சிந்துவெளித் தமிழிய நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் பற்றியும், அங்கு நிலவிய நாகரிகத்தின் தமிழியத் தன்மைகள் குறித்தும் இன்று உலகம் பேரளவில் அறிந்துள் ளது. சிந்து நாகரிகத்தின் தமிழியம் சார்ந்த கூறுகள் அந் நாகரிகத்தின் புதையுண்ட நகரங்களில் கிடைத்த பயன்படு பொருட்கள், ஈமச்சடங்குப் பொருட் கள், முத்திரைகள் முதலியவற்றை ஆராய்ந்து அறிந்த உண்மைகள் அடிப்படையில் பெறப் பட்டனவாகும்.

 உலகின் பெரும்பாலான தொல்லியல் ஆய்வா ளர்கள் சிந்து நாகரிகம் தமிழியம் (திராவிடம்) சார்ந்தென்று உறுதிப்பட மொழிந்துள் ளனர். அதற்கு அவர்கள் எடுத்துரைத்த அரிய கருத்து கள், அந்நாகரிகம் வேதநெறியைச் சார்ந்தது, அவர்கள் ஆரியர்கள் என்று நிறுவப் புறப் பட்டவர்களின் வாயை அடைத்து, அவர் களால் வெற்றி கொள்ள முடியாதபடி மலையென மறித்து நிற்கிறது. எடுத்துக்காட்டாக, குதிரை களின் பயன்பாடு, தேரைப் பயன்படுத்தியது, இரும்பின் பயனை ஆரியர் அறிந்திருந்தது, அவர்களது சிற்றூர் நாகரிகம் சார்ந்த பண்பு ஆகியனவற்றைக் கூறலாம். இவை யாவும் அனைவரும் அறிந்ததே.

இதற்கு மேலும், ஆரியர்கள் இருக்கு வேதத்தில் குறிப்பிடும் சிங்கங்கள் குறித்து சிந்துவெளி நாகரிக மக்கள் அறிந்திராமை, உப்பு என்ற சொல்லே வேதத்தில் இடம்பெறாமை, எழுத்து முறையைக் குறித்து வேதங்கள் அறிந்திராமை ஆகிய காரணங்கள் ஆரியருக்கும், சிந்து வெளிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்த் துவன. முதிர் சிந்து நாகரிகத்துடன் தொடர்பு காண முடியாத ஆரியப் பற்றாளர்கள், இருக்கு வேதம் சிற்றூர் நாகரிகம் சார்ந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு, இராசத்தான் பகுதியில் ஓடி, பின்னர் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வறண்டு போன கக்கார் என்னும் மழைக்கால ஓடையின் மருங்கில் கண்டுபிடிக்கப் பட்ட சிந்து நாகரிகத் தொடக்க காலத்திற்குரிய குறுநகரங்கள் பலவற்றை ஆரியருடன் தொடர்பு கூட்டி ‘சரஸ்வதி ஆற்று நாகரிகம்’ என்று பெயரிட்டு உலகளவில் பெரிதுபடுத்தினர் என்பதை அறிவோம்.

வேத கால ஆரியருக்கு எழுத்துமுறை கிடையாது. சிந்து நாகரிகம் அவர்களுடையதன்று என்பதும் இன்று நிறுவப்பட்ட உண்மைகளாகி விட்டன. வட இந்தியாவில் கி.மு. 3ஆம் நூற்றாண் டிலேயே எழுத்துமுறை (அசோகர் கல்வெட்டுகள் - (பிராமி) இருந்த போதும் சக அரசானான உருத்திரதாமன் என்போனது ஆட்சியில் கி.பி. 150ஆம் ஆண்டில்தான் சமஸ்கிருத மொழியில் கல்வெட்டு அவனால் வெளியிடப்பட்டது. ஆனால், கி.மு. 3000 அளவி லேயே சிந்துவெளியில் நிலவிய தமிழிய நாகரிகத்தில் அரிதிலும் அரி தான மிக முன்னேறிய எழுத்துமுறை இருந்த தற்கான சான்றுகள் முத்திரைகள் வடிவில், பொருட்களில், ஏன் செப்புக் கோடரி ஒன்றில் கூட எழுத்துப் பொறிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது.

சிந்து எழுத்தைப் படிக்கும் முயற்சி 80 ஆண்டு களுக்கும் மேலாக மேற்கொள்ளப் பெற் றிருப் பினும், சோவியத் இரசிய, ஃபின்லாந்து ஆய் வாளர்களே முனைப்புடன் ஈடுபட்டு, சிந்து எழுத்தைத் தமிழியம் சார்ந்தது என்று நிறுவினர்.  ஆயினும், அதனைப் படவெழுத்து (Logo Syllabic) முறையெனக் கொண்டு படிக்க முயன்றதன் காரணமாக ஏறக்குறைய 60 ஆண்டுகளாக அவர்களால் வெற்றி பெற இயலவில்லை. அவர்கள் (அஸ் கோ பர்போலா குழுவினர் மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்றோர்) கடந்த பல பதிற்றாண்டுகளாக விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய சில வடிவங்களுக்கே பொருளுரைத் துள்ளனர்.

அதுமட்டுமல்ல, முத்திரைகளில் உள்ள வடிவத் தொகுதிகளின் எழுத்துகளுக்கு அங் கொன்றும், இங்கொன்றுமாக விளக்கமளிக் கின்றனர். பல எழுத்து வடிவங்கள் கொண்ட முத்திரைகளின் வடிவத் தொகுதிகளுக்குத் தொகுத்து, தொடர் பொருள் கூறியதில்லை. கூறிய ஒரு சிலவற்றுக்கும் பொருட்தெளிவும், பொருத்தப்பாடும் இருந்த தில்லை. இது ஒன்றே - அதாவது, சிந்து எழுத்தைப் படவுருக் களுடன் தொடர்புடையதாகக் கருதிப் படிக்க முயன்று இதுவரையிலும் படிக்க முடியாமல் இருப்பதே - சிந்து எழுத்து படவெழுத்து சார்ந்த எழுத்து முறையல்ல என்பதை உணர்த்தும் சான்றாகும். உலகின் மற்ற படவெழுத்துகள் அனைத்தும் படிக்கப் பெற்று விட்டன.

சிந்து எழுத்து முறை

சிந்து எழுத்து படவெழுத்து சார்ந்ததல்ல என்றால், அது எவ்வகை எழுத்து என்று விளக்க வேண்டியது நமது கடமையாகும். சோவியத்-- ஃபின்லாந்து ஆய்வாளர்களும், அவர்களது அடிவழியவர்களும் கூறுவது போன்று முற்றிலும் படவுருக்கள் சார்ந்தது அல்ல என்றாலும், படவுருக்களும் சிந்து எழுத்தில் உள்ளன. உலகின் பிற தொன்மையான எழுத்து முறை களைப் போன்றே சிந்து எழுத்தும் பல எழுத்து முறைகளும் ஒன்றிணைந்த எழுத்து முறையாகும்.

எகிப்திய, சுமேரிய எழுத்து முறைகளிலும் இவ்வாறு பல எழுத்துமுறைகள் ஒன்றிணைந் திருந்தன. சிக்கலான எழுத்து முறையான எகிப்திய எழுத்து முறையைக் குறித்து ஆராய்ந்த உலகப் புகழ்பெற்ற தொல் லெழுத்தாய்வாளர் திரு. ஸ்வய்ன் என்பார், “கருத்து ருவன், அசை நிலை மற்றும் அகரமுதலி ஆகிய எழுத்து முறைகள் ஒன்றிணைந்திருப்பி னும், ஏனோ அகரமுதலி எழுத்து முறையைக் குறித்து எகிப்தியர் கருத்துச் செலுத்தவில்லை” என்று கூறி யுள்ளார். “Phonetic writing was not actually realized by the Egyptians, But, they did have a combination of Ideographics, Syllabic and Alphabetic Systems” என்பார். (Swain.J.W, A History of World Civilization, 1984)உலகின் தொல்லெழுத்துகள் இவ்வாறு வேறு சில எழுத்து முறைகளும் கலந்தனவாகவே இருந்தன. சிந்து எழுத்தும் அவ் வாறே படவுருக்கள் ((Picto graph), சொல்லுருவன் (Logo graphic), சொல்லசையன் (Logosyllabic), உயிர்மெய்யன் (Syllabary) மற்றும் சிந்து எழுத்து அடிப்படை வடிவங்கள் (Indus Script basic signs)) ஆகியவற் றைக் கலந்து எழுதியதுடன், அசைநிலை (Syllabic) எழுத்து முறையாதலால் இடையிடும் விட்டிசைகளை நிரப்ப எண்கள் - குறியீடுகள் (Numbers and Symbols) ஆகியவற்றை இடையி டையே கலந்து எழுதினர்.

இத்தகைய சிக்கலான எழுத்துமுறை உருவாகக் காரணம், ஒரு செவ்வியல் மொழியின் (Classic Language) தொன்மையான மரபுநிலை எழுத்து முறை, மிக முன்னேறிய ஒலியெழுத்து (Phonetic) முறைக்கு மாறும்போது ஏற்படும் சிக்கல்களே யாகும் (படம் 1 காண்க).

km1 

சிந்து எழுத்தில் பல்வேறு எழுத்து வகைகள் இருப்பினும் சிந்து எழுத்துமுறைக்கு சிந்து எழுத்து அடிப்படை வடிவங்களே உயிர் நிலை யாக உள்ளன. இவை, தனியே வழங்குகின்றன; இவற்றைக் கொண்டே படவுருக்கள் போன்று காணப்படும் செயற்கை வடிவங்களாகிய கூட் டெழுத்துகள் உருவாகின்றன. இவ்வடிப்படை வடிவங்களே ஒரு மொழிக்கு அடிப்படையாகும். உயிரெழுத் துகளும், மெய்யெழுத்து களுமாகும். இவை, செயற்கை வடிவங்கள், வடிவியல் கோணங் களுடன் எளிமையாக உள்ளன (படம் 2 காண்க). சிந்து எழுத்து வழங்கிய அக்காலத்தில் (கி.மு. 2600) உலகின் வேறெந்த எழுத்துமுறையிலும் சிந்து அடிப்படை வடிவங்களுக்கு ஒப்பான, எளிய அழகிய வடிவங்கள் கிடையாது. அடிப்படை வடிவங்களில் மெய்யெழுத்துகள் சிறு கீற்றுக் கோடுகளிட்டு உயிர் மெய்யெழுத் தாக்கப்படு கின்றன. அடிப்படை வடிவங்களும், கீற்றுக் கோடிட்ட உயிர்மெய் வடிவங்களுமான 60% அளவிறகு 5253 இடங்களில் பயின்று வருகின்றன.

மேலும், இவ்வடிப்படை வடிவங்கள் கூடியே கூட்டு வடிவங்கள் உருவாக்கியுள்ளனர். இவை, படவுருக்கள் போன்றுள்ளன. படங்கள் என்றால் இயற்கைப் பொருட்களின் வடிவங்களாகும். வடி வங்களைப் பார்த்தால் அவற்றின் பெயர் நினைவிற்கு வரும். எடுத்துக்காட்டாக, மயில், மலை ஆகியவற்றின் படங்களைப் பார்த்ததும் நமக்கு அவற்றின் பெயர் நினைவிற்கு வரும்.

km2

சிந்து கூட்டெழுத்துப் படங்கள் அப்படி இயற்கையானவையல்ல. கூட்டெழுத்துகளைப் பார்த்தாலே அவை அடிப்படை வடிவங்களக் கொண்டு அமைக்கப்பட்டவை என்பது முதல் பார்வையிலேயே தெளிவாகும். இப்படி அடிப் படை வடிவங்களால் கூட்டெழுத்து அமைக்கும் முறை உலகில்  வேறெங்கும் இல்லை. சுமேரிய எழுத்துமுறையில் படங்கள் கூடி ஆப்பெழுத் துகளாக அமைவதுண்டு. எகிப்திய முறையில் உண்மையான படங்களே அமைவதுண்டு. சிந்து எழுத்தில் மட்டுமே செயற்கையான, வடிவியல் வடிவங்களாகிய அடிப்படை வடிவங்களால் கூட்டு வடிவங்கள் அமைத்துள்ளனர்.

அடிப்படை வடிவங்களைச் சேர்த்து இப் படங்கள் அமைக்க வேண்டிய தேவை என்ன? இவ்வடிப்படை வடிவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இவ்வடிவங்கள் படவுருக் களல்ல என்பதும், அவ்வாறு படவுருக்களாகத் தோன்றுமாறு செயற்கையாக உருவமைக்கப் பெற்றவை என்பதும் தெளிவாகிறது.

இரண்டு முதல் ஐந்து வரையிலான வடிவங் களைக் கொண்டு ஒற்றை வடிவக் கூட்டெழுத் தினை உருவமைத் தது ஏன்? பல வடிவங்களை எழுத வேண்டிய இடத்தில், இடத்தைச் சிக்கனப் படுத்தி ஒரே எழுத்தில் எழுதிவிடலாம் அல்லவா? இதனால், சிந்து எழுத்து முத்திரை எழுத்தாகக் கருதி உருவாக்கப்பட்டதென அறியலாம். எகிப்தி யர் அகர முதலி (Alphabet)) எழுத்தை அறிந்தி ருந்தும் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் சிந்து மக்கள் அகர முதலியைப் பற்றி அறிந்து தங்களுடைய எழுத்துமுறையை வளர்த்துள்ளனர். தங்கள் மொழியின் மெய்யெ ழுத்துகள், உயிரெழுத்துகளைக் கண்டறிந்து தங்கள் எழுத்துமுறையை வளப்படுத்தியுள்ளனர்.

சங்கத் தமிழியும்  சிந்து எழுத்தும்

சிந்து எழுத்து அடிப்படை வடிவங்கள் நமது தமிழகத்தின் சங்ககாலத் தமிழி எழுத்து வடிவங்களுடன் ஓப்புடையனவாக உள்ளன. ஒப்பீட்டில் இவ்விரு எழுத்துகளின் அடிப்படை வடிவங்களும் வடிவ நிலையிலும், ஒலி நிலை யிலும் ஒத்துள்ளன. அதனடிப்படையில் ஆய்வு முறையால் வடிவங்களுக்குரிய ஒலிகளையும், ஒலி கள் அடிப்படையில் வடிவங்களை இனங் கண்டும், தமிழி எழுத்துகளின் அடிப்படையில் சிந்து எழுத்து வடிவங்களுக்கு உயிரூட்டும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழி எழுத்து மெய்யெழுத்து முறை சார்ந்தது. சிறு கீற்றுக் கோடுகளால் செயற்கையாக உயிர்மெய்யாக்கம் நடைமுறையில் உள்ளது. மெய்யை எழுதி உயிர் மெய்யாகப் படிக்கும் முறை யுள்ளது. இம்முறை யைச் சிந்து எழுத்திலிருந்தே தமிழி பெற் றுள்ளது என்று கருத வேண்டியுள்ளது. வடிவங்களும், ஒலி நிலைகளும் ஒப்புடையன வாக உள்ளது போன்று, மரபு முறையாக வரும் வழக்குகளும் ஒப்புடையனவாக உள்ளன. கால அளவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் இடை வெளியுள்ள நிலையில் இத்தகைய ஒப்பு டைய கூறுகள் வியப்பளிப்பதுடன், சிந்து எழுத் தின் படிநிலை (Evoluti onal) வளர்ச்சியே தமிழி எழுத்து என்பதையும் உணர்த்துகிறது.

இத்தகைய கால இடைவெளியை விலக்கி, காலந்தோறும் வளர்ந்து வரும் எழுத்துமுறையின் தன்மையைத் தமிழகத்தில் சாணூர், பொதிகை மலை அகத்தியர் குகை, கீழ்வாலை, பெருமுக்கல், யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும், பின்னர், பழனி அருகே பொருந்தல், ஆதிச்சநல்லூர், கொற்கை, கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத் துள்ள பனையெழுத்துகளும் சிந்து எழுத்தின் வளர்நிலையே தமிழி என்பதை உணர்த்துகின்றன. சாணூர் முதல் யாழ்ப் பாணம் வரையிலும் கிடைத் துள்ள சிந்து எழுத்து வடிவங் களும், பானை ஓடுகளில் கிடைத்துள்ள சிந்து எழுத்து வடிவங்களும், சிந்து எழுத்து வடிவங்க ளுக்கு ஒப்பான வடிவங்களும், அதன் பிறகு கிடைக்கும் தமிழி வடிவங் களும் ஏறக்குறைய 5000 ஆண்டுகளின் வரலாற்று, மொழித் தொடர் புகளை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

இச்சான்றுகள், சிந்துவெளி யிலும், தமிழகத் திலும் சிந்து எழுத்து என்று இன்று அழைக் கப்படும் எழுத்து வடிவங்களே பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்விடங்களில் எழுத்துமுறை யாக வழக்கில் இருந்தன என்றும் தெளிவாகிறது (படம் 3 காண்க).

சிந்து முத்திரைகள் காட்டும் தமிழியம்

சிந்து முத்திரைகளில் பொருளறிந்து, அவற்றில் ‘தமிழ்’ என்னும் சொல்லைப் படித்தறிந்ததை எனது வாழ்வின் நற்பேறாகக் கருதுகிறேன். சிந்து எழுத்து இன்று நன்கு பொருள் விளங்கும் நிலையில், அவற்றின் முத்திரைகள் வாயிலாகத் தெரிய வரும் செய்திகள் சிலவற்றைக் காணலாம். தமிழ் தொடர்பான முத்திரை வருமாறு:

km3

தமி = ஒப்பற்ற. வண்ணத்தள், கன்னத்தள் என்பது போன்று தமிழத்தள். தமிழுக்குரியவள். மீன் வடிவம் ழகர, ளகரங்களை ஒலித்தது. இது, தமிழுக்குரிய இறைவிக்கான பசுக்கொடை தொடர்பான முத்திரை.

முத்திரைகளில் மொகன் சதாரோ, அரப்பா, உலோதல் (குசராத்) போன்ற நகரப் பகுதிகளின் நாடுகள், அல்லது அரச குலப் பெயர்கள் வாயி லாக அறியும் செய்திகள்.

மொகன்சதாரோ -- கயல, பாண்டிய நாடு

 பாண்ட்டியர் = பாண்டியர். கயல = கயல் + அ = கயலுடைய. கயல அரசு = பாண்டிய அரசு. பாண்டியர் என்ற சொல்லே உள்ளது. இருளண் ணலுக்கு வழங்கப்பட்ட இறைவனுக்கான பசுக் கொடை. இருள் பண்ணா = இருளன் ஆகிய அண்ணல்.

km4

பிற்காலத்தில் மொகன்சதா ரோவுக்குக் கிழக்கில், சிந்து ஆற்றின் கிழக்கே மச்ச தேசம் அமைந்திருந்தது. மச்சம் = மீன் மொகன்சதாரோ பாண்டியர் தொடர்புடையது என்பதை அங்கே கிடைத்த இடைச்சங்கம் தொடர்பான முத்திரை உறுதி செய்கிறது.

km5

மூயிட = தொன்மையான இடத்து, இட சங்க = இடய்ச் சங்கம். மொகன்சதாரோவில் இருந்தது மூன்றாவது சங்கம். தமிழர் தாம் வாழும் இடம் எங்கும் தமிழ்ச்சங்கம் அமைப் பது வழக்கம் என்பதை இம்முத்திரை உணர்த்துகிறது. பாண்டியர் தொடர்பான முத்திரை கிடைத் துள்ள பகுதி யிலேயே இம்முத்திரையும் கிடைத்தது கருதத்தக்கது.

அரப்பா - மலாள நாடு

km7

மலாள = மலையாள, பேச்சு வழக்கு. மலாள நாடு, மலை நாடு. அரப்பா ஆறுகளுக்கிடையே இருப்பினும், பஞ்சாபின் அப்பகுதி மலைப் பகுதியே. மலை யமான் நாடு மலாடு என்பது போல மலையாள நாடு மலாள நாடு. அரச என்னும் சொல் அரசு இலை படத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

km8

உலோதல் - மீனவன் 

மீனன் = பாண்டியன்? நாற்கோணம் நகர் என்பதன் குறியீடு. நாற்பிரிவை நான் மாடக்கூடல் என்பதுடன் ஒப்பிடுக. அடுத்த வயிர வடிவமும் ^ வடிவ இகரக் குறியும் ம் + இ = மி என்பது.

மெய்யியல் எண்ணங்கள்

 

மெய்யியல் எண்ணங்கள் பல முத்திரைகளில் இருப்பினும் ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டுமே காண்போம்.

km9

முப்பகய = முப்பகை - அ. மூன்றிற்கும் பகையானவன். முப்பகை = காமம், வெகுளி, மயக்கம். திருவள்ளுவரும் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றும் நாமம் கெடக்கெடும் நோய் என்றார். மும்மலங்கள் என்று விரிக்கும் கருத்துருவின் தோற்றுவாய் இம்முத்திரை.

மனிதவுணர்வின் மேன்மை 

 

km10

வய்யம் பெரிய இல்லம். இரு = பெரிய, இல் = இல்லம். இக்கருத்தின் தொடர்ச்சியே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது. தமிழன், சிந்து வெளியில் வய்யத்தில் வாழ்ந்து, சங்க காலத்தில் ஊரில் வாழ்ந்து இன்று வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறான்.

சிந்து எழுத்தாய்வை இங்கு விரித்துரைக்க இடமில்லை. தமிழியின் அடிப்படையில் ஆராய்ந்து சிந்து எழுத்து களுக்கு உயிரூட்டி இருக்கி றோம். ஆகவேதான், சிந்து வெளித் தமிழின், தமிழனின் உணர்வுகளை உயிரோட் டத்துடன் உணர முடிகிறது.

(முத்திரை எண்கள் ஐ.மகா தேவனின் அடிப்படையில் அமைந்தவை

Comments

1 comment

1
Rameshsan
Kindly request the author to write the article in english and upload in some blogs so that it is accessible for a wider audience to review. I also suggest that author may want to expose his ideas at

http://www.facebook.com/AncientIndus

There is a chance that Indus scholars and enthusiasts may be able to give a better feedback for your ideas.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.