள் செய்யலாமே?.

அங்கெல்லாம் முதலாளித்துவச் சந்தை விதி முழுமையாக அமலாவதை அதாவது தேவைக்கு அதிகமாக கல்வி கற்பிக்கவல்ல ஆசிரியர்கள் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்ற சந்தை விதி முழுமையாக அமுலாக அனுமதிக்கும் அரசு புதிய பொறியியல் கல்லூரி திறப்பு வியத்தில் மட்டும் இவ்வாறு தலையிடுவானேன்?.

இதற்கான விடை யாரும் புரிந்து கொள்ள முடியாத புதிரல்ல. இந்த அரசாங்கம் மட்டுமல்ல நமது நாட்டிலுள்ள எந்த அரசாங்கமும் அல்லது அது மத்திய அரசாங்கமாகவே இருந்தாலும் அவையனைத்தும் முதலாளிகளின் நலனைப் பராமரிக்கக் கூடிய முதலாளித்துவ அரசாங்கங்களே. அவை அனைத்தும் முதலாளிகளின் கண்ணில் வெண்ணெய்யையும் சாதாரண மக்களின் கண்ணில் சுண்ணாம்பையுமே வைக்கின்றன. அவை சுண்ணாம்பை வைக்காவிட்டாலும் முதலாளிகள் சாதாரண மக்கள் கண்ணில் சுண்ணாம்பை வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. எனவே இந்த அரசுகளை அனைத்து மக்களின் அரசாங்கங்கள் என நம்மை எண்ண வைப்பது மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். அதை நாம் நம்புவது அப்பட்டமான ஏமாளித்தனம்.

Pin It

கடந்த ஜீலை 25 - ம் நாள் திருத்தங்கலுக்கு அருகாமையில் உள்ள ஆனைக்கூட்டம் கிராமத்தில் இலக்கு இளைஞர் மன்றத்தின் சார்பாக கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களோடு உழைக்கும் மக்கள் போரட்டக் கமிட்டி, மாணவர் ஜனநாயக இயக்கத் தோழர்களும் பெரிய எண்ணிக்கையில் அக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இலக்கு இளைஞர் மன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான சுரேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் கருத்தரங்கினை ஏற்பாடு செய்வதிலும் அதனைச் சிறப்புற நடத்துவதிலும் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையிலிருந்து அவ்வட்டாரத்தில் கல்வி மேம்பாட்டிற்காகவும் அறிவுப் பரவலாக்கலுக்காகவும் சிறப்புடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைப்பொன்றினைச் சேர்ந்த திரு.ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தார்.

எழுப்பப்பட்ட கேள்விகள்

8 - வது வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி, பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் படித்த போதிய பயிற்சியில்லாத ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்கும் போக்கு, பொதுவாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு பாடம் என்ற ரீதியில் கூட முறையாகக் கற்பிக்கப்படாத நிலை, இதனால் சரியான அடித்தளமின்றி வேலைவாய்ப்புச் சந்தையின் அனைத்து மட்டங்களிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களும் சிரமங்களும், தேவைப்படும் தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் நகர்ப்புற மாணவர்களுடனான போட்டியில் கிராமப்புற மாணவர்கள் பின்தங்கி நிற்கும் நிலை ஆகியவை பல கேள்விகளாக எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடை காணும் வகையில் கருத்தரங்கில் விவாதங்கள் வரவேற்கப்பட்டன.

கூட்டத்தில் துவக்கவுரையாற்றிய இலக்கு இளைஞர் மன்ற அமைப்பாளர் சுரேஷ் இலக்கு இளைஞர் மன்றம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையும் அதன் இலக்கினையும் விளக்கிப் பேசினார். அந்த அமைப்பினை மகாகவி பாரதியின் கவிதைகளால் உந்தப்பட்டு தனது நண்பர்களையும் தோழர்களையும் ஒருமுகப்படுத்தி உருவாக்கிய அனுபவத்தை விளக்கியதோடு அந்த அமைப்பு கிராமப்புற மாணவர்களுக்காக ஆக்கபூர்வமான காரியங்கள் சிலவற்றையாவது செய்தாக வேண்டும் என்பதனை அதன் இலக்காகக் கைக்கொண்டதையும் விளக்கிப் பேசினார். அத்துடன் இந்தக் கருத்தரங்கிற்காக அணுகிய பல கல்வித் துறையோடு தொடர்புடையவர்களின் கூற்றுகளைச் சுவையுடன் அனைவருக்கும் பயன்தரத்தக்க விதத்தில் நினைவு கூர்ந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய ஆதவன் தனிப்பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் திரு.ராஜேஷ் கல்வியின் மேன்மையினை அத்தனை தூரம் அறியாத மக்களின் குழந்தைகளுக்கு தன்னுடைய நிறுவனத்தைப் போன்ற ஒரு தனிப்பயிற்சி நிறுவனத்தின் மூலமாக அவர்களுடைய தேவையை முழுமையாகக் கணக்கில் கொண்டு கல்வி புகட்டுவது ஒரு அலாதியான அனுபவம். ஆசிரியப் பணியினை சிறப்புற ஆற்றிய ஒரு மனநிலையை இந்த அனுபவம் தனக்கு உணர்த்துகிறது என்று எடுத்துரைத்தார்.

முயற்சி செய்தால் கிராமம் நகரம் என்ற வேறுபாடின்றி எந்த இடத்திலும் நவீன பயிற்றுவிக்கும் முறைகளைக் கொண்டுவர முடியும் என்பதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை கிராமத்தில் கணிணி மற்றும் இணையதளத்தின் மூலமாகக் கல்வி கற்கும் வகையில் ஒரு எலக்ட்ரானிக் நூலகத்தை அங்குள்ளோர் நிறுவியிருப்பதை எடுத்துக்காட்டாக முன்வைத்து திரு.ஜெயக்குமார் கருத்துரை வழங்கினார்.

கேள்வி, பதில் மூலமாகக் கருத்தரங்கம் மிகவும் உயிரோட்டமுள்ள முறையில் மூன்றரை மணி நேரத்திற்கு மேல் சிறப்புற நடைபெற்றது. கருத்தரங்கில் கலந்து கொண்டு மாணவர் ஜனநாயக இயக்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில் முன்வைத்த முக்கியக் கருத்துக்கள்:

யதார்த்தத்தில் இன்று கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் என்ற பிரிவு இல்லை. மாறாக தனியார் பள்ளிகளில் கல்வி பயில வாய்ப்புள்ள வசதி படைத்த மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் மட்டுமே பயில வாய்ப்புள்ள வசதியில்லாத மாணவர்கள் என்ற நிலையே நிலவுகிறது.

இருவகைக் கல்வி

கிராமப்புறங்களிலிருந்தும் இன்று நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நிறைய உள்ளனர். அவர்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல கிராமப்புறங்களில் காலை வேலைகளில் பஸ்களும் வேன்களும் வந்து செல்வதை அனைத்து இடங்களிலும் நாம் பார்க்கிறோம். நாம் பெறும் கல்வியில் ஒரு பெரும் செங்குத்தான பிளவு தற்போது தோன்றி வளர்ந்து வருகிறது.

அதாவது வேலைவாய்ப்புச் சந்தையில் விலைபோகுமளவிற்கு மாணவர்களைத் தயார் செய்யும் ஒருகல்வி, இத்தனை சதவீதம் கல்வி கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று உலகிற்குக் கணக்குக் காட்டுவதற்காகக் கையொப்பம் இடுபவர்களைத் தயார் செய்வதற்கான மற்றொரு வகைக்கல்வி என்ற இருவகைக் கல்வி நிலைகொண்டு விட்டது. இதில் முதல்வகைக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளிலும் ஒருசில அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கப்படும் கல்வி; கையெழுத்துப் போடுபவர்களை உருவாக்கும் ரகத்தைச் சேர்ந்த கல்வியே பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் கல்வி.

மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கற்பித்து அவர்களின் ஈடுபாட்டையும் கொண்டுவருவதாகக் கல்வி இருக்க வேண்டும். நமது வீட்டில் நம் பிள்ளைகளுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து அதற்குகந்த வகையில் ஒவ்வொரு பிள்ளையும் விரும்புவதை வழங்கி அவர்களைப் பராமரிப்பது போல தங்களிடம் பயிலும் மாணவர்களின் தேவை மற்றும் போதாமைகளை உணர்ந்து அதற்குகந்த வகையில் கற்பிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

மேலை நாடுகளில் பாடத் திட்டங்கள் குறைவாக இருந்தாலும் அதை முழுமையாகச் செயல் முறைப்படுத்தும் அளவிற்கு மாணவர்களை அங்குள்ள ஆசிரியர்கள் தயார் செய்கிறார்கள். பிள்ளைகளின் போதாமைகளை வகுப்பறைக்கே வந்து மாணவருடன் மாணவராக அமர்ந்து தெரிந்துகொள்ள பெற்றோர் வற்புறுத்தப் படுகிறார்கள். அத்தகைய நடைமுறையின் மூலம் மாணவர்களின் போதாமைகள் ஆசிரியர் பெற்றோர் ஆகியோரின் கூட்டு முயற்சியில் சரி செய்யப்படுகின்றன.

கல்வி என்பது ஒரு வாழ்க்கை; கற்றுக்கொள்வதற்கு வயது வரம்பு என்பது கிடையாது. அதைப்போல் மாணவர்களிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. எனவே அந்த வகையில் ஆசிரியர் மட்டுமல்ல மாணவர்களும் பல விசயங்களை ஆசிரியர்களுக்கு கற்பிப்பவர்களே. இத்தகைய சூழலில் நமது கல்வி நிலையங்கள் இருந்தால் நமது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லப் பயப்படமாட்டார்கள்.

பெற்றோரின் பொறுப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர்களான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் அப்துல் கலாமும் பிரசித்தி பெற்ற தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களே. ஒரு காலத்தில் அனைத்து மக்களின் பயிற்றகமாகவும் அரசுப் பள்ளிகள் இருந்தன. அந்தநிலை இன்று சீரழிந்து கையொப்பம் இடுபவர்களைத் தயாரிப்பதற்காக என்ற அளவிற்கு அரசுப்பள்ளிகள் ஆகிவருகின்றன என்றால் அதற்கு பெற்றோராகிய நாமும் ஒரு காரணமே.

அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்து வருகிறதென்றால் நாம் விற்காததை விற்றாவது நமது பிள்ளைகளை நல்ல கல்வி கிடைப்பதாக நாம் நம்பும் தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படிக்க அனுப்புகிறோம். நமது வரிப்பணத்தில் நிறுவப்பெற்றுப் பராமரிக்கப்படும் அரசுப்பள்ளிகள் உரிய வகையில் நல்ல கல்வி கற்பிக்கும் நிலையங்களாக இருப்பதைக் கண்காணிப்பது நமது கடமை என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போய்விடுகிறது. கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த நிறுவனமும் சீரழியவே செய்யும்.

உண்மையான ஜனநாயகம்

உண்மையான ஜனநாயகம் மக்களின் பங்கேற்பின் மூலம் பொது விசயங்களை ஆற்றுவதே. மேளாக்கள் போல் நடைபெறும் தேர்தல்களில் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப் படுவோரின் மூலமாகச் செயல்படுவதல்ல. கிராமப்புறக் கல்வி மேம்பாட்டுக் குழுக்கள் போன்றவற்றில் பொதுமக்கள் மென்மேலும் பங்கேற்க வேண்டும். அதில் நிரந்தர உறுப்பினர்களாக அரசால் நியமிக்கப்படும் வட்டாட்சியர் போன்றவர்கள் சம்பிரதாயத்திற்கு அதில் கலந்து கொள்பவர்களே தவிர கல்வி நிலையங்களின் மேம்பாட்டில் அக்கறை உடையவர்கள் அல்ல.

அக்குழுக்களில் கல்வியின் பால் அக்கறையுள்ள பொதுமக்களும் பெற்றோரும் மென்மேலும் பங்கேற்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் ஒருவகையான தனிநபர்வாதக் கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக இருக்கும் சூழ்நிலையில் இலக்கு அமைப்பினை நிறுவியவர்கள் தாங்கள் படித்த, வாழ்ந்த பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுவது பெருமகிழ்ச்சிக்குரியது.

இதுபோன்ற இளைஞர்கள் அனைத்து ஊர்களிலும் அணிதிரட்டப்பட வேண்டும். அவர்களை அணிதிரட்டி இதுபோன்ற கருத்தரங்குகளை அனைத்துப் பகுதிகளிலும் நடத்த வேண்டும். அவர்களைப் போன்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் நம்பிக்கையினை ஊட்டமுடியும். அதன்மூலம் கல்வியின்பால் அக்கறையுள்ளவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப் படவேண்டும். அவர்களைக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்குழு ஆகியவற்றை நிரப்பி அவற்றைப் பயனுள்ள அமைப்புகளாக்க வேண்டும். குறைந்த பட்சம் கல்வித் துறையிலாவது மக்கள் பங்கேற்புடன் கூடிய உண்மையான ஜனநாயகத்தை நாம் நிலைநாட்ட முயல வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகையில் அவர்கள் படித்தவற்றை நினைவுகூர வைக்கும் வகையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு தேர்ச்சி பெற்ற பின்னரே முழுமையான ஆசிரியர்களாக நியமனம் பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்களுக்குச் சம்பளத்துடன் பயிற்சிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பின்பு நியமனம் பெறுவது அவர்களின் குற்றத்தினால் அல்ல. உரிய காலத்தில் வேலை வாய்ப்புகளை அரசு அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்காததால் தான்.

ஆசிரியர் அமைப்புகள் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடாது கல்வி மேம்பாடு போன்ற விசயங்களுக்காகவும் தேவைப்பட்டால் அரசிற்கு எதிராகவும் கூடப் போராட வேண்டும். உரிய ஆதார வசதிகள் இல்லாமை, போதிய ஆசிரியர் நியமனமின்மை ஆகியவற்றிற்காகவும் போராட வேண்டும். தொடர்ச்சியாகத் தங்களது கற்பிக்கும் திறனும் பாடத்திட்ட மேம்பாடும் அதிகரிக்கும் விதத்தில் பயிற்சி வகுப்புகள் உரிய தரமான பேராசிரியர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டுமெனக் கோரிக்கை எழுப்ப வேண்டும்.

பாடத்திட்டக் குறைப்பினைக் கோருதல், தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள் பெறுமளவிற்கு மட்டும் பாடம் நடத்துதல் போன்ற தற்போதைய ஆசிரியர் மத்தியில் நிலவும் அவலங்கள் போக்கப்படும் விதத்தில் அவை செயல்பட வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப் படாததே உயர் கல்வியிலும் வேலைவாய்ப்புச் சந்தையில் விலை போவதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்தங்கியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம். பாடப்புத்தகங்களில் பாடங்களை அடுத்து இடம் பெற்றுள்ள பயிற்சிகளை ஓரளவு சரிவரக் கற்பித்தால் கூட மாணவர்களின் ஆங்கில அறிவு பன்மடங்கு மேம்படும்.

அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினால் நாங்கள் கல்விக்குத் தேவைப்படும் அனைத்தையும் செய்யத்தானே செய்கிறோம் என்று அரசினர் கூறுவர். இன்றுள்ள ஆட்சியாளர் நேற்றைய ஆட்சியாளருடன் தங்களை ஒப்பிட்டு எத்தனை ஆயிரம் புது ஆசிரியர்கள் தங்களது ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பட்டியலிடுவர். எத்தனை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளன என்பதையும் பெருமையுடன் தம்பட்டமடித்துச் சொல்வர். ஆனால் பள்ளிகளில் கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேலியே பயிரை மேய்வது போல் நல்ல முறையில் பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படுவதை உத்திரவாதப் படுத்துவதற்காக உள்ள மாவட்ட மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரிகளே 8ம் வகுப்பு வரை தேர்வு இல்லாவிட்டாலும் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெறும் அளவிற்காவது அனைத்து மாணவர்களையும் தயார் செய்யுங்கள் என்று கூறாமல் பெயரளவிற்கு நடத்தப்படும் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச மதிப்பெண் பெருமளவிற்குத் தேர்வு எழுதியுள்ளனர் என்று பொய்யாகக் காட்டுவதற்காக அந்தத் தேர்வுத்தாளில் நீங்களாகவேணும் ஒரு வரைபடத்தை பூர்த்தி செய்து கட்டுங்கள் என்பது போன்ற முறைகேடுகளை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுப்பவர்களாக உள்ளனர்.

அவ்வாறு அக்கறையும் சிரத்தையுமின்றிப் பல ஆசிரியர்களும் அவர்களைக் கண்காணிக்கும் கல்வி அதிகாரிகளும் இருப்பதற்குக் காரணம் அரசிற்கு கல்வியும் அறிவும் மக்களுக்குச் சென்று சேர்வதில் அக்கறை ஏதுமில்லை என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளதே. நாம் ஏற்கனவே வலியுறுத்திய விதத்தில் கல்வித் துறையிலேனும் மக்கள் பங்கேற்புடனான உண்மையான ஜனநாயகம் செயல்படுத்தப்பட்டுப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கிராமப்புறக் கல்விக் குழுவினரும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்கும் நிலைமை உருவாக்கப்பட்டால் மட்டுமே இன்றுள்ள நிலை மாறும்; அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயரும்.

Pin It

சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி பொருளாதார வட்டாரங்களில் மிகமுக்கியமாகப் பேசப்படுகிறது. அதாவது சீனா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது என்பதே அச்செய்தி. குறிப்பாகப் பல்லாண்டு காலமாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கிய ஜப்பான் நாட்டைத் தாண்டியதாக சீனாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது; அதாவது சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆண்டிற்கு 10 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதே சமயத்தில் ஜப்பானின் வளர்ச்சியோ 2 சதவிகிதத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஏக்க நிலையிலேயே உள்ளது போன்றவை அதன் முக்கிய அம்சங்கள்.

சீனாவின் ஒட்டுமொத்த உற்பத்திக் குறியீடு 1337 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிற்கு உள்ளது. ஆனால் ஜப்பானின் ஒட்டுமொத்தப் பொருளுற்பத்தி குறியீடோ 1288 டிரில்லியன் டாலர்கள் என்ற அளவிலேயே உள்ளது. இதே வேகத்தில் வளருமானால் 2027 - ம் ஆண்டில் சீனா உலகின் முதற்பெரும் பொருளாதார சக்தியாக, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறிவிடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.

ஒரு நாட்டின் நாணயத்தின் பொருள் வாங்கும் தன்மையை (Purchasing Power Parity) கணக்கிற்கொண்டு பார்த்தால் சீனா ஜப்பானை 2001 - ம் ஆண்டிலேயே பின்னுக்குத் தள்ளிவிட்டது. உலகிலேயே இரும்புத்தாது மற்றும் செம்பு போன்ற உலோகங்களை அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் முதற்பெரும் நாடாக சீனா உள்ளது. உலகின் முதற்பெரும் எரிபொருளான கச்சா எண்ணெய்யை வாங்கும் இரண்டாவது பெரிய நாடாகவும் அது ஆகியுள்ளது.

‘பிரமிக்கத்தக்க வளர்ச்சி’

இத்தகைய சீனாவின் ‘பிரமிக்கத்தக்க’ வளர்ச்சி பலரால் குறிப்பாகத் திருத்தல்வாத சக்திகளால் மிகப்பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எப்போதுமே சோசலிச சித்தாந்தத்தின் வலுவினையும் அது உறுதியாக அமுல்படுத்தப்பட்டால் முதலாளித்துவ உலகம் சந்தித்துக் கொண்டுள்ள பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியது அவசியமில்லை; அது ஒட்டுமொத்தமாக மக்கள் அனைவரின் முன்னேற்றத்தையும் உறுதி செய்யவல்லது என்பன போன்ற அதன் அடிப்படைத் தன்மைகளையும் உயர்த்திப்பிடிக்காது, சோசலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக் குறுக்கு வழியில் தங்களது செல்வாக்கைப் பராமரித்தும் தக்க வைத்தும் கொண்டிருந்தவையே அந்தத் திருத்தல்வாதக் கட்சிகள். இப்போதும் சீனாவின் இந்த வளர்ச்சியை அவை தங்களது அத்தகைய முயற்சிக்கு உதவ வல்லதாக நிச்சயம் எடுத்துக்கொள்ளவே செய்யும்.

ஓரிடத்தில் சந்திக்கும் திருத்தல் வாதமும் முதலாளித்துவமும்

ஒருபுறம் திருத்தவாத சக்திகள் இவ்வாறானதாகத் தங்களது நிலையினை வைத்திருக்கும் சூழ்நிலையில் உலக முதலாளித்துவ சக்திகளோ சீனாவின் இந்த வளர்ச்சியை உலகின் முன் குறிப்பிடத்தக்கதாகக் காட்டி அதற்குக் காரணங்கள் எனப் பல சோசலிசக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன. அதாவது சீனாவின் வளர்ச்சி திருத்தல்வாதிகள் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் இவ்விரு சக்திகளையும் ஒன்று சேர்க்கும் ஒரு தளமாக அமைந்துள்ளது.

முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் கருத்து சீனாவின் இத்தகைய வளர்ச்சி டெங்சியோபிங்கினால் வடிவமைக்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவானதே என்பதாகும். அதாவது சீன மக்கள் குடியரசை அமைத்த மாமேதை மாவோவின் கொள்கைகளால் இத்தகைய பெரிய வளர்ச்சியைக் கொண்டுவர முடியவில்லை; ஆனால் டெங்சியோபிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் இதனைச் சாதித்துள்ளன என்று அவர்கள் கூறவருகின்றனர். சோசலிசம் மற்றும் மாவோ எதிர்ப்புப் பிரச்சாரங்களில் முழுமூச்சுடன் ஈடுபடும் அவர்கள் மாவோவின் திட்டங்கள் சீனாவில் இத்தகைய பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரத் தவறியதோடு பொருளாதார வளர்ச்சிக்கு பல இடையூறுகளையும் ஏற்படுத்தின என்றும் கூறத் தொடங்கியுள்ளனர். அதாவது மாவோவின் பெரும் பாய்ச்சல் (Great Leaf Forward) என்ற பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமும் அவர் கொண்டுவந்த கலாச்சாரப் புரட்சியும் சீனாவின் வளர்ச்சியைச் சீரழிப்பவையாகவே இருந்தன; அதிலிருந்து சீனப் பொருளாதாரத்தை மீட்டு இன்றைய அபரிமித வளர்ச்சியினை உறுதி செய்தவர் டெங்சியோபிங் - கே என்று அவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய அவர்களின் கூற்றுகளுக்கு இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படும் அமைப்புகள் எவையும் எதிர்க்கருத்து எதையும் இதுவரை முன்வைக்கவில்லை. அதன் மூலமாக அந்த முதலாளித்துவச் சிந்தனையாளர்களின் கருத்துக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை என்ற பொய்த்தோற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வளர்ச்சி குறித்த இந்தப் படப்பிடிப்பில் சில விசித்திரமான கோணங்களும் உள்ளன. அதாவது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தி, 2027 - ல் அமெரிக்காவையும் புறந்தள்ளப் போகும் மகத்தான வளர்ச்சி போன்ற படப்பிடிப்புகளோடு ஒத்துவராத வேறொரு பரிமாணமும் சீனப் பொருளாதாரம் குறித்து முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரு பொருளாதார சக்தி என்ற நிலையில் இரண்டாவது நிலையில் இருந்து 3 - வது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஜப்பான் இப்போதும் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளால் ஒரு வளர்ச்சியடைந்த நாடு என்ற வரையறைக்குள்ளேயே வருகிறது.

மூன்றாம் இடத்தில் வளர்ந்த நாடு, இரண்டாம் இடத்தில் வளரும் நாடு

ஆனால் அதே சமயத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் புறந்தள்ளிய சீனா இப்போதும் ஒரு வளர்முக நாடு என்ற வரையறைக்குள்ளேயே உள்ளது. அதாவது அது ஒட்டுமொத்த மனித வளர்ச்சிக் குறியீட்டில் ஆசர்பைசான் போன்ற நாடுகளுக்குச் சற்று மேலானதாக அதாவது உலகின் 127 -வது இடத்திலேயே சீனா உள்ளது. அதன் தனிநபர் வருமானம் ஜப்பானைக் காட்டிலும் 10 மடங்கு பின்தங்கி ஆண்டிற்கு 3300 - க்கும் குறைவான டாலர்கள் என்ற விதத்திலேயே உள்ளது. அமெரிக்காவின் தனிநபர் வருவாய் 42000 டாலர்கள் என்ற அளவிற்கும் ஜப்பானின் சராசரி தனிமனித வருவாய் 33000 டாலர்கள் என்றுமுள்ள நிலையில் சீனாவின் வருவாய் 3300 டாலர்கள் என்ற அளவிலேயே உள்ளது.சீனா உலக அளவில் கருதப்படக் கூடிய பத்துப்பதினைந்து பெரும் பணக்காரர்களை உருவாக்கியுள்ளது. இருந்தாலும் அதன் மிகமிகப் பெரும்பாலான மக்கள் இப்போதும் வறிய நிலையிலேயே வாழ்ந்து கொண்டுள்ளனர் என்ற வி­யங்களும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களால் முன்னிறுத்தப் படுகின்றன.

ஏற்றுமதியே தீர்மானிக்கும் சக்தி

ஜப்பான் இவ்வாறு இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான காரணம் அது ஏற்றுமதி வர்த்தகத்தில் எதிர் கொண்டிருக்கக் கூடிய எதிர்மறைப் போக்கே. அத்தகைய எதிர்மறைப் போக்கை ஜப்பானின் நாணயமான பயன். அமெரிக்க டாலரோடு ஒப்பிடும் போது வலுவானதாக உள்ளதே உருவாக்கியுள்ளது. அதனால் ஏற்றுமதி பெருக வாய்ப்பின்றி ஏற்றுமதியைச் சார்ந்த அதன் பொருளாதாரம் பாதிப்பிலுள்ளது.

மறுபுறம் சீனாவின் தற்போதய வளர்ச்சிக்குக் காரணம் அதன் ஏற்றுமதி வர்த்தகமே. உலகப் பொருளாதாரத்தில் உற்பத்தித்தேக்க நெருக்கடி தோன்றிய சூழ்நிலையில் அது ஓரளவு பாதிக்கப்பட்டாலும் சீனாவின் பாதிப்பு ஜப்பானின் பாதிப்பளவிற்கு இல்லை. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் பொருட்கள் அனைத்தின் விலையையும் அதன் சந்தையே தீர்மானிக்கிறது. முதலாளித்துவ நாடுகளின் நாணயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

செயற்கையான நாணய மதிப்புக் குறைப்பு

அந்த அடிப்படையில் பார்த்தால் சீனாவின் நாணயம் அமெரிக்க டாலரோடு ஒப்பிடும் போது தற்போதுள்ளதைக் காட்டிலும் வலுவானதாக இருக்க வேண்டும். ஏனெனில் சீனாவின் டாலர் கையிருப்பும் அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களில் அது செய்திருக்கும் முதலீடுகளும் மிகப் பெருமளவு உள்ளன. இருந்தாலும் ஏற்றுமதியைத் தக்க வைக்கவும் பராமரிக்கவும் அது தனது நாணயத்தின் மதிப்பினை உரிய அளவிற்கு அதிகரிக்கவில்லை. செயற்கை முறைகளின் மூலம் டாலர் கையிருப்பு அதிகமிருந்தும் சீன நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலரைப் பொறுத்தவரை இருக்க வேண்டிய அளவிற்கு இல்லாமல் குறைந்த மதிப்புடையதாகவே பராமரிக்கப்படுகிறது.

ஜப்பான் 1980- ம் ஆண்டு எதிர்கொண்ட அதன் ரியல் எஸ்டேட் பொருளாதார நெருக்கடிக்கு பின்னரே அதன் வளர்ச்சியில் பெரும் தேக்க நிலை ஏற்பட்டது. அதாவது உலகின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் சந்தித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நெருக்கடிகளிலிருந்து முன்பு அது தப்பித்துக் கொண்டிருந்தது போல் தொடர்ச்சியாக அதனால் தப்பித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

ஜப்பானின் உற்பத்திமுறை

முன்பு அது தப்பித்துக் கொண்டிருந்ததற்கான காரணம் தரக்கட்டுப்பாடு போன்றவற்றில் மட்டும் நிரந்தரத் தொழிலாளரை நியமித்து உரிய ஊதியம் வழங்கிய அந்நாட்டின் நிறுவனங்கள் பிற அனைத்து வேலைகளையும் பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த முறைகளின் மூலமே செய்து வந்தன. நமது நாட்டில் சிவகாசி போன்ற பகுதிகளில் ஆண், பெண், சிறுவர் அனைவரும் எவ்வாறு வீடுகளிலேயே தீப்பெட்டிக் குச்சி அடுக்குதல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனரோ அதேபோலவே ஜப்பானில் கடிகாரம், டிரான்சிஸ்டர் போன்ற நுகர் பொருட்களை உற்பத்தி செய்து வந்தனர்.

இது வளர்ச்சியடைந்த பிற முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையான பெரிய தொழிற்சாலைகள் அவற்றில் ஏராளமான தொழிலாளர் என்ற கண்ணோட்டத்தோடு பொருந்தி வராததாகும். இந்த அடிப்படையில் கார்கள், இருசக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கடிகாரங்கள், புகைப்படக் கருவிகள் போன்றவற்றை மிக மலிவாகத் தயாரித்து அவற்றைக் கொண்டு ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளின் மீது படையெடுத்துக் கூடுதல் லாபம் ஈட்டி ஜப்பான் ஒரு மிகப்பெரும் பொருளாதார சக்தியாக உலக அளவில் விளங்கியது.

தற்போது ஜப்பான் கடைப்பிடித்த அந்த முறையே சிறிய பெரிய அளவுகளில் உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு அவற்றைப் பயன்படுத்தும் நாடுகள் அவற்றைக் கண்டுபிடித்த நாடுகளின் நிறுவனங்களுக்கு புனைவுரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தமும் ஜப்பானை மிகப் பெருமளவிற்குப் பாதித்தது. ஏனெனில் ஜப்பான் சிறந்து விளங்கியது பல உயர்தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில்தான். ஆனால் அவற்றின் கண்டுபிடிப்புகள் அந்நாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டவையில்லை.

இரு நாடுகளின் மக்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள்

ஜப்பானில் தற்போது தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி மக்களைப் பொறுத்தவரை பல பரிதாபகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் வயதானவர்களை மிக அதிகம் கொண்ட நாடு. ஆனால் அப்படிப்பட்ட வயதானவர்கள் பலர் தற்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அடையாளம் தெரியாமல் எங்கோ அவர்கள் சென்று மறைந்து விட்டார்கள். அந்த அளவிற்கு முதியவர்களைப் பராமரிக்கத் திராணியற்றதாக ஜப்பானின் முதலாளித்துவ சமூக அமைப்பு ஆகியுள்ளது.

சீனாவிலும் சராசரி மக்களின் நிலை மிகவும் அவலம் நிறைந்ததாகவே உள்ளது. லஞ்சமும் ஊழலும் சீன சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளன. திருட்டு, கொள்ளை போன்ற நடவடிக்கைகள் பெரிதும் அதிகரித்துக் கொண்டுள்ளன. ஆளும் ‘கம்யூனிஸ்ட்’ கட்சியின் வட்டாரத் தலைவர்கள் நடத்தும் ஊழல் மிகப்பெருமளவு அதிகரித்துள்ளது.

கூடுதல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுப்பது போன்ற விசயங்களுக்குக் கையூட்டுப் பெறும் போக்கு பெருகி வளர்ந்து வருகிறது. அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத் தேவைகளுக்கென விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்படும் போக்கு பல இடங்களில் விவசாயிகளின் பெரிய எழுச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. அவை குறித்த விசயங்களை வெளி உலகத்திற்கு முழு அளவில் தெரியவிடாமல் பல சமயங்களில் நாசூக்காகவும் சில சமயங்களில் ஊடகங்களின் குரல்வளையை நெரித்தும் சீன அரசு மூடி மறைக்கிறது. சமீபத்தில் ஹூக்குல் என்ற மிகப்பெரும் இணையதள நிறுவனத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட முயற்சியும் அதையயாட்டித் தோன்றிய சர்ச்சையும் இதற்கான எடுத்துக் காட்டாகும்.

ஜப்பானில் ஏற்பட்டது போல் சீனாவிலும் ரியல் எஸ்டேட் விற்பனையில் பெரும் நெருக்கடி தோன்றவே செய்தது. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பங்குகள் பெருமளவு சரிந்தன. ஆனால் தன்னுடைய நாணய மதிப்பு உயர்ந்து அதன் விளைவாக ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க எத்தகைய செயற்கை நடவடிக்கைகளை சீனா தற்போதும் கடைப்பிடித்துக் கொண்டுள்ளதோ அதுபோன்ற செயற்கை நடவடிக்கைகளின் மூலமாகவே அதையும் சீன அரசு சமாளித்தது. அதாவது அது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தையே நிறுத்தி வைத்து அதிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டது.

ஜப்பான், சீனா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களுமே தற்போது ஏற்றுமதியை மையமாகக் கொண்டவையே. ஆனால் சீனா ஜப்பானைக் காட்டிலும் அதன் உற்பத்திப் பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்வதால் பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையையும் சந்தித்து அதன் ஏற்றுமதி வர்த்தகத்தைப் பாதுகாக்க முடிந்துள்ளது. ஆனால் ஜப்பானால் அதைச் செய்ய முடியவில்லை.

கருகிய நிலையிலும் மணம் பரப்பும் சோசலிசம்

இவ்விசயத்தில் சீனாவிற்குச் சாதகமாக இருக்கக்கூடிய மற்றொரு அம்சம் அந்நாட்டில் முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பாகும். இடைத்தரகர் அமைப்பு பெருமளவு இல்லாத நிலை, சோசலிச வேலைக் கலாச்சாரம் ஆகியவை சீனா பல நுகர்பொருட்களை மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்ய அதற்கு உதவி செய்கிறது. காலங்காலமாக முதலாளித்துவமாக இருந்த ஜப்பானின் பொருளாதாரத்திற்கு இத்தகைய சாதக அம்சங்கள் இல்லை.

ஆனால் ஜப்பானுக்கு இருக்கும் ஒரு சாதக அம்சம் சீனாவிற்கு இல்லை. அது ஜப்பான் நாட்டு மக்களிடையே இருக்கும் சீனாவைக் காட்டிலும் கூடுதலான சராசரித் தனிநபர் வருமானமும் அதன் விளைவான ஓரளவு மக்களிடம் பரந்த அளவில் உள்ள வாங்கும் சக்தியுமாகும். ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் சீனாவின் தற்போதய பொருளாதார வளர்ச்சி புஷ்வானமாகிவிடும்.

டெங்சியோ பிங் உருவாக்கியது முதலாளிகளின் தேவையையே

சீனாவில் முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக மாற்றப்பட்டதே டெங்சியோபிங் கொண்டு வந்த சீர்திருத்தத்தின் மையமான உள்ளடக்கம். சந்தைப் பொருளாதாரத்தின் மறுபெயரே முதலாளித்துவப் பொருளாதாரம். அவ்விசயத்தில் சீனா உள்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைச் சார்ந்திராது அமெரிக்க ஐரோப்பிய நாட்டு மக்களின் வாங்கும் சக்தியைப் பெரிதும் சார்ந்த ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கண்ணும் கருத்துமாக வளர்த்ததே அதன் தற்போதய வளர்ச்சியின் அடிப்படை. டெங்சியோபிங் அறிமுகம் செய்த இந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு செவ்வனே செயல்படப் பல முதலாளிகள் தேவை.

30 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவம் சிந்தனை அளவில் கூட மக்கள் மத்தியில் வந்துவிடக் கூடாது என்ற கருத்து மேலோங்கியிருந்த அந்நாட்டிற்கு ‘மாமேதை’ டெங்சியோபிங் தலைமையேற்றபின் இன்று முதலாளிகளை உருவாக்க வேண்டிய ‘வரலாற்றுத்’ தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அது விடுதலை பெற்ற காலம் முதல் மாவோவின் காலம் முடிவிற்கு வந்த சில ஆண்டுகளுப் பின்னரும் அங்கு சோசலிசப் பொருளாதாரக் கட்டமைப்பே இருந்தது. அந்த அமைப்பில் முதலாளிகள் என்று யாரும் இல்லை. அப்படிப்பட்ட முதலாளிகள் டெங்சியோபிங்கின் சீர்திருத்தம் அமலுக்கு வந்த பின் செயற்கையாக உருவாக்கப் பட்டனர்.

கொலைகார முதலாளித்துவத்தின் ஆட்சியில் வாங்கும் சக்தி யாரிடம்

பெரும்பாலும் அரசு நிர்வாகத்தில் இருந்த நேர்மையற்ற நபர்களே அத்தகைய முதலாளிகளாக உருவாயினர். பல அரசு நிறுவனங்களை அவர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்க அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு வளர்ச்சியடைந்த முதலாளிகளிடம் மரபு ரீதியாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளின் முதலாளிகளிடமிருந்த அந்தக் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லை. அதாவது சீனாவில் தற்போது வளர்ந்துவரும் முதலாளித்துவம் சமூகச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்ட கொலைகார முதலாளித்துவமாகும்.

அப்படி வளர்ந்த மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரிவர் என்ற அளவிற்குக் குறைவாக இருக்கக்கூடிய முதலாளிகள் மற்றும் அவர்களால் முன்முயற்சி எடுத்து நடத்தப்படும் முதலாளித்துவ நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகள் ஆகியவர்களிடம் மட்டுமே தற்போது சீனாவின் பிற உற்பத்திப் பொருட்களை வாங்கும் சக்தி உள்ளது. ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்களால் வாங்கப்படும் அடிப்படையான நுகர்பொருட்கள் கருதப்படும் அளவிற்குக் கூட இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஆடம்பரப் பொருட்களை வாங்கும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது. எனவே கார் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே சீனாவின் உள்நாட்டுச் சந்தையில் ஓரளவு விற்பனை வாய்ப்பு உள்ளது.

ஜி.டி.பி - யை மையமாகக் கொண்ட வளர்ச்சி

பொதுவாகவே முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளர்ச்சியின் அடிப்படையாக ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தி அதாவது ஜி.டி.பி - யே பார்க்கப்படுகிறது. எனவே அதனை உயர்த்த முதலீடுகள் வரவேற்கப் படுகின்றன.

சீனாவிலும் கூட இந்தியா உட்படப் பல வெளிநாடுகளின் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. அதனால் அந்நிய முதலீடுகளும் பெருமளவு அதிகரித்துக் கொண்டுள்ளன. அந்த ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி பெருமளவு முதலாளிகளுக்கும் - அமெரிக்கச் சொல்லாடலின் படி கொழுத்த பூனைகளான - முதலாளித்துவ நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகிகளுக்குமே பெரும் பலன் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் முதலாளித்துவப் பொருளாதார வல்லுனர்கள் அந்த வருமானத்தில் ஏற்படும் கசிவு பிற சாதாரண மக்களிடமும் ஓரளவு வாங்கும் சக்தியை உருவாக்கும் என்று நம்புகின்றனர். 

கசிவு எனும் கண்ணோட்டம்

அத்தகைய முதலாளித்துவ நிறுவனங்களில் உற்பத்தி நடைபெற்று அவர்கள் ஈட்டும் லாபத்தின் மீதான வரி மற்றும் அவர்களின் உற்பத்திப் பொருள் மீது விதிக்கப்படும் வரி போன்றவை அரசுக்கு வருவதன் மூலம் அரசு பொதுநல நடவடிக்கைகளுக்குச் செலவிட ஓரளவு வருவாய் பெற்றதாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டிருக்கும்; அந்த அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள மக்களின் நலன்களை அப்பணத்தைக் கொண்டு பராமரிக்க முடியும்; இதன் மூலம் முதலாளித்துவ அமைப்பில் எப்போதுமே பெருகி வளர்ந்துவரும் போராட்ட மனநிலையைச் சமாளிக்க முடியும் என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்து.

ஆனால் தற்போது முதலீடுகளை ஊக்குவிக்கிறோம் என்ற பெயரில் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் தொழிற்சாலைகள் தொடங்கத் தேவையான இடத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பதிலிருந்து தொழிற்சாலை நடத்தத் தேவையான மின்சாரம் போன்ற பிற ஆதார வசதிகள் செய்து தருவதுவரை அனைத்திற்கும் பெரும் தொகைகள் மானியமாக வழங்கப்படுவதால் அதனுடன் ஒப்பிடுகையில் இந்த வரிகள் மூலமாக அரசிற்கு வரும் வருமானம் அற்பமானதாக ஆகி விடுகிறது.

எதில் வளர்ச்சி

ஏற்றுமதி சார்ந்த பொருட்கள் மிக அதிகமாக உற்பத்தியாவதால் அதற்குத் தேவைப்படும் மற்றொரு ஆதார வசதியான போக்குவரத்து வசதிகளே சீனாவில் தற்போது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றொரு துறையாக விளங்குகிறது. தற்போது உற்பத்தித்தேக்க நெருக்கடி சீனா நுகர்பொருள் ஏற்றுமதி செய்துவந்த நாடுகளில் தோன்றியுள்ளது. மேலும் அந்த நெருக்கடி இதற்கு முன்பு தோன்றிய நெருக்கடிகளைப் போலில்லாமல் பல காலம் நீடிக்கும் தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. அதனால் ஏற்றுமதி மூலமான சீனாவின் தற்போதய 10 சதவிகித வளர்ச்சி நீண்டகால அடிப்படையில் பராமரிக்கவியலாத ஒன்றாக ஆகியுள்ளது. அதனால்தான் நெருக்கடி தோன்றுவதற்கு முன்பு 18 சதவிகிதம் என்ற அளவில் இருந்த சீனாவின் வளர்ச்சி தற்போது 10 சதவிகிதமாக ஆகியுள்ளது.

சீனாவில் தற்போது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் தோன்றியுள்ள நெருக்கடி வேறு துறைகளுக்கும் பரவ வெகு நாட்கள் ஆகாது. இந்த நிலையிலும் கூட சீனா பல பொருளாதார நிபுணர்கள் கூறுவது போல 2027 - ல் அமெரிக்காவை விட வளர்ச்சி பெற்ற நாடாக ஆகும் வாய்ப்பினைக் கொண்டதாகவே உள்ளது. ஆனால் அதற்கான காரணம் அமெரிக்காவின் வளர்ச்சி படிப்படியாகக் குறைந்து வருவதால் ஆனதாக இருக்குமே தவிர டெங்சியோபிங் முன்வைத்த பொருளாதார சீர்திருத்தக் கொள்கையால் சாதிக்கப்பட்டதாக இராது.

அடிப்படைத் தேவைகளின் பூர்த்தியை இலக்காக் கொண்ட பெரும் பாய்ச்சல் திட்டம்

சோசலிசப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான அம்சம் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளுற்பத்தியை அதாவது ஜி.டி.பி - யைச் சார்ந்ததல்ல. அதன் உற்பத்திமுறை மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்திற்கொண்டதாகும். அதன் உற்பத்தி இலக்கைத் தீர்மானிப்பதும் மக்களின் தேவைகளே. அத்தேவைகளைப் பூர்த்தி செய்யவே சோசலிசப் பொருளாதாரத்தில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அந்த நோக்கைக் கருத்திற் கொண்டுதான் குறுகிய காலத்தில் மக்களுக்குப் பயன்படும் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்த தொழிற்துறை நாடாக்க வேண்டும். என்பதற்காக மாவோ பெரும் பாய்ச்சல் (Great Leaf Forward) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார்.

அத்திட்டம் அமலில் இருந்த காலத்தில் ஏறக்குறைய 6 லட்சம் இரும்பு உலைகள் அந்நாட்டில் மக்களின் பங்கேற்பினால் உருவாக்கப்பட்டன. தேசிய, பிராந்திய, பகுதி ரீதியாக விவசாயத்தை மேம்படுத்துவதற்காகப் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

மக்கள் விதைப்பு, அறுவடை போன்ற தீவிர விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிராத காலத்தில் பெரும் பாய்ச்சல் திட்டம் கொண்டுவரப்பட்டது. பொதுவாக அக்காலகட்டத்தில் சீன மக்கள் குறைந்த அளவு சக்தி தரக்கூடிய உணவையும், உணவுப்பொருட்களையும் உண்பதே வழக்கம். ஆனால் இத்தகைய கடினமான கூட்டு உழைப்பில் அவர்கள் அக்காலகட்டத்தில் ஈடுபட்டதால் கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்குத் தேவைப்படும் அளவிற்கு போதிய அதிக சக்தி தரும் உணவுப்பொருள் இருப்பு அப்போது சீனாவில் இல்லை. அதனால் போதிய உணவும் ஓய்வுமில்லாத நிலையில் அத்தகைய நீர்ப்பாசனத் திட்டங்களை மக்கள் கூட்டு உழைப்பின் மூலம் கொண்டுவந்தனர். இத்தனை சிரமத்தை எதிர்கொண்டும் அவர்கள் அத்தகைய கடும் உழைப்பில் ஈடுபட்டதற்குக் காரணம் அத்திட்டங்கள் விவசாயிகள் அனைவருக்கும் அதாவது தாங்கள் பங்கும் பகுதியுமாக உள்ள ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படப்போகிறது என்ற அவர்களின் நம்பிக்கையே.

கட்சி நிர்வாகிகள், அறிவு ஜீவிகளின் பங்கேற்பு

மேலும் அத்தகைய கூட்டு உழைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைவர், தொண்டர் என்ற பாகுபாடின்றி அனைவரும் மக்களோடு மக்களாக இணைந்து கலந்துகொண்டனர். உணவுப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு மாவோ மாதக்கணக்கில் மாமிச உணவைத் தவிர்த்தார். பல தோழர்கள் அவரிடம் வற்புறுத்திய போதும் கூட்டு உழைப்பில் ஈடுபடுவோர் உண்பதைவிட கூடுதலான உணவினை அத்தகைய உழைப்பில் ஈடுபட்டிருந்த அவரது மகளுக்கு வழங்கவும் அவர் அனுமதிக்கவில்லை. அத்தைகய கூட்டு உழைப்பில் தேவையான உணவு கொடுக்கப்பட முடியாததால் கம்யூனிஸ்ட் கட்சியின் சில செயலாளர்கள் கூட உயிரிழந்தனர்.

இதுதவிர கல்லூரி மாணவர்களும் பேராசிரியர்களும் பெரிய எண்ணிக்கையில் அத்திட்டத்தில் பங்கேற்றனர். அத்திட்டங்களினால் எதிர்காலத்தில் பலன்பெறும் வாய்ப்புகள் கொண்டவர்களாக இருந்த சீன விவசாயிகள் இவ்வாறு அனைவரும் தங்களுக்கான உழைப்பில் ஈடுபடுவதைக் கண்டு பற்றாக்குறையின் விளைவாக ஏற்பட்ட தங்களது துன்பத்தை மறந்து உவகையுடன் உழைப்பில் ஈடுபட்டனர்.

ஏனெனில் அப்போது நிலவிய சோசலிசப் பொருளாதாரம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை எப்படியாவது கூட்டிக்காட்ட வேண்டும் என்பதாக இல்லை. அதற்குப் பதிலாகத் தேவைக்கு உற்பத்தி, உற்பத்தியின் பலன் சமமாக மக்களிடம் பகிர்ந்தளிக்கப்படல் என்ற சோசலிசப் பொருளாதார விதியின் அடிப்படையிலானதாக இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு மக்கள் அவர்களின் விளைநிலங்களின் இழப்பு, வாழ்வாதாரங்கள் பறிபோதல், கொலைகாரத் தன்மைவாய்ந்த முதலாளிகளின் வளர்ச்சி, சிரத்தையற்ற நிர்வாக முறையின் காரணமாக அடிக்கடி நிகழும் விபத்துக்கள், சுற்றுச் சூழலின் மாசுபாடு ஆகியவற்றை ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சி சாதிக்கப்படுவதற்கான விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது.

அதனால் ஏற்பட்டுள்ள சீனாவின் தற்போதைய நெருக்கடி இதைக் காட்டிலும் கடுமையான நெருக்கடிகளை எதிர்காலத்தில் நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும். இதையே முன்பிருந்த சோசலிசப் பொருளாதாரத்தை விடப் பலமடங்கு வளர்ச்சியைக் கொண்டு வந்த பொருளாதாரம் என்றும் அதற்குக் காரணம் டெங்சியோபிங்கின் சீர்திருத்தக் கொள்கைகளே என்றும் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் வாயாரப் புகழ்கின்றனர்.

நம்பிக்கையை உருவாக்க தத்துவம், தலைமை எதுவுமில்லை

உண்மையில் இதன் மூலம் எந்த சோசலிசப் பொருளாதாரம் உருவாக்கிய சாதக அம்சங்களைக் கொண்டு மலிவான விலையில் நுகர்பொருள் உற்பத்தி செய்து வெளிநாட்டுச் சந்தைகளில் விற்று, பெருவளர்ச்சி ஏற்பட்டுள்ளதென சீன ஆட்சியாளர்களால் காட்ட முடிந்ததோ அந்த சோசலிசப் பொருளாதாரத்தின் மிச்சம் மீதியிருக்கும் கட்டமைப்பும் நிலை குலைந்து முற்றிலும் நிர்மூலமாகும் அபாயம் தோன்றியுள்ளது. அந்நிலையில் மாவோவைப் போல் எந்த நெருக்கடியையும் மக்களைக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அணிதிரட்டி எத்தனை எதிர்மறை நிலையிலும் நம்பிக்கையூட்டி வளர்ச்சியைப் பராமரிக்கும் தலைமை இல்லை. மாவோவிற்கு அத்தகைய வழியினைக் காட்டிய மார்க்சியமும் தற்போதைய ஆட்சியாளர்களால் பாழ்படுத்தப் பட்டுள்ளது. மக்களை அணிதிரட்டி நம்பிக்கையூட்டி எதையும் செய்யத் திராணியற்றதாகவே பெயரில் மட்டும் கம்யூனிஸத்தை வைத்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது.

மக்களோடு மக்களாகக் கூட்டு உழைப்பில் ஈடுபட்டுத் தங்களது இன்னுயிர்களை இழந்த அன்றிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போலில்லாமல் தற்போதய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழகிப்போன ஒட்டுண்ணிகளாக ஆகியுள்ளனர். அதனால் மக்களால் வெறுத்தொதுக்கப் படுபவர்களாக ஆகியுள்ளனர். இத்தகைய கட்சி மற்றும் அரசு எந்திரங்களைக் கொண்டு தற்போது உலகளவில் பூதகரமாக வளர்ந்துவரும் முதலாளித்துவ நெருக்கடி சீனாவில் எதிர் காலத்தில் தோற்றுவிக்கவிருக்கும் தாக்கத்தை அவர்களால் சிறிதளவு கூட எதிர்கொள்ள முடியாது.

முதலும் இறுதியுமான அமைப்பு முதலாளித்துவமல்ல

முதலாளித்துவம் தான் இனிமேல் நின்று நிலவப்போகும் ஓரே சமூக அமைப்பு என்ற அறிவியல் உண்மைக்குப் புறம்பான கருத்தை நிலைநாட்டுவதையே ஓரே பிடிமானமாக முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் கொண்டுள்ளனர். அதனைத் தக்கவைக்கப் பல தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மாவோவின் பெரும் பாய்ச்சல் திட்டம் அமல்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அத்திட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சோசலிசத் தன்மை வாய்ந்த பொருளாதார வளர்ச்சியை ஏறெடுத்தும் பார்க்காமல் அதனால் மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களையும் உயிரிழப்புகளையும் மட்டும் அவர்கள் இன்றும் முன்னிலைப் படுத்துகின்றனர். அதிலும் கூடச் சிறிதளவும் நாணயமின்றி பெரும் பாய்ச்சல் திட்டத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை மிகப்பெரிதாகக் காட்டுவதற்காக இயற்கையாக ஆண்டுதோறும் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்துப் பெரிதுபடுத்திக் காட்டி உலகம் முழுவதும் பெரும் பாய்ச்சல் குறித்து ஒரு பெரும் பீதியை இப்போதும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

சோவியத் யூனியனிலும் பிற சோசலிஸ்ட் நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சியடைந்த போது அதற்கான காரணம் ஸ்டாலினுக்குப் பின் வந்த தலைவர்கள் அந்நாடுகளை சோசலிசப் பாதையிலிருந்து தடம் புரளச் செய்ததே என்ற உண்மையை மூடிமறைத்து அது சோசலிசத்தின் வீழ்ச்சியே என்று காட்டுகின்றனர். தற்போது அப்பட்டமான முதலாளித்துவப் பாதையில் சீனப் பொருளாதாரத்தை வழிநடத்தத் தொடங்கிய டெங்சியோபிங்கின் கருத்துக்களுக்குப் பட்டுக்குஞ்சம் கட்டிச் சீர்திருத்தம் என்று பெயரிட்டு அது மிகப்பெரும் வளர்ச்சியைச் சீனாவில் ஏற்படுத்தி உலகின் இரண்டாவது பெரும் தொழில் வளர்ச்சியடைந்த நாடாகச் சீனாவை ஆகியுள்ளது என்று சித்தரித்துக் காட்டுகின்றனர். அதாவது கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தப்படும் ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாங்கள் மக்கள் முன் வைக்கவே செய்கிறோம் என்று காட்ட முயல்கின்றனர். அதாவது இதன் மூலம் தங்களது போலி நடுநிலைத் தன்மையைப் பராமரிக்க விரும்புகின்றனர்.

உண்மையில் மரபு ரீதியாகவே முதலாளித்துவமாக இருக்கும் ஜப்பானும் புதிதாக முதலாளித்துவத்திற்கு டெங்சியோபிங்கினால் மாற்றம் செய்யப்பட்டுள்ள சீனாவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிரம்பித்ததும்பும் பலதரப்பட்ட நெருக்கடிகளுக்கான வாய்ப்புகளைக் கொண்டவையாகவே உள்ளன. ஏனெனில் அவற்றின் பாதை நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே முடியாத முதலாளித்துவப் பாதை. எனவே அவற்றின் முன் பூதகரமாக எழுந்து நிற்கப்போவது வளர்ச்சி என்பதைக் காட்டிலும் புதுப்புது வகை நெருக்கடிகளே. அதாவது மாவோவின் காலம் வரை மக்கள் கண்களுக்குத் தென்பட்டிராத வாழ்க்கை சூனியமானது என்ற விரக்தி மனநிலை தற்போதே சீன மக்களிடம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. எதிர்காலம் நிச்சயமில்லாதது என்ற முறியடிக்கப்பட்டவர்களிடம் தோன்றும் மனநிலை வெகு வேகமாகச் சீன சமூகத்தில் வளர்ந்து கொண்டுள்ளது. எனவே சீனாவின் இந்த வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவதற்கு இடதுசாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

Pin It

கல்விமானுக்குரிய கெளரவத்தை நிரூபித்தார் பேரா.கராசிமா

நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டு முக்கிய விசயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று அதன் நிரந்தர அங்கங்களான போலீஸ், ராணுவம், நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றிற்கென்று தனித்தனி அலுவல்களை வகுத்துக் கொடுப்பது. இரண்டு அவற்றில் ஒன்றின் அதிகாரவட்டத்திற்குள் மற்றொன்று மூக்கை நுழைக்கக் கூடாது என்ற அடிப்படையைப் பேணிப் பராமரிப்பது. அதாவது அவற்றின் தனித்தனி அதிகாரங்களைப் பராமரிப்பது.

ஆனால் நடைமுறையில் இந்த இரண்டு விசயங்களும் முழு அளவில் முதலாளித்துவ ஜனநாயகங்கள் எவற்றாலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. நிர்வாகத்தின் தலையீடு குறிப்பாக நீதி அமைப்பின் மேல் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். வளர்ச்சியடைந்தவை என்று கூறப்படும் ஜனநாயகங்களில் அத்தலையீடு அளவு ரீதியாகக் குறைவாகவும் அத்தனை வெளிப்படையாக இல்லாமலும் இருக்கும். வளர்ச்சியடையாத ஜனநாயகங்களில் அளவு ரீதியாக அதிக அளவிலும் பல சமயங்களில் மறைக்க இயலாத அளவிற்கு வெட்டவெளிச்சமாகவும் இருக்கும்.

இந்த மூன்று நிரந்தர அங்கங்களில் முதல் அங்கமான போலீஸூம் இராணுவமுமே உண்மையில் எப்போதுமே அரசாக விளங்கும். இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி. ஏனெனில் அரசுகளின் தோற்றம் வர்க்கங்கள் சமூகத்தில் உருவான பின்பு ஏற்பட்டதே. அளவில் சிறியதாகவும் பொருளாதாரம் மற்றும் அதிகார ரீதியாக வலுவானதாகவும் இருக்கும் ஒரு வர்க்கம் மிகப்பெரும்பான்மையானதாக இருக்கும் மற்றொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு என உருவாக்கப்பட்டதே அரசு. எனவே அரசு எந்திரங்களில் அடக்குமுறைத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் காவல்துறையும் இராணுவமுமே மிகமிக அடிப்படைத்தன்மை வாய்ந்தவை. நெருக்கடிச் சூழ்நிலைகளில் அவை மட்டுமே அரசாக இருக்கும் அல்லது ஆகிவிடும்.

இதற்கு அடுத்ததாக இருக்கும் நிர்வாகத்தின், நீதி அமைப்பின் மீதான தலையீடு தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும். அதன் உச்சகட்டமாக நீதி அமைப்பு நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதாக ஆகும் போக்கு பல ஜனநாயகங்கள் என்று கூறப்படும் சமூக அமைப்புகளில் இப்போதும் இருந்து கொண்டேயுள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் நிர்வாகம் அதிகாரம் படைத்ததாக இருப்பது மட்டுமல்ல. நீதி அமைப்பு உள்பட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கும் அதிகாரமும் அதன் கைவசமே உள்ளதனாலும் ஆகும்.

குடும்பத்தில் தொடங்கி ஸ்தாபனங்கள் வரை யார் கையில் நிதி உள்ளதோ அவரே சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்பதே எழுதப்படாத நியதி. இந்த நிதி ஆதாரம் மூலமான கட்டுப்பாடு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளக் கூடிய கட்சிகளுக்குள்ளும் கூட இருக்கும். உரிய விழிப்புணர்வுடன் அப்போக்கு களையப்படாவிட்டால் உண்மையான கம்யூனிஸ்ட் இயக்கமாக வளர விரும்பும் அமைப்புகளும் கூட அதன் பாதிப்பிலிருந்து தப்ப முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கூறிக்கொள்ளக் கூடிய பல கட்சிகளில் அனைத்து வெகுஜன அமைப்புகளிலும் செல்வாக்கு மிக்கதாக விளங்குவது தொழிற்சங்கமாகும். ஏனெனில் அக்கட்சியின் மாணவர், இளைஞர், மகளிர், விவசாயிகள் அமைப்புகளைக் காட்டிலும் சந்தா மூலமாகவும் நன்கொடைகள் மூலமாகவும் கட்சிக்குப் பொருளாதார ரீதியில் மிக அதிகம் உதவக் கூடிய அமைப்பு அதுவே. அந்தப்பண வலிமையே அதற்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவத்திற்குக் காரணம்.

கல்விமான்கள் காயப்பட்டுவிடக் கூடாது

நிர்வாகத்தின் இத்தகைய தலையீடு குறிப்பாகக் கல்வி சார்ந்த அமைப்புகளைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவே மருத்துவ, தொழில்நுட்ப, கலைக் கல்வித் துறைகளைப் பராமரிப்பது அரசு நிர்வாகத்தின் நேரடி அதிகாரத்தில் வைத்திருக்கப்படாமல் அவை கல்விமான்களைக் கொண்டே பராமரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு இந்திய மருத்துவ கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றால் பராமரிக்கப்படும் முறை பெயரளவிலேனும் அமலில் உள்ளது.

இதன் பின்னணியில் உள்ள கண்ணோட்டம் உண்மையிலேயே உயர்வானது. அதாவது எந்திரகதியில் செயல்படும் தன்மைவாய்ந்த அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்க மனநிலையே மிதமிஞ்சியிருக்கும். உணர்வு படுத்தப்படாத பாமர மக்களை எவ்வகை ஜனநாயக மனநிலையுமின்றி அதிகாரம் செய்து பழகிப்போன அரசு நிர்வாகத்தில் உள்ளோர் சமூகத்தின் அனைத்துப் பகுதியினரையும் அவ்வாறே நடத்த விரும்புவர்.

ஆனால் கல்வித்துறையில் இருப்போர் மற்றும் அத்துறையை நிர்வகிப்போரை அவ்வாறு நடத்துவது அனுமதிக்க முடியாத ஒன்றாகும். எந்திர கதியிலான அதிகாரவர்க்க அணுகுமுறை கல்வித்துறையிலிருக்கும் அறிஞர்களையும் கல்விமான்களையும் நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டால் அது அவர்களைக் காயப்படுத்திவிடும்; சில சமயங்களில் மன ரீதியாக ஊனமும் கூடப் படுத்திவிடும். அதனால்தான் கல்விமான்களால் கல்வித்துறைகள் நிர்வகிக்கப்படும் நடைமுறை உருவாக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் பார்த்தால் மட்டுமே சமீபத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு குறித்து தற்போது பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் பல விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது தற்போது ஹிந்து பத்திரிக்கையில் அடுத்தடுத்து வெளிவந்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத் தலைவரின் அறிக்கை, அந்த அறிக்கையில் உள்ள சில விசயங்கள் உண்மைக்கு மாறானவை என்று கூறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தரின் இடைத்தலையீட்டு விளக்கம், ஐ.ஏ.டி.ஆர். அமைப்புத் தலைவரின் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கும் அவ்வமைப்பின் இரு உதவித் தலைவர்களின் அறிக்கை ஆகியவற்றையும், அவை வெளியிடப்பட்டுள்ளதன் பின்னணியையும் புரிந்து கொள்ள முடியும்.

தமிழக மக்களில் விசயமறிந்த பகுதியினர் உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு மட்டுமே தமிழ் குறித்த எட்டு மாநாடுகளை 1968 - ல் தொடங்கி 1995 - வரை நடத்திக் கொண்டிருந்தது என்பதை அறிவர். ஆனால் சமீபத்தில் கோவையில் நடந்த மாநாடு மட்டும் உலகத்தமிழ் மாநாடு என்ற பெயரில் நடைபெறவில்லை; மாறாகச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடந்தது. இதையும் அவர்கள் அறிவர்.

அதற்கான காரணம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரும் அந்நாட்டின் மிகமுக்கியப் பல்கலைக்கழகமான டோக்கியோ பல்கலைக்காகத்தின் ஒய்வுபெற்ற பேராசிரியருமான, உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கராசிமா அவர்கள் அதனை நடத்த முன்வராததேயாகும். இதனைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதுவே தமிழின் பெயரில் ஒரு மாநாட்டை செம்மொழி என்ற அந்தஸ்து தமிழுக்கு வழங்கப்பட்டதைப் பயன்படுத்தி செம்மொழி மாநாடு என்ற பெயரில் தமிழக அரசு மிகுந்த பொருட்செலவில் நடத்தியதன் பின்னணி.

ஏன் முன்வரவில்லை

உலகத்தமிழ் மாநாடாக அதனை நடத்த ஐ.ஏ.டி.ஆர் - ன் தலைவர் கராசிமா ஏன் முன்வரவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருந்த நிலையில் ஒரு பொறுப்புள்ள பேராசிரியர் என்ற ரீதியில் அதற்கான தன்னிலை விளக்கத்தை திரு.கராசிமா அவர்கள் ஹிந்து இதழில் 23.07.2010 - ல் ஒரு கட்டுரை மூலம் கூறியிருந்தார். அதாவது இதுபோன்ற சர்வதேச அளவிலான தமிழ் அறிஞர்களைக் கொண்டு அவர்களின் ஆழ்ந்த தீர்க்கமான கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் தன்மையும் தரமும் வாய்ந்ததாக தமிழ் மொழிக்கான ஒரு மாநாட்டினை நடத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் ஓராண்டு காலமாவது அதன் தயாரிப்புகளுக்கு வேண்டும்; அந்த அடிப்படையில் அத்தகையதொரு மாநாட்டை 2010 டிசம்பர் மாதத்திலோ அல்லது 2011 ஜனவரி மாதத்திலோ தான் நடத்த முடியும் என்பது அவரது தீர்க்கமான கருத்தாக இருந்துள்ளது. ஆனால் அம்மாநாட்டை நடத்த விரும்பிய தமிழக அரசோ 2011 - ல் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் 2010 ஜீன் மாதத்திற்குள் இதனை முடித்துவிட வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. 6 மாத காலத் தயாரிப்பில் உரிய, அறிவு செறிந்த, கோட்பாட்டுத் தரத்துடன் அதனை நடத்த முடியாது என்று திரு.கராசிமா தமிழக அரசுக்குப் பதிலளித்திருக்கிறார்.

முதல் மாநாடு

அத்துடன் ஒரு கல்விமானுக்கு இருக்கக்கூடிய விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையோடு அவர் உலகத்தமிழ் ஆராய்ச்சிப் பேரவை தோன்றி வளர்ந்த வரலாற்றோடு இன்று அவ்வமைப்பு எதிர் கொண்டிருக்கும் நிலையையும் தமிழக மக்களுக்கு அக்கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். 1964 - ம் ஆண்டு புது டெல்லியில் கூட்டப்பட்ட கீழ்த்திசை நாட்டைச் சேர்ந்தவர்களின் சர்வதேச மாநாடு எவ்வாறு 1968 - ல் சென்னையில் நடைபெற்ற முதல் உலகத்தமிழ் மாநாட்டிற்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது என்பதை அவர் அக்கட்டுரையில் கூறியிருந்தார்.

1967 - ல் ஏற்பட்ட சி.என்.அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பிரகடனப்படுத்திய திராவிட எழுச்சியைப் பிரதிபலிப்பதாக அம்மாநாடு இருந்ததையும் அவர் அக்கட்டுரையில் கூறியிருந்தார். அம்மாநாட்டிற்கான அணிதிரட்டல் திராவிட எழுச்சியைப் பிரதிபலிப்பதாக இருந்த போதும் அறிவு சார்ந்த விதத்திலும் அறிவுசால் கோட்பாட்டின் அடிப்படையிலும் அம்மாநாடு எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதையும் அதில் எடுத்துக் காட்டியிருந்தார்.

கிடப்பில் போடப்பட்ட தொகுப்புகள்

அதன் பின்னர் மதுரையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 5 - வது உலகத்தமிழ் மாநாடு தொடங்கி தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளும் எவ்வாறு அரசியல் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கம் கொண்டவைகளாக இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளாலும் நடத்தப்பட்டன என்பதையும் அவர் யாரையும் புண்படுத்தாத கண்ணியம் மிக்க மொழியில் எடுத்துக் கூறியிருந்தார். இவ்வாறு தமிழ் மொழியின் பெயரிலான மாநாடுகளில் கட்சி அரசியல் செலுத்திய மேலாதிக்கம் மொழி வளர்ச்சியைக் கருத்திற்கொள்ளாது எவ்வாறு கட்சி அரசியலை முன்னிலைப் படுத்தியது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டினையும் முன் வைத்திருந்தார். அதாவது 1995 - ல் தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் எவ்வாறு நூலகங்களுக்கும் மற்ற பிற அறிவுசால் நிறுவனங்களுக்கும் கொடுக்கவும் விற்கவும் படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன என்பதையும் கூறியிருந்தார்.

பெரும் மாநாடுகளைக் காட்டிலும் அதிகப் பலன் தரும் சிறு கூட்டங்கள்

இத்தகைய பெரிய மாநாடுகள் அவ்வப்போது தேவை என்றாலும் மொழி வளர்ச்சி என்ற கோணத்திலிருந்து பார்த்தால் மொழி அறிஞர்களைக் கொண்ட சிறுசிறு கூட்டங்கள் மொழியின் வளர்ச்சிக்கு உண்மையில் உதவுபவையாக எவ்வாறு இருந்துள்ளன என்பதை டொரொன்டோ பல்கலைக்கழகம் நடத்திய தமிழாய்வுக் கருத்தரங்கத்தை மேற்கோள் காட்டி அக்கட்டுரையில் அவர் நிறுவியிருந்தார். அதைப் போலவே சில பட்டறைகள், கருத்தரங்குகள் போன்றவை தமிழின் பல்வேறு துறைகள் குறித்துக் கடந்த பத்தாண்டுகளில் உலகின் பல இடங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டாலும் அவை எவ்வாறு மொழியின் வளர்ச்சி என்ற ரீதியில் பயனுள்ளவையாக இருந்துள்ளன என்பதையும் அதில் அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

அத்துடன் இன்று தமிழக ஆளுங்கட்சிகளின் அரசியல் மேலாதிக்கம் செல்வாக்கு செலுத்துபவைகளாக உலகத்தமிழ் மாநாடு போன்ற பெரிய அளவிலான மாநாடுகள் ஆகிவருவதால் அவை தமிழ் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் ஆக்கபூர்வமான உயரிய பங்கினை ஆற்ற இயலாதவையாக ஆகி வருவதையும் எடுத்துக்கூறி உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் எட்ட வேண்டிய உயரத்தை எட்டி அது ஆற்ற வேண்டிய வரலாற்றுப் பணியினை ஆற்றி முடித்து விட்டது; எனவே இனி அரசியல் தலையீடற்ற கல்வி மான்களைக் கொண்ட ஒரு புது அமைப்பாக அது மாற்றப்பட்டு அதன் செயல்பாடு முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விதத்திலானதாக ஆக வேண்டும் என்ற அவரது விருப்பத்தினையும் தெரிவித்திருந்தார். அதனைச் செய்ய முன்வருமாறு இளைய தலைமுறை தமிழ் அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் அறைகூவல் விடுத்திருந்தார்.

இந்தக் கட்டுரையில் கூறியிருந்த விசயங்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத வேறொரு நாட்டுப் பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற சிறப்புமிகு பேராசிரியர் ஒருவரின் முழுக்க முழுக்க நடுநிலைத்தன்மை வாய்ந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காத ஒன்றாகவே படிப்பவர் அனைவருக்கும் பட்டது. இது எழுதப்பட்ட விதம் எள்ளளவு கூட யாரையும் புண்படுத்தும் தன்மை வாய்ந்ததாகவோ ஒருதலைப் பட்சமானதாகவோ இருக்கவில்லை. மேலும் அரசியல் குறித்த ஒரு குருட்டுத்தனமான வெறுப்பும் அதில் இருக்கவில்லை. 1968 - ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டின் போது முதல் தி.மு.க. அரசு அமைந்த பின்னணியில் தமிழகத்தில் நிலவிய எழுச்சி மனநிலை குறித்து எந்த எதிர்மறை மனநிலையும் அவரிடம் இருக்கவில்லை என்பதையே அது பிரதிபலித்தது.

ஆனால் எழுத்துக்கள் எவ்வளவு நடுநிலைத் தன்மையைக் கொண்டவையாக இருந்த போதும் சில விசயங்கள் சிலரைச் சுடவே செய்கின்றன. ஏனெனில் அவை உண்மையாய் இருப்பதனால் அவர்களைச் சுடுகின்றன. அதனை 25.07.2010 அன்று தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் இடைத் தலையீட்டு அறிக்கையில் காணமுடிந்தது. அது கராசிமா கட்டுரையின் சில கருத்துக்களைக் கபடத்தன்மை வாய்ந்தது என்று கூடக் குற்றம் சாட்டியிருந்தது.

இடைத் தலையீட்டு அறிக்கை

அதாவது கராசிமா அவரது கட்டுரையில் 1995 - ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கபட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்புகள் 2005 - ம் ஆண்டே தயாராகிவிட்டது என்றும் அவற்றை வெளியிடுமாறு அடுத்தடுத்துப் பலமுறை தான் கேட்டுக்கொண்ட பின்னரும் கூட வெளியிடப்படாமல் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலேயே வைக்கப்பட்டிருந்தன என்றும் கூறியிருந்தார். அது கபடத்தன்மை வாய்ந்ததாக தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தரால் வர்ணிக்கப்பட்டது.

அதாவது அந்தத் தொகுப்புகளின் வெளியீடு குறித்த அரசாணை 23.09.2009 அன்றே வெளியிடப் பட்டுவிட்டதாகவும் அந்த ஆணை வெளியிடப்படுவதற்கு முன்பே அதாவது 28.07.2008 - லேயே தமிழ்ப் பல்கலைக்கழகம் அத்தொகுப்புகளை சர்வதேசத் தமிழாய்வு நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், பள்ளிக் கல்வித்துறை 22.02.2010 அன்று அன்றைய அரசாணையின் மூலம் 23.09.2009 - ம் தேதிய அரசாணையை அமலாக்கத் தொடங்கி விட்டதாகவும் துணைவேந்தர் தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார்.

எழும் கேள்விகள்

இது தவிர்க்க முடியாமல் பல கேள்விகளைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பே அதனை விநியோகிக்க முடியுமென்றால் அவ்வரசாணையைக் குறிப்பிட்டுக் காட்டுவதன் நோக்கமென்ன? பரந்த அளவில் அனைவரிடமும் அத்தொகுப்புகள் சென்றுசேர வழிவகுப்பது 22.02.2010 அரசாணையே. அந்த ஆணை முதலமைச்சர் உலகத்தமிழ் மாநாடாக இம்மாநாட்டை நடத்த கராசிமாவைக் கேட்டுக் கொண்டதற்குப் பின்பு அதாவது 2010 ஜனவரிக்குப் பின்பு தான் வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே 23.09.2010 அரசாணை இல்லாமலே கூட தொகுப்புகளை அமைப்புகளுக்கு விநியோகிக்க முடியும் என்பது 28.07.2008 அன்று ஐ.ஏ.டி.ஆர். அமைப்பிற்கு தொகுப்புகள் விநியோகிக்கப் பட்டதிலிருந்தே தெளிவாகிறது. அப்படியிருந்தும் 2005 - ல் கராசிமா கேட்டுகொண்ட போதே அவை வெளியிடப்படாததன் காரணம் என்ன?

அதாவது அரசு இதுபோன்ற தமிழாராய்ச்சி நூல்களை வெளியிடுவதில் அக்கறையுடன் தான் இருந்தது என்பதைக் காட்டுவதற்கு அரசாணை குறித்துக் கூறுவது அவசியமாக இருக்கிறது என்பதற்காகவே இங்கு அரசாணை குறிப்பிடப்படுகிறது என்றே தோன்றுகிறது. மேலும் தமிழ் வளர்ச்சிக்காகவே இருக்கும் ஒரு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவதில் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தாமதித்தது ஏன் என்ற கேள்வி இயற்கையாகவே நம் மனதில் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில் இத்தகைய தொழில்நுட்ப ரீதியிலான பதில்கள் இதுபோன்ற மாநாடுகள் தமிழ் வளர்ச்சிக்கென அடிப்படையில் நடத்தப்படுவதில்லை; மாறாக அரசியல் செல்வாக்கை மேம்படுத்தும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன என்ற கருத்தை ஆதாரப்பூர்வமாக மறுப்பனவாக இல்லை.

அடுத்தபடியாக 7.8.2010 - ல் செம்மொழி மாநாட்டின் துணைத் தலைவர்கள் இருவர் திரு.கராசிமா அவர்களின் கட்டுரைக்கு மறுப்பளிக்கும் கட்டுரை ஒன்றினை ஹிந்து நாளிதழில் எழுதியிருந்தனர். அக்கட்டுரை இந்த மாநாடு எத்தனை சிறப்பாக நடைபெற்றது என்ற புகழாரத்தோடு தொடங்கியது. தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாடு எப்போதுமே இணைத்தன்மை வாய்ந்த இரு கூட்டங்களாகவே நடைபெற்றுள்ளது; அதாவது ஒருபுறம் அறிஞர் பெருமக்களைக் கொண்ட கூட்டமாகவும் மறுபக்கம் பொதுமக்கள் கலந்து கொள்ளும் கூட்டமாகவுமே அனைத்துக் காலங்களிலும் நடைபெற்றுள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது. மேலும் இந்த முறை அறிவுசால் நடவடிக்கைகள் பொது நிகழ்ச்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட விதத்திலேயே நடைபெற்றன என்றும் அக்கட்டுரையில் அவ்விரு அறிஞர் பெருமக்களும் எடுத்துரைத்துள்ளனர்.

மேலும் அவ்விரு துணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.வி.சி.குழந்தைசாமி அவர்கள் 1999 பிப்ரவரி 18 - ம் தேதிய கடிதத்தின் மூலம் தமிழ் நாட்டில் 9 - வது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்த முன்வருமாறு கராசிமாவைக் கேட்டுக் கொண்டதாகவும் அரசியல் காரணங்களுக்காக இம்மாநாடுகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன என்ற வறட்டுப்பிடிவாதக் கண்ணோட்டத்துடன் இரண்டு முறை தமிழகத்தில் மாநாடுகள் நடத்துவது சரியில்லை என்று கராசிமா கூறிவிட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் முதல்வரே கேட்டுக் கொண்ட நிலையிலும் இம்மாநாட்டிற்கு ஒத்துழைப்புத்தர கராசிமா மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிரந்தரக் கட்டிடம் என்ற குதிரையின் முன் கட்டப்பட்ட காரட்

தமிழக அரசு முன்வைத்த ஜூன் 2010 - க்கும் கராசிமா முன்வைத்த டிசம்பர் 2010 - க்கும் இடையிலிருக்கக்கூடிய 6 மாத காலம் மிகச்சிறிய காலமே; அது உலகத்தமிழ் மாநாடு நடத்துவதை மறுப்பதற்குப் போதிய காரணம் ஆகாது என்றும் தமிழக அரசினை உலகத்தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கென ஒரு நிரந்தரக் கட்டிடத்தை கட்டித்தருமாறு கூட இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்யும் அழைப்பினை ஏற்றுக் கொள்வதன் மூலம் செய்திருக்க முடியும் என்றும் டாக்டர் வி.சி. குழந்தைசாமி கூறியுள்ளார். அத்தகைய உறுதி மொழியை அரசு தரத் தயாராக இருந்தும் கராசிமா அதனைத் தனது நடவடிக்கை மூலம் பெறத் தவறியதோடு அது நிறைவேறவிடாமலும் செய்து விட்டார் என்றும் அக்கட்டுரையில் கட்டுரையாளர் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் மாநாடு நடத்த ஒத்துழைப்புத் தராதது கராசிமா - வின் தனிப்பட்ட முடிவு; அத்தகைய முடிவினை எடுக்க அவருக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். இவ்விசயத்தில் அவர் மத்தியக் கவுன்சிலையும் நிர்வாகக் கவுன்சிலையும் கலந்து ஆலோசிக்கவில்லை; இந்நிலையில் மாற்றப்பட வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சி அமைப்பல்ல; அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் கராசிமா - வே என்றும் கூறியுள்ளனர்.

இவர்களது கூற்றிலிருந்தும் தெரிய வருவது பேராசிரியர் கராசிமா எப்போதுமே மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்திலேயே உறுதியாக இருந்திருக்கிறார்; அரசியல் செல்வாக்கிற்காக மொழியின் பெயரில் நடைபெறும் மாநாடுகள் திசைதிருப்பப் படும்போது ஒரு கல்விமான் என்ற ரீதியில் அதன் பாலான அவருடைய தயக்கத்தினைத் தவறாமல் அனைத்து சமயங்களிலும் தெரியப்படுத்தியே வந்திருக்கிறார் என்பதே. மேலும் இக்கட்டுரையாளர்கள் மாநாடு மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியினைத் தருவதாகவும் அமைந்தது என்று கூறியுள்ளதும் பொருளற்றதாக உள்ளது.

ஒரு மாநாட்டில் மக்கள் மகிழ்வுறுகிறார்களா என்பது குறித்துக் கவலைப்பட வேண்டியது அவர்களிடமிருந்து எப்படியாவது வாக்குகளைப் பெற வேண்டும் என்று ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்குகளாகக் காத்திருக்கும் அரசியல் வாதிகளே தவிர கல்விமான்கள் அல்ல. உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் என்று பெயர் வைத்துக்கொண்டு தொடர்ந்து இரண்டுமுறை தமிழகத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு மாநாடு நடத்துவது மொழி வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தை முதன்மையாகக் கொண்டிருப்பவர்களுக்கு உடன்பாடின்மையை ஏற்படுத்தியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?. ஒன்றைக் கேட்டுக் கொள்பவர் யாராக இருந்தாலும் கல்விமான்களைப் பொறுத்தவரை அவர்கள் அறிவு எதைச் சரியயன்று சொல்கிறதோ அதையே மனதிற்பதித்து “யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்றே இருக்க வேண்டும். அதுவே அறிவுசால் பெருமக்களுக்கு இருக்கவேண்டிய ஆனால் தமிழகக் கல்விமான்களுக்கு இல்லாமல் போய்விட்ட இலக்கணம்.

எது ஜனநாயக நடைமுறை

மத்திய கவுன்சிலையும் நிர்வாகக் குழுவினரையும் அவர் கலந்தாலோசித்தாரா என்ற கேள்வி ஏதோ ஜனநாயக நடைமுறையைக் கராசிமா கடைப்பிடிக்கவில்லை என்ற தொனியில் எழுப்பப்படுகிறது. மாநாட்டை நடத்தக் கேட்டுக் கொள்பவர் இவ்விரு கவுன்சில்கள் ஒன்றின் உறுப்பினராக இருந்து அவர் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்து மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதாக உள்ளது என்பதை நிரூபிக்கும் விதத்தில் பெரும்பான்மையினரிடம் ஒப்புதல் பெற்றுக் கூட்டத்தைக் கூட்ட வற்புறுத்தும் போது அதற்கு கராசிமா மறுத்திருந்தால் அப்போது அவரை ஜனநாயக நடைமுறையை மீறியவர் எனக் கூற முடியும்.

மாறாக இக்கட்டுரையில் செம்மொழி மாநாட்டின் உதவித் தலைவர்கள் இருவரும் கூறும் விதத்தில் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பெரும்பான்மைக் கவுன்சில் உறுப்பினர்களிடம் கையயாப்பம் பெற்று அதைத் தமிழக முதல்வரிடம் கொடுத்த அவர்கள் ஜனநாயக முறைப்படி தலைவர் கராசிமாவிடம் அதைக் கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கக் கேட்டிருக்கலாமே?. மேலும் இதே கருத்தை அது தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவருடையதாகவும் இருந்திருந்தால் தமிழ் நாட்டைச் சேர்ந்திராத வேறொரு நாட்டு அறிஞர் மூலமாகக்கூடக் கூற வைத்திருக்கலாமே. அப்போது அது விருப்பு வெறுப்பற்ற ஒன்று; நியாயத்தைத் தவிர வேறெதற்கும் அடிபணியாதத் தன்மையைக் கொண்டது என யாரும் சொல்லாமலேயே அனைவராலும் புரிந்து கொள்ளப் பட்டிருக்குமே.

இறுதியாக அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் இவ்விருவரும் கூறியிருக்கும் கருத்தான மாற்றப்பட வேண்டியது ஐ.ஏ.டி.ஆர். அமைப்பல்ல அதன் தலைவரே என்ற கருத்து எத்தனை ஜனநாயகப்பூர்வமானது? இதனை முன்வைப்பதற்கு எத்தனை பொதுக்குழு நிர்வாகக்குழு உறுப்பினர்களின் வாய் மூலமான அல்லது எழுத்து மூலமான ஒப்புதல்களை இவர்கள் பெற்றனர் என யாரும் கேட்கலாமல்லவா?

உண்மையில் அவரது கட்டுரையின் மூலம் ஒரு கல்விமான் என்ற ரீதியில் கராசிமா உயர்ந்து நின்றார் என்றால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இடைத்தலையீட்டு அறிக்கை மற்றும் 7.8.2010 - ல் ஹிந்து நாளிதழில் வெளியான செம்மொழி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உபதலைவர்களின் கட்டுரை ஆகியவற்றைப் படித்த பின்னர் படிப்பவர் மனதில் விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத்தன்மை மற்றும் அறிவுசால் போக்குகளில் சிறிதளவும் சமரசம் செய்துகொள்ளாத கல்விமானாக கராசிமா முன்பிருந்ததைக் காட்டிலும் இன்னும் உயர்ந்தே நிற்கிறார்.

மொத்தத்தில் நாம் இக்கட்டுரையின் ஆரம்பப் பத்திகளில் விவரித்த நடுநிலை அமைப்புகளின் மீதான அரசு நிர்வாகத்தின் தலையீடு கராசிமா விசயத்திலும் கையாளப்பட்டுள்ளது என்பதே இதன்மூலம் நிரூபணமாகிறது. நூற்றுக்கணக்கான கோடிகளை சுயவிளம்பர நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட செம்மொழி மாநாட்டிற்குச் செலவு செய்த தமிழக அரசு அதில் பத்தில் ஒரு பகுதியே ஐ.எ.டி.ஆர். அமைப்பிற்கு நிரந்தரக் கட்டிடத்தை கட்டித்தரப் போதுமானதாக இருந்தபோதும் நிபந்தனையின்றி அதனைக் கொடுக்க முன்வரவில்லை. அதைக் கொடுப்பதற்கு முன் நிபந்தனையாக மொழி வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி சுயலாப அரசியல் நோக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாநாடு நடைபெற அதன் தலைவர் அனுமதி வழங்க வேண்டும் என்பதையே முன்வைத்துள்ளது.

எழுதப்படாத நியதியாகிவிட்ட சுயவிளம்பரம்

தன்வசமுள்ள நிதி ஆதாரத்தைக் கொண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளுக்குக் கட்டிடம் கட்டித் தருகிறேன், இடம் ஒதுக்குகிறேன் ஆனால் இதையயல்லாம் எப்போது செய்வேன் என்றால் எனது சுயவிளம்பரத்திற்குப் பயன்படும் போது மட்டுமே என்று நிர்ப்பந்தம் கொடுத்துப் பணிய வைக்கவும் அத்தகைய அதிகார அத்துமீறலுக்கும் பண வலிமைக்கும் அடிபணியாத ஒரு கல்விமான் மீது கல்விமான்களைக் கொண்டே குற்றம் சுமத்தச் செய்யவும் தன்னால் முடியும் என்று அரசு நிர்வாகம் காட்டியுள்ளதே இங்கு நிரூபணம் ஆகிறது.

இந்த மாநாடு மட்டுமல்ல பெரிய மனிதர்களுக்கென எடுக்கப்படும் அனைத்து விழாக்களும், மணி மண்டபங்களும் கூட அரசியல் ஆதாய நோக்குடன் சுயவிளம்பரம் செய்வதற்கு வசதியாகவே தமிழகத்தில் காலங்காலமாக நடைபெறுகின்றன. நெஞ்சு வரையிலான சிலைகளும் வெட்டி ஒட்டப்பட்ட அந்த அறிஞர்கள் குறித்த பத்திரிக்கைச் செய்திகளும் மட்டுமே அந்த மணி மண்டபங்களில் பெரும்பாலும் உள்ளன.

அடுத்து அவற்றைக் கட்டியது யார் ஆட்சியில் எந்த முதல்வர் அதனைத் திறந்து வைத்தார் என்பன போன்ற விசயங்கள் அங்கு இடம்பெறுகின்றன. விழா எடுக்கவோ சிலை வைக்கவோ ஒரு தலைவர் கிடைத்தால் அதன்மூலம் மூன்று வகை ஆதாயங்கள் ஆளுங்கட்சிக்குக் கிடைக்கின்றன. ஒன்று விழா மூலமான விளம்பரம், இரண்டு அதை யார் நிறுவினார்கள் என்ற நிரந்தரக் கல்வெட்டு அல்லது அடிக்கல் மூலமான நிரந்தர விளம்பரம், மூன்று அந்தத் தலைவரது தொண்டர்களின் ஆதரவு என்ற இந்த மூன்று வகை ஆதாயங்கள் கிடைக்கின்றன.

மன்னராட்சிக் காலத்தில் அவர்கள் குறித்த ஒரு பிரமிப்பை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்பதற்காக அரசர்கள், பல திருவிழாக்களையும் அவர்கள் வீட்டு வைபவங்களையும் நடத்தினர். அதனை ஒத்த விதத்திலேயே மொழியின் பெயரில் நடத்தப்படும் மாநாடுகளும், தலைவர்களை நினைவுபடுத்துவது என்ற சாக்கில் அவர்களுக்காகக் கட்டப்பட்டும் மண்டபங்களும் தற்போதைய ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுகின்றன. அதாவது அவற்றைக் கண்டு மக்கள் பிரமிக்கவேண்டும் என்ற மனநிலையுடனேயே செய்யப்படுகின்றன.

உண்மையிலேயே தமிழுக்காக இருப்பவர்கள் என்று காட்டுவதற்காக நடுநிலைத்தன்மை வாய்ந்தவர்கள் சிலரை அவர்கள் உருவாக்கும் அமைப்புகளுக்குப் பொறுப்பேற்பவர்களாக நியமிக்கின்றனர்; அவர்களைத் தங்களது செல்வாக்கு, பண, அதிகார பலங்களாலும் பதவி ஆசையை ஊட்டியும் தாங்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வருபவர்களாக ஆக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். பணத்தின் மூலம் அரசு நிர்வாகம் அரசின் பிற அங்கங்களின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது. அதைப்போல் ஐ.ஏ.டி.ஆர். போன்ற அமைப்புகளின் மீதும் அது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

அதற்கு அடிபணியாது நிமிர்ந்து நின்று கல்வி மானுக்குரிய கம்பீரத்தையும் கண்ணியத்தையும் உண்மையைத் தவிர வேறெதற்கும் அடிபணியாத உறுதித் தன்மையையும் தற்போது அதனை விட்டு விலகிச் சென்றுள்ள பேராசிரியர் நொபுரு கராசிமா பிரதிபலித்துள்ளார். அதன்மூலம் உண்மையிலேயே அறிவுசால் பெருமக்களைத் தவிர வேறுயாருக்கும் மசிந்து கொடுக்காத மாவீரனுக்குரிய மரியாதையைப் பெற அருகதையுள்ளவராக அவர் ஆகிறார்.

தமிழகத்தின் தற்போதைய வருந்தத்தக்க நிலை எதுவென்றால் அத்தகைய கல்விமான்களைப் பாராட்டக் கூடிய கல்விமான்கள் யாரும் இல்லாமல் போய்விட்டனர் என்பதே. அது மட்டுமல்ல நன்கறியப்பட்ட கல்விமான்கள் சிலரும் கூட அவர் எடுத்த நிலையை விமர்சிக்க ஆட்சியாளர்களுக்குப் பயன்படத் தயாராகவும் உள்ளனர் என்பதே. இல்லாவிடில் அவர் மாநாட்டை உடனடியாக நடத்த முன்வராததற்குக் காரணங்களாக முன்வைத்த -

1. அவை அரசியல் உள்நோக்கோடு நடத்தப்படுகின்றன.

2. அதற்குப் பயன்படும் விதத்தில் தமிழ்நாட்டில் இருமுறை தொடர்ந்து நடத்தத் தேவையில்லை.

3. இதுபோன்ற மாநாடுகளைத் தமிழ் வளர்ச்சிக்கு என்ற ரீதியில் நடத்தக் கால அவகாசம் தேவை.

4. உலக சம்ஸ்கிருத மாநாடு போன்றவை நடத்த இரண்டாண்டு கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

5. அரசியல் விளம்பரத்திற்குப் பயன்படும் தற்போது நடைபெற்றது போன்ற பெரிய மாநாடுகள் நடத்துவதற்குப் பதிலாக குறைந்த எண்ணிக்கையில் சிறந்த கல்விமான்களைக் கொண்டு குறைந்த செலவில் பல கூட்டங்கள் நடத்தலாம். மொழி வளர்ச்சி என்ற ரீதியில் அவை மிகவும் பலன் தரக் கூடியவைகளாக உள்ளன -

என்பன போன்ற விவாதங்களுக்கான ஆக்கப்பூர்வமான எதிர்க்காரணங்களை அறிவு ஜீவிகளுக்குரிய இலக்கணத்தோடு முன்வைத்திருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக பதிலளித்த கல்விமான்கள் அதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக

1. அவரே பதவியை விட்டு அகற்றப்பட வேண்டியவர்.

2. உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்திற்குக் கட்டிடம் கிடைப்பது அவரால் கெட்டுப்போய் விட்டது.

3. யாரைக் கேட்டு மாநாடு நடத்த முன்வராத முடிவை எடுத்தார்.

என்ற கேள்விகளையே அந்தக் கல்விமான்கள் எழுப்பியுள்ளனர். உண்மையில் இக்கேள்விகள் அரசு நிர்வாகத்தில் இருப்போர் எழுப்பும் கேள்விகளை ஒத்தவையாக இருக்கின்றனவேயன்றி மொழி மற்றும் அறிவு வளர்ச்சியில் அக்கறை கொண்ட கல்விமான்கள் எழுப்பும் கேள்விகளைப் போன்றவையாக இல்லை.

ஜனநாயக உலகம் முழுவதும் அரசு நிர்வாக எந்திரத்தால் கல்விமான்களும் அறிவாளிகளும் காயப்படுத்தப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக கல்வி நிறுவனங்களை ஆட்சி செய்யும் அமைப்புகள் கல்விமான்களைக் கொண்டே நடத்தப்பட வேண்டும் என்ற நியதியை வலியுறுத்துகையில் நமது மாநிலத்தில் ஊரறிந்த கல்விமான்களே சக கல்விமான் விசயத்தில் அரசின் நிர்வாக எந்திரம் போல் செயல்படும் அவலநிலை நிலவுகிறது.

கல்விமான் போர்வையும் அதிகாரவர்க்க மனநிலையும்

இதுதவிர பேரா.கராசிமா அவர்கள் வேறு மொழி பேசுபவர்; வேறொரு நாட்டைச் சேர்ந்தவர். தமிழின் பால் அவருக்குள்ள ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாக உலகத்தமிழ் ஆராய்ச்சி மைய அமைப்பிற்குத் தலைவராக இருக்க இசைந்து செயல்பட்டவர். இங்குள்ள அரசியல் விசயங்கள் அவரது அக்கறைக்கு அப்பாற்பட்டவை. உண்மையான கல்விமான்கள் ஒப்புக்கொள்ளக் கூடிய மிகச் சரியான காரணங்கள் இருந்தாலொழிய பதவி நீக்கம் செய்யப்பட வேண்டியவர் அவரே என்பது போன்ற எதிர்மறைக் கருத்துக்களை முன்வைப்பது சரியான பண்பல்ல என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய விசயம். ஆனாலும் தமிழகக் கல்விமான்கள் அது போன்ற கருத்துக்களைத் தலை நிமிர்ந்து முன் வைக்கின்றனர். இப்போக்கு எங்கே பாரதிக்கு முன்பிருந்த புலவர்கள் அரசர்களுக்கு இச்சகம் பாடிக் காலம் தள்ளினார்களே அத்தகைய சூழ்நிலைக்குத் தமிழகத்தைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

Pin It

“மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்”

தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.

அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அதே விழிப்புணர்வுடன் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தலைவர்கள் இல்லாமல் போய்விட்டால் அந்தச் சரியான கண்ணோட்டங்களும் கூட அவற்றின் தீவிரத்தன்மையை இழந்து விடுகின்றன. அது மட்டுமல்ல, பல சமயங்களில் அக்கண்ணோட்டங்கள் படிப்படியாக நீர்த்துப்போய் விடவும் செய்கின்றன. அவ்வாறு நீர்த்துப்போன கருத்துக்கள் ஒன்றுமில்லால் ஆகிவிடுவதுமில்லை. அக்கருத்துக்களைக் கொண்ட இயக்கமென்று மார்தட்டிக் கொள்ளும் இயக்கங்கள் அவற்றை முறையாகக் கடைப்பிடித்து அதற்காகத் தற்பெருமை அடித்துக் கொண்டால் பரவாயில்லை.

ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தேவைப்படும் ஜீவனுள்ள போராட்டத்தை இயக்கத்திற்குள் பராமரிக்க முடியாமல் போய் அதன் காரணமாக பெயரளவில் அவற்றைக் கடைப்பிடிப்பது போல் அவை காட்டிக் கொள்ள மட்டும் செய்கின்றன. அக்கண்ணோட்டத்தையும் கருத்தையும் உருவாக்கியவர்களோடு இணைத்து நின்றவர்களைப் போல் தரமிக்கவர்களைக் கொண்டவையாக அவ்வியக்கங்கள் தங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மிகமோசமான வேசதாரித்தனப் போக்குகளை ஒருகாலத்தில் மிக உயர்ந்தவையாய் இருந்த அக்கண்ணோட்டங்கள் அவ்வியக்கங்களில் ஏற்படுத்துகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக பல மடாலங்களையும், தொண்டு நிறுவன ஆசிரமங்களையும் கூறலாம். இன்று பல மத ரீதியான நிறுவனங்கள் குறித்து மோசமான செய்திகள் வந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அதைப்போல் பல ஆசிரமங்களிலும் தவறுகள் பல நடப்பது அவ்வப்போது வெளிவந்து கொண்டேயிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த மடாலயங்கள் மற்றும் ஆசிரமங்கள் ஆகியவற்றை நிறுவியவர்கள் எந்த உணர்வுடன் அவற்றை நிறுவினார்களோ அதே உணர்வு அவற்றை அடுத்தடுத்து அவற்றை நிரப்புபவர்களிடம் இருப்பதில்லை. அவர்களை அதே உணர்வுடன் தக்கவைக்கக் கூடியது சேவை மனப்பான்மையும் பொதுநல நோக்கமுமே. அவற்றைக் கொண்டவர்களைக் கொண்டதாக ஒரு அமைப்பு இல்லாமல் போகும்போது அது சீரழிவு தொடங்கிவிடுகிறது.

மடாலயங்களும் ஆசிரமங்களும் இவ்வாறு சீரழிந்து போய்க் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் அவற்றை வழிநடத்தும் அடிப்படைகளான மத மற்றும் சீர்திருத்தவாதங்களே இப்போது காலவதியாகிப் போய்விட்டன. அந்த நிலையில் இன்றைய சமூகப் பொருத்தமற்ற தத்துவங்களை மையமாக வைத்து நடத்தப்படும் நிறுவனங்களில் வேசதாரித்தனம் தலைதூக்குவதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

ஆனால் இக்கால கட்டத்தின் மிக உயர்ந்ததும் மிகப்பொருத்தமுடையதுமான மார்க்சிசம் போன்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளிலும் இத்தகைய நிலை தோன்றிவிடுகிறது.

அமைப்பு வளரவளர சித்தாந்தமும் வளரவேண்டும்

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு அந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் செஞ்சேனை பாஸிசத்தை எதிர்த்துப் பெற்ற பெரு வெற்றி உலகம் முழுவதும் கம்யூனிஸத்திற்கு ஒரு மகத்தான நற்பெயரை ஈட்டித் தந்தது. அந்தப் போரின் முடிவில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிச மயமாயின. அதன் பின்னர் 1949 – ம் ஆண்டு மகத்தான மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலம் மக்கள் சீனம் மலர்ந்தது. அதையும் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிச நாடுகளாக ஆயின.

அந்நாடுகளை உள்ளடக்கிய சோசலிச முகாம் ஒருபுறம் ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் சவாலாக ஆகியது. மறுபுறம் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது காலனிகளாகக் கொண்டிருந்த பல ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேச விடுதலைப் போராட்டங்களுக்கு சோசலிச முகாம் பின்பலமாகவும் ஆதராவாகவும் இருந்தது. அவற்றின் அரணாகவும் விளங்கியது. அதற்கு முன்பு செய்ததைப் போன்று பிற நாடுகளின் மீதான தலையீடுகளையும் அத்துமீறல்களையும் சோசலிச முகாம் தோன்றிய பிறகு ஏகாதிபத்திய நாடுகள் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு தலையீடு செய்தால் அதனைத் தட்டிக்கேட்க சோசலிச முகாம் என்ற தார்மீக வலுவோடு ராணுவ வலிமையும் பொருந்திய சக்தி இருக்கிறது என்ற அச்சம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாகப் பல தேச விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றுப் புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் உருவாயின. ஒட்டுமொத்தத்தில் சமூகமாற்றச் சிந்தனைப் போக்குகளின் பாலான மிகப்பெரும் வரவேற்பு சாதாரண மக்கள் மத்தியிலும் கூட உலக அளவில் பெரிதும் இருந்தது. அதனால் கம்யூனிஸ அமைப்புகள் அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்தன.

ஆனால் அவற்றின் அமைப்பு ரீதியான வளர்ச்சியுடன் ஒட்டிய சித்தாந்த ரீதியிலான தரமும் வளர்ச்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களிடம் ஏற்படவில்லை. வருந்தத்தக்க விதத்தில் சித்தாந்த ரீதியான வளர்ச்சிக்குப் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் உரிய முக்கியத்துவமும் தரவில்லை. அவை அவற்றின் அமைப்பு ரீதியான வளர்ச்சி குறித்துச் சுய திருப்தி கொண்டவையாகவே இருந்தன.

அதன் விளைவாக அரசியல், பொருளாதார, கலாச்சார, அறிவு சார்ந்த வி-யங்களில் தோன்றிய பல்வேறு புதுப் போக்குகள் அனைத்திற்கும் மார்க்சிய அடிப்படையில் விளக்கமளித்து மார்க்சிய விஞ்ஞானத்தைச் செறிவு செய்யும் போக்கில் தேக்கநிலை ஏற்பட்டது. இந்நிலையில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் பட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்பதற்கு இலக்கணமாக விளங்கவில்லை. பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் கம்யூனிஸ அகிலத்திலும் விமர்சன, சுயவிமர்சனப் போக்கு சரியான முறையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட ஏதுவான சூழல் பராமரிக்கப்பட வில்லை. இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிகப்பெரும் பலவீனமாக விளங்கியது.

யார் சிறந்த கம்யூனிஸ்ட்

சீர்திருத்தவாதத் தன்மைகளைக் கொண்ட மற்ற கட்சிகளைப்போல் அல்லாமல் அடிப்படை சமூக மாற்றத்திற்குப் பாடுபடும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உறுப்பினர்களாக ஆவதற்குச் சில தகுதிகளும் தரங்களும் அத்தியாவசியமான முன் தேவைகளாக உள்ளன. மற்ற கட்சிகளின் தலைமைகளைப் போலல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் யார் அவனுக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன என்பதை வரையறுத்துக் கூற வேண்டியுள்ளது. மாபெரும் தலைவர் லெனின் தலைமை தாங்கிய ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டிற்கான தகுதியாக தன்னுடைய சொந்த நலனை கட்சியின் நலனுக்கு முன் அடிபணியச் செய்யும் தன்மையையும் குணத்தையும் சிறந்த கம்யூனிஸ்ட்டிற்கான குணமாகவும் தகுதியாகவும் கருதியது.

ரஷ்யக் கம்யூனிஸ்ட்களிடம் அத்தகைய தகுதியினைக் கொண்டுவருவதில் கட்சிக்கு மிகப்பெரும் சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தொண்டர்கள் கட்சி தடை செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில் பல இன்னல்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு மத்தியில் செயல்பட்டவர்களாக இருந்ததால் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தரத்தைக் காட்டிலும் கூடுதல் தரத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் நடைமுறையில் இருந்தனர்.

அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படாத உலகின் பிற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இந்தக் குறைந்தபட்சத் தகுதியைக் கைக்கொள்வதற்கான போராட்டதைத் தொண்டர்களிடையே ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதுவும் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகளில் லட்சோபலட்சம் தொண்டர்கள் புதிதாக இணைந்ததால் அவர்கள் அனைவரிடமும் இத்தகுதியினைக் கொண்டுவருவதற்காக முனைப்புடன் கூடிய உள்கட்சி விவாதங்களும் போராட்டங்களும் அதிகமாக நடத்தப்படுவது மிகமிக அவசியமாக இருந்தது.

தோழர் சிப்தாஷ் கோஷின் முன்முயற்சி

உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் திசைவழியில் தங்களது இயக்கங்களை வழி நடத்தாத சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இவ்விசயத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் தரத்தினை உயர்த்தப் பெரிதும் பாடுபட்டார். அவர் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா என்ற கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தோழர் சிப்தாஷ் கோஷ் ஆவார்.

அவர் எஸ்.யு.சி.ஐ. கட்சியை நிறுவி செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரும் தலைவர் தொண்டர் வலுவினைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஏற்கனவே இருந்தது. அந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்றுள்ளது போல் அன்று அத்தனை வர்க்க சமரசப் போக்கைக் கொண்டதாக இல்லை. மாபெரும் தியாகங்களைச் செய்த மிகப்பெரும் தலைவர்கள் அக்கட்சியில் இருந்தனர். போர்க்குணமும் போராட்ட மனநிலையும் கொண்ட எண்ணிறந்த தொண்டர்கள் அக்கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். பரவலான உழைக்கும் மக்களின் அபிமானமும் ஆதரவும் அக்கட்சிக்கு இருந்தது.

ஆனாலும் கூட அதன் அடிப்படை அரசியல் வழி தவறானதாக இருந்தது. அதாவது விடுதலை பெற்ற பின் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளிகளுக்கு முற்போக்கு முலாம் பூசும் வகையில் இந்தியப் புரட்சியின் கட்டம் அந்தத் தேசிய முதலாளிகளையும் உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டமே என்ற தவறான வழியையே அக்கட்சி தன் அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டிருந்தது. அதனால் அதன் செயல்பாடும் போராட்டங்களும் தவறானதும் தெளிவற்றதுமான இலக்குகளைக் கொண்டவையாக இருந்தன.

அந்த நிலையில் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த எஸ்.யு.சி.ஐ. கட்சியினால் அதன் அடிப்படை அரசியல் வழி மிகச்சரியானதாக இருந்தபோதும் அத்தனை வேகமாக அதனை மக்களிடம் கொண்டுசெல்ல முடியவில்லை. அது மக்களைச் சரியான அதன் கருத்துக்களைக் கொண்டு அணிதிரட்ட முயன்ற போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் விடுதலைப் போராட்டக் காலகட்ட நடவடிக்கைகளையும் அது நடத்திய மாபெரும் தொழிலாளர் போராட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பெற்றிருந்த நற்பெயர் எஸ்.யு.சி.ஐ - யின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் குறுக்கே நின்றது. இந்தியா போன்றதொரு கல்வியறிவில் பின்தங்கிய நாட்டின் தொழிலாளி வர்க்கத்திடையே சரியான அடிப்படை அரசியல் வழியை மட்டும் அடிப்படையாக வைத்து வளர்வது பெரிய அளவில் உடனடி சாத்தியமாக இருக்கவில்லை.

இந்நிலையிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு உயர்ந்த கம்யூனிஸ்ட் கலாச்சாரம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை முழுமையாகக் கைக்கொண்ட, தத்துவார்த்த ரீதியாகப் புடம் போடப்பட்ட தோழர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகத் தான் உருவாக்கிய கட்சியை வளர்த்தெடுத்து அதன்மூலம் இந்திய உழைக்கும் மக்களை மிகவும் வித்தியாசமான முறையில் தோழர் சிப்தாஷ் கோஷ் அணுகி ஆதரவைத் திரட்டினார்.

தன் நலனே கட்சியின் நலன். கட்சியின் நலனே தன் நலன்

கம்யூனிஸ்ட்களின் தனிநபர், தன்வய ரீதியான வளர்ச்சிக்குத் தேவையான பல வழங்கல்களை வழங்கும் விதத்திலும் அவர் தனது கட்சி அமைப்பினையும் தனது கட்சித் தோழர்களின் தரத்தினையும் உயர்த்தப் பாடுபட்டார். அதன்மூலம் வெளிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்க வேண்டும் அதன் தலைவர்களும் தொண்டர்களும் அனைவரின் கண்களுக்கும் தென்படும் விதத்தில் எத்தகைய தன்னலமற்ற கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை நடைமுறை ரீதியாகவே காட்டி தனது கட்சியை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்.

அதற்காக ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் யார் என்ற கண்ணோட்டத்தையும் அவர் வாழ்ந்த காலகட்டச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செறிவு செய்தார். ஒரு உயர்ந்த கம்யூனிஸ்ட் என்பவன் தன்னுடைய நலனைக் கட்சியின் நலனுக்கு முன் அடிபணியச் செய்பவனல்ல; அந்தக் கண்ணோட்டம் தனிமனித வாதம் தலைதூக்கி மிகப்பெரும் செல்வாக்கு செலுத்தும் இக்காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதற்கான குறைந்தபட்சத் தகுதியாக ஆகிவிட்டது; இன்றைய நிலையில் யார் உயர்ந்த கம்யூனிஸ்ட் என்றால் தன் நலனே கட்சியின் நலன் கட்சியின் நலனே தன் நலன் என்று கருதக் கூடியவனே என்ற புதுக்கருத்தை முன்வைத்தார்.

கம்யூன் வாழ்க்கை அத்துடன் அத்தகுதியைப் பெறுவதற்கான போராட்டத்தை யாரும் தனியாக நடத்த முடியாது. அது நடத்தப்படுவதற்கு ஏற்ற சூழல் வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டு வாழ்க்கை முறையை அதாவது கம்யூன் வாழ்க்கை என்றழைக்கப்படும் வாழ்க்கை முறையை உயர்மட்டத் தலைவர்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினார். அதாவது முழுமையாகத் தனிச்சொத்து மட்டுமின்றி தனிச்சொத்து மனநிலையும் அற்றவர்களாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

அதன்மூலம் மட்டுமே உயர்மட்டத் தலைவர்களிடம் உள்ள தனிமனிதவாதப் போக்குகள் அனைத்தும் அம்பலமாகி அவற்றிற்கு எதிரான விமர்சனங்கள் உயர்மட்டத் தலைவர்களிடையே உருவாகும்; அதன் விளைவாக அவர்களிடையே மிச்சம் மீதமிருக்கும் தனிமனிதவாதப் போக்குகளும் களையப்பட்டு அவர்களது சிந்தனை முழுமையுமே சமூக சிந்தனையாகவும் சமூகத்தை முற்போக்குத் திசைவழியில் முன்னெடுத்துச் செல்லும் தகைமை வாய்ந்த உழைக்கும் வர்க்க நலன் குறித்த சிந்தனையாகவும் அச்சிந்தனையின் சராம்சமாகவும் அதனை நடைமுறைப்படுத்த வல்ல கருவியாகவும் விளங்கக்கூடிய உழைக்கும் வர்க்கக் கட்சிச் சிந்தனையாகவும் ஆகும் என்று அவர் நம்பினார்.

அவருடன் அப்போது இணைந்து செயல்பட்ட தோழர்களும் தேச விடுதலைக்காகப் போரிட்ட சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தியாகம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் கொண்டவர்களாக இருந்த அவர்களைக் கொண்டு இத்தகைய ஒரு தனித்தன்மை வாய்ந்த போராட்டத்தை அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

அவ்வாறு தனிநலன் குறித்த சிந்தனை எதுவுமின்றி உழைக்கும் வர்க்க நலனையே பெரிதென எண்ணிய அவரது சக தோழர்களைக் கொண்டு வங்காளத்தில் குறிப்பாகவும் நாட்டின் இதரப் பகுதிகளில் ஓரளவும் அவர் இத்தகைய நடைமுறையில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்பட்ட பல கட்சிகளிலிருந்தும் வேறுபட்ட கட்சியாக அவர் நிறுவிய கட்சியை வளர்த்தார். அவரது சீரிய சிந்தனைகள் மூலம் உலக கம்யூனிஸ்ட் அமைப்பிற்கும் பல அரிய வழங்கல்களைச் செய்தார்.

ஆனால் அப்போதே உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் பல மிகவும் சரியயன்று கூறமுடியாத போக்குகளைக் கொண்டிருந்ததால் அவரது வழங்கல்கள் உலக க்கம்யூனிஸ்ட் இயக்கத்திளால் உரிய விதத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கருத்தை முன்வைக்கும் போது அக்கருத்தின் சரியான தன்மைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காது அக்கருத்தைச் சொல்லும் கட்சி எவ்வளவு பெரியது என்பதைக் கணக்கில்கொண்டு அக்கருத்திற்கு முக்கியத்துவம் தரும் போக்கு வருந்தத்தகுந்த விதத்தில் அக்காலகட்டத்திலேயே உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவியது.

பொது மேடை

இவ்வாறு மிகச்சரியான விதத்தில் அவர் எஸ்.யு.சி.ஐ. கட்சியை நடத்திக் கொண்டிருந்த வேளையிலும் அதனை ஒரு பொது மேடையாகவே நடத்தி வந்தார். அகில இந்தியக் கட்சி காங்கிரஸ் நடத்தி அதன்மூலம் அதனை ஒருகட்சி என அவர் அறிவிக்கவில்லை. அதற்குக் காரணம் உள்ளடக்கத்தில் அது ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் அது அத்தகைய அகில இந்திய அளவிலான மாநாடு நடத்துவதற்குத் தேவைப்படும் ஸ்தாபன வலுவினையும் நாடு முழுவதுமான குறைந்தபட்ச ஸ்தாபனப் பரவலையும் கொண்டதாக இல்லை என்று அவர் கருதினார்.

அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட பிறகட்சிகளோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் உயர்ந்த தரத்தைக் கொண்ட தொண்டர்களையும் தலைவர்களையும் கூடுதலாகக் கொண்டிருந்தாலும், ஒரு கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் கமிட்டியைக் கொண்டு செயல்படுவதற்குத் தேவையயன தான் எதிர்பார்த்த தரம் தான் உருவாக்கிய அமைப்பில் இல்லை என்றே அவர் கருதினார். அதன் காரணமாகவே அகில இந்தியக் கட்சிக் காங்கிரஸ் நடத்தி அதனைக் கட்சியாக மாற்றும் பணியினைத் தனது வாழ்நாள் காலம் முழுவதுமே அவர் செய்வதற்கு முன்வரவில்லை.

யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் மிகக்குறைந்த வயதில் அவர் காலமானது அக்கட்சிக்கு மட்டுமல்ல உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒரு இழப்பாக ஆகியது.

இவ்வாறு எத்தனையோ வழங்கல்களைக் கம்யூனிஸ சிந்தனைக் கருவூலத்திற்கு வழங்கிய அவருக்கு அவர் உருவாக்கிய கட்சியும் ஒரு சமயத்தில் திருத்தல்வாதப் பாதையில் செல்லும் நிலை தோன்றலாம் என்பது தோன்றாமல் போனது; அது ஒரு குறையே. ஏனெனில் ரஷ்யாவில் அப்படிப்பட்ட போக்கு தோன்றியபோது ஸ்டாலினைப் பொறுத்தவரையில் தனக்குப்பின் கட்சி சீரழிவதற்கு வாய்ப்புள்ளது என்று கருத வழியில்லை. ஏனெனில் அதற்கான முன் உதாரணம் அவருக்கில்லை.

ஆனால் அதற்குப்பின் சீனாவில் மக்கள் ஜனநாயகப்புரட்சியை நடத்திய மாவோவிற்கு அத்தகைய முன் உதாரணம் இருந்ததால் அவர் புரட்சிகர உணர்வைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பதன் மூலம் அந்தப் போக்குகளைக் களைய முடியும் என்று நம்பினார். அதுமட்டுமின்றி முதலாளித்துவ சிந்தனைப்போக்கு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் இயக்கத்தை, இளைஞர் படையை அணிதிரட்டி அப்போக்கிற்கு எதிராகக் கருத்து ரீதியாக நிறுத்தி அதனைக் களைவதற்காக மாபெரும் கலாச்சாரப் புரட்சியை நடத்தினார்.

இவ்விரண்டு முன் உதாரணங்கள் இருந்தும் தனது கட்சியில் இத்தகைய போக்கு தலைதூக்க வாய்ப்புண்டு என்பதைத் தோழர் சிப்தாஷ் கோஷ் முன்னறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவற்றை எடுத்திருந்தால் பின்னாளில் அவர் உருவாக்கிப் பராமரித்த கட்சிக்கு ஏற்பட்ட சீரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

தலைமை, தொழில் நுட்ப ரீதியாக அமைப்பை நடத்தும் திறன் கொண்டவரின் கையில்

முற்றிலும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சிப்தாஷ் கோஷின் மரணம் எஸ்.யு.சி.ஐ. கட்சியை ஒருவகையில் நிலைகுலையச் செய்துவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது. அவருக்குப்பின் அமைப்பை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக ஸ்தாபனத்தைத் தொழில் நுட்ப ரீதியில் நடத்தும் திறன் பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் ஒருவரைப் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து அக்கட்சியினர்அமைப்பினை நடத்தத் தொடங்கினர்.

சித்தாந்த ரீதியாக சிப்தாஷ் கோஷின் வழங்கல்கள் குறித்து நாடு முழுவதிலும் அப்போதிருந்த தலைவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்டு தொடர் விவாதங்கள் நடத்துவது; அதன் முடிவில் யார் கட்சியின் கூட்டுச் சிந்தனையின் நிதர்சன வடிவமாக வளர்ச்சியடைகிறாரோ அவரே சிப்தாஷ் கோஷிற்குப் பின் கட்சியை வழிநடத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அத்தகைய விவாதம் ஓரிருமுறை கூட முழுமையாக நடைபெறாத சூழ்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் அவர் முன்பு செயலாளராக இருந்த மேற்குவங்க மாநிலக்கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு நாடு முழுவதும் இருந்த கட்சி அமைப்புகளைத் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். மாநிலக்கட்சி அலுவல்களுக்குப் பொறுப்பான மத்திய முழுநேரக் கட்சிப் பணியாளர்கள் என அவர்கள் அழைக்கப்பட்டனர். அதன்மூலம் கட்சி முழுமையாகப் புதிதாக வந்த பொதுச் செயலாளரின் கட்டுக் கோப்பிற்குள் வர அடித்தளமிடப்பட்டது.

தலைமை உருவாக்கிய இறுக்கம்

பிற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் அவரவர் வேலை செய்து கொண்டிருந்த பகுதிகளில் தங்களுக்கு ஒப்படைக்கப் பட்டிருந்த கட்சிப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். சிப்தாஷ் கோஷ் போன்றதொருவரின் தலைமையின் கீழ் காலங்காலமாகச் செயல்பட்ட அவர்களுக்குக் கடமைகள் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் இருந்ததே தவிர கட்சியின் செயல் பாட்டில் புதிய பொதுச் செயலாளர் உருவாக்கிய இத்தகைய இறுக்கம் அப்போது பெரிதாகப்படவில்லை.

மாநிலக்கட்சி அமைப்புகளை மேற்பார்வை இடுபவர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்ட முன்னாள் மேற்குவங்க மாநிலக்கட்சியில் பொறுப்பு வகித்தவர்கள் பெயரளவிற்குப் பல மாநிலங்களில் மாநில அமைப்புக் கமிட்டிகளை ஏற்படுத்தினாலும் மாநிலக்கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு மாநிலச் செயலாளர் கட்சிப் பணிகளைச் செய்யும் அமைப்பு ரீதியான செயல்பாட்டுப் போக்கினை வளரவிடவில்லை.

அவர்களது தலைமையில் மட்டுமே மாநிலக்குழுக் கூட்டங்கள் எப்போதும் நடக்கும் என்ற சூழ்நிலையை அவர்கள் பராமரிக்க விரும்பினர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் யார் யாரைப் பொறுப்பாளர்களாகப் போடுவது என்ற விசயத்தில் யாரை நியமித்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பு என்ற ரீதியில் கட்சி அமைப்பு வளரும் என்று பார்க்காமல், விமர்சனப் போக்கின்றி யார் யார் மாநிலக்கட்சியை மேற்பார்வையிடும் மத்தியக்கமிட்டியினால் நியமிக்கப்பட்டவருக்குச் சாதகமாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.

இவ்வாறு புதிதாகப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்றவர் ஸ்தாபனத்தை அத்தனை ஜனநாயக பூர்வமற்ற விதத்தில் நடத்தத் தொடங்கியதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. முதற்கண் முழுமையான ஜனநாயகச் செயல்பாட்டை அமைப்பிற்குள் கொண்டுவரும் எந்தக் கேள்வியையும் சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளும் தத்துவார்த்த வலு அவரிடம் இல்லை. மேலும் அவர் விடுதலைப் போராட்ட காலத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்ட அமைப்பு ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பல்ல. அந்தக் குட்டி முதலாளித்துவ அமைப்பில் அனைத்து விச யங்களையும் ஜனநாயக ரீதியில் கலந்து பேசி முடிவெடுக்கும் போக்கும் நடைமுறையும் இல்லை.

ஏனெனில் அமைப்பின் எந்த முடிவுகளும் வெள்ளை அரசாங்கத்திற்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதுபோன்ற அமைப்புகள் மிதமிஞ்சிய எச்சரிக்கை உணர்வுடன் இருந்தன. அனைத்துமே ரகசியமாகச் செய்யப்படுவது அதுபோன்ற அமைப்புகளில் ஒரு முக்கிய நியதியாக இருந்தது. சூழ்நிலை மாறி ஒப்பீட்டளவில் அமைதியான சூழலில் ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பாகச் செயல்பட வேண்டிய தருணத்திலும் கூட ரத்தத்தில் ஊறிப்போனவை போலிருந்த பழைய குட்டி முதலாளித்துவ ஸ்தாபனத்தன்மைகளும் போக்குகளும் அவரிடம் மாறவில்லை. இக்காரணங்களால் அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

நியமனங்கள் இவ்வாறு நடைபெற்றதால் மாநிலக்கட்சியை ஏறக்குறைய முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் எந்த மாநிலப் பொறுப்பாளருக்கும் சிரமம் எதுவும் இருக்கவில்லை.

கோட்பாடற்ற விதத்தில் நிதிவசூல்

இவ்விசயத்தில் குறிப்பாகக் கட்சிக்காக என்ற பெயரில் செய்யப்படும் நிதி வசூலும் ஒரு மிகமுக்கியப் பங்கினை வகித்தது. பொதுவாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அது நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒட்டியே நிதி வசூலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இவ்விசயத்தில் சிப்தாஷ் கோஷிற்குப் பின் வந்த எஸ்.யு.சி.ஐ. கட்சித் தலைமையின் போக்கே மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. பொதுவாகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிதிவசூல் குறித்த அணுகு முறை நிகழ்ச்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் தோழர்கள் வசூல் செய்து அவற்றை நடத்தி கட்சிப்பணி பரவலாக ஆவதற்கு வழி வகுப்பார்கள் என்ற வகையிலேயே இருக்கும்.

கட்சியின் முழுநேர ஊழியர்கள் அனைவரும் ஏதாவதொரு வெகுஜன ஸ்தாபனத்தில் செயல்படுவார்கள். அந்த ஸ்தாபனம் அவர்களுடைய செலவுகளைப் பார்த்துக் கொள்ளும். இத்தகைய நடைமுறையே பின்பற்றப்பட்டது.

ஆனால் எஸ்.யு.சி.ஐ. கட்சியில் மட்டும் கட்சியின் முழுநேர ஊழியர்களைப் பராமரிப்பதற்காகவும் வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதனை நியாயப்படுத்த அதன் தலைவர்கள் முன்வைத்த வாதம் நாங்கள் சமூகப் பணியில் முழுநேரமும் ஈடுபடுகிறோம். எங்களைப் பராமரிப்பது சமூகத்தின் கடமை என்பதாகும். இந்த வாதத்தில் ஒரு அடிப்படை இருந்தாலும் இதில் ஒரு அபாயமும் இருக்கவே செய்தது.

கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு எந்தக் குறிப்பிட்ட வெகுஜன அமைப்புடனும் இணைந்து செயல்படாமல் அல்லது அதை நிர்வகிக்காமல் அவர் முழுநேர ஊழியராக இருக்கலாம் என்ற வாய்ப்பு இதனால் உருவாக்கப்பட்டது. அது போன்ற நிலைமைகள் நிலவுவது மத்திய அமைப்பிலிருந்து மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கும் வசதியாகவே இருந்தது. கட்சியை, அதன் வெகுஜன அமைப்புகளைக் கட்டியமைப்பதின் மூலம் வளர்ப்பவர்களுக்கு அதையயாட்டிய அனுபவமும், விமர்சனம் செய்யும் தார்மீக வலுவும் இருக்கும். அப்படியில்லாத முழுநேர ஊழியர்கள் கட்சித் தலைமையினைச் சார்ந்து இருக்க முழுமையாகப் பழகிவிடுவர். அந்தப் பழக்கம் எந்த அளவிற்கு ஆழமானதாகப் பல சமயங்களில் ஆகிவிட்டது என்றால் ஒப்புக்காக விமர்சனத்திற்கு வாய்ப்பளிக்கப் பட்டாலும் கூட யாரும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற அளவிற்கு அது அமைப்பை மிக ஆழமாகப் பாதித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் கட்சி அமைப்பின் செயல்பாடே அடிப்படையில் மாறிவிட்டது. நிதி வசூலே கட்சியின் மிகமுக்கியப் பணியாக ஆகிவிட்டது. அதனை ஏற்பாடு செய்வதே முழுநேர ஊழியர்களின் முக்கியப்பணி என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. அதனைத் திறம்படத் தயார் செய்யும் முழுநேர ஊழியர்களே முக்கியமானவர்களாகக் கருதப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் அதிக நிதி வசூல் நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் மத்தியப் பொறுப்பாளர் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கும் போக்கும் தலைதூக்கியது.

நிதி வசூல் இயக்கங்களை மையமாக வைத்து நடைபெறும் நடைமுறை இல்லாமல் போனது ஒருபுறம்; வசூலான நிதியும் கூட எங்காவது இயக்கம் நடந்தால் அதற்கும் பயன்படாது என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் பணம் ஈட்டித்தரும் துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்ற முக்கியத்துவம் அதிக நிதி வசூல் நடைபெறும் சென்னை மாவட்டக் கமிட்டி போன்ற கமிட்டிகளுக்குத் தரப்பட்டது.

சீரழிந்த நடைமுறை

சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்நாளில் பல புதுக் கண்ணோட்டங்களையும், நடைமுறைகளையும் அவர் உருவாக்கிய கட்சியின் மூலம் கொண்டு வந்தார் என்றால் அவருக்குப்பின் வந்த தலைமை இதுபோன்ற சீரழிந்த நடைமுறைகளை நாசூக்காகப் புகுத்திக் கட்சியின் உள்ளடக்கத்தையே ஒரு பாட்டாளி வர்க்கத் தன்மை அற்றதாக ஆக்கிவிட்டது. ஆனால் நிதிவசூலில் ஈடுபடும் தோழர்கள் மக்கள் இயக்கங்களை முனைப்புடன் கட்ட முயலாமல் மக்கள் இயக்கங்களுக்காகவே நிதிவசூல் செய்கிறோம் என்று கூறியே நிதிவசூலில் ஈடுபட்டு ஈடுபட்டுக் கூசாமல் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறும் ஒருவகை வேசதாரித்தத்தைக் கொண்டவர்களாக நாளடைவில் ஆகிவிட்டனர்.

சரியான சிந்தனையும் கருத்துக்களும் உருவாவதற்கு மகத்தான சிந்தனையாளர்கள் கட்சிகளின் தலைவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் கட்சி அச்சிந்தனை காட்டும் வழிமுறையில் நடைமுறை ரீதியாகச் செயல்பட்டு அந்த நடைமுறைகள் வழங்கும் படிப்பினைகளைச் சரியாக எடுத்துக்கொண்டு அதற்குகந்த வகையில் கட்சியின் நடைமுறைக்கு வழிகாட்டும் கட்சியின் சிந்தனையை மென்மேலும் செறிவு செய்யவும் வேண்டும்.

அத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் போது மட்டுமே கட்சிக்கு வழிகாட்டும் சிந்தனை பராமரிக்கப்படும் மேம்படுத்தப்படும் சூழல் உருவாகும். இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த சிந்தனை எத்தனை சரியானதாக இருந்தாலும் அது தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப் படாவிட்டால் அதுவும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் பின்தங்கிய சிந்தனையாக ஆகிவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப்பின் வந்த கட்சியின் தலைமையினால் சிப்தாஷ் கோஷ் அளவிற்கு மிகச்சரியாகக் கட்சியின் - பல்வேறு நாட்டின் நிலைமைகள் குறித்த - சிந்தனைகளை செழுமைப்படுத்த முடியவில்லை. அவரது சிந்தனைத் தரத்திற்கும் அடுத்து வந்த தலைவர்களது சிந்தனைத் தரத்திற்கும் இருந்த பெரும் இடைவெளி சிந்தனை ரீதியான கட்சியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவர் இறந்தபின்னும் கட்சி மிகவும் நன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது என்று காட்டுவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்புகளைக் கொண்டும், பல மாநிலங்களில் புது அமைப்புகளை ஏற்படுத்தியும் எங்கும் கட்சி தன் தடத்தைப் பதித்துள்ளது என்ற உள்ளடக்கத்தில் வெறுமையையும் வெளியில் பிரகாசத்தையும் காட்டக்கூடிய ஒரு தோற்றத்தை புதிய பொதுச் செயலாளர் தனது முன்னாள் மேற்குவங்க சகாக்களைக் கொண்டு ஏற்படுத்தினார்.

அந்தந்த மாநிலங்களின் தொழில் வளர்ச்சி நிலை, நிலவும் சுரண்டல் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்து வர்க்கப் போராட்டங்களை மாநிலங்களில் அவர்கள் வளர்க்க முயலவில்லை. மாறாக அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை அடிப்படையாக வைத்துக் காலூன்றுவதில் அக்கறை காட்டினர்.

உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள்

அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் முன்பு இருந்த இந்தி எதிர்ப்பு மனநிலையைக் கருத்திற்கொண்டு மொழிப் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தினர். தமிழ் நாட்டில் அக்கட்சி எடுத்த முதற்பெரும் அரசியல் நிகழ்ச்சி அதுதான். அதைப்போல் எந்த உணர்வு சார்ந்த பிரச்னையை எடுத்தால் அதிகக் கூட்டத்தைக் கூட்டி கட்சி மிக வேகமாக வளர்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தப் பிரச்னைகளையே பல இடங்களில் கையிலெடுத்தனர்.

தலைவர் துதி

மறுபுறம் இந்தப் போதாமையை மறைக்க ஏறக்குறைய சிப்தாஷ் கோஷை ஒரு அரைக்கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தி அவரது சிந்தனை வட்டத்திற்குள் வராத விசயமே இல்லை; அவருடைய கருத்துக்கள் எக்கால கட்டத்திற்கும் வழிகாட்டப் போதுமானவை என்ற அடிப்படையில் அவரை ஒரு அமானுஷ்யனாக சித்தரிக்க தொடங்கும் போக்கு இடைவிடாத திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் செய்யப்பட்டது.

அவருக்குப்பின் கட்சி ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் அம்மாநிலத்தின் அரசியல் நிலை அகில இந்திய அரசியல் நிலை ஆகியவற்றைச் சரியாக மார்க்சிய வெளிச்சத்தில் புரிந்து கொள்ளும் விதத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உத்வேகமும் ஏற்படுத்தப்படவில்லை. இந்தியப் புரட்சியை நடத்துவதற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களும் தோழர் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த கருத்துக்களிலேயே உள்ளன; அதைத்தாண்டி பெரிதாக ஒன்றும் படிக்க வேண்டியதில்லை என்ற மனநிலை சாதுர்யமாக உருவாக்கப்பட்டது.

தலைமையின் போதாமையைக் கருத்திற்கொண்டு, விமர்சனபூர்வ சிந்தனை, தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் நாசூக்காக இம்மனநிலை உருவாக்கப்பட்டது. அமைப்பிற்குள் புதிதாக வந்த தோழர்களை அவரவரின் தரத்திற்கு ஏற்றவாறு அடுத்தகட்டத் தரத்தை எட்டும் வகையில் அவரது வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சரியான தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படுவது கைவிடப்பட்டு அமைப்பு தொடங்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளிலேயே கம்யூனிஸ மனநிலை கொண்டிராத சிலரைக்கூடத் தேர்தலில் தங்கள் சார்பாக நிறுத்தி குறுக்கு வழியில் கட்சியை பிரபலமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குருட்டுத்தனம்

மேலே விவரித்த எதிர்மறைப் போக்குகள் அமைப்பில் அமைப்பு ரீதியாகத் தலையயடுத்த வேளையில் சித்தாந்த ரீதியான வளர்ச்சியின்மையும் அக்கோளாறுகளுடன் ஒத்துப்போகும் விதத்தில் அதன் பங்கினை ஆற்றியது. எஸ்.யு.சி.ஐ - ன் இன்றைய தலைமை சிப்தாஷ் கோஷைக் கொண்டாடுவது போல் சிப்தாஷ் கோஷ் மாமேதை லெனினைக்கூடக் குருட்டுத்தனமாகக் கொண்டாடவில்லை. மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் போரை உருவாக்குகிறது. ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை போர் இருந்து கொண்டேயிருக்கும் என்று கூறினார். ஆனால் 2வது உலக யுத்தத்திற்குப் பின்பு சோசலிச முகாம் உருவான வேளையில் குருச்சேவ் ஏகாதிபத்தியம் போரை உருவாக்குகிறது என்ற லெனினியக் கண்ணோட்டம் அதன் செல்லுபடித் தன்மையை இழந்து விட்டது என்று கூறினார். அத்துடன் அது அமைதியான பாராளுமன்ற முறையின் மூலம் சோசலிச மாற்றம் ஏற்படுவதைச் சாத்திய மாக்கியுள்ளது என்றும் கூறினார்.

அதனைத் திருத்தல்வாதம் என்று அடையாளம் காட்டிய தோழர் கோஷ் அதே சமயத்தில் தோன்றியுள்ள சில மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அடிப்படையில் ஏகாதிபத்தியம் போர்களை உருவாக்கும் என்ற கோட்பாட்டில் மாறுதல் எதுவும் இல்லை என்றாலும் அந்த ஏகாதிபத்தியப் போக்கில் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் இருப்பதை உலகின் புரட்சிகர இயக்கங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறினார் ஏகாதிபத்தியங்கள் இப்போது தங்களது நலனுக்காகக் காலனிகளைக் கைப்பற்றும் அப்பட்டமான முழுமையான யுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆங்காங்கே சிறுசிறு யுத்தங்களைத் தூண்டிவிடுவதாக ஆகிஉள்ளது. அவ்வாறு தூண்டிவிடுவது அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்ற தனது பொருளாதாரத்தையே யுத்தப் பொருளாதாரமாக மாற்றியுள்ள ஏகாதிபத்தியங்களின் ஆயுத விற்பனைக்குப் பெரிதும் தேவைப்படுகிறது; அந்த வகையில் சோசலிச முகாமும் போருக்கு எதிரான இயக்கங்களும் ஏகாதிபத்திங்களின் மேல் பெருமளவு அமைதியைத் திணிக்க வல்லவையாக வளர்ந்திருக்கின்றன என்று கூறினார். இக்கருத்து திட்டவட்டமாக மார்க்சிசத்தைச் செழுமைப்படுத்திச் செறிவு செய்யும் கருத்தாகும்.

கோஷின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள்

தோழர் சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப் பின்பு பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ளன. உலகில் அவர் காலகட்டத்திலிருந்த சோசலிச முகாம் இன்று இல்லாமல் போயிருக்கிறது. தோழர் சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் வகுத்தெடுத்த நான்கு உலக அளவிலான பெரிய முரண்பாடுகளோடு ஐந்தாவதாக ஒரு முரண்பாட்டையும் சேர்த்து உலகின் புரட்சிகர இயக்கங்கள் கருத வேண்டுமென வலியுறுத்தினார். இந்த நான்கு முரண்பாடுகள் ஸ்டாலின் காலத்தில் உருவாக்கப்பட்டவை. ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டத்தை மாற்றுகிறோமே என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை.

வர்த்தகப் போட்டியின் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிலவும் முரண்பாடு, ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் காலனி நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடு, உலக அளவில் மூலதனத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய சோசலிச முகாம்களுக்கிடையிலான முரண்பாடு என்ற உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வகுத்தெடுத்த நான்கு முரண்பாடுகளோடு ஐந்தாவது முரண்பாடாகப் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தங்கள் நாடுகளில் முதலாளித்துவத்தைக் கட்டியமைப்பதற்காக சோசலிச நாடுகளுடன் உறவு கொள்வதுபோல் காட்டி சில ஏகாதிபத்தியங்களிடம் உதவிகளையும் சலுகைகளையும் பெறுவது; அதே சமயத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பக்கம் சாய்வதுபோல் காட்டி சோசலிச நாடுகளிடமிருந்து உதவிபெறுவது என்ற வகையில் காட்டிவரும் இந்தப் போக்கில் சம்பந்தப்பட்டுள்ள முரண்பாட்டினை ஐந்தாவது முரண்பாடாகச் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

இன்று சோசலிச முகாமே இல்லாமல் போய்விட்ட சூழ்நிலையில் இந்த முரண்பாடு அப்பட்டமாகச் செல்லுபடியற்றதாகி விட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைகளாகவும், நடைமுறை சாத்தியமானவைகளாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் குறிப்பிட்ட காலகட்ட நிகழ்வுகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து அக்கருத்துக்களை முன் வைப்பதேயாகும். காலகட்டங்களும், சூழ்நிலைகளும் மாறும் போது அவற்றையயாட்டிய விதத்தில் புதிய கருத்துக்கள் நிச்சயம் உருவாக வேண்டும். அந்த வகையில் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த இக்கருத்து செல்லுபடியற்றதாக ஆகிவிட்டதைக் கொண்டு சிப்தாஷ் கோன் கணிக்கும் திறன் போதாததாகி விட்டது என்று கருதக்கூடாது.

சோசலிச முகாம் எங்குள்ளது

இருந்தாலும் எஸ்.யு.சி.ஐ. கட்சியின் இன்றைய தலைமை சிப்தாஷ் கோஷின் கணிப்பு பொய்யாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சோசலிச முகாம் இன்றும் இருக்கிறது; சீனா, வடகொரியா, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள் இப்போதும் சோசலிச நாடுகளே என்று கூறி வருகிறது. சீனா எத்தகைய முதலாளித்துவப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை முதலாளிகளையும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக்கலாம் என்ற அளவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி அப்பட்டமாக மாறியுள்ளதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். வியட்நாமின் போக்கும் ஏறக்குறைய அந்தத் திசை வழியில்தான் இருந்து கொண்டிருக்கிறது. கியூபா, வடகொரியா ஆகிய இரு நாடுகளும் சோசலிச முகாம் இல்லாத நிலையில் சோசலிசத்தின் சாயல்கள் கொண்ட தங்கள் சமூக அமைப்புகளைச் சீரழிந்து விடாமல் எப்படிக் காப்பது என்ற கடுமையான போராட்டத்திலேயே இப்போது தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.

சோசலிச முகாம் என்று கூறுவதன் பொருளே அப்படி ஒரு முகாம் இருப்பதை மனதிற்கொண்டு ஏகாதிபத்தியத் தலையீடு கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் படவேண்டும் என்பதே. எடுத்துக்காட்டாக உலகில் எந்த நாட்டிலாவது மூலதனத்திற்கும் உழைப்பாளருக்கும் இடையிலான முரண்பாடு முற்றி அங்கு சோசலிச ரீதியிலான சமூகமாற்றப் போக்கு உக்கிரமடைந்தால் அப்போது அதற்கு எதிராக இயற்கையாகவே ஏகாதிபத்தியம் அந்நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு சமூகமாற்றத்தைத் தடுக்க முயலும். அவ்வேளையில் அவ்வாறு நீ செய்தால் சமூகமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக நானும் தலையிடுவேன் என்று சோசலிச முகாம் ஏகாதிபத்தியத்தைத் தடுக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் அதனை முகாம் என்று அழைப்பதில் பொருள் இருக்கிறது. முன்பு சோசலிச முகாம் இருந்தபோது அதைக் கருத்திற்கொண்டே ஏகாதிபத்தியங்கள் பல காலம் பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட முடியாத நிலையிலிருந்தன.

இது வெறுமனே கருத்து ரீதியாக முன்வைக்கப்படுவதல்ல. ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுக்க முனைந்த அந்த ஆரம்ப வேளையில் ராணுவ ரீதியான அதன் தலையீட்டை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டெடுப்புக்கு வந்தது. அப்போது வீட்டோ அதிகாரத்தைத் தன் கைவசம் கொண்டிருந்த சீனா அதனை அத்தீர்மானத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனைச் செய்யாததன் மூலம் அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா மறைமுகமாக ஒப்புதல் அளித்தது. மேலே கூறிய நான்கு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு பொருளாதார ராணுவ வலுவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த முயற்சிகளுக்கு எதிராக வலுவுடன் ஏதாவது செய்திருக்க முடியுமென்றால் அது சீனாவாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனாலும் அது ஒன்றும் செய்யவில்லை.

இந்நிலையில் சோசலிச முகாம் இருக்கிறது என்று கூறுவதன் பொருளென்ன? இருந்தாலும் எஸ்.யு.சி.ஐ - ன் தலைமைக்கு சிப்தாஷ் கோஷ் கூறியது எந்த வகையிலும் பொய்யாகிவிடக் கூடாது. அதாவது சோசலிச முகாம் ஏகாதிபத்திய முகாம் இவற்றிற்கிடையிலான முரண்பாடு சரியானதெனக் கருதப்பட்டால் தான் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த ஐந்தாவது முரண்பாட்டிற்குப் பொருத்தம் இருக்கும்; சிப்தாஷ் கோஷின் பெயரைச் சொல்லியே கட்சியை நடத்தும் தமக்கு அம்முரண்பாடு சரியானதென நிறுவுவது அவசியம்; அதனால்தான் பெயரளவிற்கு நான்கு நாடுகளை அவற்றில் இரண்டு நாடுகளில் சோசலிசத்திற்கு எதிரான பல்வேறு போக்குகள் அப்பட்டமாகத் தலைதூக்கிய நிலையிலும் - ஒன்றுசேர்த்துக் காட்டி இதோபார் சோசலிச முகாம் உலக நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று காட்டுகிறது.

தோழர் சிப்தாஷ் கோஷ் தனது முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையை அனைத்து வகை தர்க்கபூர்வ வாதங்களுடன் நிறுவி இந்தியாவே ஒரு வளர்ந்து வரும் ஏகாதிபத்தியமாக ஆகியுள்ளது என்பதை நிறுவினார். புரட்சி சோசலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தியப் புரட்சியின் கட்டம் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியே என்று கூறினாலும் இந்தியா எவ்வாறு ஏகாதிபத்தியக் கூறுகளைக் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது என்பதை சிப்தாஷ் கோஷ் நிறுவியது போல் அவை நிறுவவில்லை. அந்த வகையில் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த சிந்தனை மட்டுமே தனித்தன்மை வாய்ந்ததாக அதாவது இந்தியப் புரட்சிக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரமாக விளங்கியது.

திசை திருப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதம்

ஆனால் இன்றைய எஸ்.யு.சி.ஐ - ன் தலைமை ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டினை அதன் முதலாவது கட்சி காங்கிரஸ்க்குப் பின் நடத்தி இந்தியாவின் இதர வர்க்க சமரச கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாதையில் அவற்றிற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் விதத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டல் முக்கியத்துவம் கொடுத்து மாநாடு நடத்தும் அளவிற்கு இருக்கவே செய்கிறது என்று காட்டியது. அதன்மூலம் சிப்தாஷ் கோஷ் கொண்டிருந்த அடிப்படை அரசியல் வழி குறித்த தனித்தன்மையும் முழக்கமும் நீர்த்துப்போக வழிவகுத்தது.

உலகமயம், இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியேயுள்ளது. அந்தச் சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அத்தியாவசியமே என்று அவர்கள் வாதிடலாம். உலக மயத்தின் விளைவாக இந்தியாவின் பல பாரம்பரியத் தொழில்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் உலகமயத்தினால் பயனடைந்த நாடுகளான பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிக் ( BRIC) என்று அழைக்கப்படக்கூடிய நாடுகளின் வட்டத்தில் இந்தியா சீனாவிற்கு அடுத்தப்படியாக மிகமுக்கிய இடத்தில் உள்ளது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஒட்டுமொத்தத்தில் உலகமயத்தினால் பயனடைந்த நாடுகளில் 2வது நாடாக இந்தியாவே விளங்குகிறது. இந்த நிலையில் தனது முதலாளிகளின் ஒட்டுமொத்த நலனுக்காகச் செயல்படும் இந்திய அரசினை எதிர்த்து தனது போராட்டங்களின் கூர்முனையைத் திருப்பாமல் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). கட்சிகளின் பாணியில் அன்னிய ஏகாதிபத்தியத்தை மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி சமுதாய மாற்றப் பாதையின் போக்கில் தடுமாற்றம் ஏற்பட வழிவகுப்பது ஒரு வகையில் சொல்லப் போனால் சிப்தாஷ் கோஷின் சிந்தனைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.சிப்தாஷ் கோஷ் கூறினார் முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக நமது மின்நிலையங்கள் அனைத்தும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவிற்கே உற்பத்தி நடத்த இயலாத நிலையில் உள்ளன என்று. நீர் மற்றும் அனல் மின்சார உற்பத்தியையே முழு அளவில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் இந்திய முதலாளித்துவம் தீராத மின் உற்பத்திச் சாதனமாக விளங்கும் அணு மின்உற்பத்தியை நோக்கி எப்படிச் செல்ல முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று அணு உலைகளை நிறுவ அமெரிக்காவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.

சூழ்நிலை மாற்றமும் கருத்து மாற்றத் தேவையும்

போர்க்குணமிக்க ஊழியர்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளே தங்களின் சமூக ஜனநாயகத்தன்மை வாய்ந்த முற்போக்கு முகத்திரை கொண்ட முழக்கங்களை முன்வைத்து பாசிஸத்தைக் கொண்டுவர முடியும்; அந்த அடிப்படையில் மிகப்பெரும் பாசிஸக் கட்சியாக இந்திரா காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸே இருக்க முடியும்; சி.பி.ஐ. கட்சி முன்வைப்பது போல் அப்போதிருந்த ஜனசங்கம் (தற்போதய பி.ஜே.பி) ஒரு பாஸிசக் கட்சியாக ஆக முடியாது என்று 1976 - ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது தோழர் சிப்தாஷ் கோஷ் கூறினார். அதாவது ஜனசங்கம் போன்ற பழமைவாதக் கட்சிகளைக் காட்டிலும் இந்திரா காங்கிரஸ் போன்ற கட்சிகளே பாசிஸ உள்ளடக்கத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் தொண்டர்களின் வலுவினையும் கொண்டவை என்று அப்போது கூறினார். ஆனால் பாபர் மசூதி இடிப்பையும்அதனைத் தொடர்ந்த வகுப்புவாத பாசிஸத்தையும் வட மாநிலங்களில் கொழுந்து விட்டெரியச் செய்தது காங்கிரஸ் அல்ல - ஜனசங்கத்தின் வழிவந்த பி.ஜே.பி - யே.

இந்தக் கருத்துக்கள் சிப்தாஷ் கோஷினால் முன்வைக்கப்பட்ட போது சரியாகவே இருந்தன. அவரது தொலை நோக்குப் பார்வை மற்றும் பகுப்பாய்வுக் குறைபாட்டினால் அவை தவறாகிவிடவில்லை. மாறாக சமூகத்தின் பொருளாதாரம் அடிப்படையில் மாறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ரீதியான பல மாறுதல்கள் அதில் நிகழந்து கொண்டேயுள்ளன. உலகமயம் அதன் விளைவாக அந்நிய முதலீடுகளின் கூடுதல் வருகை, இந்திய உழைப்புத் திறனின் உலகளாவிய படையயடுப்பு ஆகியவை அதிகளவில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களை வளரச் செய்துள்ளன. ஓரளவு பொருள் உற்பத்தித்துறைத் தொழில்களின் வளர்ச்சியையும் அவை கொண்டுவந்துள்ளன. அந்நிலையில் கூடுதல் மின்னுற்பத்தி தேவைப்படுகிறது. அதனையயாட்டியே கோஷின் கணிப்பிற்கு விரோதமாக இந்திய முதலாளித்துவம் அணுமின் சக்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகள் அவற்றின் வளர்ச்சிக்காகவும் கூடப் பல பாஸிச யுக்திகளைக் கையாளுகின்றன. அவற்றின் மூலமாக பெரிய வளர்ச்சியைச் சாதித்து அமைப்பு ரீதியான வலுவினை ஒரு பழமைவாதக் கட்சி பெற்றால் அது பழமைவாதக் கட்சி என்பதனாலேயே ஆளும் முதலாளி வர்க்கம் அதனை ஏற்கத் தயங்குவதில்லை. ஒரு தருணத்தில் இதுவும் பயன்படும் என்ற அடிப்படையில் அதற்கும் தனக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் அமைப்புகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை ஆளும் வர்க்கம் தரவே செய்யும். அந்த வகையிலேயே ஒரு பாசிஸ சக்தியாக பி.ஜே.பி. வளர்ந்துள்ளது. அது மட்டுமல்ல இன்றைய நிலையில் பாசிஸத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ள முதற்பெரும் சக்தியாக பி.ஜே.பி - யே உள்ளது.

சிப்தாஷ் கோஷ் மட்டுமல்ல; மாமேதை மார்க்ஸ் - ம் கூட வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படும் என எண்ணினார். அதைப்போல் புரட்சியின் மீதான நம்பிக்கை அதன் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் பல ஆசிய நாடுகள் முதலாளித்துவக் கட்டத்தை அடையாமலேயே கூட சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாமேதை லெனின் நம்பினார். அவர்கள் எண்ணியதும், நம்பியதும் அவர்களது காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் முன்னோக்கிப் பார்த்ததன் விளைவாகத் தோன்றியவை. அச்சூழ்நிலைகள் அவர்களுக்குப் பின் எதிர்பாராத விதமாக சில அம்சங்களில் மாறும் போது அவர்களது எண்ணங்களும், எதிர சூழ்நிலை மாற்றமும் கருத்து மாற்றத் தேவையும்

போர்க்குணமிக்க ஊழியர்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளே தங்களின் சமூக ஜனநாயகத்தன்மை வாய்ந்த முற்போக்கு முகத்திரை கொண்ட முழக்கங்களை முன்வைத்து பாசிஸத்தைக் கொண்டுவர முடியும்; அந்த அடிப்படையில் மிகப்பெரும் பாசிஸக் கட்சியாக இந்திரா காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸே இருக்க முடியும்; சி.பி.ஐ. கட்சி முன்வைப்பது போல் அப்போதிருந்த ஜனசங்கம் (தற்போதய பி.ஜே.பி) ஒரு பாஸிசக் கட்சியாக ஆக முடியாது என்று 1976- ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது தோழர் சிப்தாஷ் கோஷ் கூறினார். அதாவது ஜனசங்கம் போன்ற பழமைவாதக் கட்சிகளைக் காட்டிலும் இந்திரா காங்கிரஸ் போன்ற கட்சிகளே பாசிஸ உள்ளடக்கத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் தொண்டர்களின் வலுவினையும் கொண்டவை என்று அப்போது கூறினார். ஆனால் பாபர் மசூதி இடிப்பையும்அதனைத் தொடர்ந்த வகுப்புவாத பாசிஸத்தையும் வட மாநிலங்களில் கொழுந்து விட்டெரியச் செய்தது காங்கிரஸ் அல்ல, ஜனசங்கத்தின் வழிவந்த பி.ஜே.பி - யே.

இந்தக் கருத்துக்கள் சிப்தாஷ் கோ´னால் முன்வைக்கப்பட்ட போது சரியாகவே இருந்தன. அவரது தொலை நோக்குப் பார்வை மற்றும் பகுப்பாய்வுக் குறைபாட்டினால் அவை தவறாகிவிடவில்லை. மாறாக சமூகத்தின் பொருளாதாரம் அடிப்படையில் மாறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ரீதியான பல மாறுதல்கள் அதில் நிகழந்து கொண்டேயுள்ளன. உலகமயம் அதன் விளைவாக அந்நிய முதலீடுகளின் கூடுதல் வருகை, இந்திய உழைப்புத் திறனின் உலகளாவிய படையயடுப்பு ஆகியவை அதிகளவில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களை வளரச் செய்துள்ளன. ஓரளவு பொருள் உற்பத்தித்துறைத் தொழில்களின் வளர்ச்சியையும் அவை கொண்டுவந்துள்ளன. அந்நிலையில் கூடுதல் மின்னுற்பத்தி தேவைப்படுகிறது. அதனையயாட்டியே கோஷின் கணிப்பிற்கு விரோதமாக இந்திய முதலாளித்துவம் அணுமின் சக்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகள் அவற்றின் வளர்ச்சிக்காகவும் கூடப் பல பாஸிச யுக்திகளைக் கையாளுகின்றன. அவற்றின் மூலமாக பெரிய வளர்ச்சியைச் சாதித்து அமைப்பு ரீதியான வலுவினை ஒரு பழமைவாதக் கட்சி பெற்றால் அது பழமைவாதக் கட்சி என்பதனாலேயே ஆளும் முதலாளி வர்க்கம் அதனை ஏற்கத் தயங்குவதில்லை. ஒரு தருணத்தில் இதுவும் பயன்படும் என்ற அடிப்படையில் அதற்கும் தனக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் அமைப்புகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை ஆளும் வர்க்கம் தரவே செய்யும். அந்த வகையிலேயே ஒரு பாசிஸ சக்தியாக பி.ஜே.பி. வளர்ந்துள்ளது. அது மட்டுமல்ல இன்றைய நிலையில் பாசிஸத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ள முதற்பெரும் சக்தியாக பி.ஜே.பி- யே உள்ளது.

சிப்தாஷ் கோஷ் மட்டுமல்ல; மாமேதை மார்க்ஸ் - ம் கூட வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படும் என எண்ணினார். அதைப்போல் புரட்சியின் மீதான நம்பிக்கை அதன் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் பல ஆசிய நாடுகள் முதலாளித்துவக் கட்டத்தை அடையாமலேயே கூட சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாமேதை லெனின் நம்பினார். அவர்கள் எண்ணியதும், நம்பியதும் அவர்களது காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் முன்னோக்கிப் பார்த்ததன் விளைவாகத் தோன்றியவை. அச்சூழ்நிலைகள் அவர்களுக்குப் பின் எதிர்பாராத விதமாக சில அம்சங்களில் மாறும் போது அவர்களது எண்ணங்களும், எதிர் பார்ப்புகளும் நிறைவேறாமல் போய்விடுகின்றன..

பாராளுமன்ற வாதமும், பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதும்

1967 - ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஏற்பட்டபோது அதில் எஸ்.யு.சி.ஐ. ஒரு நிபந்தனையுடன் சேர்ந்தது. அதாவது தொழிலாளர் போராட்டங்களில் போலீஸ் தலையீடு கூடாது என்ற கொள்கையைத் திட்டவட்டமாக இடது முன்னணி அறிவித்தால் மட்டுமே அதில் எஸ்.யு.சி.ஐ. சேரும் என்று சிப்தாஷ் கோஷ் தலைமையிலிருந்த எஸ்.யு.சி.ஐ. அப்போது அறிவித்தது. அதைப்போல் பி.சி.சென் போன்ற ஒரு அப்பட்டமான கம்யூனிஸ விரோத மனநிலை கொண்டவர்கள் முதல்வர்களாக வர ஒத்துழைக்கக் கூடாது என்ற முடிவினையும் அவர் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபட்ட போது தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது என்ற மார்க்சியக் கோட்பாட்டிற்கு உகந்த வகையில் சிப்தாஷ் கோஷ் அப்போது செயல்பட்டார்.

அதுபோன்ற எந்த முடிவினையாவது திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எஸ்.யு.சி.ஐ. எடுத்ததா? எந்த நிபந்தனையை எந்தக் குறைந்தபட்ச திட்டத்தை முன்வைத்து அக்கட்சிகளுடன் எஸ்.யு.சி.ஐ. கூட்டு சேர்ந்தது? சிங்கூர், நந்திகிராம் இயக்கங்களை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது; அதில் எஸ்.யு.சி.ஐ -யும் சேர்ந்திருந்தது. எனவே அப்போராட்டத்தின் பங்கும் பகுதியுமாகத் தோன்றிய கூட்டணியில் நாங்களும் சேர்ந்தோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்ததை வேண்டுமானால் எஸ்.யு.சி.ஐ - ன் இன்றைய தலைமை நியாயப் படுத்தலாம்.

ஆனால் எந்த மத்திய அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றி நந்தி கிராமில் சி.பி.ஐ(எம்) அரசு விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கத் தொடங்கியதோ அந்த மத்திய அரசிற்குத் தலைமை ஏற்கும் காங்கிரஸ் உடனான கூட்டை எஸ்.யு.சி.ஐ - ஆல் எப்படி நியாயப்படுத்த முடியும்? மத்திய காங்கிரஸ் அரசிற்கு ஆதரவு வழங்க முன்வந்தபோது குறைந்தபட்சத் திட்டம் ஒன்றையாவது பெயரளவிற்கு சி.பி.ஐ(எம்). கட்சியினர் வலியுறுத்தினர். அந்த அளவிற்குக்கூட எதையும் வலியுறுத்தாமல் எப்படியேனும் பாராளுமன்றத்தில் கால்பதித்துவிட வேண்டும் என்பதற்காக முதலாளித்துவக் கட்சிகள் முன்வைக்கும் பசப்பு வாதங்களைப் போன்ற வாதங்களை முன்வைத்து திரிணாமுல் உடன் நாங்கள் சேர்ந்தோம், திரிணாமுலோடு காங்கிரஸ் - ம் சேர்ந்தது; நாங்கள் எங்கே காங்கிரஸோடு சேர்ந்தோம் என்று வாதிடும் நிலைக்கு எஸ்.யு.சி.ஐ - ன் தற்போதய தலைமை தள்ளப்பட்டுள்ளது.

இதில் இக்கட்சி பின்பற்றியது பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதல்ல; அப்பட்டமான பாராளுமன்ற வாதமே அதை வைத்து நாடு முழுவதிலும் உள்ள தங்கள் கட்சி அணிகளிடம் நமது உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறிப் பெரும் வளர்ச்சியடைந்து விட்டதாக வெட்கமற்ற பிரச்சாரத்திலும் அக்கட்சி ஈடுபடுகின்றது. இந்த வெற்றி பாட்டாளி வர்க்க அரசியல் கண் கொண்டு பார்க்கையில் அரசியல் ரீதியான தோல்வியே. ஆம். சில பாராளுமன்றவாதத்தைப் பிரதிபலிக்கும் தேர்தல் வெற்றிகள் மார்க்சிய அரசியலைப் பொறுத்தவரை அப்பட்டமான அரசியல் தோல்விகளே.

தமிழ் நாட்டின் முன்னனுபவம்

எஸ்.யு.சி.ஐ - ன் இந்தப் பாராளுமன்ற வாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எப்படியாவது குறுக்கு வழியில் வளர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணபோக்கு சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப்பின் எஸ்.யு.சி.ஐ. கட்சியில் ஏராளமாகவே தலை தூக்கியது. தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளுக்கு அரிச்சுவடி போடப்பட்ட அந்த ஆரம்ப காலத்திலேயே சென்னையில் செயல்பட்டு வந்த ஒரு தனிநபர் தொழிற் சங்கத்தின் தலைவரை தனது ஆதரவு வேட்பாளராக 81 - ம் ஆண்டு தேர்தலிலேயே அக்கட்சி நிறுத்த முயன்றது. அன்றைய தி.மு.க. தலைமை முரசொலி பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவியை அவர் போட்டியிட்டால் வேலை நீக்கம் செய்து விடுவோம் என்று மிரட்டியவுடன் அவர் நிற்க மறுத்து ஓட்டம் பிடித்துவிட்டார். அதைப் போலவே எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்பு ஜானகி அணியுடன் உடன்பாடு செய்துகொண்டு ஓரிரு இடங்களைப் பெறவும் இக்கட்சி பிரம்மப் பிரயத்தனம் செய்தது. எனவே எஸ்.யு.சி.ஐ - ன் பாராளுமன்ற வாதம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே அம்பலமான ஒன்றே.

உண்மைக்கு மதிப்பளிக்காத மிகைப்படுத்தல்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே உண்மைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்; அதனை உயர்த்திப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சியை படிப்படியாக வேணும் மக்கள் மதிப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்த இந்தி எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி வளரும் நோக்குடன் மொழியின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் மொழிப் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை அக்கட்சி நடத்தியதென்பதைப் பார்த்தோம். ஆனால் பிற தென் மாநிலங்கள் எதிலும்‡ தமிழ் நாட்டில் இருந்த அளவு ஸ்தாபன வலு அக்கட்சிக்கு இருந்தும் கூட ‡அதைப்போன்ற மாநாடு நடைபெறவில்லை. அதற்கான காரணம் அம்மாநில மக்களுக்கு இந்தி மொழியினைக் கற்பதில் அவ்வளவு எதிர்ப்பில்லை என்பதே. ஆனாலும் ஒரு அகில இந்திய மொழிப் பாதுகாப்புக் கமிட்டி அதற்காக அமைக்கப்பட்டது. அதாவது அதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படப் போகின்றன என்பது போன்ற பொய்த் தோற்றத்தைக் காட்டுவதற்காக.

அதைப்போல் நவீன தாராளவாதக் கொள்கைகளை நாட்டில் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த இயக்கத்தையும் நடத்தாமல் அகில இந்திய மகளிர் மாநாட்டை பெங்களூரில் அக்கட்சி ஏற்பாடு செய்தது. ஏனெனில் பெண்களையும் மாணவிகளையும் பெரிய அளவில் அதிகச் சிரமமின்றித் திரட்டும் வாய்ப்பும், அவர்களை எளிதில் அணுக முடிந்த உயர்மத்தியதர வர்க்கப் பெண்களும் கர்நாடக மாநில அமைப்பில் இருந்தனர். கல்லூரிகளின் முதல்வர்களிடம் அனுமதி பெற்று ஓரளவு கூடுதல் எண்ணிக்கையில் அப்போது பெண்களை அணிதிரட்ட முடிந்த அந்த அமைப்பினால் அதன்பின் அவர்களை எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஈடுபடுத்த முடியவில்லை.

இவையனைத்தும் தங்கள் கட்சி ஒரு மிகப்பெரிய அமைப்பு என்று காட்டி அதன்மூலம் பாராளுமன்றவாதக் கட்சிகளின் பாணியில் மேலோட்டமான மக்கள் ஆதரவினைப் பெற வேண்டும் என்ற நோக்குடனேயே செய்யப்பட்டது. இப்படிப்பட்ட செயற்கையான வழிமுறைகள் மூலம் ஒரு சமுதாய மாற்றத்தைச் சாதிக்க விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் வளர முடியாது.

புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக பிற தொழிற்சங்க அமைப்புகளுடன் சேர்ந்து ஒருசில அடையாளபூர்வ போராட்டங்களைத் தவிர வேறெதுவும் செய்யாத அக்கட்சி அடுத்தபடியாகச் சிறிதும் கூச்சமின்றி உண்மைக்குப் புறம்பாகத் தனது யு.டி.யு.சி. (லெனின் சாரணி) தொழிற் சங்கத்தை இந்தியாவின் நான்காவது பெரிய தொழிற்சங்கம் என அறிவித்துக் கொள்ளவும் செய்தது. அதாவது எ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு - வைக் காட்டிலும் தொழிற்சங்க அரங்கில் தாங்கள் தான் பெரிய அமைப்பு என்று காட்ட முனைந்தது. ஒருமுறை கணக்கெடுப்பில் எ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு - யும் கலந்து கொள்ளாததை வைத்து தானே ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ் - க்கு அடுத்து நான்காவது பெரிய அமைப்பு என்று காட்ட முனைந்தது. விடுதலை பெற்றபின் உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகக் கொடுமையான தாக்குதலைக் கொண்டு வந்தது புதிய பொருளாதாரக் கொள்கையே. ஆனால் அதற்கு எதிராகக் கூட்டத்தில் கோவிந்தா போட்டதைத் தவிர அந்த இந்தியாவின் ‘நான்காவது பெரிய தொழிற்சங்கம்’ எதையும் செய்யவில்லை.

அதைப்போல் எஸ்.யு.சி.ஐ. நடத்தும் நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வோர் எண்ணிக்கையை யதார்த்தத்திற்குப் புறம்பாக மிகைப்படுத்திக் காட்டுவதில் அதற்கு நிகர் அதாகவே விளங்கியது. மேலும் ஏதாவதொரு இயக்கத்தில் தப்பித்தவறி அக்கட்சி பங்கேற்றால் அந்த இயக்கத்தை அக்கட்சியே நடத்தியது போன்ற ஒரு உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தைச் செய்வதும் அதன் வழக்கமாகிவிட்டது.

எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில் ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி அன்னிய, உள்நாட்டு ஏகபோக முதலாளிகள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்காக வழங்க மேற்குவங்க அரசு சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் எத்தனித்த போது அதனை எதிர்த்துத் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் ஒருமக்கள் இயக்கம் நடந்தது. அதில் சி.பி.ஐ(எம்.எல்), எஸ்.யு.சி.ஐ., சிறிய அளவிற்கு சி.டபிள்யு.பி. போன்ற பல அமைப்புகள் பங்கேற்றன. கண்ணும் கருத்தும் உள்ளோர் அனைவரும் அந்த இயக்கம் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடந்தது என்பதை அறிவர். ஆனால் எஸ்.யு.சி.ஐ. அவ்விசயத்தில் அவிழ்த்துவிட்ட பிரச்சாரமோ அந்த இயக்கத்தை அக்கட்சியே நடத்தியது; முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அதனை மூடிமறைத்துத் திரிணாமுல் போன்ற அமைப்புகளுக்கு முன்னுரிமை தருகின்றன என்பதாக இருந்தது.

மார்க்சிசம் ஒன்று மட்டுமே உண்மையை உயர்த்திப் பிடிக்கும் தத்துவம். ஆனால் கண்ணுக்கெதிரான உண்மைகளை இவ்வாறு அளவுக்கதிகமாக மிகைப்படுத்திக் கூறும் போக்கு எவ்வாறு ஒரு மார்க்சியக் குணாம்சம் ஆகமுடியும்?.

தலைவிரித்தாடும் தலைமைத்துதி

இவ்வாறு சிப்தாஷ் கோஷ் - க்குப் பின் ஏற்பட்ட எந்த வளர்ச்சிப் போக்கையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாது அவர் கூறிய அனைத்து விசயங்களும் இன்றுவரை மிகச் சரியானவையாகவே உள்ளன என்று காட்ட முயன்றதோடு அவர் அத்தனை உயர்ந்தவர் - அவரது வழிவந்த பின்னாள் தலைவர்களும் பெரிதும் உயர்ந்தவர்கள் என்ற தலைவர் துதி மனநிலை கட்சியின் கடைசி மட்டம்வரை பல்கிப்பரவ அக்கட்சி வழிவகுத்தது. அதற்குகந்த சூழ்நிலையை எவ்வாறு மாநிலங்களின் பொறுப்பாளர்களாக இருந்த மத்திய அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் நாசூக்காகச் செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிப்தாஷ் கோஷ் கட்சியின் அத்தாரிட்டிக்கும் அத்தாரிட்டேரியனிஸத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை சுட்டிக் காட்டியபோதிலும் அத்தாரிட்டேரியனிஸம் தலைதூக்காதிருப்பதற்கு அத்தியாவசியமான விமர்சன, சுயவிமர்சனப் போக்கினை அறவே வளரவிடாதிருந்த இச்சூழ்நிலை உள்ளடக்கத்தில் ஒரு அதிகாரவாதத் தலைமை கட்சியில் ஆழமாக வேரூன்ற வழிவகுத்தது. அதற்கு எப்போதுமே அடிபணியத் தயாராக இருக்கும் ஒரு குருட்டுத்தனமான மனநிலை கட்சி அணியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஒருவகை மதவாதத்தன்மை வாய்ந்த பிரச்சாரம் மூலம் அது செய்யப்பட்டது.

எந்திரகதியிலான சிந்தனை

மாற்றங்கள் எதையும் அங்கீகரிக்காத, கணக்கில் கொள்ளாத, அவற்றின் அடிப்படையில் சிந்தனையைச் செறிவு செய்யாத நாம் மேலே விவரித்த போக்கு ஒரு எந்திர கதியிலான மனநிலையை அனைத்துத் தொண்டர்களிடமும் உருவாக்கியது. எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் அதற்கான தயார் நிலையில் வைத்திருக்கப்படும் பதில்கள் தலைவர்களிடமிருந்து உடனே வெளிவரும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

யாரேனும் பகுப்பாய்வு செய்து தலைமையின் கருத்துக்கு மாறான கருத்தினை முன்வைத்தால் அவர் முன்வைக்கும் கருத்தின் தகுதியை வைத்து அதனைப் பார்ப்பதை விடுத்து அவர் ஏன் இவ்வாறெல்லாம் கருத்துக்கள் வைக்கிறார் என்று அவருக்கு எதிரான மனநிலையை நாசூக்காக உருவாக்கும் போக்கு எங்கும் பரவலாயிற்று. தகுதிக் குறைவான தலைமை தன்னை தகுதிமிக்க தலைமை என்று நிலைநாட்ட முயலும் போது ஏற்படும் அத்தனை எதிர்மறைப் போக்குகளும் கட்சிக்குள் தலைதூக்கின.

இப்படிப்பட்ட போக்கின் காரணமாகக் கட்சியில் புதிதாக உருவான சிந்தனை மற்றும் செயல்திறன் மிக்க பல புதிய தலைவர்களை அமைப்பால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தோழர் கியான் சிங், தோழர் என்.ஆர்.சிங், தோழர் ஜேம்ஸ் ஜோசப் போன்ற கட்சியின் பிரகாசமான எதிர்காலமாக விளங்கிய தோழர்கள் கட்சியைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒரு எந்திரத்தால் உயிரோட்டமுள்ள எதனையும் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அதனால் உயிரற்ற நட்டுகள் போல்ட்கள் போன்றவற்றையே உள்வாங்கிக் கொள்ள முடியும் அத்தகைய நிலையே எந்திர கதியிலான சிந்தனைப் போக்கு கட்சியில் தலைதூக்கிய நிலையில் கட்சியில் நிலவியது.

ஒருபுறம் உயர்மத்தியதர வர்க்கத்திலிருந்து கட்சிக்கு வரக்கூடிய தோழர்களுக்கு அதீத முக்கியத்துவம் தந்து தாஜா செய்து வைத்திருக்கும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. அவர்களைக் கட்சியில் வைத்திருக்க அறிவு ஜீவித்தன்மை வாய்ந்த வாதங்களே போதுமானவையாயிருந்தன. ஆனால் அதைப்போல் கீழ்த்தட்டு மத்தியதர வர்க்க, உழைக்கும் வர்க்கப் பிரிவினரிடமிருந்து வரக்கூடிய தோழர்களை வைத்திருக்க முடியாது. அவர்களை எழுச்சி மனநிலையுடன் வைத்திருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவைப்படக் கூடியது உழைக்கும் மக்கள் இயக்கங்களே. அதனைத் தட்டியயழுப்ப ஒரு ஈடுபாடும் ஒரு உழைக்கும் வர்க்க உள்ளுணர்வும் கொண்ட தலைமையும், அணுகுமுறையும் அவசியம்.

ஆனால் தலைமைப் பொறுப்பு மேற்கூறிய பண்புகள் இல்லாத உயர்மத்தியதர வர்க்க வகுப்பிலிருந்து வருபவர்களிடமே இருந்த சூழ்நிலையில் மக்கள் இயக்கங்களை அக்கட்சியினால் கட்டவும் முடியவில்லை; அந்த மக்கள் இயக்கப் பெருக்கங்கள் மூலம் முழுநேர ஊழியர்களை உருவாக்கவும் முடியவில்லை.

சூழ்நிலை உருவாக்கிய முழுநேர ஊழியர்கள்

எனவே முழுநேர ஊழியர்களாக வந்த மிகப் பெரும்பாலோர் புரட்சித்தீ அவர்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிந்ததனால் வந்தவர்களல்ல. பல்வேறு சூழ்நிலைகளில் கட்சி அலுவலகத்தில் தங்க நேர்ந்தவர்களில் பலர் முழுநேர ஊழியர் ஆனார்கள். இவ்வாறு மக்கள் இயக்கங்களுக்கு முன்னுரிமை தரப்படாத சூழ்நிலை முழுநேர ஊழியர்களின் கட்சிப்பணி முழுமையுமே நிதி வசூல், பத்திரிக்கை விற்பனை, ஆண்டுக்கு இரண்டு கட்டாயமான பொது நிகழ்ச்சிகள், பொது நிதி நிலை அறிக்கை, ரயில்வே நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் வேளைகளில் அதற்கு எதிரான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இவையே கட்சியின் நிரந்தர மற்றும் வழக்கமான செயல்பாடுகளாக ஆகிவிட்டன. இதைப் போன்ற செக்குமாட்டுத் தனமான போக்கினால் ஒரு சலிப்புணர்வு தவிர்க்க முடியாமல் அவர்களிடம் தோன்றியது.

உழைக்கும் வர்க்க இயக்கத்தில் புடம் போடப்பட்டு அதில் அடிபட்ட அனுபவங்களுடன் பொது வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் இவற்றையயல்லாம் அறியாத நிலையில் இவ்வாறு முழுநேர ஊழியர்களாக ஆக்கப்பட்ட சிலர் முழுநேர ஊழியர்கள் குறித்துச் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்குந்த வகையில் நடந்து கொள்ளவும் முடியாமல் தனிப்பட்ட வாழ்க்கைச் சபலத்தையும் தூக்கியயறியவும் முடியாமல் மனநிலை தடுமாறியும் போயினர்.

தலைமை குறித்து எவ்வாறெல்லாம் பொய்த் தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றால் சில தோழர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் மூடப்படும் நிலையிலிருக்கும் போது அதிலிருந்து வெளியேறினர். அவர்கள் மட்டுமல்ல புத்திசாலித்தனமான சாதாரணத் தொழிலாளர்கள் பலரும் அவர்களுடன் வெளியேறினர். காரணம் ஆலை அதாகவே மூடப்பட்டுவிட்டால் தங்களது ஓய்வுகாலப் பலன்களைத் தாங்கள் பெற முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டதே. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியேறிய தோழர்கள் கட்சிக்காக வேலையைத் தூக்கியயறிந்துவிட்டு வந்தவர்கள் என்று மக்கள் மத்தியிலும், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டனர். இதுபோன்ற போக்குகளினால் முழுநேர ஊழியர்களே இல்லாத பகுதிகளில் ஓரளவேணும் மக்கள் இயக்கங்கள் உருவானபோது முழுநேர ஊழியர்கள் கூடுதலாக உள்ள பகுதிகளில் மக்கள் இயக்கங்களே உருவாகாத ஒரு விநோத நிலையும் நிலவியது.

புரட்சிகரத் தன்னடக்கமற்ற போக்கு

பொதுவாக ஒரு புரட்சியாளனின் ஒரு அடிப்படைக் குணாம்சம் அவன் தன்னைப்பற்றி அதிகம் பேசமாட்டான். தன்னைப் பற்றியே தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பவர்களை சாதாரணமாக மக்களுக்குப் பிடிப்பதில்லை. அவன் பேசாமலேயே அவன் ஆற்றும் செயல்கள் அவனைப்பற்றி மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். அதுவே உண்மையான புரட்சியாளர் விசயத்தில் நாம் எதிர்பார்க்கும் குணாம்சம். அதைப்போலவே ஒரு புரட்சிகரக் கட்சிக்கும் தானாகவே அதைப்பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்ளும் அவலநிலை உருவாகிவிடக் கூடாது. அது முன்னெடுக்கும் மக்கள் இயக்கங்கள் அப்போது அதன் தலைவர்களும் தொண்டர்களும் பிரதிபலிக்கும் மனோதிடம், அர்ப்பணிப்பு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து மக்கள் அக்கட்சியைப் பற்றி பேசவேண்டும். ஆனால் தற்போதைய எஸ்.யு.சி.ஐ. கட்சியின் போக்கு அப்படிப்பட்டதல்ல. காலாவதியாகிப் போன மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் அவற்றின் காலாவதியாகிப் போன தன்மையை மூடிமறைக்க அவற்றைப் பற்றியே இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கும் போக்கினைக் கொண்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட கட்டாயம் அவ்வமைப்புகளுக்கு உள்ளது. அதையயாத்த விதத்தில் அதைப்பற்றி அதனை உன்னதப்படுத்திப் பேசுவது எஸ்.யு.சி.ஐ - யின் ஒரு முக்கியக்கட்சிப் பணியாகிவிட்டது. புரட்சிகரத் தன்னடக்கம் மருந்திற்கும் இல்லாததாக அக்கட்சி ஆகிவிட்டது.

இவ்வாறு இந்தியாவில் செயல்பட்ட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டு முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி என்ற அடிப்படை அரசியல் வழியைத் தர்க்கபூர்வ வாதங்களுடன் முன்வைத்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, பிற கட்சிகளுடன் சில சமயங்களில் உடன்பாடு வைத்து போட்டியிடும் போதும் அமைச்சரவைகளில் பங்கேற்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய நிலைபாடுகள் என்ன என்பது குறித்து பல வழங்கல்களைச் செய்தது மட்டுமல்ல அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்கவும் செய்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு எவ்வாறு இந்திய முதலாளித்துவத்தை மூடிமறைத்துக் காக்கப் பயன்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி, அத்தாரிட்டி மற்றும் அத்தாரிட்டேரியனிஸம் ஆகியவை குறித்த மார்க்சிய விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களை முன்வைத்து தனித்தன்மையுடன் சிப்தாஷ் கோ ஷி னால் வளர்க்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ. கட்சி இன்று அப்படிப்பட்ட தனித்தன்மைகள் எதுவுமில்லாமல் பத்தோடு பதினொன்று என்ற ரீதியில் பரிதாபகரமாக நிற்கிறது.

ஆம். இன்று அவர் வளர்த்த கட்சியே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக் கண்ணோட்டத்தில் கேள்விக்குறியை முன்வைக்கும் விதத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது. எப்படியாகிலும் வெற்றிபெற்று அதனைக்காட்டி வளர்ச்சி குறித்த ஒரு பிரமையை ஏற்படுத்தி தொண்டர்களைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த வகையான குறைந்தபட்சத் திட்டமும் இன்றி தேர்தல் உடன்பாடுகளைத் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புகளோடு செய்துகொள்கிறது. அதனால் வெற்றிபெற்ற எஸ்.யு.சி.ஐ - ன் நாடாளுமன்ற உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் என அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியினால் குறிப்பிடப்படுகிறார்.

அடைப்புக்குறி கம்யூனிஸம்

தோழர் சிப்தாஷ் கோஷே அவருடைய காலகட்டத்தில் கட்சிக் காங்கிரஸ் நடத்தவில்லை. காரணம் அதற்குத் தேவையான வலிமை மட்டுமல்ல. சில வெளிப்படையாக அத்தனை உயர்ந்த தலைவர்கள் போல் காட்சியளிக்காத ஆனால் உண்மையில் உயர்ந்த தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்குக் கட்சி உறுப்பினர்களின் உணர்வு மட்டம் இல்லை என்பதையும் அதற்கான காரணமாக அவர் கூறினார். அதுபோன்ற நுணுக்கமான ஆனால் சரியான காரணங்களால் கட்சிக் காங்கிரஸ் நடத்தாத நிலையில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று காட்டுவதற்காக ஒன்றல்ல இரண்டு கட்சிக் காங்கிரஸ்களை நடத்தி இரண்டாவது காங்கிரஸில் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தானா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் எஸ்.யு.சி.ஐ(கம்யூனிஸ்ட்) என்று பெயர் மாற்றத்தையும் அக்கட்சி செய்து கொண்டுள்ளது.

வேசதாரித்தனமும், பாராளுமன்றவாதமும்

அனைத்துக் கலாச்சாரச் சீரழிவுகளிலும் தலையாய சீரழிவு வேசதாரித்தனம். அது எத்தனை மோசமான கலாச்சார சீரழிவுப் போக்குகளையும் நியாயப்படுத்த வல்லது. பொய்யாகப் பல சமயங்களில் குறுகிய காலத்திற்கு அவற்றை நிறுவவும் வல்லது.

உண்மையான உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தைக் கொண்ட புரட்சியையே தொழிலாகக் கொண்டவனின் வாழ்க்கை நிலை எந்தச் சூழ்நிலையிலும் ஒரு சராசரித் தொழிலாளியின் வாழ்க்கை நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கக் கூடாது என்பதே உயர்ந்த உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தைத் தோழர்கள் கைக்கொள்ள தேவைப்படும் முன்நிபந்தனை.

அத்தகைய மனநிலையோடு உழைக்கும் மக்களை அணிதிரட்டும் உறுதி கொண்டவர்களாக எஸ்.யு.சி.ஐ. கட்சி பல மாநிலங்களில் தங்களது அமைப்பின் முழுநேர ஊழியர்களாகக் காட்டுபவர்கள் இருந்தால் அவர்களைப் பராமரிக்க ஆகும் செலவுகளை அவர்கள் உருவாக்கும் வெகுஜன அமைப்புகள் மூலமே அதாவது பொதுவசூல் இன்றியே சமாளிக்க முடியும். பொதுவசூல் பொதுவாக மக்கள் இயக்கத்திற்காகத்தான் பிரதானமாக இருக்க வேண்டும். ஆனால் எஸ்.யு.சி.ஐ - ன் நிலைமையோ மாதம்தோறும் வசூல் வருடத்திற்கு இரண்டு இயக்கம், இரண்டு நிகழ்ச்சிகள் அவற்றிற்கும் தனிவசூல் என்ற வகையிலேயே நடைபெறுகிறது. ஆனால் நிதி வசூலின் முன்வைக்கப்படும் வாதம் நாங்கள் மக்கள் இயக்கம் கட்டுகிறோம் என்பதாகும் நாம் ஏற்கனவே பார்த்தவாறு மக்கள் இயக்கம் கட்டத் தேவையான உழைக்கும் வர்க்க மனநிலையும், உந்துதலும் தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்படும் மத்திய தரவர்க்கத் தலைமையிடம் இருப்பதில்லை. உழைக்கும் வர்க்கம் குறித்துப் பலமடங்கு பேச்சுக்களுக்கும் அடிப்படையில் அப்பட்டமான மத்திய தரவர்க்க வாழ்க்கைக்கும் பழகிப்போன அக்கட்சியின் தலைமையிடம் எதையயடுத்தாலும் தலைதூக்குவது மிதமிஞ்சிய எச்சரிக்கை உணர்வே. அதனால் இயக்கம் எடுக்கும் மனநிலை உள்ளிருந்தே முடமாக்கப்படும் அவலநிலையே நிலவுகிறது.

ஒரு கட்சியில் தொடர்ச்சியான இயக்க மனநிலை பராமரிக்கப் படுவதற்கு இன்றியமையாத் தேவை அது அதன் வெகுஜன அமைப்புகள் அனைத்திலும் கூடுதல் முக்கியத்துவத்தை அதன் தொழிற்சங்க அரங்கிற்குக் கொடுத்துச் செயல்படுவதாகும். ஆனால் சென்னை போன்ற மிகப்பெரிய தொழில் நகரங்களில் கூட தொழிற்சங்க அமைப்புகள் எதையுமே பதிவு செய்யாமல் இக்கட்சியினால் செயல்பட முடிகிறது. இது எவ்வளவு தூரம் இயக்க மனநிலை அற்றதாக இக்கட்சி ஆகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தொழிற்சங்கங்களுக்கு முன்னுரிமை தராதிருப்பதற்கான உண்மைக் காரணம் மிதமிஞ்சிய எச்சரிக்கை மற்றும் தற்காப்பு உணர்வுகளே.

தொழிற்சங்க அரங்கில் மட்டுமல்ல மாணவர் அரங்கிலும் இக்கட்சியின் போக்கு இத்தகையதே. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் அரசால் கொண்டுவரப்படும் போது அதில் தங்கள் நிலை என்ன என்பதை வெளிப்படையாகக் கூறக் கூட இக்கட்சிக்கு ஏற்பட்டது ஒருவகை அச்சமே. காரணம் அதனால் அரசின் பொய்ப் பிரச்சாரத்தில் மயங்கியுள்ள கிராமப்புற மக்களின் எதிர்ப்பினைச் சந்திக்க வேண்டிவருமோ என்ற எண்ணமே அது சரியான நிலை எடுப்பதைத் தடுத்தது. இலங்கைத் தமிழர் பிரச்னை கொழுந்து விட்டெரிந்த நிலையிலும் இக்கட்சி அந்த இனப் பிரச்னையில் தனது நிலை என்ன என்பதை மேற்கூறியது போன்ற காரணங்களுக்காகவே கூற முன்வரவில்லை.

அதைப்போல் தஸ்லிமா நஸ் ரீன் , தமிழகத்தில் நடிகை குஷ்பு போன்றவர்களுக்கு எதிரான பாசிஸத்தன்மை வாய்ந்த தாக்குதல்கள் மதவாத, வெறிவாத அமைப்புகளால் தட்டி யெழுப்பப்பட்ட வேளையில் அதற்கு எதிராகக் குரல் கொடுக்காத நிலைக்குக் காரணம் எங்கே மதவாத, இன உணர்வு கொண்ட மக்களின் ஆதரவைத் தாங்கள் இழக்க நேருமோ என்ற அச்சமே. கம்யூனிஸ்ட்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய வேறுபாடே கம்யூனிஸ்ட்கள் மற்ற சீர்திருத்தவாதப் பாராளுமன்றவாத அமைப்புகளைப் போலல்லாது, எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை உயர்த்திப் பிடிக்கக் கூடியவர்கள் என்பதே.

சரியில்லாத கருத்துக்களின் பால் புரிதலில்லாமையின் காரணமாக மக்களின் ஆதரவு செல்கிறதென்றால் கூட, அதனைக் களையும் விதத்தில் கருத்துப் போராட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட்கள் தயங்கக் கூடாது. இந்த போராட்ட அரசியலின் விதியினைக் கடைப்பிடிக்கத் திராணியற்றதாக இக்கட்சி ஆகிவிட்டது. அதாவது மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்களோடு சமரசம் செய்து கொண்டேனும் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற பாராளுமன்றவாதம், இக்கட்சியை அப்படியே பற்றிக் கொண்டுவிட்டது. அதாவது பல கம்யூனிஸ்ட் கட்சிகளில் பாராளுமன்ற வாதம் அவை சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பல இடங்களை வென்ற நிலையில் அவற்றைத் தக்க வைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் தோன்றியது. ஆனால் இக்கட்சியிலோ சட்ட, நாடாளுமன்றங்களில், பார்வையில் படும் வண்ணம் தடம் பதிக்காத நிலையிலேயே பாராளுமன்ற வாதம் தோன்றி நிலை பெற்றுள்ளது.

மடாலயங்கள், ஆசிரமங்கள் பாணியில் கம்யூன்கள்

இவ்வாறு சிப்தாஷ் கோஷ் காட்டிய வழிமுறைகள் அனைத்திலிருந்தும் ஏறக்குறையத் தடம் புரண்டுவிட்ட இக்கட்சி இப்போதும் தான் மட்டுமே கம்யூன், சென்டர் கண்ணோட்டங்களை வைத்திருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறது. ஆனால் கம்யூன் வாழ்க்கையில் இருந்த மேற்குவங்க மாநிலக் கமிட்டியைச் சேர்ந்த ஒரு தோழர் அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் மீது பொதுமக்கள், தொண்டர்களின் பார்வையைத் திருப்ப வேறு வழியே இல்லை என்ற நிலையில் முன்கூட்டியே தனது தற்கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு அது பத்திரிக்கைகளின் கைகளில் கிடைத்த பிறகு தற்கொலை செய்து கொண்டார். அதுவே அக்கட்சி பராமரிக்கும் கம்யூன்களின் இன்றைய நிலை.

மத்திய அளவிலிருக்கும் கம்யூனின் நிலையே இதுவென்றால் மாநிலங்களில் சென்டர் என்ற பெயரில் இருக்கும் முழுநேர ஊழியர்களின் வசிப்பிடங்களின் நிலை என்னவென்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல.

சென்டர்களும் கட்சி அலுவலகங்களும் போராட்ட உணர்வு பீறிட்டுப் பிரகாசமாக வெளியேறும் கதிரியக்க மையங்களாக இருக்க வேண்டியவை. ஆனால் அவை உள்ளம் திறந்த விவாதங்கள் கூட நடைபெறாமல் போலியாகவும் செயற்கையாகவும் பேசிக் காலம் தள்ளும் உறங்கி வழியும் அமைப்புகளாக வெளிப்படையாகவே ஆகிவிட்டன. அந்நிலையில் மடாலயங்கள், ஆசிரமங்கள் போன்ற அமைப்புகளில் தலைதூக்கும் கோளாறுகள் அனைத்தும் தவிர்க்க முடியாமல் இந்த அமைப்பின் அலுவலகங்களிலும், கட்சி மையங்களிலும் தலைதூக்கத் தானே செய்யும்.

இதையயல்லாம் நாம் கூறுவது கம்யூன் முறையோ, சென்டர் முறையோ அடிப்படையில் தவறாக ஆகிவிட்டது என்று காட்டுவதற்காக அல்ல. அதை இனிமேல் யாராலும் கடைப்பிடிக்க முடியாது என்று காட்டுவதும் நமது நோக்கமல்ல. தோழர் சிப்தாஷ் கோஷ் கொண்டுவந்த அக்கண்ணோட்டங்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தின் மைல் கற்கள். அவற்றைக் கடைப்பிடிக்கும் ஊழியர்களை உருவாக்க ஜீவனுள்ள கட்சி வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட வேண்டும். அதற்கான முன்தேவை மார்க்சிய விஞ்ஞானம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கெல்லாம் ஏற்ற விதத்திலெல்லாம் செழுமைப்படுத்தப் பட வேண்டும் என்பதே. அது நடைபெறாத நிலையில் அதனை நடத்துவதற்குத் திராணியற்றதாக தலைமை ஆகிவிட்டால் ஜீவனுள்ள வாழ்க்கையைக் கட்சிக்குள் பராமரிக்க முடியாது.

சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்நாளில் செய்து முடித்ததே கட்சியின் காலங்காலமாக இருக்கப் போகும் கட்சியை வழிநடத்தப் போகும் கண்ணோட்டம் என்ற மனநிலையில் தலைமை இருந்தால் தற்போது சோசலிச முகாம் என்ற ஒன்றே இல்லாமல் போய், உலகமயத்தின் விளைவாக தேசியவாதக் கண்ணோட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிப் போயுள்ள சூழ்நிலையில் தர்க்கபூர்வ வாதங்கள் மூலம் சிப்தாஷ் கோஷ் கூறிய கண்ணோட்டங்கள் அனைத்தையும் எவ்விதச் செழுமைப் படுத்தலும் இன்றிப் பொருத்திக் காட்டும் வேலையை மட்டும் செய்து வார்த்தையிலும் உணர்விலும் அவையே சரியானவை சமூக மாற்றத்திற்கு வழிகாட்ட வல்லவை என்று யாராலும் நிலைநாட்ட முடியாது.

அது மக்கள் மனதில் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலினைக் கொண்டதாக இராது. எனவே தத்துவார்த்த ஆயுதம் தரித்தவர்களாக கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமற் போய்விட்டால் கட்சிப் பணிகளையும், இயக்கங்களையும் தன்னம்பிக்கையுடனும் ஆக்கபூர்வ மனநிலையுடனும் அவர்களால் ஆற்ற முடியாது. அத்தகைய செயலூக்கமும், இயக்க வளர்ச்சியுமே கட்சிக்குள் ஜீவனுள்ள போராட்டத்தை உருவாக்கி வளர்க்க முடியும். அப்படிப்பட்டவர்களைக் கொண்டதாகக் கம்யூன்களும், சென்டர்களும் இருக்கும் போதே அவை உழைக்கும் மக்களைக் கவர்வதாக ஆகின்றன. இல்லாவிடில் அவை உணவு விடுதிகள் போலவும், கட்சி அலுவலகங்கள் முதலாளித்துவ நிறுவனங்களின் அலுவலகங்கள் போலவும் அதிகார வர்க்கத் தலைமைக்கு அடிபணிபவையாகத் தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகின்றன.

அத்தகைய நிலை உருவாகும் சூழ்நிலைகளில் நல்ல தோழர்களின் வீடுகளைக் காட்டிலும் கூட ஜீவனற்றவையாக அந்தக் கம்யூன்களும், சென்டர்களும் மாறிவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அதிகாரம் என்றால் குற்றச்சாட்டுக் குறிப்பாணைக் காகிதங்களையும், வேலைநீக்க உத்தரவுப் படிவங்களையும் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. விமர்சிக்கும் உரிமை பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாசூக்காகப் பறிக்கப்பட்டாலும் அங்கு உருவாவது அதிகார வர்க்கப் போக்கே.

கட்சி மையங்கள் முறை சிப்தாஷ் கோஷால் காட்டப்பட்டதல்ல. அது அவருக்குப்பின் வந்த தலைவர்களின் மூளையில் உதித்த சிந்தனை. சிப்தாஷ் கோஷ் உருவாக்கிய கம்யூன் முறை உண்மையிலேயே அதை நிரப்பும் ஒவ்வொரு தலைவரும் அவர் காலத்தில் இருந்தவர்களைப் போல் தரமிக்கவர்களாக இருந்தால் அது ஒரு கட்சியமைப்பின் உன்னத வடிவமே. ஆனால் அந்த மனநிலை எட்டப்பட்டதற்குப் பின்பே ஒருவர் கம்யூனின் உறுப்பினராக ஆகமுடியும் என்ற நிலை அசலும் நகலும் எந்தவகைப் போலித்தனமும் இன்றிப் பராமரிக்கப்பட வேண்டும். அப்போது தான் அவை உயர்ந்தவையாக விளங்கும்.

கம்யூன் கண்ணோட்டத்தில் சமரசம்

அந்த நிலை இல்லாத நிலையில் இன்று நடப்பதென்ன? தனிப்பட்ட குடும்பமாக இருப்பது ஒரு உயர்ந்த தலைவருக்கு இலக்கணமல்ல என்பது கட்சியின் கண்ணோட்டமாக இருப்பதால் கம்யூனிஸ சிந்தனையின் மீது அனுதாபமே இல்லாத ஒரு தலைவரது மனைவி கூட கம்யூனில் உறுப்பினராக்கப் படுகிறார். அதற்காக அவர் கட்சி மாநிலக்குழுவின் உறுப்பினராக்கவும் படுகிறார். இதுபோன்ற சீரழிவுப் போக்குகள் ஏற்பட்டுவிட்டால் அது கம்யூனாக அதன் உண்மை அர்த்தத்தில் ஒருபோதும் விளங்க முடியாது.

சிப்தாஷ் கோஷ் முன்வைத்த கம்யூன் மனநிலை கொண்ட ஒருவர் கூட உருவாகாத நிலையிலும் கூட கம்யூனிஸ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு ஒன்று செயல்பட முடியும். ஆனால் அதன் இலக்கு அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை உருவாக்கவல்ல அமைப்பே சிப்தாஷ் கோஷ் உருவாக்க விரும்பிய கம்யூனிஸ்ட் அமைப்பு.

இது அனைவரும் கூறக்கூடிய ஒன்றுதானே? அதனை எப்படிச் செய்வது? என்ற கேள்விகள் எழலாம். மக்கள் இயக்கங்களுக்கான வாய்ப்பு வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறது. அதனை மையமாகக் கொண்டு வெகுஜன, உழைக்கும் மக்கள் இயக்கங்களை நடத்தினால் அந்தப் பின்னணியில் நிச்சயமாகத் தனிச்சொத்து மனநிலை படிப்படியாக அகன்று தன்வயப்பட்ட சிந்தனை ஒழிந்து சமூக சிந்தனை அதாவது சமூகத்தை ஆளத்தகுதியுள்ள ஓரே வர்க்கமான உழைக்கும் வர்க்கச் சிந்தனையே தனது ஒட்டுமொத்தச் சிந்தனை என்ற தரத்தை எட்டிய தோழர்கள் நிச்சயம் உருவாவார்கள். அப்படிப்பட்ட தோழர்களைக் கொண்டு கட்சியில் ஜீவனுள்ள வாழ்க்கைமுறை மேலே விவரிக்கப்பட்ட வழி முறைகளின்படி பராமரிக்கப்படவும் முடியும். அப்போதே உண்மையான கம்யூன்கள் பரிணமிக்கின்றன.

வேசதாரித்தனத்துடன் அத்தகைய பலரைத் தாங்கள் உருவாக்கியிருப்பதாகப் பொய்யாகப் பெருமையடித்துக் கொள்வதைக் காட்டிலும் அப்படி யாரையும் தாங்கள் இதுவரை உருவாக்கவில்லை. ஆனால் அவர்களை உருவாக்கும் இயக்கப் பாதையில் உறுதியாகத் தடம் பதித்திருக்கிறோம்; கட்சியின் சிந்தனையை வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கேற்ற விதத்தில் செழுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று புரட்சிகரத் தன்னடக்கத்துடனும், நேர்மையுடனும் கூற முடிந்த அமைப்பாக ஒரு அமைப்பு வளர்ந்தால் அதுவே சிப்தாஷ் கோஷின் வழியையும் எடுத்துக்கொண்டு வளரும் உண்மையான கம்யூனிஸ்ட் அமைப்பாக, அடைப்புக் குறிக்குள் கம்யூனிஸ்ட் என்று போட்டுக்கொள்ளும் அவலநிலையற்ற அமைப்பாகத் திகழும்.

Pin It