(1895-1978)

2000

தமிழில் அரசியல் இலக்கிய முன்னோடியான அமரர் வெ. சாமிநாத சர்மா 80 நூல்களை எழுதியுள்ளார். தேசிய, சர்வதேசிய தலைவர்கள், அரசியல் தத்துவங்கள் பற்றிய இவருடைய நூல்கள் தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்குக் கலங்கரை விளக்காக அமைந்தன. எந்த வித வசதிகளும் இல்லாத காலத்தில் இவருடைய எழுத்துகள் புதிய உலகை அறிமுகப்படுத்தின. பிளேட்டோ, ரூஸ்ஸோ, கார்ல் மார்க்ஸ், மாஜினி, ஸன்யாட்ஸென், திலகர், காந்தியடிகள், திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் முதலானோரைப்பற்றி இவர் வழங்கியுள்ள வரலாற்றுச் செய்திகள், சிறந்த ஆவணங்களாகும். இவர். தேசியவாதியாகவும். காந்தியவாதியாகவும் இறுதி வரை வாழ்ந்து வழிகாட்டிய எழுத்தாளர். தேசபக்தன், நவசக்தி, ஜோதி மற்றும் சில இதழ்கள் வாயிலாகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர்.

கதைகள்

1. கௌரீ மணி (பௌராணிக கதை)

2. தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு)

நாடகங்கள்

3. லட்சுமிநாதன்

4. உத்தியோகம்

5. பாணபுரத்து வீரன்

6. அபிமன்யு

7. உலகம் பலவிதம் (ஓரங்க நாடங்களின் தொகுப்பு)

மணிமொழிகள்

8. சுதந்திர முழக்கம்

9. மாஜினியின் மணிமொழிகள்

10. இந்தியாவின் தேவை

அரசியல்

11. ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை

12. பிரிக்கப்பட்ட பர்மா

13. பெடரல் இந்தியா

14. சமஸ்தான இந்தியா

15. உலகக் கண்ணாடி

16. ஸ்பெய்ன் குழப்பம்

17. செக்கோஸ்லோவேகியா

18. பாலஸ்தீனம்

19. அரசியல் வரலாறு

20. ஆசியாவும் உலக சமாதானமும்

21. ஐக்கிய தேசஸ்தாபனம்

22. அரசாங்கத்தின் பிறப்பு

23. பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்

24. அரசியல் கட்சிகள்

25. நமது தேசியக் கொடி

26. பார்லிமெண்ட்

27. புராதன இந்தியாவின் அரசியல்

வரலாறுகள்

28. நமது ஆர்யாவர்த்தம்

29. ருஷ்யாவின் வரலாறு

30. சீனாவின் வரலாறு

31. கிரீஸ் வாழ்ந்த வரலாறு

32. புதிய சீனா

கட்டுரை இலக்கியம்

33. காந்தி யார்?

34. நமது பிற்போக்கு

35. எப்படி வாழ வேண்டும்?

36. மனிதன் யார்?

37. பெண்மையிலேதான் வாழ்வு

38. இக்கரையும் அக்கரையும்

39. காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்

40. நகைத்தல் நல்லது

41. நாடும் மொழியும்

42. சுதந்திரமும் சீர்திருத்தமும்

வாழ்க்கை வரலாறுகள்

43. லோகமான்ய திலகர்

44. ரமண மகரிஷி

45. பண்டிட் மோதிலால் நேரு

46. முஸோலினி

47. அபிசீனிய சக்கரவர்த்தி

48. ஹிட்லர்

49. காந்தியும் - ஜவஹரும்

50. காந்தியும் விவேகானந்தரும்

51. சார்லஸ் டார்வின்

52. ஸர். ஐசக் நியூட்டன்

53. ஸர். ஜகதீச சந்திரபோஸ்

54. தாமஸ் எடிசன்

55. சர். பிரபுல்ல சந்திரரே

56. ஸர். சி.வி. ராமன்

57. கமால் அத்தாதுர்க்

58. ரூஸ்ஸோ

59. கார்ல் மார்க்ஸ்

60. ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி

61. மாஜினி

62. ஸன்யாட்சென்

63. நான் கண்ட நாவலர்

64. சமுதாயச் சிற்பிகள்

கடிதங்கள்

65. மகனே உனக்காக

66. அவள் பிரிவு

67. வரலாறு கண்ட கடிதங்கள்

பயண இலக்கியம்

68. எனது பர்மா வழிநடைப் பயணம் மொழிபெயர்ப்புகள்

69. மானிட ஜாதியின் சுதந்திரம்

70. மனோதர்மம்

71. மகாத்மா காந்தி

72. மாஜினியின் மனிதன் கடமை

73. சமுதாய ஒப்பந்தம்

74. பிளேட்டோவின் அரசியல்

75. ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்

76. சுதந்திரத்தின் தேவைகள் யாவை?

77. பிளேட்டோவின் கடிதங்கள்.

ஆங்கில நூல்

78. Essentials of Gandhism.

Pin It