puthumaipithan_301(1906-1948)

2002

தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் சிறுகதைக்கு இலக்கியத் தகுதி பெற்றுத் தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும், மொழிக்கு வளம் சேர்க்கும் நடை நயமும் கலந்துள்ளன. வசதி மிகுந்த, ஆயினும் மனிதாபிமானம் இல்லாத, பெரிய மனிதர்களை எள்ளி நகையாடும் போக்கு, ஏழை எளியவர்களுக்கு இரக்கப்படும் உள்ளம், தன்னம்பிக்கை, புரட்சியை நாடும் மனப்பான்மை ஆகியவற்றை இவரது கதைகளில் காணலாம். வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டு தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர் புதுமைப்பித்தன். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது கதைகள், சோகத்தை அடி நாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சுட்டிக் காட்டும் சொற்சித்திரங்கள் ஆகும்.

சிறுகதை

103 சிறுகதைகள்(சந்தியா பதிப்பகம்)

மொழிபெயர்ப்பு

உலகத்துச் சிறுகதைகள்

பளிங்குச் சிலை (கதைகள்)

தெய்வம் கொடுத்த வரம்

மணியோசை

உலக அரங்கு (நாடகங்கள்)

பிரேத மனிதன் (நாவல்)

பலிபீடம் (நாவல்: அலெக்சாண்டர் குப்ரின் எழுதிய “Yama The pit’’ நாவலின் முதல் பாகம் மட்டும்)

கட்டுரைகள்

புதுமைப்பித்தன் கட்டுரைகள்

அதிகாரம் யாருக்கு?

நமது இலக்கியம்

கவிதை

புதுமைப்பித்தன் கவிதைகள்

வரலாறு

பாசிஸ்ட் ஜடாமுனி (முசோலினி வாழ்க்கை வரலாறு)

கப்சிப் தர்பார் (ஹிட்லர் வாழ்க்கை வரலாறு)

Pin It