நடிகரின் கட் அவுட்டுக்கு
பாலாபிஷேகம்,

ரசிகனின் வீட்டிலோ
பட்டினிப் போராட்டம்,

சுகத்தில் மிதக்கும் தலைவன்
தீயில் குளிக்கும் தொண்டன்,

நீக்கமற நிறைந்திருக்கும்
மதுக்கடைகள்

நிரந்தரமாய்க் குடித்தழியும்
குடிமக்கள்

வழித்தடத்தைத் தேடுகின்ற
வாழ்வினங்கள்

வந்த வழியையே மறந்து போன
மனித மனங்கள்

லஞ்சத்தில் உண்டு கொழிக்கும்
அதிகாரிகள்

உச்சகட்ட ஊழலிலே
அரசியல்வாதிகள்

கடத்தலும், கற்பழித்தலும் இங்கே
அன்றாட நிகழ்வுகள்

குண்டு வெடிப்பும், கொலைகளும்
தொடர்ந்திடும் தொடர் கதைகள்.

படிக்கப்போகும் இடத்தில் கூட
பாலியியல் பலாத்காரம்

வேலியே பயிரை மேயும்
விந்தை கண்டீரோ?

குழந்தைமுதல் கிழவிவரை
பாதுகாப்பிலாப் பெண்ணினம்

காசு கொடுத்து ஓட்டு வாங்கும்
பண்டமாற்று முறை

கசடில்லாச் சமுதாயம் மலர
வருமோ ஒரு மாற்று முறை

- லலிதா சிதம்பரம், மதுரை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.