(1930 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த வன்னிய குல க்ஷத்திரியர் மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய இந்த உரை காலத்தின் தேவை கருதி வெளியிடப்படுகிறது.)

சகோதரர்களே!

உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு பெரிய சமூகமாக இருக்கிறது. உங்கள் சமூகம் பொதுவாக நாட்டிற்கு பெரிதும் பிரயோஜன முள்ள விவசாயத் தொழில் முதலிய வேலைகளைச் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது. உங்கள் சமூகத்தில் அனேக பெரியார்களும் இருக் கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரிய சமூக மகாநாட்டைத் திறந்து வைக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு ஒரு பெருமையாகவும் கருதிக் கொள்ளுகிறேன். ஆனால், இதைத் திறந்து வைக்கின்ற இச்சந்தர்ப் பத்தில் நான் சில வார்த்தைகள் கூற விரும்பு கின்றேன். அதாவது புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி நான் உங்கள் குலப் பெருமையைப் புகழ்ந்து கூறி ஆகாயமளாவ உங்களை மகிழ்வித்து ஏமாற்றிவிட்டுப் போக நான் இங்கு வரவில்லை.

மற்றபடி நான் எந்தத் துறையில் ஈடுபட்டு வேலை செய்து கொண்டு இருக்கிறேனோ எந்தக் கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்குச் சாதகம் ஆனவைகள் எனக் கருதி தொண்டாற்று கின்றேனோ அதைப் பற்றியேதான் இப்பொழுதும் இந்த சந்தர்ப்பத்தில் சொல்லப் போகிறேன். நான் சொல்லுவனவற்றில் பல உங்கள் மனதிற்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும் கொடுக்கலாம். பல உங்களுக்குப் பிடிக்காமலிருந்தாலுமிருக்கலாம். எப்படி இருந்த போதிலும் என் சொற்கள் முழுவதையும் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் கூறப் போவதில்லை. நான் கூறுவனவற்றை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியெனப்பட்டால் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள் என்ற முறையில்தான் சில சொல்லுகிறேன்.

சகோதரர்களே,

பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதிப் பெருமையைப் பற்றி பாட்டிக் கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக் கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக் கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக் கொண்டிருக்கக் கூட்டப் படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இம் மகாநாட்டின் பயனாக வாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதை யும் நீங்கள் சில ஜாதிக்கு மேலானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் சில ஜாதிக்குப் பெரியார்கள் ஆக வேண்டுமென்றும் ஆசையால் செய்யும் முயற்சி யானது மற்றொரு ஜாதியைவிட நீங்கள் கீழ் ஜாதி யென்று நீங்களாகவே ஒப்புக் கொண்ட வராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ் ஜாதி பட்டம் நிலைத்து விடுவதோடு நீங்கள் மேல் ஜாதி என்கின்ற தத்துவம் தகராறில் இருந்து விடுகின்றது.

உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல க்ஷத்திரியரென்றும் சொல்லிக் கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தாராகிய பார்ப்பனர்களுக்கு கீழ்பட்ட ஜாதியார் என்பதை சிறிதும் எதிர்வாதமில்லாமல் ஒப்புக் கொண்டவர்களாகிவிட்டீர்கள். ஆனால் உங்கள் க்ஷத்திரியத் தன்மையாலோ தகராறுகளுக்கு குறைவில்லை. நீங்கள் வன்னியர் குல க்ஷத்திரிய ரென்றால் நாடார்கள் தங்களை அக்கினி குல க்ஷத்திரியர்களென்று சொல்லிக் கொள்ளு கிறார்கள். அவர்களுடைய பூணூல் கயிறும் உங்கள் பூணூல் கயிற்றைவிட கொஞ்சமும் இளைத்ததல்ல. ஆனால் நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று நீங்கள் கருதும் ஒரு பெயரை சொல்லி உங்களை கூப்பிடுகிறார்கள். நீங்களும் அதுபோலவே நாடார்களை க்ஷத்திரியர்கள் என்று ஒப்புக் கொள்ளாமல் இழி வார்த்தை என்று அவர்கள் கருதும் ஒரு பேரைச் சொல்லி அவர்களை நீங்கள் கூப்பிடுகிறீர்கள். கடைசியில் கேசு ஏற்பட்டு பணச்செலவு செய்து யாராவது ஒருவர் தண்டனையும் அடைய நேருகின்றது.

நாயுடு ஜாதி என்றும் எங்கள் ஜாதிக்காரர்கள் உங்கள் இரண்டு பேரையும் க்ஷத்திரியர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு தாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். ராஜா என்கின்ற மற்றொரு ஜாதிக்காரர்கள் நீங்கள் மூன்று பேரும் க்ஷத்திரியர்கள் அல்ல. நாங்கள் தான் க்ஷத்திரியர்கள் என்கின்றார்கள். சிங்கு மராட்டியர் ஆகியவர்கள் நீங்கள் நால்வரும் க்ஷத்திரியர்கள் அல்ல; நாங்கள் தான் சரியான க்ஷத்திரியர்கள் என்கிறார்கள். இதுபோல் இன்னமும் குடகு க்ஷத்திரியர்கள் எத்தனையோ பேர் க்ஷத்திரியப் பட்டத்திற்கு இத்தனைப் பேர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டியும், சண்டையும் போட்டுக் கொள்ளுகின்றார்களே ஒழிய இதன் பலனாய் எச்சில் கிண்ணம் கழுவுபவனுக்கும், பிச்சை எடுத்து வாழுபவனுக்கும் தரகு வேலை செய்பவனுக்கும் நோகாமல் பிராமணப் பட்டம் கிடைத்துவிட்டது.

அப்படி கிடைக்கப்பெற்ற அந்தப் பிச்சைத் தொழில் பார்ப்பான் உங்களிடம் பணமும் வாங்கிக் கொண்டு மகாநாடு கூட்டி, க்ஷத்திரியன் உலகத்திலேயே கிடையாது என்று விளம்பரப்படுத்தி சொல்லி விடுகிறான். அப்படி இருந்தும்கூட அவனிடம் உங்கள் ஒருவருக்கும் சிறிதும் தகராறு கிடையாது. அன்றியும் அவர்களுக்கு முத்தமிட்டு காலைக் கழுவி தண்ணீரைக் குடிக்கப் போட்டி போடுவதில் குறைச்சலுமில்லை. உங்கள் ஒவ்வொரு கூட்டத் தாருக்கும் அனேகமாய் அவன் குருவாக இருக் கிறான். ஆகவே இந்த மாதிரி ஒரு இழிவானதும் முட்டாள்தனமானதும் அர்த்தமற்றதுமான காரியங்களுக்கு இம் மாதிரி மகாநாடுகள் இனியும் கூட்டுவதாயிருந்தாலும் இம்மகாநாடுகள் அழிந்து போவதே மேல் என்று மிக்க வருத்தத்துடன் சொல்லிக் கொள்ளுகிறேன். தங்கள் ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொள்ளுவதற்கு மாத்திரமே நாட்டில் இப்போது எங்கும் ஜாதி மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதோடு பிற ஜாதிகளை சாடையாயும் வெளிப்படையாயும் இகழ்வதும் சாதி மகாநாடுகளின் சுபாவமாய்விட்டது.

இதன் பலனாகவே சக்கிலியர்கள் என்பவர்கள் தங்களை அருந்ததியர்கள் என்பதும், பள்ளர்கள் என்பவர்கள் தங்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்பதும், ஆசாரிகள் என்பவர்கள் தங்களை விஸ்வப் பிராமணர்கள் என்பதும், சௌராஷ்டிரர்கள் என்பவர்கள் தங்களை சௌராஷ்டிரப் பிராமணர்கள் என்பதும், தேவாங்கர்கள் என்பவர்கள் தங்களை தேவாங்கப் பிராமணர்கள் என்பதும், குயவர்கள் தங்களை குலால விஸ்வ பிராமணர்கள் என்பதும், சாலியர்கள் என்பவர்கள் தங்களை சாலிய பிராமணர்கள் என்பதும், இவ்வளவு சமூகத்தார்களும் தங்கள் தங்கள் உடலினால் கஷ்டப்பட்டு தொழில் செய்து பிற ஜனங்களுக்கு உதவியும் செய்து நியாயமான வழியில் வாழ்க்கை நடத்திக் கொண்டு தங்களை பிராமணன், இந்திரன், அருந்ததி, சந்திரன் என்று பல ஒழுக்கமற்ற சோம்பேறிப் பட்டங்களை வைத் துக் கொள்ள முயற்சிக்கின்றதை பார்க்கின்றோம்.

ஆனால், பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட்டும் நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டும் இருந்துகொண்டு நீங்கள் யாரும் பிராமணர்கள் அல்ல க்ஷத்திரியர்கள் கூட அல்ல பேசப் போனால் வைசியர்கூட அல்ல. நாங்கள்தான் பிராமணர்கள். நீங்கள் எல்லோரும் எங்களுக்குத் தொண்டு செய்ய எங்கள் வைப்பாட்டி மக்களாய் இருக்க கடவுளால் பிறப்புவிக்கப்பட்ட சூத்திரர்கள் என்று தைரியமாய் சொல்லி சிவில் கிரிமினல் சட்ட புஸ்தகத்திலும் அதை ஸ்தாபித்து விட்டு மற்றும் சில உரிமைகளையும் தனக்கு வைத்துக் கொண்டு சௌகரியமாய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த சோம்பேறி சௌக்கிய நிலை நிலைப்பதற்கேதான் இப் பேர்ப்பட்ட நமது ஜாதி மகாநாடுகள் பெரிதும் உபயோகப்படத்தக்கதாய் இருக்கின்றன என்பதே எனது முடிவான அபிப்பிராயம். ஆகையால் சகோதரர்களே இனி இந்த மாதிரியான சமூக மகாநாடுகளில் இம்மாதிரியான சாதி உயர்வு தாழ்வுகளைப் பற்றிய பேச்சே இருக்கக் கூடாது என்றும் மற்ற சாதியார் என்பவர்களுடன் நாம் எப்படி கலப்பது? நாம் எவருக்கும் கீழ் ஜாதி அல்ல என்கின்ற தன்மை எப்படி அடைவது? நமக்குக் கீழும் நமது நாட்டில் எந்த சாதியும் இல்லை. நாம் எல்லோரும் சமமே என்கின்றதான சமதர்ம நிலையை எப்படி உண்டாக்குவது என்கின்ற காரியத்திற்கே பாடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

- பெரியார் (1.6.1930 ‘குடிஅரசு)

Comments

35 comments

35
Chandar
Crib,crib,crib.....Continue to crib even after 83 years
mallika
சாதி ஒழிப்பு யாஹத்தில் வன்னியரை மட்டும் போட்டு பொசுகிவிடமுடியாது. வன்னியரின் வரலாட்றை மட்றவர்களின் சதிய மேல்னிலையக்கதோடு ஒப்பிட்டு பேசியிருப்பது பொருத்தமட்றது. அரசவகுப்பினராய் இருந்த பெரும்பன்மை சமூகம் அடிமட்டகூலிகலாய் ஆனது எப்படி சூதிர கூலிகளாய் இருந்த பிள்ளை முதலியர்கள் உயர்ந்த நிலவுடைமை சாதிகலாய் ஆனது எப்படி? என்பது ஆரயப்படவேன்டிய சமூக வரலறு. அதன்மூலம் வன்னியர்கள் தாம் இழந்த நிலத்தை பெறுவதர்க்கும், பெரும்பன்மைமக்களாய் இருந்த்தும் தமிழகத்து முதலமைச்சராய் வரமுடியாத ஜனனாயக மோசடிப்போக்கை ஏன் பெரியார் புரிந்துகொள்ள வில்லை?
தமிழ் நெஞ்சம்
ஜாதி கூட்டத்துல போய் கலந்துக்குவாராம். ஜாதி இல்லம்பாராம். ஜாதி பெருமை பேசக்கூடாதும்பாராம். ஜாதி இல்லன்னு சொல்றவர்க்கு சாதி கூட்டத்துல என்ன வேல.
alagarasan
பெரியார் இது போல ஏதேணும் தாழ்த்தபட்ட்வர்கள் (பள்ளர்,ச்க்கிலியர்,ஹரிஜன் போண்ற ) மாநாட்டில் , இவர்களுக்கு க்ஷத்திரிய, வைஸ்யர்களுக்கு எதிராக அறிவுரை கூறி உள்ளாரா ?
நோகாமல் மற்றொருவன் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டுள்ளாதாகா சொல்லும் பெரியார் பாவம் - எப்ப்டி கஷ்டபட்டு அல்லவா அவர் உழைப்பில் சாப்பிட்டார் ?
kannan
(வன்னியர்கள் தன் வரலாட்றை மறந்ததால் தான்), சிங்கம் இளைத்து போனதால்தான் எலிகலெல்லாம் வாங்க மச்சான் என்கிறது. பெரியாரின் பேச்சை கேட்டதால்தான் தமிழகத்தின் ஒட்றை பெரிய சாதியாய் இருந்தும் முதல்வர்களக ஒருவரும் வரமுடியவில்லை. ஒரு கட்ச்சியிலும் தலைவராகமுடியவில்லை. அவர்கள் சங்கம் அமைத்தபோது வன்னாரும் பரிகரியும் அச்சங்கத்தில் சேர்த்துக்கொள்லப்பட்டார்கள், வன்னியர்கள் பெரும்பான்மையாய் இருந்த ஊரில்கூட அவர்கள் (தி மு க, அ தி மு க விலிருந்தாலும்) ஊராட்ச்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் கட்ச்சி ஆரம்பித்து
kannan
அக்கட்ச்சியின் பொதுசெயலாலராக பள்ளர் சமூகத்தவரையும், பொருலாளராக ஒரு இசுலமியரையும் ஏட்று கொன்டாலும், மத்திய கேபினட் அமைச்சர் பதவியை பறையர் சமூகத்தவர் இருவருக்கு கொடுத்தாலும், தாழ்த்தபட்ட சமூகத்தவரை தமிழக முத்தல்வராக ஆக்குவோம் என்று அறிவித்தும்கூட அக்கட்ச்சியை சாதி கட்ச்சி என்கின்ரனர். இதை பெயரளவில்கூட திரவிட, தமிழ்தேசிய, பொதுவுடமை கட்ச்சிகள் செய்யவில்லை, அறிவிக்க கூடவில்லை என்பதை ஏன் சிந்திக்ககூடவில்லை என்பதை கருதிப்பார்க்க வேன்டும். அவர்கள் தாங்கள் இசுலமிய விஜயனகர ஆட்ச்சியின்பொது தனது நிலத்தையும் அரசு ஊழியத்தையும் ஆளும் உரிமையயும்
kannan
உருது இசுலமியரிடமும் தெலுங்கு நயுடுவிடமும் அவர்களுக்கு உற்றூழி உதவிய முதலி- வெள்ளாளரிடமும் இழந்து விட்டோம் என்பது தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் சூத்திர (அதுவும் சர்ச்சூத்திர) முதலியர்-வெள்ளாள- நயுடுவுக்கும் கீழான மிகபிற்பட்ட சாதியானர்கள். இவர்களிடம் வெள்ளையர் காலத்தில் இழந்த மன்னவேடு பசுங்கூர் கிராமங்களை , தம்மைபோல் இவர்களிடம் பஞ்சமி நிலஙளை இழந்த பற இயர் சமூகத்தவரொடு இனணைந்து நிலப்பரிப்பு இயக்கம் செய்யாமல் தடுக்கப்பட்டனர். இதை பொதுவுடமை, திராவிட இயக்கத்தின் சிறுபான் மொழி- இன- சாதி தலைமைதான் காரனம்.
kannan
பெரியார் கூருவதுபோல் நாயுடு எந்த ஓரிடத்திலும் மன்னர்களகவோ சிரற்றரசர்கலகவோ இருந்த வரலறு இல்லை. அவர்கலை சத்திரியர்கள் என்று கூறுவது பெரியர் தமது சாதியை பேச்சொடு பேச்சாக உயர்த்தி கூறுகிரார்.
sudalaimaniyan
கன்னன்,நாயுடு சாதியினரை சத்திரியர் எனக்கூறுவது பெரியாரின் உளக்கிடக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்கிறார். நாயுடு சாதியில் கம்மவார், கவரை, பலிஜவார், என பலப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் கம்மவார் சாதியினர்தான் சூத்திர ( வெள்ளாள ) சாதியாகும். பலிஜவாரும், கவரைகளும் சத்திரிய சாதிகளாகும். பலிஜவார் புராணத்தைப் படித்துப் பாருங்கள், அவர்கள் சந்த்திர குலத்தவர் எனபது பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் பலிஜவார் பிரிவை சேர்ந்தவர். ஆனால் பெரியாரிடம் உள்ள பிரச்சினை, அவர் வேளாள சாதியாரும், அகம்படி சாதியாரும் தங்களை பிற தமிழரை விட மேலான சத்சூத்திர சாதி எனக்கூறிக்கொள்வதை ஒரு போதும் கண்டித்ததில்லை. பெரியாருக்கு எப்பொழுதுமே அகம்படிகளான வெள்ளாளர் மீது ஒரு பிரியம் உண்டு.
Sudalaimanian
பெரியார் நாடாரை அக்கினிகுல ஷத்திரியர் எனக்கூறுகின்றார். வன்னியரே அக்னி குலத்தவராகும். சாணார்கள் தங்கள் பட்டயங்களில் தங்களை சூரிய, சந்திர குலத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர். பெரியார் வரலாற்றாசியர் அல்ல. எனவே இதை பொருப்படுத்தத் தேவையில்லை.
RaamaRaju
பெரியாரின் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். பிராமிண் அல்லாத சாதிகள் தஙளுக்குள் சாதி பெருமைப் பேசி வேறுபாடு காட்டிக்கொள்ளக் கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்க்காக அன்றையக் காலகட்டத்தில் சொன்னது. ஆனால் இங்கு சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தலித் அல்லாத பிற சாதியைச் சேர்ந்தவர்கள் இன்னும் மனதளவில் மாற்றம் அடையவில்லை என்பதையேக் காட்டுகிறது. நடப்பது அனைத்து சாதிகளையும் உள்ளடக்கிய பெருவாரியான மக்களால் தேர்ந்ததெடுக்கப்பட்டவர்கள் செய்யும் ஆட்சி. இப்போது எதற்க்காக ஆண்ட பரம்பரையினர், மன்னர் பரம்பரையினர் என்பதெல்லாம். இப்போதைய சூழலில் பிராமின், பிராமின் அல்லாதவர்கள் என்று வேறுபாடு கூடத் தேவையில்லாத ஒன்றே. இயற்கை அமைப்பில் மனிதர்கள் அனிவருக்கும் ஒரேமாதிரியான உடல் அமைப்பே அமைந்துள்ளது. ஆனால் எதற்க்காக உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடு, பெருமைப் படுவதெல்லாம். ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டியதெல்லாம் உயர் சாதி என்று சொல்லும் வகுப்பைச் சேர்ந்த பையன் ஒரு தாழ்ந்த சாதி என்று சொல்லப்படுகின்ற பெண்ணை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் தாழ்ந்த சாதி என்று சொல்லும் வகுப்பைச் சேர்ந்த பையன் ஒரு உயர் சாதி என்று சொல்லப்படுகின்ற பெண்ணை காதலித்தாலோ, திருமணம் செய்தால் மட்டுமே அது பெரிய கலவரமாக, உயிர்ப் பலி என்ற அளவில் சென்றுவிடுகிறது. இதில் கூட பிராமின் தாழப்பட்டவர்களின் சாதி மறுப்பு காதல், திருமணங்களில் சிறு கலவரம்கூட ஏறபடுவதில்லை. மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை, வீரப் பரம்பரையினர் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள், பிரமினர் அல்லாத உயர்சாதியினர்தான் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவது மட்டுமல்ல கொலை செய்யும் அளவிற்கு மனப் பக்குவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் காதலையும் அதனால் நடக்கின்ற சாதி மறுப்புத் திருமணங்களையும் அவ்வளவு எளிதாக யாராலும் தடுக்க முடியாது.
sudalaimanian
கீழ் சாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டவர்கள் தங்கள் குலப்பெருமைகளைத் தெரிந்து கொண்டு தாங்கள் எச்சாதியினருக்கும் குரைந்தவர்கள் அல்ல (உயர்ந்தவர்களே) என்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவதுதான் ஆரோக்கியமானது. பிராமணர், சாதி மறுப்புத் திருமனங்களுக்கு பெரிய எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதற்கு அவர்களிடம் சாதிய உணர்வில் தாழ்வு மனப்பான்மை இல்லாதது முக்கிய காரணியாகும். எனவே ராமராஜூ போன்றோர் தமிழ்ச் சாதிகள் தங்கள் உயர்வுகளைத் தெரிந்து கொள்வதை ஏதாவது காரணம் கூறி தடை போடுவது தேவையற்றது. அதே வேளையில் தமிழ் சாதிகள் தங்கள் உயர்வுகளை கூறும் பொழுது பிற சாதிகளை இழிவுப் படுத்திப் பேசுவது ஏற்புடையது அல்ல. இப்படி பிற சாதிகளை இழுவுப் படுத்தி தங்கள் சாதியை உயர்ந்ததாகக் காட்ட முயற்ச்சிக்கும் இப்போக்கினை மறைமலை அடிகள், கனகசபைப் பிலள்ளை போன்ற வேளாள சாதி ஆய்வாளர்களே துவக்கி வைத்தனர். அவர்கள் வழியில் மற்றவர்களும் பயணிக்கின்றனர்.
kannan
சுடலைமனி அவர்கள் அல்லது வெரு எவரும் பலிஜா, கவரை நாய்டுகள் சிற்ரரசர்ரகவோ பேரரசரகவோ இருந்ததற்கு சான்றுகட்டாமல் சத்திரியர் என்று எப்படி கூறமுடியும். சூத்திரர்கள் ஊயர்ந்த சாதியனதும் சத்திரியர் என்ற அரசவகுப்பினர் கீழ்சாதி ஆனதும் எப்படி என்ரு ஆரய்ந்தால் சாதிஉயர்வும் தாழ்வும் பெரியார் கூருவதுபோல் பண்பாட்டு சிக்கல் இல்லை என்பதும் நில உடமை மாற்றத்தின் விலைவு என்பது புலப்படும். சாதி ஒழிப்பிற்கு நிலம்,மூலதனம் இவற்றுடன் கூடிய அதிகார பகிர்வே என்பது புரியவரும். ஆகவே சத்திரியர் என் வலியுருத்துவது எங்கலுக்குரிய மேற்கூறிய பாகத்தை தாருங்கள் என்பது தானே ஒழிய பிரரை ஆள்வதற்கல்ல.
kannan
பிராமனபென்களய் வேறுசாதி ஆன்கள் திருமனம் செய்தால் எதிப்பு காட்டமல் இருப்பதற்ககு காரனம் அவர்களின் எண்ணிக்கையும், கொலை தண்டனைக்கு பயந்தும்தான், மற்றவர்கள் அதற்கு பயப்படத தன்மயும்தான் காரனம். பார்ப்பனர் மனப்பூர்வமாக செய்கின்றனர் என்பது ஆதரமட்றது.
Raamaraju
நண்பர் சுடலை மனியன் உங்களது கருத்துக்கு மிக்க நன்றி. சாதி உயர்வுகளைத் தெரிந்து கொளவதற்கும், சாதி பெருமை பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது. பிற சாதியைக் குறைத்துச் சொல்லியே தங்களது சாதியைப் பெருமைப் படுத்தும் மனப்போக்கு இருப்பதால்தான், அனைவரும் சம்ம என்ற நிலையில் மக்களாட்சி நாட்டில் சாதி உயர்வைப் பேச வேண்டியது இல்லை என்பதுதான் எனது தாழ்மையானக் கருத்து. நீஙகள் சொல்வதுபோல, கீழ் சாதிகள் என முத்திரைக் குத்தப்பட்டவர்கள் தன்னம்பிக்கையோடு பேசுவதைத்தான் பிற உயர்சாதியினர் என்று தங்களை முத்திரைக் குத்திக்கொண்டவர்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. விளைவு.... அடிதடி, சண்டை சச்சறுவுகள். அதனால்தான் சொல்கிறேன். சாதி உயர்வு பேசி தேவையற்றக் குழப்பங்களுக்குக் காரணமாக இருக்க வீண்டாம் என்று.
ராகவ ராஜ்
பலிஜா,கவரா நாயுடுகள் ஷத்ரியரே என்பதற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன.தமிழகத்தில் சில சாதிச் சமூகங்கள் தாங்கள் ஷத்ரியர்கள் என்று கூறிக்கொள்வதற்குக் காரணம் இங்கே சுமார் நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அகம்படி சாதிகள் (அரண்மனைப் பணியாளர்கள் ) சில பிற சிலபல சாதிகளை அநியாயமாக, வரலாற்றுக்குப் புறம்பாக கீழ்ச்சாதியினர் என்று பேசியும் எழுதியும் வந்தது தான். முதலில் இந்தத் தவறு திருத்தப்பட வேண்டும். பின்னர் மற்றெல்லாம் சரியாகும் !
Guest
பலிஜா,கவரா நாயுடுகள் ஷத்ரியரே என்பதற்கு ஆதாரங்கள் நிறையவே உள்ளன.தமிழகத்தில் சில சாதிச் சமூகங்கள் தாங்கள் ஷத்ரியர்கள் என்று கூறிக்கொள்வதற்குக் காரணம் இங்கே சுமார் நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அகம்படி சாதிகள் (அரண்மனைப் பணியாளர்கள் ) சில பிற சிலபல சாதிகளை அநியாயமாக, வரலாற்றுக்குப் புறம்பாக கீழ்ச்சாதியினர் என்று பேசியும் எழுதியும் வந்தது தான். முதலில் இந்தத் தவறு திருத்தப்பட வேண்டும். பின்னர் மற்றெல்லாம் சரியாகும் !
krishna prasad
நண்பர் ராமராஜு வின் கருத்து ஏற்கத்தக்கது...
sudalaimanian
கீழ்சாதி என்று கூறப்படும் தங்களுக்குள் ஒன்றை ஒன்ற குறைக் கூறிக்கொள்வதை மாறிக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று உயர் சாதி என எண்ணிக் கொண்டிருக்கும் சைவர் உட்பட்ட அகம்படி சாதிகள் பிற சாதிகளை இழுவுப் படுத்தி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பார்ப்பனர் தமிழரை இழுவுப்படுத்தினால் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாதோ அவ்வாறு அகம்படிகள் பிற தமிழ்ச்சாதிகளை இழுவுப்படுத்தினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது.
ராகவ ராஜ்
சாதிகள் ஒழியவேண்டும் என்பது மிக நல்ல நோக்கம் தான். ஆனால் சாதிகள் ஒழிந்திட்ட புதிய சமுதாயம் உருவாவதற்கு நல்ல விருப்பங்கள் மட்டும் போதாது. சாதிகளின் சமூக, பொருளாதார,அரசியல் காரணிகள் அகற்றப்பட வேண்டும். "சாதிகள் தோன்றின" எ ந்று சொல்வதே பிழையானது. முதலில் உலகம் முழுக்க சாதிச்சமுதாயம் (கணம்,குலம், இனக்குழு) தான் இருந்தது. பின்னர் வளர்ச்சிப் போக்கில், இந்தியப் பகுதி தவிர பிற பகுதிகளில் இனக்குழுக்கள் இணைந்து சாதியற்ற சமுதாயங்கள் உருவாகின. இந்தியப் பகுதியில் வளர்ச்சிப் போக்கு இந்தத் திசைவழியில் நடந்தேறாமல் சாதிகளாகவே தேக்கமடைந்துவிட்டன. இதிலே மிகப்பல சமூக,பொருளாதார,அரசியல் காரணிகள் செயல்பட்டிருக்கின்றன. இவையெல்லாவற்றையும் கவனத்திற்கொண்டு மாற்று நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தான் சாதிஒழிப்பு சாத்தியமாகும். சாதிஒழிப்பின் இறுதி நடவடிக்கையாக அகமணமுறை தகர்ப்பு (கலப்பு மணம்) இருக்கும். இதற்கு மாறாக யாரோ சிலர் (ஈ.வெ.ரா. வோ வேறு யாரோ) விரும்புவதனாலோ கதறுவதனாலோ சாதியம் ஒழிந்திடாது.
kannan
சாதி மாரி திருமனம் செய்துகொள்வதை இந்து சட்டமூலங்கள் குற்றமாக கருதவில்லை மாறக அனுலோமர்,பிரதிலோமர், என்று அந்த கலப்பை சாதியாய் மாற்றி அமைத்தது. தமிழகத்தில் உருவான இடங்கை சாதிகள் 98ம் வலங்கை சாதிகள் 98ம் பெரும்பாலானவை கலப்பு சாதிகலளே என்கிரது" தமிழக வரலாறு சோழப்பெருவேந்தர்காலம்" என்ற நூல். நிலம், மூலதனம், அதிகாரம் இவற்றில் மாற்றம் ஏற்படும்போது பழயசாதிகள் சேர்ந்தும் பிரிந்தும் புதிய சாதிகள் தோன்ட்றுவதும் பழயசாதிகள் மறைவதுமான மாற்றம் நிகழ்ந்தவன்னமாகத்தான் இருக்கிறது. மேற்கூறிய அடிக்கட்டுமானம் வேகமாய் மாற்றமடைந்தால் நலம்.
ராகவ ராஜ்
சபாஷ்,சுடலைமணியன், பார்ப்பனர் தமிழரை இழிவுபடுத்தினால் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியாதோ அவ்வாறு அகம்படிகள் பிற தமிழ்ச்சாதிகளை இழிவுப்படுத்தினாலும் பொறுத்துக்கொள்ள முடியாது !
santhakumar
தயவுச்செய்து அவர் சொல்ரத கொஞ்சம் கூர்ந்து கவனியுங்க........
Guest
1930 அய்யா அவர்கல் is greatest person
prabu.c
கானமை என்ற தேன்டமையை அனுபவித்த நாடார்கள் தம்மை சத்திரியர் என்று கூரிக்கொள்ளலாம், பறையர்கள் தம்மை ஆண்ட பரம்பரய் என்று நந்தனின மீளும் வரலறு எழுதலாம், பள்ளர்கள் மீளும் பான்டியர் வரலாறு எழுதலாம்,சக்கிலியர் குயிலி-மதுரைவீரன் - மூத்துப்பட்டன் வராலாறு எழுதலாம், தெலுங்கு நாயக்கர்கள் கட்டபொம்முவை ராஜாவாக வரலாறு எழுதலாம், தேவர்கள் போலித்தேவனை- மருதுசகோதரரை- சேதுபதியை மன்னர் பரம்பரையக எழுதலாம் ஆனால் வன்னிய குலசத்திரியர்கள் தம்மை சத்திரியர் என்று வாயலும் கூறக்கூடது என்பது என்ன நியாயம்? இது கருத்து பயங்கரவாதம்.
s.cithalingam
பறயர் சாதி பெண்னை சகிலியர் பையன் காதல் திருமனம் செய்தாலும், புதிரை வண்ணார் பையன் பறயர் சாதி பெண்ணய் காதல் திருமணம் செய்தாலும் கொலைதானே நடக்கிறது,மறுக்கமுடியுமா? வன்னியர்களை மட்டும் குற்றவாளி கூண்டில் நிறுத்துவது ஏன்? எல்லோரும் சாதியை விட்டுவிட்டது போலவும் வன்னியர்கள் மட்டும் சாதியய் விடமறுப்பது பொலவும் எழுதுவதும் பேசுவதும் எந்தவகையில் சரி?
Guest
நண்பர் கண்ணன் அவர்களே.. பிராமிணர்கள் எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதற்க்கு அவர்கள் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதும் கொலை தண்டணைக்குப் பயந்தும்தான் என்பது மனித சிந்தனைக்கு எற்புடையது அல்ல. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் கொலையும் செய்யலாம் என்பதுதான் உங்களது கருத்தா நண்பரே..! காதல் என்பது மதம் சாதி இனம் கடந்தது. தனது சாதி ஆண் பிற சாதிப் பெண்ணைய் காதலித்தால் எற்றுக்கொள்ளும் பக்குவம் தனது சாதிப் பெண் பிற சாதி ஆணைக் காதலித்தால் யோசித்து பார்க்காது, எத்ரிப்பது என்ற மனப்போக்கால்தான் எதிர்ப்பும் அடிதடி சண்டை சச்சரவுகள் போன்ற மனித சிந்தனைக்கு மாறானதாக இருக்கிறது. பெற்றோர்கல் உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஒத்துக்கொண்டாலும் "சாதி" "இனம்" என்று சொல்லுக்கொண்டு அதை எதிர்க்க வேண்டும் என்று தூண்டப்படுவதால் வருகின்ற சிக்கல்தான் அனைத்து சாதி மோதல்களுக்கும் காரணம் என்பதை நண்பரால் ஒத்துக்கொள்ள முடியுமா...
Sudalaimanian
வன்னியரை சத்திரியர் அல்ல என்று யாராலும் கூறமுடியாது. சத்திரியரான பெரியார், வன்னியர் சத்திரிய சாதி பெருமை பேசுவது பிற சாதிகளை வம்புக்கு இழுப்பது போல் ஆகிவிடக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு கூறுகின்றார். சாதியப் பெருமிதம் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. பிற சாதிகளை மட்டம் தட்டாமல் த்ன்னுடைய சாதிய உயர்வுகளைக் கூறிக்கொள்வதில் தவறில்லை. இங்கு பிற சாதிகள் என்பது மேல் சாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களை அல்ல. மேல் சாதி எனக் கூறிக் கொள்பவர்களை தவிர்க்க இயலாதவாறு மட்டம் தட்டியே ஆகவேண்டும்.
Sudalaimanian
மேல் சாதியாரை மட்டம் தட்டுவது எனக் கூறுவது கூட தவறுதான். இவர்கள் தங்களை மேல் சாதி என ஒரு பொய் தோற்றத்தை ( மாயையை) ஏற்படுத்தி வைத்திருப்பதை விலக்க வேண்டும்.
vilam
இது எந்த ஊரு நாயம், மத்தவங்க ச்திரியன் என்று வரலாறு எழுதலாம், வன்னியன் தன்னை சத்திரியன் என்று சொன்னாலே வம்புக்கு இழுப்பதாகுமா?அ மற்றவர்கள் சதிரியன் என்று சொன்னால் அது அவர்களின் கருத்துரிமை அதை யாறும் தடுக்கமுடியாது. வன்னியன் சத்திரியன் என்று சொல்லுதல் வரலாறு, வரலாறை கூறாதே என்பது என்ன நியாயம்?( " நாற்படை வன்னியன்"- கல்லாடனார், "பள்ளியெல்லாம் ஆண்ட திரய நாடு"- பட்டினத்தார்) தாம் எம் பி சி யாய் வீழ்ந்தது எவ்வாறு என்று தெரிந்துகொன்டால்தானே மேலே வருவான், அவனுக்காக பேச யாருமில்லாதபோது அவன் தான் பேசவேன்டும்.
vilam
கொலை யார்செய்தாலும் தவறுதான்,அது தவறு என்று தெரியாததால்தான் அதை செய்கின்றனர். அதனால்தான் அவர்கள் எம் பி சி. அவர்கலுக்கு கல்வி, வேலை, அநிலம்,வீடுகொடுத்தால் மேல்வருவார்கள். அதைவிடுத்து நானும் செய்ய மாட்டேன், நீயாகவும் வீழ்த்தப்பட்டது எப்படி என்று தெரிந்துகொள்ளதே என்றால் , வீழ்ந்தே கிட என்றுதான் பொருள். தன் வரலாறு தெரியாத எந்த சமூகமும் அழிந்துபோகும். வன்னியர் மீண்டெழ அவர்கள் வரலாறு அவர்கலுக்கும் மற்றவர்கலுக்கும் தெரியவேன்டும்.
l. raja
ஆமாம் அனானிமசு, ராஜராஜ சோழனின் தந்தையய்யே கொன்றவர்கள் பார்ப்பனர்கள்தான். முன்பு தண்டனை கிடையாது,இப்போது அவர்கலுக்கும்தண்டனை உண்டு அதனால் பயப்படுகிறார்கள் ஏனெனில் அவர்கள் படித்தவர்கள். ஆனிரை கவர்தல்,பெண்களை சிறையேடுத்தல், மண்ணை கவர்தல் என்பது போர்முறை, அவர்கள் வீட்டு பெண்ணை தூக்கிச்செல்லுவதை அவர்கள்மீதான போராகவே கருதுகறார்கள்.
Sudalaimanian
இங்கு சிலர் சாதி மறுப்புத் திருமனம் பற்றி மிக ஆர்வத்துடன், ஆதரவக பேசுகின்றனர். நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நண்பர் ராஜா போன்றவர்கள் என்ன சொல்ல வருகின்றார் என்பதை இவர்கள் ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை. முதலில் அனைத்து சாதிகளும் ஏதோ ஒரு வகையில் உயர்வானவைகளே என்ற மன நிலையை வெகுஜனங்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் சாதி மறுப்பு திருமனங்களை பெற்றோரே பேசி நடத்த தொடங்கிவிடுவர். இன்று கூட சம நிலையில் உள்ள சாதியரிடம் இவ்வாறு நடந்துள்ளதை பார்த்துள்ளேன். இங்கு நண்பர் ராமராசு நல்லெண்ணத்தின் அடிப்படையில் சாதி இணக்கத்திற்கு நிறைய எழுதுகின்றார். இவரிடம் பறையர் சாதியினர் பார்ப்பாரைவிட உயர்ந்த நிலையில் ஒரு காலத்தில் இருந்தனர் என்றால், இது தேவையில்லாத பெருமிதம் என்பார். அதாவது நாம் சொல்லும் கருத்து சரிய தவறா என்று கூட கூற மாட்டார். ஏனென்றால் தவறு என அவர் நினைப்பதை கூறினால் நமது மனம் புண்படுமே என்ற நல்லெண்ணம்தாம். இவர்களைப் போன்றவர்களைப் பொருத்தவரை அவர்களாகப் பார்த்து பெருந்தன்மையுடம் பிச்சையாகப் போடும் சமத்துவத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு எனக் கூறிக் கொள்ளும் ஆய்வாளர்கள் பலரும் ( பிராமனர், வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள்) தன்கள் சாதியை உயர்ந்த சாதி என்று கேள்விக்கிடமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் கீழ்சாதி எனக் கூறப்படுபவர்கள் தங்களது சாதிய பெருமிதத்தை தோண்டி எடுக்க முயற்சிப்பது தேவையற்றது என கூச்ச நாச்சமில்லாமல் அறிவுரை கூறுகின்றனர். பிற சாதியினர் இவர்களை அடையாளம் கண்டு தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தால்தான் சாதிக்கமுடியும்.
Sudalaimanian
பெரியார் சத்திரிய சாதி பெருமை பேசாதீர்கள் என வன்னியருக்கு அறிவுரை கூறுவது தவறுதான். ஆனால் மார்க்சிய ஆய்வாளர்கள் இவ்வாறு அறிவுரை கூறுவதற்கும் இயதற்கும் வித்தியாசம் உண்டு. சாதிய இயங்கியலைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் பெரியார் இவ்வாறு கூறிவிட்டார். நினைத்ததை பேசுபவர் பெரியார். ஆனால் இயக்க இயல் பொருள்முதவாதக் கண்ணோட்டத்தில் சமூகத்தைப் பார்க்கத் தெரிந்த மார்க்சிய ஆய்வாளர்களும் புரியாமல் பேசியிருப்பார்கள் என்றால் அது ஏற்புடையது அல்ல. இக்கணவான்கள் தங்கள் சொந்த சாதி ஆரம்ப காலங்களில் கீழ் சாதியாக இருந்தது என்ற தரவுகள் அனைத்தையுமே ஏதோ ஒரு வகையில் பூசி மெழுகிவிடுவர்.
karthikeyan
வன்னியர்கள் மட்டும் தான் சத்ரியர்கள்......
ஜுல்ய் 29, 2013 அட் 1:44ப்ம்
வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரிக்கப்படது

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.
வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களுக்கூள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்குபொறுப்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல...கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாதமுரட்டுக் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள்.கிராமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை….
நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.
பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் =சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.

இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.
சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.
இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.
மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.
அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.
மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?
மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை. அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்லை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.
அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.
நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.