“வாழ்க்கையின் விஞ்ஞானம்” என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.

 வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.

 இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச் சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர் வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன. நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.

 நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர் வேதம் பிறப்பு.

 புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியான சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே சரக சம்ஹிதை என்று அழைக்கப்படுகிறது.

 ஆயுர்சேத நூல்களில் மற்றொரு மிகச்சிறந்த நூலாகத் திதழ்கிறது. சுஷ்ருதரால் இயற்றப்பட்ட “சஷ்ருத சம்ஹிதை”. புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்-இப்படித் தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.

 இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர் வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.

 கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?

அப்யங்க ஸ்வேதனா

 மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல -ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.

பிழிச்சில்

 ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலிமற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சனைகள் இந்க சிகிச்சையால் விலகும்.

தாரா

 ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷசமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்.... போன்று பல்வேறு நன்மைகளும் இந்க சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நசரக்கிழி

 பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்னை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்கப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம்

 இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரதத ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன். பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உதவர்த்தனம்

 இது மசாஜ் முறையிலான சிகிச்சை, மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்பபடுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

 - வருடம் முழுவதும் உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக் கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.

 இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.

நன்றி : www.muthukamalam.com

Pin It