நரி நடித்தது..
திசையெங்கும்
வெடித்தது..!

அரம்பத்தனம்
முள்ளிவாய்க்கால்
முற்றத்தில்
அரசுடைமையானது!

முற்றத்தை இடித்த
அதிகாரம்
ஆர்ப்பரித்தவர்களை
கைதும் செய்தது!

கண்மூடிய அதிகாரமே!
உன்னிடம் இருப்பது
கங்காணி அதிகாரம் மட்டுமே

எங்களிடமோ..
இன உணர்ச்சி
மண்ணுரிமை
மானமிகு தலைவர்கள்!

நீ இடித்தது முற்றத்தை அல்ல..
ஈழத்தில்
புதைக்கப்பட்ட பின்னும்
எழுந்த எங்கள்
சுற்றத்தை!

நீ.. குதறிப்போட்டது
பூங்காவை அல்ல!
போராடிச் சாய்ந்த பின்னும்
எழுந்த
மான மறவர்களின்
மறுபிறப்பை..

நீ.. எங்களை
சிறைக்குள் தள்ளினாய்
சிறைச் சுவர்களும்
முள்ளிவாய்க்கால்
முற்றத்தையே
முழக்கமிட்டன!

ஆரிய மமதை
சிறைக்குள்ளும்
சந்தி சிரித்தது!

சிறை...!
“வரலாற்றைக் காப்பவர்களே
வாருங்கள்” என்று
வாரி அணைத்தது!

அதிகாரம்
சனநாயக விழிகளில்
படர்ந்த
விழிப்புரை ஆனது!

வெளிச்சத்தைப் பாய்ச்சி
உற்றுப் பார்த்தோம்
அதிகாரம்
அம்மணமாய் நின்றது!
ஆரியம் அதனுடன்
புணர்ந்து கொண்டிருந்தது!

More articles by த.கவித்துவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.