இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்டத் தோண்டத் தமிழர்களின் பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அவை, முறையான விசாரணையைத் தொடங்குமானால், அங்கே நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.

 

மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க்குற்றச் சட்டம் தூங்காது என்பர். அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

rajapakse_350இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, தன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெளிநாடு களுக்கெல்லாம் அனுப்பித் தன் குற்றங்களை மறைக்க முயற்சி செய்வது. இன்னொன்று, கலாச்சார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி, தன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்வது.

 

இரண்டாவது முயற்சிக்கான அடிப்படைதான், ஜுன் 2 - 4 தேதிகளில், இலங்கை அரசு அங்கு நடத்தத் திட்டமிட்டுள்ள அனைத்துலகத் திரைப்பட விழா. அந்த விழாவிற்கு இந்திய அரசு துணை போவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

 

உலகம் கண்டிராத கொலைக்களப் பூமியில், உல்லாசமாகத் திரைப்பட விழா நடத்த நினைப்பது எவ்வளவு பெரிய வக்கிரம். அதற்கு அமிதாப் பச்சன் போன்ற புகழ்பெற்ற இந்திய நடிகர்களை அழைக்கிறது இலங்கை அரசு.

தி.மு.கழக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். “ஏ.ஆர்.ரகுமான் போன்ற தமிழர்கள் ஆஸ்கர் பரிசு வாங்கிவந்தால், அவரை இந்தியர் என்று சொல்லிக் கொண்டாடுகிறீர்கள். கன்னியாகுமரிக் கடற்கரையில் இந்தியக் குடிமக்களான மீனவர்கள் கொல்லப்பட்டால், அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கி விடுகிறீர்கள் ” என்றார்.

எப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் இப்போது ஒரு சிறிய மாறுதல். முதலில், திரைப்பட விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் முதலான புகழ்பெற்ற நடிகர்கள், இப்போது தங்கள் மறுப்பைத் தெரிவித்து விட்டனர். அவ்விழாவில் பங்கேற்க இலங்கை செல்லப் போவதில்லை என்றும் அறிவித்து விட்டனர்.

மும்பையில் உள்ள ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் நடிகர் அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு, மனுக்கொடுத்துச் செய்திகளை விளக்கியதும், அமிதாப்பின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அந்த வகையில் நாம் தமிழர் இயக்கப்பணி பாராட்டிற்குரியது.

அதே போன்று, சென்னையில் மே 17 இயக்கத்தினரும் சில முயற்சிகளில் ஈடுபட்டதைச் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்த் திரையுலகம் அந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள செய்தி ஆறுதலாக உள்ளது. திரை உலகினரின் இன உணர்வுக்கும், மனித நேயத்திற்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் ஷாருக்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் போன்ற நடிகர்கள் சிலர், இலங்கை செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். மனிதநேயமற்ற இவர்களின் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இந்தச் சூழலில்தான், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, ஐ.நா. அவையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித் திருக்கிறார். “இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் ஐ.நா. தலையிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதோடு, “நாங்களே ஒரு விசாரணை வைத்து முடிவைச் சொல்கிறோம்” என்றும் கூறியிருக்கிறார். குற்றவாளியே தனக்கான விசாரணைக் குழு அமைத்துக் கொள்ளும் ஒன்பதாவது உலக அதிசயம் இதுதான்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் பெரிஸ் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

ஜனநாயகத்திலும், சகோதரத்துவத்திலும், மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது. மிகக் கொடூரமான போர்க் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உலக நாடுகளும், ஐ.நா. அவையும் இடம் கொடுத்தவிடக் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.
.


- சுப.வீரபாண்டியன்

Comments

9 comments

9
K.Easwaran
Come on man, what is your guru, Karunanithy doing? He announced the Chmmolli Manaadu when we were suffering the pain of the massacre of about 100000Tamils in Vanni. Karunanithy is worse than Rajapaksa as Karunanithy announced the festival amidst the maranollam of Tamils, atleast Rajapaksa did that after one year.
Easwaran
guna
just you guy..converting speech talant to money..let us see , how long
பரிமள ராசன்
ஈழ மண்ணை கொலைக்களமாக்கிய முக்கிய நபர் சோனியா. தமிழ் நாட்டில் எழுச்சி வந்து விடகூடாது என்று சோனியாவின் அடியாள் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதத்தில் பக்கத்தில் நின்று விசிறி வீசிய வீரமேயில்லாத பாண்டியனுக்கு இதைசொல்ல என்ன தகுதி இருக்கிறது? போர்க்குற்றவாளி ராஜபக்சே என்றால் அந்த குற்றத்தை செய்ய ஆயுதங்கள் கொடுத்த சோனியா கொலைகாரி அல்லவா? அவளை முட்டுகொடுத்து தூக்கும் கருணையே இல்லாத காசுக்கார(கருணாநிதி)னை ********* தூக்கி திரியும் கட்டுரையாளர்,எதை மறைக்க இந்த பாடு படுகிறார். என்னவோ ஈழமக்களின் மேல் கரிசனம் போல் நடிக்கிறார். அவன் சினிமாக்காரனை வைத்து குத்தாட்டம் போட்டு கொண்டாடினால் இவன் சொந்த பந்தத்தை சுற்றி வர நிறுத்திக்கொண்டு ''ஹேப்பி ப்ர்த்டே டூ யூ''என்று கும்மி அடிக்கிறான். தமிழனையெல்லாம் கொன்று ஒழித்து விட்டு தமிழை வாழவைக்கிறானாம். ராஜபக்சேவை உலக நாடுகள் தண்டிக்கின்றவோ இல்லையோ அவனுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. அது அங்கு. இங்கு கூட்டி கொடுத்த கருணா(நிதி), கடைசி நேர போர்க்களத்தில் இந்திய உளவு துறைக்கு ******* மாறிப்போய், புலித்தலைவர்களை ****** வரவைத்து அவர்களை கொலை செய்ய காரணமான இந்த சுபவீக்கு என்ன தண்டனை கொடுப்பது?
kumar
tamil thuroki karunanithi
sivavadivel subramanian
well parimalarajan
மால்கம் X இராசகம்பீரத்தான்
தன் வாழ் நாளில் சுப.வீ அவர்கள் இது போன்ற கடும் விமர்சனத்தை சக உறவுகளிட்மிருந்து எதிர் பார்திருக்க வாய்ப்பில்லை.

வலிகள் அவ்வளவு...மக்களின் மனங்களில் உள்ளதை பாருங்கள் அய்யா, மன்னர்கள் நமக்கு வேண்டாம்.

உங்களின் உயரத்திற்கு நீங்கள் மிகவும் குல்லமானவர்களுடன் தோழமை கொள்வது உங்கள் தகுதிக்கு நல்லதல்ல, மாமன்னரை உற்சாகப் படுத்த குஸ்பு போன்ற பேரரிஞர்கள் உள்ளனர், எட்டயபுரத்தை துறந்த பின்பு தான் பாரதிக்குள் விடுதலை வேட்கை பொங்கியது, அவனால் காலங்களை கடந்தும் வாழ முடிகிறது என்று உங்களை போன்ற சான்றோர்கள் கூறுகிறார்கள்.

மணி மண்டபத்தின் உள்ளே ஈழ விடுதலை பேசுவது மிகவும் நகைப்புக்குறியதாகிவிடும்.

நகைச்சுவை அரங்கேற்றம் எல்லாம் ”ஆதித்யா ” சேனல் குடும்பங்கள் பார்த்து கொள்ளட்டும்.
தமிழரசன் வேல்முருகன்
எதிரிகளை மன்னித்து விடலாம் ஆனால் துரோகிகளை ஒரு போதும் மாணிக்க முடியாது.. மன்னிக்க கூடாது!
தமிழ் குருதி குடிக்கும்.. தமிழ் குருதி குடிக்க உதவிய கூட்டத்திற்கு மன்னிப்பு கண்டிப்பாக கிடையாது. மன்னித்தால் மன்னித்தவரை அந்த ஐம்பதினாயிரம் உயிர்கள் கண்டிப்பாக மன்னிக்காது. தமிழன் வாழ்க்கை வரலாற்றில் இது மிகுந்த சோதனை நேரம். நல்ல உணர்வு உள்ள தமிழர்கள் சேர்ந்து, சிந்தித்து வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
elayaraja
mannithu vidungal veera paandian avargale.... ungal tamil yenakku pidikkum. aanal tamil unarvu..eela makkalukkana ungalin tharpothiya nilai... katturaigalil mattume irukkirathu.... nijathil illai.... thayavu seithu yennaiyum ungal virothigalil oruvaray paarkaatheergal... india tamilannana yennaiyum ungalaiyum oru tamilina throgiyagave manam solgirathu,,,,, [email protected]
kumaresan
innuma su.ba.vee

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.