முதலாம் இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலை 1004ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடித்து 22.4.1010 அன்று அதற்கான குட முழுக்கு விழாவை சிறப்போடு நடத்தியதாக எனபது வரலாறு.

இவ்வரலாற்று நிகழ்வின் ஆயிர மாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி தொடங்கி 26ந்தேதி வரை 5 நாட்கள் தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்பட்டது. இதில் கலை நிகழ்ச்சி கள். கருத்தரங்கம், ஆய்வரங்கம், ஆயிரம் நடனக் கலைஞர்களின் நாட்டி யாஞ்சலி, இராஜராஜ சோழன் நாடகம், சோழர் கால பெருமைகளை விளக்கும் கண் காட்சி, இராசராசன் உருவம் பொறித்த நாணயம். தபால் தலை வெளியீடு மற்றும் செம்மை நெல்லுக்கு இராசராசன் பெயரிடுதல் எனப் பல் வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இராசராச சோழனுக்கு விழா நடத்தி நாம் பெருமை பட்டுக் கொண் டோம் எனத் தமிழக முதல்வர் கருணா நிதி பூரிப்பு அடைந்தார். இராசராச சோழனுக்கு விழா கொண்டாடியதில் யாருக்கும் மாற்றுக் கருத்தோ, மறுப்போ கிடையாது.

ஆனால், அதே நேரத்தில், இப்படி பிரம்மாண்டமாக விழா நடத்திய தோடு, நில்லாமல் இப்படிப்பட்ட பாரம்பர்யமும் தொன்மையும் மிக்க தமிழ் இனத்தின் வரலாற்றையும் அதன் வளப்பத்தையும் தற்கால இளம் தலை முறை அறியவும் தமிழ் அடையாளத் தோடு வாழவும், உத்வேகம் பெற வழி வகை செய்ய வேண்டும்.

குறிப்பாக முதலில் தமிழ் மொழி தமிழர்களின் வாழ்வியல் மொழியாக ஆக வேண்டும் அதற்கு, தமிழ் தமிழர் களின் பயிற்று மொழியாக ஆகவேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தையும் தமிழில் படிக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு அவற்றை முழு ஈடுபாட் டுடன் செயல் படுத்தவேண்டும், தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், ஊடக மொழியாகவும் அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

அதாவது தமிழ், தமிழர்களின் சமூக, பொருளியல் பண்பாட்டு மொழியாக ஆக்கப்பட்டு தாய்மொழி யாம் தமிழால் தான் தமிழர்களாய் வாழ முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் இராசராசன் 1000மாம் ஆண்டு நிறைவுவிழா எடுத்த தற்கு உண்மையில் பொருள் இருக்கும்.

உலக வரலாற்றில் ஒரு கோயில் 1000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்பது என்பது எளிதான செய்தி அல்ல. இன் றைக்குள்ள நவீன அறிவியல் தொழில் நுட்பம் எதுவுமில்லாத 1000 ஆண்டுகள் முற்பட்ட அந்தக் காலத்தில் உருவாக் கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் இன்று உலக சாதனையைப் படைத் துள்ளது.

தஞ்சை பெரிய கோவிலின் சுற்றுச் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கல் வெட்டுகள் மூலம் 1000 ஆண்டு களுக்கு முன்பு தமிழன் எவ்வளவு உயர்ந்த நாகரி கத்துடன் வாழ்ந்துள் ளான் என்ற செய்தி பதிவு செய்யப்பட் டுள்ளது.

கோவிலில் உள்ள ஓவியங்களும், சிற் பங்களும் தமிழர்களின் கலை மேன் மையை வெளிப்படுத்துகின்றன. இன் றைய தொழிற் நுட்பக் கலைஞர்கள் வியக்கும் வண்ணம் கட்டப்பட்ட இப் பெரிய கோயிலை உலக தகவல் களஞ் சியம் ‘‘கிராண்டஸ்ட் டெம்பிள்’’ என்று வருணிக்கிறது. ‘‘யுனஸ்கோ’’ அமைப்பு இக் கோயிலை 1985இல் உலகப் பண் பாட்டு சின்னமாக அறிவித்தது.

இந்தக் கோயிலை உருவாக்கித் தந்ததன் மூலம், முதலாம் ராஜா ராஜன் தமிழ் இனத்தின் பெருமையை உலக முழுவதும் பரவச் செய்துள்ளான். எனவே, ராசராசனுக்கு விழா எடுக்கும் அதேவேளை, கலை, பண்பாடு சார்ந்த அக்கறைகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இராசராச சோழன், தஞ்சை பெரிய கோவிலைத் தவிர, பல திருக்கோவில்களில் பங்கு கொண்டதையும், சிறப்பு வழிபாட்டிற் காக தானம் அளித்ததையும் பற்றிய தகவல்கள் பல கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டம் தென் பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும் இங்குள்ள கீழையூர் வீரட்டாணம் திருக்கோவில் கருவறைச் சுவரில் காணப்படும் கல் வெட்டு முதலாம் இராசராச சோழனின் காலத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவும் இதுபோன்ற பல கல்வெட்டுகளும் இன்னமும் முறையாக ஆய்வு செய்யப் படாமலே உள்ளது.

மேலும், சோழர்கள் கால இலக்கி யங்களை செப்புத் திருமேனி, கட்டடக் கலை சிற்பங்கள் ஒவியங்கள், செப் பேடு, காசுகள், இசைக் கருவிகள், போர்க் கருவிகள் சோழர்கால நகரம், ஊர் அகழாய்வு, கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றில் புதைந்து கிடக்கும் வரலாற்று தகவல்களை ஆய்வுச் செய்து, கணினிகளில் பதிவு செய்து இளம் தலைமுறையினருக்கு வழங்கி தமிழ் இனத்தின் வரலாற்று பெருமைகளை அறியச் செய்தல் வேண்டும்.

அடுத்து, ராசா ராசனின் சிலையும், அவனது மனைவி லோகமாதேவி சிலை யும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சை கோயிலிருந்து இடம் பெயர்ந்து தற்போது குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் கௌதம் சாராபாய் கலைக் கூடத்தில் உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது. மேற்கண்டுள்ள சிலை களை இராஜ ராஜன் 1000 ஆண்டு விழாவை யட்டி, தமிழக அரசும் தொல்லியல் துறையும் இணைந்து தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

தன்னுடைய,கலை பண்பாட்டு நடவடிக்கைகள் வாயிலாக தமிழனின் ஆற்றல்களைப் பதிவு செய்து வைத்து விட்டுப் போன இராசராசன தன் வாழ் நாளை பழையாறையில் கழித்த போது அவர் இறந்து போய் உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டதாக கல் வெட்டுத் தகவல் காணப்படுகிறது.

ஆனால் சோழன் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அய்யம் பேட்டை செல்வராஜ் அவர்கள் மா மன்னன் ராஜராஜனின் சமாதி தஞ்சை யில்தான் இருந்திருக்கவேண்டும் என அதற்கான சில ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்.

இப்படி சர்ச்சை நீடிக்கையில் உண் மையில் ராச ராசனின் சமாதி எங் குள்ளது என்பதை தமிழக அரசு தொல் லியல் துறை மூலமாக ஆய்வு செய்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

தஞ்சையைப் பொறுத்த மட்டில் பெரிய கோவிலுக்கு அடுத்து முக்கி யத்துவம் வாய்ந்தது சரஸ்வதி மகால் ஆகும். பெரிய கோவில் தமிழனின் பண் பாட்டு மையம் என்றால், சரஸ்வதி மகால் தமிழனின் அறிவுக் கருவூலம் எனலாம். அரசு இந்த நூலகததைப் பாதுகாத்து, ஆய்வாளர்கள் பயன் படுத்தும் வகையில் நவீன முறையில் மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

உலகில் தமிழுக்கு என்று முதல் பல் கலைக் கழகம் தஞ்சாவூரில் அமைக் கப்பட்டது. அது ஏனோ தானோ என்றுதான் செயல்படுகிறது. இப் பல்கலைக் கழகத்தில் உள்ள பல ஓலைச் சுவடிகளும் இன்னமும் ஆய்வு செய்யப் படாமலும், அவை நூல் ஆக்கம் செய்யப்படாமலும் இருப்ப தால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படாமலே உள்ளது.

ஆகவே, தஞ்சை தமிழ்ப் பல் கலைக் கழகம் சிறப்பாக செயல்படு வதற்கு தேவையான நிதியும், உள் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத் திக் கொடுத்து, ஆய்வாளர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலும், கடல் கொண்டதாகச் சொல்லப்படும் லெமூரியா கண்ட ஆய்வுகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடல் அடியில் மூழ்கியுள்ள பகுதிகளில் அகழாய்வு நடத்தினால், தொல்காலத் தமிழ் மக்கள் பற்றிய பல அரிய தகவல்கள் நமக்கு கிடைக்கும்.

இதே போன்று சென்னை அருகே யுள்ள மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் கட்டி எழுப்பிய கடற்கரைக் கோயில் ஒன்று பல நு£று ஆண்டுகளாக நிலைத்து வந்துள்ளது. இக்கோயில் களைப் போல ஆறு கோயில்கள் கடலில் முழ்கி இருப்பதாக இப்பகுதி மக்களாலும் மீனவர்களாலும் நம்பப் படுகிறது. இங்கேயும் கடல் அகழாய்வு மேற்கொண்டால், கடலில் முழ்கி இருக்கும் தொல் பொருள்கள் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்க வரலாம்

அடுத்து, கலை மற்றும் பண்பாட் டினை வளர்பதற்காகவும் பாதுகாக் கவும் மத்திய அரசால் அமைக்கப் பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் உள்ளது.

மைய அரசின் இக்கலைபண் பாட்டு மையம் தமிழ் நாட்டில் ஆங் காங்கே புதைந்து கிடக்கும் வரலாற்று ஆதாரங்களைத் திரட்டுவதில் ஆய்வு கொள்வதில் போதிய அக்கறை செலுத் துவதில்லை நமதுகோரிக்கைளை புறந்தள்ளும் நிலையே தொடர்கிறது என்பதை, தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.

ஆனால், “இந்த அறிக்கையில் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கிருதயுகத்தில் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து தென்னகத்தை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத் தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டி யுள்ளது’’ என வழக்கமான வசனத் தைத்தான் விசனமாகத் தெரிவித்துள் ளாரே தவிர இதற்காக இதுவரை தான் என்ன முயற்சி செய்தார் என்பதைச் சொல்லவில்லை.

1949இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவுக் கொள்கைளை முழங்கி, 1967இல்ஆட்சியைப் பிடித்த திராவிடப் பாரம்பர்யக் கட்சிகள் தான் தொடர்ந்து தமிழகத்தை 40 ஆண்டு களுக்கு மேலாக ஆட்சி நடத்தி கொண்டு வருகின்றன..

என்றாலும், இத்திராவிடப் பாரம் பரியக் கட்சிகள் தமிழனின் தொன் மங்களைப் பாதுகாக்கவும், மரபு சார்ந்த கலைகளை வளர்க்கவும் தெளிவான வரலாற்றைக் கண்டறியவும் உருப்படியான, எந்த நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை

தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாத்து வருங்கால இளைய தலை முறையினருக்கு அறிமுகப்படுத்தி, நமது வரலாற்றைக் கற்பித்து தமிழ் உணர்வை ஊட்டவில்லை.

1938, 65 மொழிப்போர் ஈகியர் வரலாற்றைப் பள்ளி, கல்லூரிப் புத்தகங்களில் பாடமாக வைக்க, தமிழ் உணர்வாளர்கள் பல்லாண்டாகக் கோரி வருகின்றனர். இந்த எளிய கோரிக்கை கூட இதுவரை நிறைவேற்றப்பட வில்லை.

இப்படி எத்தனையோ கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற சாத்தியமுள்ளவை இன்னமும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளன.

எனவே, கோவை செம்மொழி மாநாட்டை போல் தஞ்சை இராஜா ராஜன் 1000ம் ஆண்டு நிறைவு விழாவை நடத்தி முடித்து விட்டு, அடுத்த அரசியல் ஆட்டத்திற்கு ஆயத்தமாகி விட்டால் மட்டும் போதாது. தமிழக அரசு தன் வரம்புக் குட்பட்ட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். இதர கோரிக்கைகளை மைய அரசை நோக்கி வலுப்படுத்தி தமிழ் இனத்தின் தொன்மங்களைப் பாதுகாக்கப் பாடுபட வேண்டும்

Pin It