(1884-1944)

2004

venkadasamy_nattar_250தஞ்சை மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருடைய இயற்பெயர் சிவப்பிரகாசம். இவரின் பெற்றோர் முத்துசாமி நாட்டார் தைலம்மாள் தம்பதியர். 1905 ல் பிரவேச பண்டிதம், 1906ல் பால பண்டிதம், 1907ல் பண்டிதம் ஆகிய தேர்வுகளில் சிறப்பாகத் தேறி பல பரிசுகளைப் பெற்றார். இவர் திருச்சியில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியத்திலும் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டு தெளிவு பெற்றார் பாரதியார் என்ற செய்தியும் உண்டு. திருச்சியில் இவர் பணிபுரிந்த எஸ்.பி.ஜி.கல்லூரி மூடப்பட்ட பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தப் பணி ஓய்வுக்குப் பின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மதிப்பியல் முதல்வராக இருந்தார். 1940ல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் இவருக்கும் நாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 1923ல் இவரால் எழுதப்பட்ட கள்ளர் சரித்திரம் என்ற நூல் ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்ததாக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கத் தகுதி உடையது என்றார் உ.வே.சா. தஞ்சை அருகே உள்ள வெண்ணாற்றங் கரையில் இவரின் நினைவாக ஒரு தமிழ்க் கல்லூரி இயங்கி வருகிறது. 

1. வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி

2. நக்கீரர்

3. கபிலர்

4. கள்ளர் சரித்திரம்

5. கபிலர் ஆராய்ச்சி

6. சோழர் சரித்திரம்

7. கட்டுரைத் திரட்டு 1 & 2

8. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
Pin It