பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.

இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. சாதாரணமாக காய்கறிச் சந்தையில் இந்தக் கீரையும் கிடைக்கும். அதுசரி இந்த கீரையை வாங்கி வந்து எப்படி சமையலில் பயன்படுத்துவது என்றுதானே கேட்குறீங்க?

ஒரு நபர் சாப்பிடும் அளவுக்கு முடக்கத்தான் சாறு எப்படி தயார் செய்யறது?

இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும்.

பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்.

முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். அப்புறமென்ன ஓடி ஆடலாம். சின்னக் குழந்தை போல துள்ளிக் குதிக்கலாம். உடனே முடக்கத்தான் கீரை வாங்க கிளம்பிட்டீங்க போல இருக்கு!

வயாக்ரா சாப்பிட்டால் ...

படுக்கையறையில் தனது வலிமையைக் கூட்ட விரும்பும் ஆண்களுக்காக என்று வயாக்ரா மாத்திரைகள் பற்றி விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு இருதய, சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதோடு காதுகேட்கும் திறனை இழப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வயாக்ரா மட்டுமல்ல அந்த வகையைச் சேர்ந்த சியாலிஸ், லெவித்ரா போன்ற மருந்துகளும் ஆண்களின் காதுகளைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பெங்களூரிலுள்ள இந்திய விமானப்படை மருத்துவமனைக்கு 44 வயதான நபர் சிகிச்சைக்காக வந்தார். அவருக்குத் திடீரென காது கேட்கவில்லை... என்று உறவினர்கள் கூறினர். அவர் 15 நாட்கள் தொடர்ந்து வயாக்ரா மாத்திரையை சாப்பிட்டுள்ளார். அந்த மாத்திரைதான் காதுகேட்கும் திறன் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வின் விவரங்கள் மருத்துவ ஆய்வு இதழ்களில் 2007 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன. அதன்பின் 29 பேர்கள் தங்கள் செவித்திறனை இம்மாத்திரைகளால் இழந்துள்ள செய்தியும் வந்துள்ளது.

www.tamil.webdunia.com

Comments

1 comment

1
suba
என் அம்மா மூட்டு வலியால் அவதிபபடுகிரார்.அவருக்கு மூட்டில் தேய்மானம் உல்லது.அதர்க்கும் இக்கீரை பயனலிக்குமா?.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.