உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.
நிரந்தர வடு, உணர்ச்சியற்றுப் போதல், செயலிழத்தல் அல்லது அளவில் மாற்றம் ஏற்படாமல் மனதில் ஏற்படும் ஏமாற்றம் இவற்றில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதே இந்த அறுவை சிகிச்சையின் சிக்கல். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு குறித்து வருந்துகிறார்கள். மேலும் குறியின் அளவு இன்னும் நீளமாகவோ, தடிமனாகவோ இருந்தால் தங்கள் இணையை மேலும் திருப்திப்படுத்தலாம் என்றும் நினைக்கிறார்கள். இதில் உண்மை இருப்பது போல் தோன்றினும், எப்போதும் குறியின் அளவுக்கும் இன்பத்தின் அளவிற்கும் தொடர்பு இல்லை என்பதே உண்மை.
முதலில் ஆண்குறிகளின் அளவு குறித்து சில உண்மைகளை நாம் பார்ப்போம். விறைத்த ஆண் குறிகளில் 90% 12-17 செ.மீ (5-7இன்ச்) நீளமும், 2.5-5 செ.மீ (1-2 இன்ச்) தடிமனும் உடையதாய் இருக்கிறது. நீளமான அல்லது தடிமனான குறியினால் மட்டும் உங்கள் இணையை திருப்திப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை. உங்கள் இணையின் தேவை அறிந்து, உங்கள் இணையின் உடல் அறிந்து செய்யும் சேவைகளே முழு திருப்தி தருவதாக பெரும்பாலான பெண்கள் ஒரு கணக்கெடுப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- முதலாளித்துவத்தின் கூலிப்படைகள்
- பிறவி ஆதிக்கம் - பணக்கார ஆதிக்கம் - இரண்டையும் எதிர்க்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்
- A2 வின் அரசியல் விலகல் ராஜதந்திரமா? பிழைப்புவாதமா?
- இதற்குப் பெயர் ‘இந்துத்துவா’ ஜனநாயகம்
- ‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்
- அறிவியலாளர்கள் எதிர்ப்பு: பசு மாடு குறித்து நடத்தவிருந்த தேர்வு நிறுத்தம்
- உயர்ந்தவர் யார்?
- வினா விடை
- குடுகுடுப்பு காரன்
- திருவாரூரில் ஈ. வெ. இராமசாமி சுயமரியாதை இயக்கம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பாலியல்
ஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.