அருணன் எழுதிய காலந்தோறும் பிராமணியம் என்ற நூல் ஏற்கெனவே ஐந்து பாகங்களாக வெளியாகியிருக்கிறது. இப் போது நேருகாலம் என்ற தலைப் பில் ஆறாவது பாகம் வெளி வந்துள்ளது. காலந்தோறும் பிராமணியம் என்ற நூல் வேத காலம் முதல் சோழர் காலம் வரை, டில்லி சுல்தான்கள் காலம், முகலாயர் காலம், கிழக் கிந்தியக் கம்பெனி காலம், பிரிட் டனின் நேரடி ஆட்சிக் காலம் வரை ஏற்கெனவே வந்துள்ளது. இப்போது நேரு காலம் வரை வந்துள்ளது.

இந்த நூலின் ஆறு பாகங்களையும் ஒருவர் படித்து விட்டால் இந்திய வரலாறு முழுவதையுமே கற்று விடமுடியும். மார்க்சியக் கண்ணோட்டத்தில் அந்த அளவுக்கு ஏராளமான தரவுகளோடு எழுதப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விசயமாகும். வரலாற்றை மெய்யான கண்ணோட்டத்தில் அறிவது எளிதான காரியம் அல்ல. அதைச் சரியான கோணத்தில் புரிதலை ஏற்படுத்தவும் ஒரு அறிவு வேண் டும். அதுதான் மார்க்சியப் பொருள் முதல்வாத இயங்கியல் அறிவாகும். அந்த அறிவோடும், வீரியத்தோடும் சொல்லப்படு வதால் தான் அருணனின் இந்தத் தொகுப்புகள். பெரிதும் வர வேற்பைப் பெறுகின்றன.

இந்த நூலில் காங்கிரஸ் கட்சி யின் வீழ்ச்சி, கம்யூனிஸ்ட்டு களின் எழுச்சி, திராவிட இயக் கத்தின் எழுச்சி-வீழ்ச்சி குறித்து ஏராளமான தரவுகள் எடுத்தாளப் பட்டுள்ளன. மதவெறி சக்தி களின் எழுச்சியும் அதன் காரணங்களும்கூட கூறப்பட் டுள்ளன. இந்தியா விடுதலை யடைந்த பின்பு ஏற்பட்ட நிகழ்வு கள் விரிவாக விளக்கப்பட் டுள்ளன.

இந்தியாவில் அரசியல மைப்புச் சட்டம் உருவான போது எதிர்கொண்ட பிரச்சனை கள், அதில் அம்பேத்கர் வகித்த பங்கு பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர் எழுதிக் குவித்த விசயங் களும், தலித் விடுதலைக்கு அவர் நடத்திய போராட்டங்களும் மகத்தானவை என்பதை விரி வாக அருணன் பதிவு செய்துள் ளார்.

ஜமீன் ஒழிப்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், ஐந் தாண்டுத் திட்டங்கள் நேரு காலத்தில் நிகழ்ந்த விசயங்கள், அந்நிய முதலாளிகளை எதிர்த்து இந்திய முதலாளிகளை வளர்த் தெடுத்த விபரங்கள் தரப்பட் டுள்ளன.

1948ல் கம்யூனிஸ்ட்டுக் கட்சி எடுத்த தவறான அதி தீவிர முடிவு பற்றியும், அதன் விளைவு கள் பற்றியும், தெலுங்கானா போன்ற புரட்சிகள் ஒடுக்கப் பட்ட வரலாறும் இதில் தெளி வாகக் கூறப்பட்டுள்ளது. இளம் கம்யூனிஸ்ட்டுகள் அறிய வேண்டிய பல செய்திகள் உள்ளன. இதில் நேரு அரசாங் கம் கம்யூனிஸ்ட்கள் மீது தாக்கு தல் தொடுத்துப் பலரைப் படு கொலை செய்த விபரங்கள் தரப் பட்டுள்ளது. இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட வல்ல பாய் பட்டேலின் பங்கும் இந்த அடக்குமுறைக் கதையில் உள்ளது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவான விதம், அதன் வகுப்புவாதக் கோட்பாடு கள் வகுப்பட்ட விதம், காங் கிரஸ் எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு வளர்க்கப்பட்ட விதம் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள் ளது. பின்பு பாரதிய ஜனசங்கம், பாரதீய ஜனதா வரை உருவான வரலாறும் உள்ளது. வாஜ்பாய் முதல் அத்வானி வரை அவர்கள் பங்கு வகித்த விவரங்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் ராம கிருஷ்ணா மடம், சிவாஷந்த ஆசிரமம், சின்மயா மிஷன், மகரிஷி மகேஷ் யோகி, சத்ய சாயி பாபா, பற்றிய அபூர்வ தகவல்களும், அவற்றின் ஆழ மான நோக்கங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் பற்றிய பிரமைகள் தகர்க்கப்பட்டுள்ளன.

சமுதாயத்தில் பிராமணியத் தின் இயங்குநிலை என்ற பகுதி யில் பத்திரிகை, வானொலி, இசை போன்றவற்றில் ஏராள மான தகவல்கள் கூறப்பட்டுள் ளன. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஸ்டேட்ஸ்மேன், இந்துஸ்தான் டைம்ஸ், இல்லஸ்ட்ரேடட் வீக்லி முதல் ஆனந்த விகடன் வரை பற்றிய தகவல்கள் வரலாற்று ரீதியில் தரப்பட்டுள்ளன. விபரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இசைத் துறையில் தெலுங்கும் சமஸ்கிருதமும் கொண்டு வரப் பட்டுத் தமிழிசை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள் கூட தமிழிசையை எதிர்த்தனர். இதற்கெதிராக 1943ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைச் சங்கம் அமைத்தார். கல்கி போன்றவர்கள் தமிழி சைக்குப் பெரும் ஆதரவு தெரிவித்தனர்.

சமூக சீர்திருத்தம் இந்தியா வில் கொண்டுவர நடைபெற்ற முயற்சிகளும் வெற்றிகளும் நூலில் கூறப்பட்டுள்ளன. இதில் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்க ளுக்காக மட்டுமின்றி பிற்படுத் தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார் என்ற உண்மை வெளி வந்துள்ளது. பெரியாரும் அதை வரவேற்றுள்ளார். 1948ல் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ வில் தாழ்த்தப்பட்ட மக்களின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் அம்பேத்கர் பேசும் போது “ஒன்றரைக் கோடி அரிஜனங் களும், ஒருகோடிப் பின்தங்கிய வகுப்பினரும் பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்ந்தால் தமது மக்களை சட்டசபையில் உறுப்பி னர்களாக்கி அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றலாம் என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார். அப்போது அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தார்.

ஆனால் 1950ல் அரசியல மைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின் உச்சநீதிமன்றம் சென்னை மாகாணத்தில் பிற்படுத்தப்பட் டோருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. எனவே அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் வந்தது. பிற் படுத்தப் பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்துத் தந்ததில் அம்பேத் கருக்கும் ஒரு முக்கியப் பங்கு இருந்தது என்று இந்நூலில் குறிப்பிடப்பட் டுள்ளது. மேலும் அம்பேத்கரின் இறுதி நாட்களில் புத்தரும் மார்க்சும் மட்டுமே அவரது நெஞ்சில் நிறைந்திருந்தனர் என்ற விவரமும் தரப்பட்டுள்ளது.

சமூக சீர்திருத்த நடவடிக்கை களில் பெரியார், அண்ணா ஆகிய இருவரும் ஆற்றிய செயல் பாடு கள் மிகவும் விரிவாக நூலில் தரப்பட்டுள்ளது. நூலின் இறுதிப் பகுதியில் சமூக சீர்திருத்தத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வகித்த மகத் தான பங்கு விவரிக்கப்பட்டுள் ளது. தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து ஏ.கே.கோபாலன், பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி நடத்திய போராட்டங்களும், தெலுங்கானாப் போராட்டம் பற்றியும், இந்தித் திணிப்பை எதிர்த்தது, ராஜாஜி யின் குலக் கல்வியை எதிர்த்தது போன்ற பல முழுமையான செய்திகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய போராட்டங்கள் விளக்கமாக எழுதப்பட் டுள்ளன.

இந்தியாவின் உண்மையான சமூக வரலாறு சாதீயம் மற்றும் ஆணாதிக்கத்தின் தோற்றம்-தொடர்ச்சி பற்றிய எத்தனையோ வினாக்களுக்கு இந்நூல் விடை யளிக்கிறது. தூக்கி நிறுத்தப்பட்ட பொய்ம்மை பிம்பங்களும், இட்டுக்கட்டப்பட்ட மதிப்பீடு களும் இற்று விழும் சத்தத்தை யும் இதில் கேட்கலாம். கூடவே மெய்யான வரலாற்று நாயகர் களையும் சந்திக்கலாம். நன்கு துடைக்கப்பட்ட இந்தக் காலக் கண்ணாடி வழியே பார்க்கும் போது கடந்து போனவை மட்டு மல்லாது தற்போது நடந்து கொண்டிருப்பவையும் தெளி வாய் புரியும். பழைய, புதிய தலைமுறைகள் படிக்க வேண்டிய நூல்.

வசந்தம் வெளியீட்டகம்,

69-24ஏ, அனுமார் கோவில் படித்துரை,

சிம்மக்கல், மதுரை-625001 பேசி: 0452-2625555, 2641997

விலை ரூ.250

Pin It