காபி, டீ அதிகமாக குடிக்காதவர்களை விட குடித்தவர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு வரும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிலும் ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு மேல் (சுமார் 600 மி.லி) காபி, டீ அருந்தினால் மாரடைப்பு வரும் வாய்ப்பு 70 சதவீதம் அதிகரிக்கிறதாம். அதாவது காபி, டீ குடிப்பவர்கள் அதிக மன உளைச்சல் உள்ளவர்களாக இருப்பதாலும், அதிக புகைப்பழக்கம் உள்ளவர்களாகவும் இருப்பதால் மாரடைப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

அதே நேரத்தில் பால் கலக்காத தேநீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். டீ குடிப்பவர்களுக்கு நன்மை செய்யும் எச்.டி.எல் கொலஸ்டிரால் அதிகமாவதாலும், கொலஸ்டிரால் ஆக்ஸிகரணமாகாமல் தடுக்கு ப்ளேவனாய்ட்ஸ் பொருட்கள் இருப்பதாலும் மாரடைப்பு நோய் பாதிப்பதில்லை எனவும் கண்டுபிடித்துள்ளனர்.

Pin It