எவரொருவர் தன்னிச்சையாக ஆண், பெண் அல்லது விலங்குடன் இயற்கைக்கு மாறான புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ, அவருக்கு வாழ் நாள் முழுதிற்குமான சிறை தண்டனை அல்லது பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் லார்ட் மெக்காலேவினால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, தன்னிச்சையாகக் கூட, அதே பாலினத்தைச் சேர்ந்த நபருடன் உடலுறவு கொள்ளும் பொழுது குற்றவாளியாகிறார். இதற்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதிற்குமான சிறை தண்டனை விதிக்கப்படலாம்.கடந்த பல ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆனால் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களையும் பெண்களையும் மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது.

தனிமனித செயல்பாடுகளை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்தச் சட்டம் மனித உரிமை மீறல்களைச் செயல்முறைபடுத்துகிறது. இந்தச் சட்டப்பிரிவிற்கு எதிரான மனித உரிமை போராட்டம் 2001ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. நாஸ் அறக்கட்டளை (இந்தியா) என்கிற அமைப்பு தில்லியில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் பராமரிப்பு ஆகிய பணிகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இப்பணியில் "ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களை" அணுகி அவர்களுக்கு எச்.ஐ.வி/ எய்ட்ஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுதுவது, நோய் தடுப்புமுறைகளை தெரிவிப்பது, தங்களைப் பரிசோதித்துக்கொள்ள ஊக்கமளிப்பது போன்றவை இவர்களது பணியில் அடங்கும். ஆனால் இப்பணியை நிறைவேற்றச் செல்லும் நாஸ் அறக்கட்டளையின் outreach workers காவல் துறையினரின் துன்புறுத்துதல்களுக்கு ஆளாகினர். தண்டனைக்குரிய குற்றமொன்றை இவர்கள் தூண்டுவ தாகவும், ஆணுறை வழங்கி ஊக்குவிப்பதாகவும் கூறி காவல் துறையினர் இவர்களது முக்கியமான பணிக்குத் தடையாக இருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, ஒருபாலீர்ப்பையும் பாலியல் செயல்பாட்டையும் தண்டனைக்குரிய குற்றமாக இருப்பது ஒரு நிலையில் முக்கிய மனித உரிமைமீறலாக இருப்பதும் மருத்துவ, சுகாதாரப் பணிக்குத் தடையாக இருப்பதையும், ஒரு குறிப்பிட்ட பாலியல் விழைவும், செயல்பாடும் கொண்ட மக்களை அச்சுறுத்தி அவர்கள் மருத்துவ சேவை பெறுவதற்குத் தடையாக இருப்பதையும் கண்டு நாஸ் அறக்கட்டளை இதனை எதிர்த்து 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பலமுறை வாதங்கள் கேட்கவும் ஒரு முறை வழக்கு நிராகரிக்க வும் பட்டது. எனினும் பொதுநலனைக் கருதித் தொடரப்பட்ட வழக்கு என்பதாலும் பல்லாயிரக் கணக்கான நபர்களின் மனித உரிமை தொடர்பான வழக்கு என்பதாலும் அதனை உடனடியாக கவனிக்கும்படி உச்சநீதிமன்றம் 2006ல் தில்லி உயர்நீதிமன்றத்திடம் கூறியது. (2006 ஆம் ஆண்டிலும் எச்.ஐ.வி தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் மீது காவல் துறையினரின் வன்முறை நிகழ்ந்தது என்பதும் அது அதிக அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது). இறுதியாக, 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் முரளீதர், நாஸ் அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியனுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பின் சாரம் வருமாறு:

18 வயதிற்கு மேலான, தன்னிச்சையாக ஈடுபடுபவர்களது தனிமனித செயல்பாட்டைத் தண்டனைக்குரிய குற்றமாக்குவதால் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் 21, 14 மற்றும் 15 ஆகியவற்றை மீறுகிறது. (Alternative Law Forum. Ed. The Right that Dares to Speak its Name: Naz Foundation Vs. Union of India and Others. August 2009, Bangalore. p.12)

ஷரத்துகள் 21, 14, 15 ஆகியவை முறையே மதிப்பு, சம உரிமை, மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளைக் குறிக்கின்றன: Right to dignity, equality and freedom respectively.

இந்தத் தீர்ப்பு ஒருபாலீர்ப்பு மற்றும் செயல்பாடுகளைக் குற்றமற்றவை என்று அறிவித்தது. இதனால் இனி இவர்களைச் சட்டத்தின் பேரில் துன்புறுத்துவதும் வன்முறைக்கு உள்ளாக்குவதும் கடினமாகிறது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 வருவதற்கு முன் ஆண்-பெண் உறவல்லாத மற்றவை ஒருவித அருவருப்புடனே பார்க்கப்பட்டன. எனினும் அது அத்தகைய அருவருப்பாக மட்டுமே இருப்பதற்கும் அது சட்ட வடிவம் பெற்று ஒரு சமூகத்தினரது அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் அமைவதற்கும் வேற்றுமைகள் பல. எனினும் இரண்டிற்கும் அடிப்படையாக அமைவது ஆண்-பெண் உறவல்லாத எதுவும் இயற்கைக்கு புறம்பானவை என்ற கருத்தியலே.

பிரிவு 377 போன்ற சட்டங்கள் விளைவிக்கும் பாகுபாடுகள் குறித்து தில்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது: "மக்களைப் பாகுபடுத்தும் எதுவும் சமத்துவத்தைக் குலைக்கிறது. சமத்துவம் போற்றும் ஒன்றே மனிதர்களிடையே சுயமதிப்பை வளர்க்கும்." (Judgment, Naz Foundation India Vs Union of India and Others, Honourable Dr. Justice S. Muralidhar, 2 July 2009, para 131, page 104)

இந்த வழக்கிற்கு எதிர் வழக்கு தொடர்ந்திருந்த/ பதிலளித்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் பி.பி. சிங்கால் போன்ற தனிநபர்கள் ஒருபாலீர்ப்பைக் குற்றமற்றதாக்குவது சமூகத்தின் ஒழுக்க நிலையை சீர்குலைக்கும் என்றும் சட்டம் என்பது இத்தகைய அறம் சார்ந்த பார்வைக்கு அப்பாற்பட்டதன்று என்றும் கூறியிருந்தனர். இதுகுறித்து இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது: "ஒரு சில நடவடிக்கைகள் குறித்த வெகுசன சமூகத்தின் அறம் சார்ந்த பார்வையும் மறுப்பும் ஷரத்து 21-ன் கீழ் வழங்கப்படும் அடிப்படை மனித உரிமையைத் தடை செய்வதற்கு தகுந்த காரணங்கள் ஆகமுடியாது... அரசியல் சட்டதிற்கென்று ஒரு அறம் உண்டு, அது காலம்தொட்டும் மனிதருக்கு மனிதர் மாறும் வெகுசன அறத்திலிருந்து மாறுபட்டது." (Judgment, Naz Foundation India Vs Union of India and Others, Honourable Dr. Justice S. Muralidhar, 2 July 2009, para 79, page 64). மேலும், "பெரும்பான்மை சமூகத்தின் கருத்தெனினும் அது அரசியல் சட்டத்தின் அறத்திற்கு முரணாக இருப்பின், ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல" (bid., para 86, page 72) என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது.

இது ஒரு குறிப்பிட்ட மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பெனினும் இந்திய நீதித் துறையின் அமைப்பின்படி இது மற்ற நீதிமன்றங்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும். மேலும் இத்தீர்ப்பு அரசிலமைப்புச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகளைச் சார்ந்து வழங்கப்பட்டுள்ள ஒன்று. இந்திய அரசிலயமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகள் மாநில எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.

தில்லி உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து பல அமைப்புகளும் தனி நபர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். ஒருபாலீர்ப்பும் செயல்பாடுகளும் இந்திய சமூகத்திற்குக் கேடு விளைவிக்கும் என்ற தங்களது கருத்தின் அடிப்படையில் இந்த எதிர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவின் மற்ற உயர் நீதிமன்றங்கள் எவையும் இந்தத் தீர்ப்பினை மறுக்கும் வரையில் இது நாடு முழுவதிற்கும் பொருந்தும்.

சான்றுக் குறிப்புகள்

Judgment, Naz Foundation India Vs Union of India and Others, Honourable Dr. Justice S. Muralidhar, 2 July 2009

Alternative Law Forum. Ed. The Right that Dares to Speak its Name: Naz Foundation Vs. Union of India and Others, August 2009, Bangalore 

எவரொருவர் தன்னிச்சையாக ஆண், பெண் அல்லது விலங்குடன் இயற்கைக்கு மாறான புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ, அவருக்கு வாழ் நாள் முழுதிற்குமான சிறை தண்டனை அல்லது பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் லார்ட் மெக்காலேவினால் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, தன்னிச்சையாகக் கூட, அதே பாலினத்தைச் சேர்ந்த நபருடன் உடலுறவு கொள்ளும் பொழுது குற்றவாளியாகிறார். இதற்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் முழுவதிற்குமான சிறை தண்டனை விதிக்கப்படலாம்.கடந்த பல ஆண்டுகளில் இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. ஆனால் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்களையும் பெண்களையும் மிரட்டுவதற்கும் அச்சுறுத்துவதற்கும் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட் டுள்ளது.

தனிமனித செயல்பாடுகளை தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்தச் சட்டம் மனித உரிமை மீறல்களைச் செயல்முறைபடுத்து கிறது. இந்தச் சட்டப்பிரிவிற்கு எதிரான மனித உரிமை போராட்டம் 2001ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. நாஸ் அறக்கட்டளை (இந்தியா) என்கிற அமைப்பு தில்லியில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர் பராமரிப்பு ஆகிய பணிகளைப் பல ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இப்பணியில் "ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களை" அணுகி அவர்களுக்கு எச்.ஐ.வி/ எய்ட்ஸ் மற்றும் இதர பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுதுவது, நோய் தடுப்புமுறைகளை தெரிவிப்பது, தங்களைப் பரிசோதித்துக்கொள்ள ஊக்கமளிப்பது போன்றவை இவர்களது பணியில் அடங்கும். ஆனால் இப்பணியை நிறைவேற்றச் செல்லும் நாஸ் அறக்கட்டளையின் outreach workers காவல் துறையினரின் துன்புறுத்துதல்களுக்கு ஆளாகினர். தண்டனைக்குரிய குற்றமொன்றை இவர்கள் தூண்டுவ தாகவும், ஆணுறை வழங்கி ஊக்குவிப்பதாகவும் கூறி காவல் துறையினர் இவர்களது முக்கியமான பணிக்குத் தடையாக இருந்தனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377, ஒருபாலீர்ப்பையும் பாலியல் செயல்பாட்டையும் தண்டனைக்குரிய குற்றமாக இருப்பது ஒரு நிலையில் முக்கிய மனித உரிமைமீறலாக இருப்பதும் மருத்துவ, சுகாதாரப் பணிக்குத் தடையாக இருப்பதையும், ஒரு குறிப்பிட்ட பாலியல் விழைவும், செயல்பாடும் கொண்ட மக்களை அச்சுறுத்தி அவர்கள் மருத்துவ சேவை பெறுவதற்குத் தடையாக இருப்பதையும் கண்டு நாஸ் அறக்கட்டளை இதனை எதிர்த்து 2001 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

பலமுறை வாதங்கள் கேட்கவும் ஒரு முறை வழக்கு நிராகரிக்க வும் பட்டது. எனினும் பொதுநலனைக் கருதித் தொடரப்பட்ட வழக்கு என்பதாலும் பல்லாயிரக் கணக்கான நபர்களின் மனித உரிமை தொடர்பான வழக்கு என்பதாலும் அதனை உடனடியாக கவனிக்கும்படி உச்சநீதிமன்றம் 2006ல் தில்லி உயர்நீதிமன்றத்திடம் கூறியது. (2006 ஆம் ஆண்டிலும் எச்.ஐ.வி தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் மற்றும் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் மீது காவல் துறையினரின் வன்முறை நிகழ்ந்தது என்பதும் அது அதிக அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது). இறுதியாக, 2009 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள் நீதிபதிகள் ஏ.பி. ஷா மற்றும் முரளீதர், நாஸ் அறக்கட்டளை மற்றும் இந்திய யூனியனுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பின் சாரம் வருமாறு:

18 வயதிற்கு மேலான, தன்னிச்சையாக ஈடுபடுபவர்களது தனிமனித செயல்பாட்டைத் தண்டனைக்குரிய குற்றமாக்குவதால் இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் 21, 14 மற்றும் 15 ஆகியவற்றை மீறுகிறது. (Alternative Law Forum. Ed. The Right that Dares to Speak its Name: Naz Foundation Vs. Union of India and Others. August 2009, Bangalore. p.12)

ஷரத்துகள் 21, 14, 15 ஆகியவை முறையே மதிப்பு, சம உரிமை, மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளைக் குறிக்கின்றன: Right to dignity, equality and freedom respectively.

இந்தத் தீர்ப்பு ஒருபாலீர்ப்பு மற்றும் செயல்பாடுகளைக் குற்றமற்றவை என்று அறிவித்தது. இதனால் இனி இவர்களைச் சட்டத்தின் பேரில் துன்புறுத்துவதும் வன்முறைக்கு உள்ளாக்குவதும் கடினமாகிறது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 வருவதற்கு முன் ஆண்-பெண் உறவல்லாத மற்றவை ஒருவித அருவருப்புடனே பார்க்கப்பட்டன. எனினும் அது அத்தகைய அருவருப்பாக மட்டுமே இருப்பதற்கும் அது சட்ட வடிவம் பெற்று ஒரு சமூகத்தினரது அடிப்படை உரிமைகளை மீறும் விதத்தில் அமைவதற்கும் வேற்றுமைகள் பல. எனினும் இரண்டிற்கும் அடிப்படையாக அமைவது ஆண்-பெண் உறவல்லாத எதுவும் இயற்கைக்கு புறம்பானவை என்ற கருத்தியலே.

பிரிவு 377 போன்ற சட்டங்கள் விளைவிக்கும் பாகுபாடுகள் குறித்து தில்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது: "மக்களைப் பாகுபடுத்தும் எதுவும் சமத்துவத்தைக் குலைக்கிறது. சமத்துவம் போற்றும் ஒன்றே மனிதர்களிடையே சுயமதிப்பை வளர்க்கும்." (Judgment, Naz Foundation India Vs Union of India and Others, Honourable Dr. Justice S. Muralidhar, 2 July 2009, para 131, page 104)

இந்த வழக்கிற்கு எதிர் வழக்கு தொடர்ந்திருந்த/ பதிலளித்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் பி.பி. சிங்கால் போன்ற தனிநபர்கள் ஒருபாலீர்ப்பைக் குற்றமற்றதாக்குவது சமூகத்தின் ஒழுக்க நிலையை சீர்குலைக்கும் என்றும் சட்டம் என்பது இத்தகைய அறம் (னீஷீக்ஷீணீறீ) சார்ந்த பார்வைக்கு அப்பாற்பட்டதன்று என்றும் கூறியிருந்தனர். இதுகுறித்து இவ்வழக்கின் தீர்ப்பு இவ்வாறு கூறுகிறது: "ஒரு சில நடவடிக்கைகள் குறித்த வெகுசன சமூகத்தின் அறம் சார்ந்த பார்வையும் மறுப்பும் ஷரத்து 21-ன் கீழ் வழங்கப்படும் அடிப்படை மனித உரிமையைத் தடை செய்வதற்கு தகுந்த காரணங்கள் ஆகமுடியாது... அரசியல் சட்டதிற்கென்று ஒரு அறம் உண்டு, அது காலம்தொட்டும் மனிதருக்கு மனிதர் மாறும் வெகுசன அறத்திலிருந்து மாறுபட்டது." (Judgment, Naz Foundation India Vs Union of India and Others, Honourable Dr. Justice S. Muralidhar, 2 July 2009, para 79, page 64). மேலும், "பெரும்பான்மை சமூகத்தின் கருத்தெனினும் அது அரசியல் சட்டத்தின் அறத்திற்கு முரணாக இருப்பின், ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல" (bid., para 86, page 72) என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது.

Pin It