உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் யுவால் நோவா ஹராரி. இஸ்ரேலில் பிறந்தவர் இப்ரு பல்கலைக்கழக பேராசிரியர். மனித குல வரலாறு, வருங்கால வரலாறு, என்று அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுதும் 2 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. மூன்றாவதுதாக அவர் எழுதி உலக சாதனை படைத்துள்ள நூல் "21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்" - கடவுள் மதத்தை மறுக்கும் மதச்சார்பின்மை குறித்து அவர் எழுதியுள்ளதின் ஒரு பகுதி

மதச்சார்பற்ற சித்தாந்தம் என்றால் என்ன? உண்மையிடத்தில்தான் மதச்சார் பின்மைவாதிகள் அர்ப்பணிப்புக் கொண்டு ள்ளனர். தலையாய என்பது நேரடிக் கண்காணிப்பு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைகிறதே அன்றி, விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மதச்சார்பின்மைவாதிகள் உண்மையை நம்பிக்கையோடு போட்டுக் குழப்பிக் கொள் வதில்லை. ஏதோ ஒரு கட்டுக்கதையில் மிக வலிமையான ஒரு நம்பிக்கை உங்களுக்கு மூளையில் உளவியலையும், உங்கள் குழந் தைப் பருவத்தையும், இருந்தால், உங்கள் கட்டமைப்பையும் சுவாரசியமான விஷயங்களை அது சொல்லக்கூடும், ஆனால் அக்கதை உங்கள் உண்மை என்பதை அது நிரூபிப்பதில்லை. (பல சமயங்களில், கதை உண்மையற்றதாக இருக்கும்போதுதான் வலிமையான நம்பிக்கைகள் தமக்குத் தேவைப்படுகின்றன.)

அதோடு கூடவே, மதச்சார்பின்மைவாதிகள் எந்தவொரு குழுவையோ, எந்தவொரு நபரையோ, அல்லது எந்தவொரு நூலையோ புனிதமானதாகக் கருதுவதில்லை, அது ஒன்றே உண்மையின் ஒட்டுமொத்த உருவம் என்றும் கருதுவதில்லை. மாறாக, உண்மை தன்னை எங்கு வெளிப்படுத்திக் கொண்டாலும், அது பண்டைய புதைபடிம எலும்புகளிலானாலும் சரி, அல்லது தொலைதூரத்தில் உள்ள விண்மீன் மண்டலங்களின் புகைப்படங்கள், புள்ளிவிபரத் தரவுகளின் அட்டவணைகள், அல்லது பல்வேறு மனிதப் பாரம்பரியங்களின் எழுத்துப் படைப்புகளிலானாலும் சரி, மதச்சார்பின்மைவாதிகள் அதைப் புனிதமானதாகக் கருதுகின்றனர். உண்மை குறித்த இந்த அர்ப்பணிப்புதான், அணுவைப் பிளப்பதற்கும், மரபணுத் தொகுதியைப் புரிந்து கொள்வதற்கும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிப் பாதையைக் கண்டறிவதற்கும், மனிதகுலத்தின் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும் நமக்கு உதவியுள்ள நவீன அறிவியலின் அடித்தளமாக விளங்குகிறது.

மதச்சார்பின்மைவாதிகள் மிகுந்த அர்ப்பணிப்புக் கொண்டுள்ள இன்னொரு விஷயம் மனிதநேயம். மதச்சார்பற்ற நெறிமுறைகள் ஏதோ ஒரு கடவுளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைச் சார்ந்திருப்பதில்லை, மாறாக, துன்பம் குறித்த ஓர் ஆழமான புரிதலையே அவை சார்ந்துள்ளன. எடுத்துக் காட்டாக, மதச்சார்பற்றவர்கள் கொலை செய்யாமல் இருப்பதற்குக் காரணம் ஏதோ பண்டைய நூல் அதற்குத் தடை விதித்துள்ளது என்பது அல்ல, மாறாக, அது உயிர் களுக்கு அளப்பரிய துன்பத்தைக் கொடுக்கிறது என்பதால்தான் அவர்கள் அதைச் செய்வதில்லை. கொலை செய்யக்கூடாது என்று தங்கள் ‘கடவுள் சொல்லி யிருப்பதால்' தாங்கள் அச்செயலைத் தவிர்ப்பதாகக் கூறுகின்ற மக்களிடம் ஏதோ பிரச்சனையும் ஆபத்தும் உள்ளன. அப்படிப்பட்ட மக்கள் மனிதநேயத்தைவிடக் கீழ்ப்படிதலால் தூண்டப்படுகின்றனர். மத அவநம்பிக்கையாளர்களையும் மந்திரவாதிகளையும் திருமணத்திற்குவெளியே தகாத உறவு கொள்பவர்களையும் அந்நியர்களையும் கொல்ல வேண்டும் என்று தங்கள் கடவுள் தங்களுக்குக் கட்டளையிடுவதாக அவர்கள் நம்பத் தொடங்கினால், அவர்கள் என்ன செய்வார்கள்?

முழுமையான தெய்விகக் கட்டளைகள் இல்லாத நிலையில், மதச்சார்பற்ற நெறிமுறைகள் பல சமயங்களில் கடினமான, இக்கட்டான நிலையை எதிர்கொள்கின்றன. ஒரு செயல் ஒருவருக்கு வேதனை ஏற்படுத்துகின்ற அதே நேரத்தில் இன்னொருவருக்கு உதவினால் என்ன நிகழும்?ஏழைகளுக்கு உதவுவதற்காகப் பணக்காரர்களுக்கு மிக அதிகமான வரிகளை விதிப்பதும், ஒரு கொடுங்கோலனை அகற்றுவதற்காக ஒரு கொடூரமான போரைத் தொடுப்பதும், எண்ணற்ற அகதிகள் நம் நாட்டிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி கொடுப்பதும் நெறிமுறை சார்ந்த செயல்கள்தானா? மதச்சார்பற்ற மக்கள் இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, "கடவுளின் கட்டளை என்ன?" என்று அவர்கள் கேட்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்து, பலதரப்பட்ட அவதானிப்புகளையும் சாத்தியக்கூறுகளையும் கூர்ந்து ஆய்வு செய்து, மிகக் குறைவான தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு நடுவழியை அவர்கள் தேடுகின்றனர்..............

 சிந்திப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் பரிசோதிப்பதற்குமான அவர்கள் உணர்ந்து கொள்கின்றனர். சுதந்திரம் இல்லாமல் உண்மையையும் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியையும் நம்மால் தேட முடியாது. மதச்சார்பற்ற மக்கள் சுதந்திரத்தைப் உண்மை என்பதையும் எது சரி என்பதையும் போற்றுகின்றனர்; எது உண்மை என தீர்மானிப்பதற்கான உச்சகட்ட நீதிபதியாக இருப்பதற்கான அதிகாரத்தை எந்தவொரு நூலுக்கும், அமைப்புக்கும் அல்லது தலைவருக்கும் அவர்கள் கொடுப்பதில்லை. சந்தேகிப்பதற்கும், மீண்டும் சரி பார்ப்பதற்கும். எந்தவொரு விஷயம் குறித்தும் ஓர் இரண்டாம் அபிப்பிராயத்தைக் கேட்பதற்கும், ஒரு வித்தியாசமான பாதையை முயன்று பார்ப்பதற்குமான சுதந்திரத்தை மக்கள் எப்போதும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பூமி இப்பிரபஞ்சத்தின் மையத்தில் உண்மையிலேயே அசையாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கு எதிராகக் கேள்வி கேட்கத் துணிந்த கலிலியோ கலிலியை மதச்சார்பற்ற மக்கள் போற்றுகின்றனர். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது பஸ்தி கோட்டையினுள் புகுந்து பதினாறாம் லூயியின் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பெருந்திரளான பொதுமக்களை அவர்கள் போற்றுகின்றனர். ஒரு பேருந்தில் வெள்ளையர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றின்மீது அமரத் துணிந்த ரோசா பார்க்ஸை அவர்கள் மெச்சுகின்றனர்.

பாரபட்சங்களையும் அடக்குமுறை ஆட்சி களையும் எதிர்ப்பதற்கு ஏராளமான துணிச்சல் தேவை, ஆனால் அறியாமையை ஒப்புக் கொள்வதற்கும் தெரியாத ஒன்றை முயன்று பார்ப்பதற்கும் அதைவிட அதிகத் துணிச்சல் தேவை. நமக்கு ஏதேனும் தெரியாவிட்டால், நம்முடைய அறியாமையை உணர்ந்து கொண்டு, புதிய சான்றுகளைத் தேடுவதற்கு நாம் ஒருபோதும் பயப்படக்கூடாது என்று மதச்சார்பற்றக் கல்வி நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமக்கு ஒரு விஷயம் தெரியும் என்று நாம் நினைத்தாலும்கூட, நம்முடைய அபிப்பிராயங்களை சந்தேகிக்கவும் நம்முடைய கருத்துகளை மீண்டும் சரி பார்த்துக் கொள்ளவும் நாம் பயப்படக்கூடாது. தெரியாதவற்றைக் குறித்துப் பலர் பயப்படுகின்றனர். ஒவ்வொரு கேள்விக்கும் திட்டவட்டமான விடைகளை அவர்கள் விரும்புகின்றனர். தெரியாத ஒன்றைக் குறித்த பயம், ஒரு கொடுங்கோலனைக் குறித்து நாம் கொண்டிருக்கும் பயத்தைவிட அதிகமாக நம்மை முடக்கிப் போட்டுவிடும். முழுமையான விடைகளை உள்ளடக்கிய ஒன்றின்மீது நாம் முழுமையாக விசுவாசம் கொண்டாலொழிய மனிதச் சமுதாயம் இடிந்து நொறுங்கி விடும் என்று வரலாறு நெடுகிலும் மக்கள் கவலைப்பட்டனர். உண்மையில், அறியாமையை ஒப்புக் கொள்ளவும் கடினமான கேள்விகளைக் கேட்கவும் தயாராக இருக்கின்ற துணிச்சலான மக்களைக் கொண்ட ஒரு சமுதாயம் அதிகச் செழிப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் ஓர் ஒற்றை பதிலை வெறுமனே ஏற்றுக் கொள்கின்ற மக்களைக் கொண்ட சமுதாயங்களைவிட அதிக அமைதியாகவும் மதச்சார்பின்மை இருக்கின்றன என்பதை நவீன வரலாறு விளக்கிக் காட்டியுள்ளது. உலகத்தைப் பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து பார்ப்பதற்குப் பழக்கப்பட்டுள்ள மக் களைவிட, தங்களுடைய உண்மையைத் தாங்கள் இழந்து விடுவோமோ என்று பயப்படுகின்ற மக்கள் அதிக வன்முறையாக நடந்து கொள்கின்றனர். வழக்கமாக, உங்களால் பதிலளிக்க முடியாத கேள்விகள், நீங்கள் எதிர்த்துக் கேள்வி கேட்சு முடியாத பதில்களைவிட அதிகச் சிறப்பானவையாக இருக்கின்றன.

 இறுதியாக, மதச்சார்பற்ற மக்கள் பொறுப்புணர்வைக் கொண்டாடுகின்றனர். உலகைப் பாதுகாத்து, தீயவர்களைத் தண்டித்து, நியாயமானவர்களுக்கு வெகுமதி வழங்கி, வறட்சி, கொள்ளைநோய் மற்றும் போரிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்ற ஏதோ ஓர் உயர்ந்த சக்தியில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. நாம் செய்கின்ற மற்றும் செய்யாமல் போகின்ற ஒவ்வொரு காரியத்திற்கும், நிலையற்ற மனிதர்களாகிய நாம் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். உலகம் துயரத்தால் நிரம்பியிருந்தால், அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பது நம்முடைய கடமையாகும். கொள்ளை நோய்களை குணப்படுத்துவது, ஏழைகளுக்கு உணவு வழங்குவது, உலகின் பெரும் பகுதிகளுக்கு அமைதியைக் கொண்டு வருவது போன்ற நவீனச் சமுதாயங்களின் அளப்பரிய சாதனைகள் குறித்து மதச்சார்பற்ற மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இச்சாதனைகளுக்கான பெருமையை எந்தவொரு தெய்விகக் காவலருக்கும் நாம் கொடுக்க வேண்டியதில்லை. மனிதர்கள் தங்களுடைய சொந்த அறிவையும் மனிதநேயத்தையும் வளர்த்துக் கொண்டதிலிருந்துதான் இச்சாதனைகள் விளைந்தன. ஆனால் இதே காரணங்களுக்காகத்தான், இனப் படுகொலையில் தொடங்கிச் சுற்றுச்சூழல் சீர்குலைவுவரை நவீனத்துவத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும் குறைகளுக்கும் நாம் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாக இருக்கிறது. அதிசயங்கள் நிகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்கு பதிலாக, நம்மால் எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்று நாம் கேட்க வேண்டும். மதச்சார்பற்ற உலகின் முதன்மையான விழுமியங்கள் இவை....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.