சோவியத் ரஷ்யாவின் முன்முயற்சியில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றுபடுவோம், முன்னேறுவோம் இறுதி சமாதானம் கிடைக்கும் வரை என்கிற முழக்கத்துடன் 63 நாடுகளை சேர்ந்த இளைஞர் அமைப்புகள் ஒன்று கூடி பிரகடனத்தை வெளியிட்டதோடு உலக அளவில் இளைஞர் அமைப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து அதனடிப்படையில் உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு என்கிற அமைப்பிற்கான முதல் மாநாட்டிற்கு தேதியை தீர்மானித்தது.

1947 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 17 வரை பிராக்யூ நகரில் 72 நாடுகளில் இருந்து 17000 இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்ட முதல் உலக இளைஞர் மாணவர் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று வரை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இளைஞர்களின் கோரிக்கைகளை முன்வைத்து 16 மாநாடுகள் நடைபெற்றுள்ளது. 17 வது உலக இளைஞர் மாணவர் விழா தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ்பர்க்கில் டிசம்பர் 13 முதல் 21 வரை நடைபெற்றது. இந்த விழாவில் 137 நாடுகளில் இருந்து 17000 த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவில் இருந்து 289 பேர் 34 அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்க அரசும், விழா நடைபெற்ற ஸ்வானே நகர நிர்வாகம், உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, தேசிய இளைஞர் வளர்ச்சி கழகம் (நைடா) இணைந்து நடத்தியது. இதற்காக தென்னாப்பிரிக்கா அரசு 69 மில்லியன் ரேண்ட் (அந்த நாட்டின் பணத்தின் பெயர்) (இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி ரூபாய்களை செலவிட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டர்களை சீருடையோடு தயார் செய்து விழா நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பயன்படுத்தினார்கள், அந்த நாட்டின் காவல்துறை, தனியார் பாதுகாப்பு படைகள் உட்பட பாதுகாப்பு பணியில் அக்கறையோடு ஈடுபடுத்தப்பட்டது. நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்வேனே ஈவண்ட் சென்டரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் தங்குவதற்கு நாடு வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, விழா நடைபெறும் இடத்திற்கு இரண்டு அடுக்குமாடி பேருந்து உட்பட டாக்சி. சொகுசு பேருந்துகள் பிரதிநிதிகள் வந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை உணவு தங்கும் இடத்திலும், மதியம். இரவு உணவுகள் விழா நடைபெற்ற இடத்திலும் வழங்கப்பட்டது, 13ம் தேதி மாலை துவக்கவிழா நிகழ்ச்சிகள் மாஸ்டர் பீஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் சுமோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தார். முன்னதாக ஒவ்வொரு நாடு வாரியாக பிரதிநிதிகளின் வண்ணமிகு கொடி அணிவகுப்பும். அதை தொடர்ந்து ஆப்பிரிக்க பராம்பரிய கலைநிகழ்ச்சிகளும். விமான படையின் விமான சாகசமும். காவல்துறை அணிவகுப்பும், 21 பீரங்கி குண்டுகள் முழங்க நிகழ்ச்சிகள் தொடங்கியது. உலக இளைஞர் அமைப்பின் தலைவர் டைகோ வியாரா, தென்னப்பிரிக்க இளைஞர் அமைப்பின் தலைவர் ஜூலியஸ் மேல்மா. தென்னப்பிரிக்க அதிபர் ஜேகப் சுமோ ஆகியோர் உரையாற்றினார்கள், தற்போதைய உலகின் நிகரற்ற தலைவர் பிடல் காஸ்ட்ரோ அவர்களின் வாழ்த்து செய்தி துவக்கவுரையாக விழாவில் வாசிக்கப்பட்டது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் அடையாளங்களை அந்த செய்தி விரிவாக விளக்கியது. ஏகாதிபத்திய எதிர்ப்பில் தென்னாப்பிரிக்காவின் பங்கு குறித்து அதிபர் உரையில் சுட்டிகாட்டியதோடு வரும் காலங்களிலும் தொடர்ந்து இடதுசாரி சிந்தனையோடு மக்களை வளர்த்தெடுப்பதிலும். மனிதநேயமற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்ட களத்தில் இளைஞர்களை கூடுதலாக பங்கேற்க உரிய ஏற்பாடுகளை திட்டமிடும் என்றார். இறுதியில் லேசர் நிகழ்ச்சிகளோடு விழா நிறைவடைந்தது.

14ம் தேதி முதல் 20 தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கண்டத்தின் நாடுகளை உள்ளடக்கிய தினமாக ஆப்பிரிக்கா, அமெரிக்கா. ஆசியா, ஐரோப்பா. மத்திய கிழக்கு, ஆசிய பசிபிக் என கடைபிடிக்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் தொடர்ந்து நிகழ்ச்சிகள், கருத்துரைகள், விவாதங்கள், பட்டறைகள், விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது,. தினமும் இரண்டு மாநாடுகள். 5 கருத்தரங்கம். 6 பட்டறைகள் 12, நண்பர்கள் கருத்துப்பரிமாற்றம் என 21 தலைப்புகளில் நாளன்றுக்கு ஆழமான விவாதங்கள் நடைபெற்றது. இறுதியாக டிசம்பர் 19.20 இரண்டு நாட்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளால் அவதிக்குள்ளான மக்களின் வாழ்க்கை நிலை குறித்து விவாதங்கள் முன் வைக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டின் பராம்பரிய கலைபடைப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பத்து நாட்களும் தோழர்களிடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதனையட்டி இறுதியாக வழக்கறிஞர்களின் விவாதமும், 9 நீதிபதிகளின் தீர்ப்பும் வழங்கப்பட்டது, இறுதியாக 5000 வார்த்தைகளை கொண்ட 21 பக்கங்களை உள்ளடக்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டது. இரட்டை கோபுர தாக்குதலையட்டி உலகின் பல்வேறு நாடுகளில் தேவையில்லாமல் அமெரிக்காவின் சீர்குலைவுக்கு காரணமாக அமைந்த ஜார்ஜ் புஷ் யை குற்றவாளியாக அறிவித்தது. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வழக்குகள் தாக்கல் செய்யப்ட்டது. இந்தியாவில் இருந்து போபால் விஷவாயுவிற்கு காரணமான ஆண்டர்சன்னை பாதுகாத்து வரும் அமெரிக்கா குற்றாவாளியே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், ஆண்டர்சனை ஒப்படைக்க வேண்டும் என கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தியாவின் கோரிக்கையை கோர்ட் ஏற்றுக் கொண்டது,

இந்த மாநாட்டிற்கு வருகை தந்த மேற்குசகாரா பகுதியை சேர்ந்த பிரதிநிதிகளை மொராக்கன் அரசு கைது செய்ததை கண்டித்து யூனியன் பில்டிங் முன்பு பல்வேறு நாடுகளை சார்ந்த பிரதிநிதிகள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டங்களை காவல்துறை அனுமதியை மீறி நடத்தியது எழுசசிகரமாக அமைந்தது, மாநாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக. சமாதானத்திற்காக. இறையாண்மையை காக்க. ஒருமைப்பாட்டை பேண நடைபெற்ற போராட்ட அனுபவங்களை கலந்து கொண்ட நாடுகளில் இருந்து 5 பேர் வீதம் அறிக்கைகளை முன் மொழிந்து பேசினார்கள், அதையட்டி கருத்துரைகள் ஏராளமான பிரதிதிகள் ஆழமான புள்ளிவிபரங்களோடு வழங்கினார்கள். மேலும் கல்வி. வேலை. இடப்பெயர்வு. கொத்தடிமை. நிறவெறி. சுகாதாரம், உழைப்பு சுரண்டல், ஏகாதிபத்திய தாக்குதல்கள், மனித உரிமைகள், ஆண்பெண் சமத்துவம், சோசலிச நாடுகளின் சாதனைகள், குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக. சுற்றுச் சூழல் குறித்து என பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதங்களில் இந்தியாவில் இருந்து சென்ற பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வாலிபர் சங்க தலைவர்களும் விவாதங்களில் கலந்து கொண்டு பேசினார்கள். பலநூறு மொழிகள் பேசினாலும் எல்லோருடைய உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமாகவே தென்பட்டது, இறுதி நாள் அன்று சர்ச் சதுக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எழுச்சிமிகுந்த பேரணி யூனியன் பில்டிங்கில் முடிவடைந்தது. அவரவர் தாய் மொழியில் ஏராளாமான முழக்கங்களை எழுப்பி வந்தனர். இறுதியாக 6 பக்கங்களை கொண்ட மாநாட்டின் இறுதி பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த மாநாட்டில் நட்பு ரீதியாக ஒவ்வொரு நாட்டின் பிரதிநிதிகளும் பாலியல் கூறுகளை தாண்டி நட்பு ரீதியாக தங்களுடைய நாட்டின் அனுபவங்களை முன்வைத்தனர், பாலஸ்தீனம், லெபனான், மேற்கு சகாரா, ஆப்கான், கியூபா. கொரியா போன்ற நாடுகளின் மீதான தாக்குதல்களும். மிரட்டல்களும் குறித்து அம்மக்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை விவரித்தனர்.

அனைவருக்கும் அனைத்தும் கொடுக்கக்கூடிய சமூக அமைப்பை சார்ந்த வியட்நாம். கியூபா, வட கொரியா. சீனா போன்ற நாடுகளின் பாதையில் சோசலிசத்தை நோக்கிய முதல் அடியை லத்தீன் அமெரிக்க நாடுகளின் பயணம் துவங்கியுள்ளது. அதனால் தான் நெருக்கடியில் சிக்கி தவித்த பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் கூட 40 சதம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையை குறைத்த அனுபவம் மிகச் சிறந்த அனுபவம், பிரிட்டனில் இருந்து வந்திருந்த இளம் தொழிலாளி தன்னுடைய மாத வருமானம் 4000 டாலர் என்றால் 1000 டாலர் வீட்டு வாடகைக்கு கொடுக்க வேண்டும். பல்கலைகழகங்களில் கல்வி கட்டண உயர்வுக்குஎதிரான மாணவர்கள் போராட்டத்தோடு எப்படி தொழிலாளர்களும் இணைந்து போராடினார்கள் என்ற அனுபவமும், கீயுபாவின் மீதான அமெரிக்க பொருளாதார தடைகளை எப்படி சமாளித்து வருகிறது என்ற அனுபவமும். பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் தினந்தோறும் கொல்லப்படும் அவல காட்சிகளும் அங்கே காண்பிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு நாடுகளின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல், தத்துவம் குறித்த விவாதங்களும் நடைபெற்றன.

உலகில் எங்கு அநீதி நடைபெற்றாலும் அதற்கு எதிராக நீ போராடுவாயனால் நாம் இருவரும் தோழர்களே என்றான் சேகுவேரா, அவன் வழியில் தன்னாட்டு மக்களை மட்டுமின்றி. இதர நாட்டு மக்களையும் சுரண்டிக் கொழிக்கும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எல்லோரும் தோழர்களாக கைகோர்த்து எதிர்காலம் சோசலிசத்திற்கே. சோசலிசம் நம்முடையதே என்ற முழக்கங்களோடு 2010 உலக கோப்பை கால்பந்துபோட்டி நடத்தி அடையாளத்தை பதித்த தென்னாப்பிரிக்க இந்த மாநாட்டையும் நடத்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட பிரகடனத்தை அரசே ஏற்றுக் கொண்டு வரும் ஐ.நா சபை கூட்டத் தொடரில் வெற்றிகரமாக வர ஏற்றுக்கொண்டது. அக்கினி குஞ்சொன்று கண்டேன்

அதை ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு  தழல் வீரத்தில்

குஞ்சொன்றும். மூப்பென்றும் உண்டோ,.. என முண்டாசு கவிஞன் பாடினனே.. அப்படிப்பட்ட அக்குனி குஞ்சுகளை இந்த பூவுலகில் சமாதான சக வாழ்வு வாழ, யுத்தவெறியற்ற, ஏற்ற தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க ஏகாதிப்பத்திய எதிர்ப்பு போராட்டத்தை அனைத்து தளங்களிலும் முன்னெடுத்துச் செல்ல உறுதி மொழி எற்றுக் கொள்ளப்பட்டது.

Pin It