'mayaa-bazaar-film_350அம் அஹ, இம் இஹி, உம் உஹூ’ இது மாயா பஜார் படத்தில் வரும் பிரபலமான வசனம். இப்படிச் சொன்னால் நினைத்தது நடக்கும். விரும்பியது தோன்றும். எனவே தான்...

ஐந்திணை விழாவின்போது வானத்தில் பறவைகள் பறந்தன

2500 வருட தமிழிலக்கிய வரலாற்றில் சுற்றுச்சூழல் என்று நாம் இப்பொழுது சொல்லும் அறிவியலும் அழகியலும் விரிவாகவே பதிவாகியுள்ளது.மீண்டும் சங்க கால வாழ்வியலையும் நவீன அழிவையும் இணைக்கும் பொருட்டு பூவுலகின் நண்பர்களினால் ஐந்திணை விழா ஒருங்கிணைக்கப்பட்டது. நண்பர்கள் கூறுவதிலிருந்து இவ்விழா மாபெரும் வெற்றிகரமான நிகழ்வு என்று நம்புகிறேன். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஐந்திணைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. சுமார் 400 பேருக்கும் மேலாக மிகுந்த கவனக்குவிப்புடன் கருத்தரங்கை கேட்டனர்.கடுமையான விவாதங்களும் நடைபெற்றன. 400 பேர் என்பது வெறும் எண்ணிக்கையல்ல; இந்த உலகத்தைக் காப்பாற்ற வந்த போராளிகளாகவே நாங்கள் கருதுகிறோம். மாலை 4 மணிக்குப் பிறகு இருளர் மற்றும் மலையாளி பழங்குடியினரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன.அப்பொழுதுதான் வானத்தில் பறவைகள் பறந்தன.பின்பு பூவுலகின் நண்பர்களின் 20க்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டன.புதிய நண்பர்கள் மற்றும் மூத்த சுற்றுச்சூழல் போராளிகள் இப்புத்தகங்களை வெளியிட்டனர்.இரவில் பாரம்பரிய சிறுதானிய உணவு விருந்து வழங்கப்பட்டது. சுமார் 800க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். காலை முதல் இரவு வரை ஒரு மகிழ்ச்சிக்குரிய,பொருள் நிறைந்த விழா நடந்ததென எல்லோரும் குறிப்பிட்டனர்.இவ்வகையான விழாக்களைப் பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்து ஒருங்கிணைக்க உள்ளது.விழாக்களே பின்பு கருத்துக்களமாகவும் போராட்டங்களின் அடித்தளமாகவும் விளங்க வேண்டும். ஐந்திணை விழாவில் நடைபெறும் ஒவ்வொரு சிறு அசைவும் சுற்றுச்சூழலுக்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்று மிகுந்த கவனத்துடன் இருந்தாலும் சில விமர்சனங்கள் இருந்தன. கருத்தரங்க இடைவேளையில் தேநீர் வழங்கக் கூடாது என்றனர், சிலர். கருத்தரங்கம் குளிர்சாதன அரங்கத்தில் நடக்கக் கூடாது என்றனர். மதிய உணவு தட்டுப்பாடாகிவிட்டது, இரவு விருந்திற்கு, நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருக்க முடியவில்லை என்றனர் சிலர்.அடுத்த ஐம்பூத சுற்றுச்சூழல் விழாவில் எல்லாவற்றையும் திருத்திக்கொள்கிறோம்

Inthinai-Vizha_380நமக்கு கதாநாயகர்கள் இல்லாமல் வாழ முடியாது. மசானபு புகோகோவும், லாரி பேக்கரும் தான் எனது ஹீரோக்கள். இரு மாதங்களுக்கு முன் காரைக்குடியில் தமிழகத் தொல்லியல் கழகத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொண்டேன்.அப்போது அங்கு வாசிக்கப்பட்ட கட்டுரையில் ‘இருப்பைக்குடி கிழவன்’என்று இன்னொரு ஹீரோவும் கிடைத்தார். இருப்பைக்குடி கிழவன் ஒரு குறுநில மன்னர். 9 ஆம் நூற்றாண்டுப் பொறியாளர். இவரின் காலம் கி.பி. 815 &890. இவருடைய பொறியியல் திறமைகளை, பாசன நுட்பங்களைப் பல்வேறு கல்வெட்டுக்கள் நமக்குச் சொல்கின்றன.நென்மேனி ஏரி என்ற சங்க காலத்து ஏரியைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட கிழவன், அக்கரை முழுவதும் பெயர்த்து, புதிதாகக் கரை களை நிறுவியுள்ளான். கரைகளின் நில மட்டத்தில் நீர்க்கசிவு ஏற்படாமல் இருக்க கரையின் நடுப்பகுதியில் கற்பலகைகளை முழு நீளத்திற்கும் நட்டுவித்து பின்பு கரையை எழுப்பி யிருக்கிறான். இதன் மூலம் 9ஆம் நூற்றாண்டின் பாசனத் தொழில் நுட்பத்தினை நாம் அறிய முடியும். இக்கட்டுரையை வாசித்தவர். ச.மா. இரத்தினவேல்.

Pin It