என்வீட்டில்
எந்த வெள்ளைத் தாளும்
என் மகளின்
கிறுக்கல் இல்லாமல் இருந்ததில்லை!

எழுதுகோலும் தாளும்
கிடைத்தால் போதும்
கிறுக்கல் துவங்கும்

ஒவ்வொரு கிறுக்கலிலும்
ஒன்றை விட்டுச் செல்கிறாள்
அது-
ஒற்றை வார்த்தையாக
அர்த்தமுள்ள ஓவியமாக
எதையோ ஒன்றை
உருவாக்கிச் செல்கிறது இந்தப்பிஞ்சு

ஒவ்வொரு முறையும்
உள்ளார்ந்த மகிழ்வோடு
தனது
எழுத்தைத் துவங்குகிறாள்.

நீண்ட கோடுகள்
வளைந்த கோடுகள்
வட்டங்கள்
வலையங்கள் என
தன் விருப்பம் போல...

யார் எழுத அமர்ந்தாலும்
தானும் வருவாள்
தனக்கான புரிதலை
தன் எழுத்தில் கொணர்கிறாள்

இதழ் கூப்பியும்
சத்தமிட்டும்
எழுதத் துவங்கும்போது
உலகம் அவளுக்காக விரிகின்றது...!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.