•              2005-06 ஆம் ஆண்டிலிருந்து அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - 3,74,937 கோடி ரூபாய்.                (இது, 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையைவிட 2 மடங்கு)

•              இப்போது நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்துள்ள வரி - ரூ.88,263 கோடி.

•              இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.240 கோடி!

•              ஒவ்வொரு நாளும் இதே 240 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக, வெளிநாட்டு வங்கிகளுக்கு போய்க் கொண்டிருக்கிறது.                (வாஷிங்டனில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் -  Global Financial Integrity  - இத்தகவலைத் தெரிவித்துள்ளது)

•              இப்படி பெரும் தொகையை தொழில் நிறுவனங்களுக்கு ரத்து செய்த பிரணாப் முகர்ஜி, விவசாயத் துறைக்கான ஒதுக்கீட்டில் ரூ.5568 கோடியை வெட்டி விட்டார். பயிர்ப் பாதுகாப்புக்காக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையில் மட்டும் குறைக்கப்பட்ட நிதி ரூ.4,447 கோடி.

•              நிதிநிலை அறிக்கையில் பொருளாதார சேவைத் துறைகளிலேயே மிக அதிகமான பாதிப்பு விவசாயத் துறைக்குத் தான்.                (தகவல்: டாட்டா சமூக ஆய்வு மய்யம் - Tata Institute of Social Science

•              பெரும் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையை தள்ளுபடி செய்தது மட்டுமல்ல, இனி எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய சுங்கவரியைக் கட்டத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்ட தொகை - ரூ.48,798 கோடி!                (நாடு முழுதும் பொது விநியோகத் துறையான ரேஷன் கடைகளுக்கு ஓராண்டுக்கு செலவிடப்படும் தொகையில் இது பாதி)

•              அப்பல்லோ போன்ற ‘நட்சத்திர ஓட்டல்’ தரத்தில் நடத்தப்படும் தனியார் மருத்துவமனை களுக்கு வெளிநாடுகளிலிருந்து நவீன மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய, இந்த நிதி நிலை அறிக்கையில் விலக்காக அளிக்கப்பட்டுள்ள சுங்கவரித் தொகை ரூ.1,74,418 கோடி.

                (இந்த மருத்துவமனைகளில் 30 சதவீத படுக்கைகளை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி, சிகிச்சை அளிப்பதாக இந்த நிறுவனங்கள் பொய் கூறி அரசிடமிருந்து சலுகைகளைப் பெறுகின்றன. உண்மையில் அப்படி எந்த இலவச சிகிச்சையும் இங்கே வழங்கப்படுவது இல்லை.)

•              இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீர்வை வரி - ரூ.1,98,291 கோடி.                (கடந்த ஆண்டு - ரூ.1,69,121 கோடி)

•              தொழில் வருமான வரி, சுங்க வரி, தீர்வை வரி - ஆக பனியா - பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை என்று 2005-2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தமாக வழங்கப்பட்ட வரிச் சலுகை - ரூ.21,25,203 கோடி. (21 இலட்சத்து 25 ஆயிரத்து 203 கோடி. 2ஜி அலைக்கற்றை ஊழலைவிட 12 மடங்கு அதிகம்)

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகையும் அவர்களால் செலுத்தப்படாத வரித் தொகையும் அதிகரித்துக் கொண்டே போவதால் இதை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டில் அதற்கான எந்த மாற்றமும் இல்லை. மேலும் மேலும் கூடுதலாக வரிச் சலுகைகள் வாரி வாரி வழங்கப்பட்டுள்ளன.

இப்படி கோடிகோடியாக தொழில் திமிங்கலங்களின் வயிற்றில் கொட்டும் பார்ப்பன - பனியா ஆட்சி தான். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்க நிதி இல்லை என்று கை விரிக்கிறது. உணவுக்காக வழங்கப்படும் நிதி உதவியை குறைக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனி மனிதர் ஒருவருக்கு சராசரியாகக் கிடைக்கும் உணவு தானியத்தின் அளவு 50 ஆண்டுகளுக்கு முன்பு 1955-59 காலத்தில் கிடைத்ததைவிட பாதியாகக் குறைந்துள்ளதாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையே கூறுகிறது!

பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?

(மார்ச் 7 ஆம் தேதி ‘இந்து’ ஏட்டில் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து)

Comments

16 comments

16
Ramesh
It is misleading to say that Sainath has mentioned about Brahminism in his article. If it is true, a link to Sainath's article would be good. Please separate your additions to Sainath's article and mention it as such.
K.R.Athiyaman
திரு.சாய்நாத் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. பல வருடங்களாக அவரின் கட்டுரைகளை படித்து வருகிறேன். விவசாயிகளின் தற்கொலை, கிராம பொருளாதாரம் பற்றி அவர் பல ஆயிரம் மைல்கள் பயணித்து, அருந் தகவல்களை திரட்டி எழுதும் உழைப்பும், மனித நேயமும் பாரட்டுக்குரியன.

தகவல்கள், data and information பற்றி சரி. ஆனால் அவற்றை கொண்டு அவர் சொல்லும் முடிவுகள் அல்லது கருத்துக்கள் மீது பல நேரங்களில் மாற்று கருத்து உண்டு. Interpretation of data and his sweeping comments and conlusions about the much maligned ‘neo liberal’ polices since 1991.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 5,00,000 கோடிகள், பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என்பது sweeping and inaccurate comment. பட்ஜெட்டில் அதற்கான சுட்டி இது :
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf

மிகவும் பின் தங்கிய, வறண்ட பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்க நிறுவனங்களுக்கு ‘ஊக்கம்’ அளிக்க, வரி சலுகளை பல ஆண்டுகளாகவே உள்ளன. உதாரணமாக புதிய மாநிலமான உத்ராஞ்சலில், தொழில் துவங்கினால், பத்து ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் இதர வரிகளில் கணிசமான அளவு சலுகை. இவை அந்த பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழில்களை துவங்க ஒரு ஊக்கி என்ற அளவில் தான் பார்க்க வேண்டும். உண்மையாக சொன்னால், ‘தூய’ சந்தை பொருளாதார கொள்கைகள் படி, இது போன்ற ‘சலுகைகளை’ அரசு அளிக்க கூடாது. பாரபட்ச்சம் இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே வரி விகுதங்கள் தான் இருக்க வேண்டும்.

மேலும் டீசல், சமையல் எண்ணைகள், உரம் மற்றும் இதர விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான வரி சலுகைகள், பெரும் அளவில் இதில் அடங்கும்.

மென்பொருள் ஏறுமதிகளை ஊக்குவிக்க STPIகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தான் இதில் பெரிதாக சொல்லாம். அதுவும் கூடிய விரைவில் நீக்கப்படும். 1991இல் மிக அபாயகரமான அன்னிய செலவாணி பற்றாகுறை ஏற்பட்ட போது, ஏற்றுமதியாளர்களை அனைவருக்கும் 100 சதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. To encourage exports which earn foreign exchange for India. பிறகு படிப்படியாக அந்த சலுகை விலக்கப்பட்டது. அதே போல் தான் இந்த ‘சலுகைகளும்’.

அவரின் லாஜிக் படி பார்த்தால், 1970களில் உச்சபட்ச வருமான வரி சுமார் 98%, சுங்க வரி சுமார் 200 சதம், உற்பத்தி வரி சுமார் 50 சதம் அளவில் இருந்தன. இன்று வருமான வரி 34 சதம் தான் உச்சபட்ச அளவு. சுங்க வரி 20 சதம் அளவுதான். உற்பத்தி வரி 15 சதம் தான் சராசரி. இந்த அளவிற்க்கு குறைக்காமல் இருந்திருந்தால், சாய்நாத் அவர்களின் லாஜிக் படி இன்று பல கோடி கோடிகள் நிகர வரி வசூல் குவிந்திருக்க வேண்டும். ஆனால் வரிகளை மிக குறைத்தால் தான், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து, இன்று பல லச்சம் கோடிகள் வரி வசூல் உயர்ந்தது. அன்றைய விகிதங்கள் தொடர்ந்திருந்தால், அன்று கிடைத்த நிகர் அளவுதான் இன்றும் கிடைத்திருக்கும். Reduction and rationalization of tax rates encourage entrerprise, investment and kindle the intiative for expansion and growth. That is the lesson from history.

அவருக்கு அடிப்படை பொருளாதரம் தெரியவில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு வரி வசூல் மழை. 25 வருடங்களுக்கு முன் இதை கனவு கூட கண்டிருக்க முடியாது. இந்த அபரிமிதமான வரி வசூலை, உருப்படியாக, நேர்மையாக செலவு செய்ய வேண்டியது அரசின் தார்மீக கடமை. அதை அப்படி செய்ய கூடாது என்று தாரளமயமாக்கலை முன்மொழிந்தவர்கள் சொல்லவில்லையே ! பெரும் அளவில் அரசின் செலவுகளில் ஊழல் மலிந்து, உரியவர்களுக்கு செல்லாமல், நடுவில் திருடப்படுவது அனைவரும் அறிந்த open secret. இதற்க்கு அம்பானிகளை, பெரும் தொழில் முனைவோரிகளை கோபிப்பது சரியல்ல.
மேலும்…

தான்ய உற்பத்தி கூடி உள்ளது உண்மைதான். ஆனால் அது அதிகரித்த வேகத்தை விட ஜனத்தொகை அதிகரித்து வருவதால் தான், இந்த குறைந்த விகிதம் per capita availability of grains and pulses. விவசாயத்தில் சென்ற 20 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் குறைவு என்பது உண்மைதான். அதற்கு முக்கிய காரணம், தாரளமயமாக்கல் கொள்கை விவசாயத்தில் இன்றும் அனுமதிக்கப்படவில்லை. நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. 2000 ஏக்கர்கள் போன்ற பெரும் கார்பரேட் (அல்லது கம்யூனிச நாடுகளில் இருந்தது போன்ற கூட்டு பண்னைகள்) இன்றும் உருவாக வழியில்லை. அப்போதுதான் economies of scale and modern farming technology backed by huge private investments சாத்தியம். பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

பொது விநியோகத்தை பரவலாக்குவதை பற்றிதான் இந்த கட்டுரை. அதற்க்கு முழு ஆதரவு இல்லாதற்க்கு உண்மையான காரணம் ஊழல் மற்றும் cynical attitude of officials, politicians and PDS staff.

http://www.rediff.com/money/2007/jun/12pds.htm
Corruption rendering PDS ineffective

வெட்டியாக ராணுவத்திற்க்கும், காமன்வெல்த் விளையாட்டுகளுக்கும், தேவையில்லாத பல அரசு அலுவலகங்களுக்கும் செலவிடப்படும் பல லச்சம் கோடிகளை இதற்கு செலவு செய்வது ஒன்றுதான் வழி.
raman
இந்த கட்டுரைக்கு சாய்நாத் கொடுத்த தலைப்பை அப்படியே பயன்படுத்துதே நாகரீகம். பார்ப்பனர்களுக்கு சலுகை கொடுத்துள்ளதாக நீங்கள் வேண்டுமானால் ஆதாரத்துடன் கட்டுரை எழுதலாம். அதை விட்டு விட்டு. அடுத்தவர் உடலுக்கு உங்கள் முகத்தை பொருத்துவது சரியல்ல.
K.R.Athiyaman
ஆம். ராமன் சொல்வதை வழி மொழிகிறேன்.

மேலும் சில தகவல்கள் :

திரு.சாய்நாத் ஒரு ‘பார்பனர்’ தான். (வி.வி.கிரியின் பேரன்).
அவர் வேலை rural desk editor ஆக் வேலை பார்க்கும் இந்து பத்திர்க்கை உரிமையாளர்களும் ’பார்பனர்கள்’ தான்.

ஆனால் ‘திராவட தமிழர்கள்’ நடத்தும் வேறு எந்த பத்திரிக்கை / ஊடகங்கள் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதில்லை. வெளியிட தடை எதுவம் ’பார்பன சதி’ மூலம் இல்லை. அதை பற்றி எல்லாம் பேசமாட்டீர்கள். ஆனால் ’பார்பன’ என்ற தலைப்பை மட்டும் இப்படி கீழ்தரமாக உபயோக்கிப்பது இரட்டை வேடம்.
CHARIANNA
மிஸ்டர் அதியமான் சரியாகச் சொன்னீர்கள். வினவு டாட் காம் என்ற தளத்தில் திரு சாய்நாத் கட்டுரையின் தமிழாக்கம் வெளியாகியிருக்கிறது. பொதுவாக வினவு டாட் காமில் நல்ல பொது சிந்தனை கட்டுரைகள், ஊழலுக்கு எதிரான விஷ‌யங்கள் பிரசுரமாகும். அதற்கெல்லாம் பலர் மறுமொழியிடமாட்டார்கள் ஆனால் நடிக, நடிகையர் பெயர் வருகிறமாதிரி கட்டுரைகள், அவா, இவா என பார்ப்பன சொற்களோடு கட்டுரை வெளியானால் 140 பேர் மெனக்கெடுவார்கள் மறுமொழி போட. இதுல சுவாரசியமான ஒரு விபரம் என்ன தெரியுமோ கம்யூனிஸ்ட் (தற்கால போலி கம்யூனிஸ்டுகள் அல்ல) இயக்கத்தில் பல முன்னாள் தலைவர்கள் பார்ப்பனர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் வினவு தளத்தில் மொழிமாற்றக் கட்டுரைகள் மற்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ள திரு சித்ரகுப்தன் அவர்களே இடது சிந்தனையுள்ள ஒரு பார்ப்பனர்தான். இவர்களுக்கு தெரியாது போலும். யார் எழுதுகிறார்கள் என்பது முக்கியமல்ல என்ன செய்தி போய்ச்சேருகிறது என்பதுதான் முக்கியம். திரு சாய்நாத் அவர்களின் நல்ல கட்டுரைக்கு கீற்றின் இந்த தலைப்பு முரண்பாடாகத்தான் உள்ளது
G sundararajan
Katturaiyil illatha thalaippai poduvathu nagareegamillai
அசோகன் முத்துசாமி
இந்திய முதலாளிகளில் எவ்வளவு பேர் என்ன சாதி? அம்பானிகள் பார்ப்பனர்கள் அல்ல. டாடா பார்சி இனத்தைச் சேர்ந்தவர். இந்த கட்டுரையின்படி ஆதாயம் அடைந்தவர்களில் இவர்கள் மூவருமே அதிக ஆதாயம் அடைந்தவர்கள். இப்படி சாதி அடையாளம் பூசுவது இவர்கள் பயன் பெறவும். கலாநிதி மாறன் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த முதலாளிகள் அடிக்கும் கொள்ளையையும் நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ மட்டுமே பயன்படும். ஆதலால் இந்தப் பார்வை மக்களின் நலனுக்கு உதவாது. மேலும், சாய்நாத் என்ன தலைப்பு கொடுத்தாரோ அதைக் கொடுப்பதுதான் ஊடக தர்மம்.
atthamarai
சாய்நாத்தின் கட்டுரையில் இல்லாத தலைப்பை கீற்று வெளியிடவில்லை. கீற்று தளத்துக்கு பெரியார் முழக்கம் இதழை அனுப்பிய நான்தான் தலைப்பை மாற்றி அனுப்பினேன். பெரியார் முழக்கம் இதழில் வெளியிடப்பட்டுள்ள சாய்நாத்தின் கட்டுரையின் சில பகுதிகளின் இறுதியாக பெரியார் முழக்கத்தின் கருத்தாக பயன்படுத்தப்பட்ட வாக்கியத்தைத்தான் தலைப்பாக மாற்றி அனுப்பியுள்ளேன். கண்டனம் தெரிவிக்க விரும்புபவர்கள் எனக்குத் தெரிவிக்கலாம். நன்றி.

தி.தாமரைக்கண்ணன்
தலைமைச்செயற்குழு உறுப்பினர்
பெரியார் திராவிடர்கழகம்
[email protected]
Kailash
Are you biassed ? Whats the relation between title and contents ? Do you read the title and content before publishing it ? Article will loose its purpose if you divert like this
thamizhan
It is quite natural that the D.K.ist would do this mischief there's nothing to condemn or get angry. if they didn't do this it's a matter of wonder. Their silliness has been betrayed in various circumstances.
சாரி யண்ணா
தாமரைக் கண்ணன் தலைப்பு எழுதிக் கொடுத்தாலும், அதை வெளியிடும் கீற்று தளத்தை தவறு சொல்வது இயல்புதான். ஏனெனில் பிறர் எழுதும் மறுமொழியைக் கூட திருத்தும் உரிமையிருக்கிற தளத்தில் ஆங்கில செய்தித் தாளில் வந்த செய்தி என்ன- அதன் சொல்லவந்த செய்தியின் மாண்பு கெடாமல் தமிழாக்கத்தில் உள்ளதா- தலைப்பு சரிதானா என்று பார்த்தபின்தான் ஒரு கட்டுரையை வலையேற்ற வேண்டும் என்கிற அடிப்படை கூட தெரியாமலா கீற்று தளம் நடத்துகிறார்கள். தி.க.விற்கு எதைப்பார்த்தாலும் பார்ப்பன துவேஷ‌த்தோடு பார்க்கவேண்டும், திருத்த முடியாது, அதைப்பற்றி கவலைப்படவும் தேவையில்லை. ஒரு சிறப்பான பார்வையுடன் பட்ஜெட்டை விமரிசித்துள்ள கட்டுரை. அதன் எழுதியவர் நோக்கம் கெடாமல் செய்த தமிழாக்கம் வெளியாகியுள்ள வினவு.காம் தளத்தை பார்வையிடவும்
ravi,hosur.
katturaiyin saarathai vittuvittu sakkaiyai enn pidithu kollkirirkal,avar solliyirupathu veru,ellorume katturaiyin mukkiyamana amsangalai paarkkaamal ethaiyo pesukirirkal. thodarnthu ottumotha makkal nalan saarntha budjetaaka illamal inthanaattin valankalai kollaiadithu veru engo kondupoi serkum kollaikoottathukkana nalan serkum budjettakave thodarnthukondurikkirathu enpathe mr.sainath avarkalin kavalaikkuriya visayam. editor kavanikka;thayavu seithu padaippukku sambanthamillatha vinana vivathathirku idamkodukkum kaditham vendaam.ungalin kadumaiyana nithisumaikalodu ungalin seeriya uzhappum veen.
எட்வின் பிரபாகரன்
கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களில், உயரதிகாரிகளாக இருப்பவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்கள் தான். எனவே அதை "பார்ப்பன பன்னாட்டு கொள்ளை" என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?? "பார்ப்பன - பன்னாட்டு வேட்டைக்காடா, இந்த நாடு?" என்ற சொற்றொடர் கட்டுரையின் இறுதியில் வந்திருந்தால், குழப்பம் வந்திருக்காது. தவறுதலாக, இறுதியில் வர வேண்டிய வரி கொஞ்சம் மாறி இறுதிக்கு முந்திய வரியில் வந்துள்ளது. இதை பெரிதுபடுத்தவேண்டாம். பொதுவுடைமை வேஷம் போடுபவர்கள், எதற்க்கெடுத்தாலும் அமெரிக்காவை குறை சொல்கிறார்களே!! இதற்கு காரணம், அமெரிக்க ஆதிக்கம் தானே!! நீங்கள் மட்டும் அமெரிக்க ஆதிக்கத்தை விமர்சிக்கலாம்!! நாங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை விமர்சிக்கக் கூடாதோ???
[email protected]
at thamarai,
Content of the article and your additions are very good and timely reminder but the only problem is the way your comments are inserted which misleads the readers. Because, we all know that Brahminism occupies every sides of the political spectrum so as to perpetuate their superiority, and Indian nationalism and also to control the political discourse at all costs. When I read the title and your sentence at the end, I was confused since I was opinion that Sainath too belongs this Brahminical charade of filling in the vacuum in the English-literate polity for the oppressed sections. I had to do a little search to make sure that Sainath in fact did not utter those words and thus still remains to be part of the brahminical problems scourging us (despite his excellent work).
[email protected]
வர்க்கம் ஒழிந்தால் சாதி போய்விடும் என்று ஒரு காலத்தில் கூறிக்கொண்டு சாதி கொடுமையை பற்றி பேசினால் காதை இருக்க மூடி கொண்ட பூனுளிஷ்ட்கள், ஈழத்தில் தமிழர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த பொது தான் இங்கு ஜாதி பிரச்சனையை கையில் எடுகின்றனர். இதை விட ஒரு அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்காது. சீனா வல்லாதிக்கம் இது வரை கொன்ற திபெத்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை லட்சத்திற்கும் மேல். எங்கெல்லாம் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கொள்ளபடுகிறதோ அங்கெல்லாம் கொள்ளபடுபவனுக்கு ஆதரவு கொடுபதுதான் இங்குள்ள communist என்று சொல்லிகொள்ளும் poonulist kalin வேலை.
charianna
ஏம்பா இங்கு எங்கப்பா ஜாதி வந்தது. திரு சாய்நாத் இந்திய பட்ஜெட் எப்படி பெருமுதலாளிகளுக்கு லாபகரமாக இருந்திருக்கிறது, அதன் வழி இந்தியா தனது வருமானத்தில் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை கட்டுரையாக்கியிருக்கிறார். அதன் மீது ஆரோக்கியமாக விவாதம் நடத்தாமல் பூணூலிஸ்ட் என்பதெல்லாம் தேவைதானா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.