ஒரு தொடர் மழை நாளின்
இடைநில்லா
பேருந்து பயணத்தின்
ஒரு நிமிட நிறுத்தத்தில்
வேகமாக ஓடிச் சென்று
ஓரம் ஒதுங்கி
தன்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
திரும்பும் அவனை
பொறாமையுடன் பார்க்கும்
அவள் கண்களில்
அவளின் அவஸ்தை

ஏக்கம்

பக்கத்து வீட்டு
சிறுவர்கள்
விளையாட
வரும் பொழுது மட்டும்
பரணில் ஏற்றப்படும்
பொம்மைகள்

கூட்டாளிகளுக்கான
ஏக்கத்தில்
குழந்தையும்
பொம்மைகளும்.

- பரமக்குடி சோ.சுரேஷ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.