பொதுவாக மனிதர்களைத் தாக்கும் நோய்களையும் அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தை பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிர்க்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது காட்டி வந்த அலட்சியமே இதற்குக் காரணம்.

நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை.

இந்த கட்டுரையில் ஓரிதழ் நீரில் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.

இதன் இலை, தண்டு, பூ, வேர் காய் அனைத் துமே மருத்துவக் குணம் கொண்டது.

இதற்கு இரத்தின் புருஷ் என்ற பெயரும் உண்டு.

உடல் வலுப்பெற

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக் கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின் பலனை அனுபவிக்க முடியும்.

சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங் களால் பலரின் உடல்நிலை பாதிக்கப் படுகியது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன. 

இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூ லத்தை நிழலில் காயவைத்து பொட செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரை யின் சமூலம் நல்ல மருந்தாகும்.

வேகவெட்டை நீங்க

வேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் ஓரிதழ் தாமவை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து வேக வெட் டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் வேக வெட்டை தீரும். உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.

உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது.

தாது நஷ்டத்தைப் போக்க

இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படும். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.

ஆண்கள் சிலருக்கு ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்தி வைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.

இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்து வந்தால் மேற்கண்ட பிரச்சினையிலிருந்து விரை வில் விடுபடலாம்.

இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

Comments

13 comments

13
Kumaran
ஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில் தொடர்பு கொண்டால் செடியாக கிடைக்கும்

என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு :

[email protected]
http://hybanthus-enneaspermus.blogspot.com/
s.prabu
i need ore ethal thamarai podi
senthil
ஒரித்ழ் தாமரை பொடி வேன்டும் . முகவரி சொல்லுஙக . விழுப்புரம்
senthil
ஓரிதழ் தாமரை வேண்டுவோர் இந்த மெயிலில் தொடர்பு கொண்டால் செடியாக கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் தொடர்புக்கு

[email protected]
ஏனாதிமங்கலம். விழுப்புரம் (மாவட்டம்)
soosai fernando norway
இயற்கை வைத்தியம் இதனோடினைந்த அத்தனை கட்டுரைகளும் மிகவும் பயனுள்ளவைகளாக இருக்கின்றன.

மூலிகைகளின் தாவரவியல் பெயர்களைக் குறிப்பிட்டால் மிக சிறப்பாக இருக்கும் அதே வேளை எம்போன்று வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு மிக மிக உதவியாகவும் இருக்கும்.
பூபதி
மக்களுக்கு பயன் தரும் நற்செயல்.குன்றுதாங்கி மூலிகை பற்றி கூறுங்கள்
jayaprasath
குன்றுதாங்கி மூலிகை பற்றி கூறுங்கள்
BALAN
Sir

Can i get oridaz thamari in white, please inform 9042919570
m.s.dinesh
ヌ ஐயா நீங்கள் சொல்லிய தகவல்கள் நன்றாக இருக்கிறது, மிக்க நன்றி. குன்றுதாங்கி பச்சிலையின் படத்தை என்னுடைய மெயில் ஐடிக்கு அனுப்பிதருவீர்களா?
rocky
குன்றுதாங்கி மூலிகை எப்படி இருகும். இந்த முலிகை எங்கு கிடைகும். என தெரிவிக்க வேன்டும். அதனுடைய புகைபடம் வேன்டும்.
D.SASI KUMAR
very nice article .use this kayakalpha mooligai regularly with itchapathiyam.if any doubt in siddaha and Ayurveda contact me through mail.my Gmail I'd is [email protected]. vaalkha vallamudan.
rajan
சிறுநீர் வழிச் சுருக்கதை சரிசய்ய (குறுகிய சிறுநீர் பாதை) என்ன மூலிகையை உட் கொடுக்க வென்டும்......

பதிலுக்காக காத்திருக்கும் வாசகர்....
rajesh
I want orithal thamarai tree

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.