மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிப்பதாக அமைந்துள்ளது என்பதை இருபதாண்டு கால அனுபவத்தில் உணருகிறோம். பன்னாட்டு நிறுவனங்களோ இந்திய மண்ணிற்குள் நுழையக் கூடாது என வலியுறுத்துவதல்ல நமது நோக்கம் இந்தியாவில் இல்லாத தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்யலாம். புதிய பொருள்களின் அறிமுகத்திற்கு அனுமதிக்கலாம் மாறாக குளிர்பானம், சிப்ஸ் போன்ற உணவுப் பொருள் துவங்கி பெரிய தொழில்நுட்பம் வரை எல்லாவற்றிலும் கொள்ளை லாப நோக்குடன் வருவதை ஏற்க முடியாது. இந்த செயல்களுக்கு அடிப்படைக் காரணம் நமது மத்திய அரசு பின்பற்றி வருகிற நவீன தாராளமயமாக்கல் கொள்கையே மேற்படி விளைவுக்கு அடிப்படைக் காரணமாகும். இந்த பொருளாதாரக் கொள்கை வியாபாரம் தொழில் ஆகியவற்றை பாதித்து வேலைவாய்ப்பை பறிக்கிறது.

இந்தியாவில் வாங்கும் சக்தி கொண்ட நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை மட்டும் சுமார் 15 முதல் 20 கோடி. இவ்வளவு பெரிய மக்கள் தொகை ஜரோப்பா கண்டத்தின் எந்த நாட்டிலும் இல்லை எனச் சொல்லலாம் இந்தியா மிகப் பொரிய சந்தை என்பதனால் இங்கே வர்த்தகத்திற்கான சந்தையை கட்டமைக்க வேண்டிய அவசியம் பன்னாட்டு முதாலாளிகளுக்கு இருக்கிறது. அதற்கான தொழிற்சாலைகள் தான் கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இரண்டு வழிகளில் இந்த தொழிற்சாலைகள் வடிவமைக்கப்படுகின்றன. ஒன்று தற்போது உள்ள தொழிற்சாலைகளை பங்குசந்தை மூலம் கைப்பற்றுவது அல்லது மொத்தமாக விலை பேசுவது இரண்டு சந்தை வாய்ப்பு கிடைக்குமானால் அதற்கான உற்பத்தியை தானே நேரடியாகத் துவங்குவது.

சந்தை வாய்ப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு லாபம் ஈட்டித் தருகிற மலிவான கூலிக்கு கிடைக்கும் உழைப்பாளர்கள் இந்தியாவில் குவிந்து கிடக்கிறார்கள் இந்த சூழலும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு துணை செய்கிறது. 2003ஆம் ஆண்டில் இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்டு இருந்தது அதில் அமெரிக்காவைச் சார்ந்த தகவல் தொழில் நுட்பத் தொழிலாளி ஒரு மணி நேர உழைப்பிற்கு 549 ரூபாய் பெறுகிறார் என்று, அதே வேலையை ஒரு மணி நேரத்தில் செய்திட இந்திய நாட்டைச் சார்ந்த ஒருவர் ரூ 48 மட்டுமே கூலியாகப் பெறுகிறார் என்பதைக் குறிப்பிட்டு இருந்தனர் இந்தியாவில் பெரும்பாலும் இளைஞர்கள் ஆர்வத்துடனும் துடிப் புடனும் உழைப்பதில் தேர்ச்சி பெற்ற வர்கள் கூடவே ரூ 501 ஒரு மணி நேரத்தில் கூடுதலாக லாபமீட்ட உதவுகிறார் எனவே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் படையெடுக்கின்றனர்.

காரல் மார்க்ஸ் 1847இல் ஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இருந்த ஜெர்மனி தொழிலாளர் சமூகம் என்ற அமைப்பின் நிகழ்வில் உரை நிகழ்த்துகிற போது தொழிலாளர்கள் மீதான சுரண்டல் குறித்த அரசியல் பொருளாதாரத்தை விளக்கியுள்ளார். இன்றைக்கு முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஆதிக்கத்தில் வாழ்ந்து வருகிறோம். அதில் பெரும்பாலானோர் பொருள் உற்பத்தியில் பங்களிப்பு செய்கிற எந்திரம் மற்றும் மூலப் பொருள்கள் ஆகியவற்றைப் போல் தொழிலாளர்களும் உள்ளனர். உயிர் வாழத்தேவையான அல்லது மீன்டும் உழைப்பதற்கு தேவையான சராசரித் தொகை கூலியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. வேறு எந்த சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை ஒரு நாளில் பன்னிரெண்டு மணி நேரம் உழைக்கும் தொழிலாளிகளாக இவர்கள் இருக்கிறார்கள் எந்த ஒரு சரக்கு முன் வைக்கப்பட்டாலும் அதனுடய விலை குறித்த வார்த்தையில்இருந்தே துவங்குகிறது. கட்டுப்பாடான விலை நிர்ணயத்திற்கு ஏற்ப சரக்கிற்கு மதிப்பு இருக்கிறது. மதிப்பு மாறுபடுகிற போது உழைப்பின் மதிப்பு மாறுபடுவதில்லை குறிப்பாக லாபம் குறைகிற அல்லது நஷ்டம் வருகிற போது தொழிலாளர் களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதும், சம்பளம் குறைக்கப்படுவதும் நடைபெறுகிறது ஆனால் லாபம் அதிகரிக்கிற போது தொழிலாளர் சம்பளம் உயர்த்தப் படுகிற ஏற்பாடு இல்லை என்று கூறி இருக்கிறார்.

163 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் நமது நாட்டில் இதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது இதை இரண்டாவது கட்டுரையிலும் விவாதித்து இருக்கிறோம். இந்தக் கட்டுரை விவாதிக்கும் அடிப்படை முதலாளிகளின் லாபம் குறித்துஎன்பதை மீண்டும் நினைவு படுத்துகிற«£ம் ஏனென்றால் சாதாரண நிலையிலேயே கொள்ளை லாபத்திற்காக உழைப்பை சுரண்டும் முதலாளித்துவம் மலிவான கூலிக்கு உழைப்பாளர் கூட்டம் கிடைக்கும் என்றால் விடுவார்களா உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா சுமார் 54கோடி இளைஞர்கள் 15 முதல் 25 வயதுக்குள் இருக்கிறார்கள் ஆனால் வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கிறது. போட்டி மிக அதிகமாக இருப்பது பெரு முதலாளிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டித் தருகிறது நமது இளைஞர்களிடையே உருவாக்கப்பட்ட போட்டி காரணமாக அனைத்து உரிமைகளையும் இழந்த தொழிலாளர்களை கொண்டுள்ளது. நிறுவனங்கள் தங்களை வசதியுடன் கட்டமைத்துக் கொண்டுள்ளது. உதாரணமாக சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஹூண்டாய் நிறுவனம் இங்கு உள்ள தொழிலாளர் அமைப்பை நிராகரித்து சில தனி நபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது மாநில அரசும் இதற்கு துணை போனது.

அரசின் பொருளாதாரக் கொள்கை காரணமாக மேற்படி பன்னாட்டு இந்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு பல வகையில் லாபம் வருகிறது முதலில் சலுகை விலையில் நிலம் இரண்டு தடையில்லா மின்சாரம் மூன்று தண்ணீர் வசதி 4. வரிச்சலுகை 5. உரிமைகளற்ற குறைவான கூலிக்கு உழைக்கும் தொழிலாளிகள். 6 நஷ்டம் வரும் நிலையில் நிறுவனத்தை மூடிவிட்டு வெளியேறும் தாராள அனுமதி 7. அடிமாட்டு விலைக்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது. இவை மத்திய அரசின் ஜம்போ தள்ளுபடி என்றால் மாநில அரசும் தனது பங்கிற்கும் ஆடித் தள்ளுபடிகளை வாரி வழங்குகிறது. ஒற்றைச் சாளர முறை என்று அறிவிப்பதன் மூலம் தொழில் முதலாளிகளின் அலைச்சலைக் குறைத்து அரசு அதிகாரிகளை முதலாளிகளைத் தேடி அலைய நடவடிக்கை மேற்கொண்டதாக துணை முதல்வர் தொழில் துறை மான்யக் கோரிகையில் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல சலுகைகள் அறிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் உள்ளூர் சுய வேலைவாய்ப்பு அல்லது சிறு தொழில் நிறுவனங்கள் மேற்படி திமிங்கலங்களுக்கு போட்டியிட முடியாமல் லட்சக் கணக்கில் மூடப்பட்டுள்ளன ஒரு ஆண்டிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்ட விவரத்தை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது இது வேலை இழப்பை ஏற்படுத்தியதால் கோடிக்கணக்கில் தொழிலாளர்கள் இடம் பெயரும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் தனியார் நிறுவனங்கள் போட்டியிட இயலாதது ஒரு புறம். மற்றொருபுறம் அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டக் கணக்கு காட்டி ஆட் குறைப்பு செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

கடந்த 20 ஆண்டு கால அனுபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வந்தாலும் அது இருக்கிற நிறுவனங்களை விலைக்குவாங்கியதால் புதிய வேலை வாய்ப்பை உருவாக்காத காரணத்தால் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி என்ற நிலை முதலில் உருவானது அதைத் தொடர்ந்து தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக உற்பத்தி பெருகுவதும் அதே நேரத்தில் மனித உழைப்பை ஆட்குறைப்பு செய்வதும் நடைபெறுகிறது. ஆனால் முதலாளிகளுக்கு உற்பத்தி பெருகுவதால் சிறு உற்பத்தியாளர்களும் போட்டியிட முடியாமல் நிறுவனங்களை மூடுகின்றனர் இதன் காரணமாக வேலை இழப்பு அதிகரிக்கிறது இதை Job loss growth (வேலை இழப்பு வளர்ச்சி) என்கின்றனர்.

- எஸ்.கண்ணன்

Pin It